உலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! 🙏

🌹 தமிழ்நாடு — ஒவ்வொரு ஆலயமும் ஒரு வரலாறு… ஒவ்வொரு கல்லும் ஒரு கதை, உயர்ந்து நிற்கும் கோபுரங்கள், சிந்திக்க வைக்கும் சிற்பங்கள், அழகிய சிலைகள், புனிதத் தீர்த்தங்கள், ஸ்தல விருக்ஷங்கள் — இவை அனைத்தின் பின்னாலும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு வரலாறும், ஒரு சுவாரஸ்யமான கதையும், ஒரு ஆன்மிகப் பெருமையும் ஒளிந்திருக்கின்றன.

🌹சில ஆலயங்களில் கற்கள் அனைத்தும் சிவலிங்கங்களாகத் தோன்றிய அற்புதம்… அங்கே கால் படக்கூடாது என்று தலைகீழாக நடந்த பக்தி…

அம்மா என்று அழைத்த ஞானசம்பந்தரை அம்பாளே இடுப்பில் தூக்கிச் சென்ற அருள்…
இறைவன் நந்தியை அனுப்பி வழிகாட்டிய திருவருள்…
பசியோடு வந்த பக்தனுக்கு அமுதூட்டிய கருணை…
பக்தனுக்காகப் பொற்காசுகளை அருளிய அற்புதம்… அதை இங்கே நதியில் போட்டு அங்கே குளத்தில் எடுத்த அதிசயம்.
நதியைக் கடக்க முடியாத பக்தனுக்காக இறைவனே படகோட்டியாக வந்த திருவிளையாடல்…
தீராத நோய்களைத் தீர்த்து, மருத்துவ அறிவையும் அருளிய இறைவனின் பெருமை…
இறந்த பிள்ளைக்கு மீண்டும் உயிர் கொடுத்த அருள் நிகழ்வுகள்…
இவை வெறும் கதைகள் அல்ல… நம் ஆலய மரபுகளோடு பின்னிப் பிணைந்திருக்கும் பக்தி, நம்பிக்கை மற்றும் வரலாற்றின் நினைவுச் சுவடுகள்.

ஒவ்வொரு ஆலயத்தையும் அறிந்துகொள்ளும் பொழுது ஆச்சரியம்…
பார்க்கும் பொழுது ஆனந்தம்…
பார்க்கப் பார்க்கப் பரமானந்தம்! 🌹

🌺ஆலயத்தை தரிசிக்கும் போது அதன் சிறப்பை உணர்ந்து கொள்வோம்.
நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்வோம்.

🛕 எங்கள் முதல் கவனம்
🌺 தேவாரப் பாடல் பெற்ற சிவாலயங்கள்
🌺 அடுத்து — திவ்ய தேசங்கள்

📞 பக்தர்களுக்குப் பயனுள்ள ஆலயத் தொடர்புத் தகவல்கள் பல ஆலயங்களில் குறிப்பாக தொலைதூரம், ஒதுக்குப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள கோவில்களில் ஒரு கால பூஜை நடைபெறும் ஆலயங்கள், இப்பொழுதுள்ள குருக்களின் உபயோகத்தில் உள்ள கைபேசி எண் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

🌹பக்தர்கள், யாத்திரை மேற்கொள்பவர்கள், தமிழ் வரலாறு மற்றும் பண்பாட்டில் ஆர்வமுள்ளவர்கள் என அனைவருக்கும் “ஆலயம் அறிவோம்” ஓர் பயனுள்ள துணையாக அமையட்டும்.
வாருங்கள்…

🌺 “ஆலயம் அறிவோம்” — அறிந்துகொள்வோம் ஆலயங்களை… அறிந்துகொள்வோம் நம் பாரம்பரியத்தை!

பாடல் பெற்ற சிவாலயங்களைத் தரிசிக்கும் போது ஏற்படும் பரமானந்தத்தை வார்த்தைகளால் முழுமையாக விவரித்துவிட முடியாது.

அத்தனையும் அற்புதம்!
அனைத்தும் அவன் அருளாலே… அவன் தாள் வணங்கி. 🙏

பி.கு: தங்களின் மேலான கருத்துக்களை, யோசனைகளை alayamarivom@yahoo.com மின்னஞ்சலில் பகிருங்கள்.