கச்சி அனேகதங்காவதம் அனேகதங்காவதேஸ்வரர்
மூலவர் : கச்சி அனேகதங்காவதேஸ்வரர்
தீர்த்தம் : தாணு தீ
ஸ்தல விருக்ஷம் : மாமரம்
பாடல் : சுந்தரர்,
ஆகமம் : காமிகம், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் & தொண்டை நாடு 4,
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுயம்பு, விநாயகர் வல்லபையை மணம் முடித்த தலம் என்றாலும் இங்கு தனி சன்னதியில் விநாயகர் மட்டுமே உள்ளார். அவருடன் வல்லபை இல்லை.
திருமணத்தடை உள்ளவர் இவருக்கு அருகம்புல் சாத்தி நைவேத்யம் படைத்து வழிபாடு.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குபேரன், தன் முற்பிறவியில் செய்த புண்ணிய பலனால், அருந்தமனின் மகனாக பிறந்து அளகை அரசன் ஆனான்.
அசுர குருவான சுக்கிரன் அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான்.
எனவே இங்கு சிவனை நோக்கி தவம் இருந்து தன்னை காக்கும் படி வேண்ட, சிவன் அவனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்கினார். இத்தலத்தில் சிவன், பெரிய லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். No அம்பாள்,
விநாயகர் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்பதால் “அநேகதங்கா வதேஸ்வரர் “. விநாயகருக்கு அநேகதங்காவதர் என பெயர்.
(அநேகதம் யானை, யானை முகத்தையுடைய விநாயகர் )
அநேக – பலவான; தம் – கொடுத்தல்; கா – காக்கின்ற; பதம் – பதி. இத்தலத்தில் தம்மை வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரங்களெல்லாம் (சர்வ அபீஷ்ட சித்தி) அளித்து அவர்களைக் காக்கின்ற அற்புதப் பதி.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மா புத்திரன் மரீசி – தடாகத்தில் நீராடும் பொழுது – தடாகத்தில் தாமரையில் குழந்தை- வல்லபை- சிவபக்தை – இரண்ய அசுரன் கேசி பிடித்து சென்றான்- வல்லபை சிவனை வேண்ட..
சிவன் விநாயகரை அனுப்பினார். அம்பாள், சிவனிடம் விநாயகருக்கு அருள் செய்யமாறு சொல்ல- சிவன் இத்தலத்தில் தன்னை வணங்கி விட்டுச் சென்றால் வெற்றி கொள்ள, வலிமை உண்டாகும் என்றார்.
விநாயகரும் , இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் வல்லபையை மீட்டு வந்தார்.
சிவன் & அம்பாள் இருவரும் இத்தலத்திலேயே விநாயகருக்கு வல்லபையை மணம் முடித்து வைத்தனர்.
அநேக தங்காபதம் என்று இமயமலை சாரலில் ஒரு தலம் இருப்பதால் இது கச்சி.. இக்கோவிலும் காஞ்சிபுரம் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூலவர் சந்நிதியுடன் ஒரே பிரகாரத்துடன் சிறிய கோவில். No ராஜகோபுரம், பிரதான வாயில் வடக்கு.
விநாயகர் பிரகாரத்தில் ஒரு தனி சந்நிதியில் பெரிய மூர்த்தியாக.
சுந்தரர் , சிவனை “கச்சி அநேக தங்காவதமே”! என்று பதிகம் பாடியுள்ளார். இவரை வேண்டிக் கொள்ள பணி, பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்ட திருமணங்கள் நடக்கும்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமணத் தடைகள் நீங்குதல்
தொழில் மற்றும் உத்யோக உயர்வு
செல்வ வளம் பெருக குபேர வழிபாடு
பிறவித்துயர் நீங்கி முக்தி பெற
பிரார்த்தனைகள்.
“அனேகதங்காபதம்” என்ற சொல்லுக்கு = ‘தம்மை வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரங்களையெல்லாம் (சர்வ அபீஷ்ட சித்தி) அளித்துக் காக்கும் அற்புதப் பதி’ என்றும் பொருளுண்டு.”
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹா சிவராத்திரி
திருக்கார்த்திகை
விநாயகர் சதுர்த்தி
மற்றும் மாதாந்திர விசேஷங்களான பிரதோஷம் பௌர்ணமி சதுர்த்தி சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
விநாயகர் குபேரன் சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார் முதலியோர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1KM from மேற்றளீஸ்வரர் கோயில், 1.6KM from பேருந்து நிலையம் – புத்தேரி தெரு வழி கைலாய நாதர் கோவில் செல்லும் வழி..
MOR 9.30 to 11.30 only.
90437 48764 ரமேஷ் குருக்கள்
96292 93020, 96528 30840 OFF
கோவில் குருக்கள் அழைத்து விட்டு சொல்வது சிறப்பு.
கோயில் தேவாரம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு
மானதி டந்திக ழைங்கணையக்
கோனை யெரித்தெரி யாடி யிடங்குல
வான திடங்குறை யாமறையா
மானை இடத்ததோர் கையனி டம்மத
மாறுபடப்பொழியும்மலைபோல்
யானையுரித்த பிரான திடங்கலிக்
கச்சி யனேகதங் காவதமே. 1
சுந்தரர்


Leave a Reply