ஆலயம் அறிவோம் –
பாடல் பெற்ற ஸ்தலங்களின் ஆன்மீக வழிகாட்டி!

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்து திருத்தலங்கள், குறிப்பாகப் பழமை வாய்ந்த பாடல் பெற்ற ஆலயங்களின் ஆன்மீகத் தகவல்களையும், வரலாற்றுப் பின்னணிகளையும் தேடி அறியும் பக்தர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக தளம் இதுவாகும்.

எங்கள் நோக்கம்

நமது முன்னோர்கள் கலைநயத்துடனும் ஆன்மீக ஞானத்துடனும் எழுப்பிய வழிபாட்டுத் தலங்களின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதே எங்கள் முதன்மைக் குறிக்கோள். தமிழ்நாட்டிலும் பிற பகுதிகளிலும் உள்ள புகழ்பெற்ற கோயில்கள், சுயம்பு லிங்கங்கள், மற்றும் மறைந்து கிடக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திவ்ய தேசங்கள் பற்றிய முழுமையான வழிகாட்டியை உங்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

நாங்கள் என்ன வழங்குகிறோம்?

  • கோவில் வரலாறுகள்: ஒவ்வொரு ஆலயத்தின் சிறப்பு பெருமை ஸ்தல வரலாறு..
  • வழிபாட்டு முறைகள்: முக்கிய திருவிழாக்கள், தரிசன நேரங்கள்.
  • பயண வழிகாட்டி: பக்தர்கள் எளிதாகக் கோவில்களைச் சென்றடையத் தேவையான இருப்பிட தகவல்கள்.

இந்து சமயத் திருக்கோவில்களின் புனிதத்தையும், பாரம்பரியத்தையும் போற்றிப் பாதுகாக்கும் இந்த ஆன்மீகப் பயணத்தில் எங்களோடு இணைந்திருங்கள்!

For Ex : 🌼 தொண்டை மண்டலம் பெயர் காரணம்

🌹காமாக்ஷி கோவிலின் விசேஷ அம்சம் துண்டீர மஹாராஜா சந்நிதி ஆகும். இங்கு ஆட்சி செய்த ஆகாச பூபதி என்ற அரசனுக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அவன் காமாக்ஷியை தினந்தோறும் மனமுருகி வழிபட்டு வந்தான்.

🌹இவனது பக்திக்கு மகிழ்ந்த அம்பாள், தனது மகன் கணபதியையே மன்னனுக்கு மகனாக கொடுத்தாள். கணபதியும் மன்னரின் குடும்பத்தில் துண்டீரர் என்ற பெயரில் அவதரித்தார். ஆகாச ராஜனுக்கு பிறகு துண்டீரரே சிறப்பாக ஆட்சியும் செய்தார்.

🌹 துண்டீரர் ஆட்சி செய்த காரணத்தினால் தான் இப்பகுதி தொண்டை மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. துண்டீர மகாராஜா அம்மனை வணங்கிய நிலையில், காமாக்ஷி சந்நிதிக்கு எதிரில் உள்ளார்.

274 பாடல் பெற்ற சிவாலயங்களை பற்றி படித்து அறிந்து கொண்டு, இரண்டு முறை தரிசனம் செய்து, 108 திவ்ய தேசங்கள், 12 ஜோதிர் லிங்கங்கள் & முக்கிய ஸ்தலங்கள் தரிசனம் செய்து அந்தப் பொக்கிஷத்தை அடுத்த தலைமுறைக்கு சேர்க்க இந்த முயற்சி…

274 பாடல் பெற்ற சிவாலயங்களில் தொகுப்பு சைவக் குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் தேவாரப் பாடல்கள் பாடிப் போற்றப்பட்ட புண்ணியத் தலங்கள் 274 தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்கள் என அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான கோயில்கள் தமிழ்நாட்டிலும், சில வெளிமாநிலங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் உள்ளன. பிராந்திய வாரியாக தலங்களின் தொகுப்பு. இத்தலங்கள் அமைந்துள்ள புவியியல் மற்றும் பிராந்தியப் பிரிவுகள்:

  • சோழ நாடு (காவிரி தென்கரை): 128 தலங்கள்
  • சோழ நாடு (காவிரி வடகரை): 63 தலங்கள்
  • தொண்டை நாடு: 32 தலங்கள்
  • நடு நாடு: 22 தலங்கள்
  • பாண்டிய நாடு: 14 தலங்கள்
  • கொங்கு நாடு: 7 தலங்கள்
  • வட நாடு: 5 தலங்கள்
  • ஈழ நாடு (இலங்கை): 2 தலங்கள்
  • மலை நாடு (கேரளா): 1 தலம்
  • துளுவ நாடு: 1 தலம்

இக்கோயில்கள் அனைத்தும் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

108 திவ்ய தேசங்கள் என்பவை ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாசுரங்களால்) செய்யப்பட்டவை.

இவற்றுள் 105 தலங்கள் இந்தியாவிலும், 1 நேபாளத்திலும், மற்ற 2 தலங்கள் (திருப்பாற்கடல், பரமபதம்) விண்ணுலகிலும் இருப்பதாக ஐதீகம்.

  • சோழ நாடு (40 தலங்கள்)
  • தொண்டை நாடு (22 தலங்கள்)
  • பாண்டிய நாடு (18 தலங்கள்)
  • மலை நாடு (13 தலங்கள்)
  • நடு நாடு (2 தலங்கள்)
  • வட நாடு (11 தலங்கள்)
  • விண்ணுலகம் (2 தலங்கள்): திருப்பாற்கடல் மற்றும் பரமபதம் (வைகுண்டம்)