கச்சி அனேகதங்காவதம் அனேகதங்காவதேஸ்வரர்

 🌷மூலவர் : கச்சி அனேகதங்காவதேஸ்வரர்

தீர்த்தம் : தாணு தீ

ஸ்தல விருக்ஷம் : மாமரம் 

பாடல் : சுந்தரர்,

ஆகமம் : காமிகம், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் & தொண்டை நாடு 4,

🌷ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சுயம்பு, விநாயகர் வல்லபையை மணம் முடித்த தலம் என்றாலும் இங்கு தனி சன்னதியில் விநாயகர் மட்டுமே உள்ளார். அவருடன் வல்லபை இல்லை.

🌹திருமணத்தடை உள்ளவர் இவருக்கு அருகம்புல் சாத்தி நைவேத்யம் படைத்து வழிபாடு.

🌷ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹குபேரன், தன் முற்பிறவியில் செய்த புண்ணிய பலனால், அருந்தமனின் மகனாக பிறந்து அளகை அரசன் ஆனான்.

🌹அசுர குருவான சுக்கிரன் அவன் மீது பொறாமை கொண்டு தொல்லைகள் கொடுத்தான்.

🌹எனவே இங்கு சிவனை நோக்கி தவம் இருந்து தன்னை காக்கும் படி வேண்ட, சிவன் அவனுக்காக சுக்கிரனை விழுங்கி அவனது கர்வத்தை அடக்கினார். இத்தலத்தில் சிவன், பெரிய லிங்க வடிவில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். No அம்பாள்,

🌹 விநாயகர் பிரதிஷ்டை செய்த லிங்கம் என்பதால் “அநேகதங்கா வதேஸ்வரர் “. விநாயகருக்கு அநேகதங்காவதர் என பெயர்.

(அநேகதம் யானை, யானை முகத்தையுடைய விநாயகர் )

🌹அநேக – பலவான; தம் – கொடுத்தல்; கா – காக்கின்ற; பதம் – பதி. இத்தலத்தில் தம்மை வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரங்களெல்லாம் (சர்வ அபீஷ்ட சித்தி) அளித்து அவர்களைக் காக்கின்ற அற்புதப் பதி.

🌷ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பிரம்மா புத்திரன் மரீசி –  தடாகத்தில் நீராடும் பொழுது – தடாகத்தில் தாமரையில்  குழந்தை- வல்லபை- சிவபக்தை – இரண்ய அசுரன் கேசி பிடித்து சென்றான்- வல்லபை சிவனை வேண்ட..

🌹சிவன் விநாயகரை அனுப்பினார். அம்பாள், சிவனிடம்  விநாயகருக்கு அருள் செய்யமாறு சொல்ல- சிவன் இத்தலத்தில் தன்னை வணங்கி விட்டுச் சென்றால் வெற்றி கொள்ள, வலிமை உண்டாகும் என்றார்.

🌹 விநாயகரும் , இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின் வல்லபையை மீட்டு வந்தார்.

சிவன் & அம்பாள் இருவரும் இத்தலத்திலேயே விநாயகருக்கு வல்லபையை மணம் முடித்து வைத்தனர்.

🌹அநேக தங்காபதம் என்று இமயமலை சாரலில் ஒரு தலம் இருப்பதால் இது கச்சி.. இக்கோவிலும் காஞ்சிபுரம் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

🌷ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மூலவர் சந்நிதியுடன் ஒரே பிரகாரத்துடன் சிறிய கோவில். No ராஜகோபுரம், பிரதான வாயில் வடக்கு.

🌹விநாயகர் பிரகாரத்தில் ஒரு தனி சந்நிதியில் பெரிய மூர்த்தியாக.

🌹சுந்தரர் , சிவனை “கச்சி அநேக தங்காவதமே”! என்று பதிகம் பாடியுள்ளார். இவரை வேண்டிக் கொள்ள பணி, பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்ட திருமணங்கள் நடக்கும்.

🌷 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமணத் தடைகள் நீங்குதல் 

தொழில் மற்றும் உத்யோக உயர்வு 

செல்வ வளம் பெருக குபேர வழிபாடு 

பிறவித்துயர் நீங்கி முக்தி பெற

பிரார்த்தனைகள்.

“அனேகதங்காபதம்” என்ற சொல்லுக்கு = ‘தம்மை வழிபடுபவர்களுக்கு வேண்டும் வரங்களையெல்லாம் (சர்வ அபீஷ்ட சித்தி) அளித்துக் காக்கும் அற்புதப் பதி’ என்றும் பொருளுண்டு.”

🌷திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹா சிவராத்திரி

திருக்கார்த்திகை

விநாயகர் சதுர்த்தி

மற்றும் மாதாந்திர விசேஷங்களான பிரதோஷம் பௌர்ணமி சதுர்த்தி  சிறப்பு.

🌷வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

விநாயகர் குபேரன் சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார் முதலியோர் 

🌷அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

1KM from மேற்றளீஸ்வரர்  கோயில், 1.6KM from பேருந்து நிலையம் – புத்தேரி தெரு வழி கைலாய நாதர் கோவில் செல்லும் வழி..

MOR 9.30 to 11.30 only.

90437 48764 ரமேஷ் குருக்கள்

96292 93020, 96528 30840 OFF

கோவில் குருக்கள் அழைத்து விட்டு சொல்வது சிறப்பு.

🌷 கோயில் தேவாரம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு

மானதி டந்திக ழைங்கணையக்

கோனை யெரித்தெரி யாடி யிடங்குல

வான திடங்குறை யாமறையா

மானை இடத்ததோர் கையனி டம்மத

மாறுபடப்பொழியும்மலைபோல்

யானையுரித்த பிரான திடங்கலிக்

கச்சி யனேகதங் காவதமே. 1

சுந்தரர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *