திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர்

🌼 முலவர் : வேதபுரீஸ்வரர் /வாழைமடுநாதர்

அம்பாள் : மங்கையர்கரசி

ஸ்தல விருக்ஷம் : வில்வம்

தீர்த்தம் : வைத தீ, வேத தீ

பாடல் : அப்பர் சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 14

🌼 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பிரம்மன் (வேதி) வழிபட்ட தலமாதலால் வேதிகுடி.

🌷ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளிகதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

🌷4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. வேதம் கேட்பதில் விருப்பமுள்ள பிள்ளையார்,இத்தலத்தில் தலை சாய்த்து அருள் பாலிக்கிறார்.

எனவே இவர் “வேத பிள்ளையார்” “செவி சாய்த்த பிள்ளையார் ” என அழைக்க படுகிறார். கோவில் எதிரே வேத தீர்த்தம் உள்ளது.

🌷நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் இத்தலத்தில் அதிகமாக வாழ்ந்த காரணத்தினால் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் இருந்துள்ளது.

🌷நந்தியெம்பெருமானுக்கும், சுயபிரகாசாம்பிகைக்கும் ஒரு பங்குனி மாதம் திருமழபாடியில் திருமணம் நடத்த ஐயாரப்பர் முடிவு செய்கிறார். திருமணச் சடங்குகளுக்குத் தேவையான வேதம் அறிந்த வேதியர்கள் திருவேதிக்குடியிலிருந்து தான் சென்றனர்.

🌼 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பொதுவாக சம்பந்தர், கோயில் இறைவனை பற்றி தான் பாடுவார். ஆனால் இத்தலத்தில் திருமணதடை நீக்கும் பாடலை பாடியுள்ளது சிறப்பு. 7th song in பதிகம்.

🌷பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும்,

அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவனின் வலது புறம் அம்மன் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோலம் வித்யாசமாக உள்ளது.

🌹 விஷேச விமானம்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷முழுவதும் கல்லால் அமைக்கபட்ட விமானத்தின் கீழ் வேதபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார்.

விமானத்தின் நான்கு திசைகளிலும் வேதங்களை உணர்த்தும் நந்திகள் உள்ளன.

வடதிசையில் சிவனுடன் எப்போதும் இருக்கும் மனோன்மணி அம்பிகை சிலை உள்ளது.

🌷பிரம்மா பூஜித்த தக்ஷிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து – விளங்கலாம்.

இவர் வேதங்களுக்கு அதிபதி என்பதால் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்குமுன் பெற்றோர் இங்கு வந்து வேண்டி செல்கின்றனர். சரஸ்வதி பூஜையன்றும் சிவனுக்கு விஷேச பூஜை செய்து வழிபடுகின்றனர்.

🌷திருவையாறில் சப்தஸ்தான விழா நடக்கும் பொழுது ஐயாரப்பர், அம்பிகை, நந்திதேவர் இங்கு எழுந்தருளி இத்தல மூர்த்தியை அழைத்து செல்வர். சப்தஸ்தான ஸ்தலங்களில் 4ம் கோயில் இது.

🌹 மங்கள அம்பிகை

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷இத்தல அம்பிகை பெண்களுக்கு அரசியாக இருந்து அவர்களுக்கு மங்களகரமான வாழ்க்கையை அமைத்து தருவதால் “மங்கையற்கரசி” என்றே பெயர்.

🌷ஆடி, தை மாத வெள்ளியன்று இவள் சந்தனகாப்பு அலங்காரத்துடன் சாட்சி தருவாள்.

🌷மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் நிவர்த்திக்காக, இவளுக்கு மஞ்சள் புடவை, தாலி அணிவித்து வழிபடுகிறார்கள்.

🌼 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பிரம்மாவிடமிருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை பெருமாள் மீட்டு வந்தார்.

🌷அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷங்கள் நீங்க, வேதங்கள் சிவனை வழிபடவே, அவர் வேதங்களை புனித படுத்தினார்.

🌷பின் வேதங்களின் வேண்டுதலுக்காக வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். தலத்திற்கும் திருவேதிக்குடி என்ற பெயர் ஏற்பட்டது.

🌷பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு இங்கு சிவனை வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு வேதி என்ற பெயர் உண்டு. So சிவனுக்கு இப்பெயர்.

🌷சோழ மன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார்.

🌷ஒரு முறை அவர் இக்கோயில் வந்து மங்கையர்கரசி அம்மனை தரிசனம் செய்து தன் மகளின் திருமணம் விரைவில் நடத்த வேண்டினான். அம்மனின் கருணையால் உடனே நடந்தது.

🌷அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்கரசி என்று செல்லபெயர் சூட்டி தன் நன்றியை தெரிவித்தான். பல திருப்பணிகளும் செய்தான்.

🌷இக்கோயில் ஸ்தல விருக்ஷத்தின் (வில்வம்) கீழ் சிவலிங்கம் உள்ளது.

🌼 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷கிழக்குநோக்கிய 3 நிலை ராஜகோபுரம். ஒரு பிரகாரம்.

🌷கருவறை அகழி வடிவில் உள்ளது. கருவறையில் திகழும் லிங்கத் திருமேனியின் பாணமானது சாளக்கிராமத்தை ஒத்த நீள்வட்ட வடிவமுடையது. அர்ச்சகர் காட்டும் தீபஒளி திருமேனியில் தெரியும் வண்ணமுடையது.

🌷செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு உள்ள சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர்.

🌷பிரகாரத்தில் லக்ஷ்மிநரசிம்மர், அருகில் கிரீடம் இல்லாமல் வணங்கியபடி ஆஞ்சநேயர் இருக்கிறார்.

🌷சிவன் சந்திதியை சுற்றிலும் 108 லிங்கங்கள் உள்ளன.

🌷சோழர் காலத்து தல்வெட்டுகள் உள்ளன.

வாழைமடுவில் இறைவன் தோன்றிய காரணத்தினால் “வாழைமடு நாதர்” என்ற பெயரும் உண்டு. பல்லவ மன்னர்களும் திருப்பணி.

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷திருமண தடை (Mainly)

👉இத்தலம் வந்து இறைவனையும் அம்மனையும் வழிபட்டு சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

கல்வி மற்றும் ஞானம் பெற: நான்கு வேதங்களும் பூஜித்த தலம் என்பதால், இங்குள்ள வேத விநாயகரை (வேத பிள்ளையார்) வழிப்பட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் மற்றும் ஞாபக சக்தி பெருகும்.

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருவையாறு சப்தஸ்தான திருவிழா

சிவபெருமானுக்குரிய மற்ற திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது

🌼 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மா, வேதங்கள், மஹாவிஷ்ணு, இந்திரன், வியாசர், சூரியன், குபேரன், நந்தியம்பெருமான், சுயம்பிரகாசை, சோழ மன்னன், சம்பந்தர், அப்பர், சேக்கிழார்…

🌼அமைவிடம்,நேரம், தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தஞ்சாவூர் 12KM👉 திருவையாறு 7KM👉 திருக்கண்டியூர் 5KM 👉 வீரசிங்கம்பேட்டை வழியாக கோவிலை அடையலாம்.

திருச்சோற்றுத்துறை 3KM

கண்டியூரில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு.

9.30AM – 12.30PM 6PM – 7.30PM

89733 87839 மோகன் குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌼கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நீறுவரி ஆடரவொ டாமைமன

என்புநிரை பூண்பரிடபம்

ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல்

ஆதியர் இருந்தவிடமாந்

தாறுவிரி பூகம்மலி வாழைவிரை

நாறவிணை வாளைமடுவில்

வேறுபிரி யாதுவிளை யாடவள

மாரும்வயல் வேதிகுடியே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *