திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர்
முலவர் : வேதபுரீஸ்வரர் /வாழைமடுநாதர்
அம்பாள் : மங்கையர்கரசி
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : வைத தீ, வேத தீ
பாடல் : அப்பர் சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 14
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மன் (வேதி) வழிபட்ட தலமாதலால் வேதிகுடி.
ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளிகதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது.
4 வேதங்களும் இங்கு இறைவனை வழிபட்டுள்ளன. வேதம் கேட்பதில் விருப்பமுள்ள பிள்ளையார்,இத்தலத்தில் தலை சாய்த்து அருள் பாலிக்கிறார்.
எனவே இவர் “வேத பிள்ளையார்” “செவி சாய்த்த பிள்ளையார் ” என அழைக்க படுகிறார். கோவில் எதிரே வேத தீர்த்தம் உள்ளது.
நான்கு வேதங்களையும் பயின்றவர்கள் இத்தலத்தில் அதிகமாக வாழ்ந்த காரணத்தினால் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரும் இருந்துள்ளது.
நந்தியெம்பெருமானுக்கும், சுயபிரகாசாம்பிகைக்கும் ஒரு பங்குனி மாதம் திருமழபாடியில் திருமணம் நடத்த ஐயாரப்பர் முடிவு செய்கிறார். திருமணச் சடங்குகளுக்குத் தேவையான வேதம் அறிந்த வேதியர்கள் திருவேதிக்குடியிலிருந்து தான் சென்றனர்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொதுவாக சம்பந்தர், கோயில் இறைவனை பற்றி தான் பாடுவார். ஆனால் இத்தலத்தில் திருமணதடை நீக்கும் பாடலை பாடியுள்ளது சிறப்பு. 7th song in பதிகம்.
பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும்,
அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவனின் வலது புறம் அம்மன் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் கோலம் வித்யாசமாக உள்ளது.
விஷேச விமானம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முழுவதும் கல்லால் அமைக்கபட்ட விமானத்தின் கீழ் வேதபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார்.
விமானத்தின் நான்கு திசைகளிலும் வேதங்களை உணர்த்தும் நந்திகள் உள்ளன.
வடதிசையில் சிவனுடன் எப்போதும் இருக்கும் மனோன்மணி அம்பிகை சிலை உள்ளது.
பிரம்மா பூஜித்த தக்ஷிணாமூர்த்தியை நாமும் வழிபட்டால் கல்வி கேள்விகளில் சிறந்து – விளங்கலாம்.
இவர் வேதங்களுக்கு அதிபதி என்பதால் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்குமுன் பெற்றோர் இங்கு வந்து வேண்டி செல்கின்றனர். சரஸ்வதி பூஜையன்றும் சிவனுக்கு விஷேச பூஜை செய்து வழிபடுகின்றனர்.
திருவையாறில் சப்தஸ்தான விழா நடக்கும் பொழுது ஐயாரப்பர், அம்பிகை, நந்திதேவர் இங்கு எழுந்தருளி இத்தல மூர்த்தியை அழைத்து செல்வர். சப்தஸ்தான ஸ்தலங்களில் 4ம் கோயில் இது.
மங்கள அம்பிகை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தல அம்பிகை பெண்களுக்கு அரசியாக இருந்து அவர்களுக்கு மங்களகரமான வாழ்க்கையை அமைத்து தருவதால் “மங்கையற்கரசி” என்றே பெயர்.
ஆடி, தை மாத வெள்ளியன்று இவள் சந்தனகாப்பு அலங்காரத்துடன் சாட்சி தருவாள்.
மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் நிவர்த்திக்காக, இவளுக்கு மஞ்சள் புடவை, தாலி அணிவித்து வழிபடுகிறார்கள்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மாவிடமிருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை பெருமாள் மீட்டு வந்தார்.
அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷங்கள் நீங்க, வேதங்கள் சிவனை வழிபடவே, அவர் வேதங்களை புனித படுத்தினார்.
பின் வேதங்களின் வேண்டுதலுக்காக வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். தலத்திற்கும் திருவேதிக்குடி என்ற பெயர் ஏற்பட்டது.
பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு இங்கு சிவனை வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு வேதி என்ற பெயர் உண்டு. So சிவனுக்கு இப்பெயர்.
சோழ மன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார்.
ஒரு முறை அவர் இக்கோயில் வந்து மங்கையர்கரசி அம்மனை தரிசனம் செய்து தன் மகளின் திருமணம் விரைவில் நடத்த வேண்டினான். அம்மனின் கருணையால் உடனே நடந்தது.
அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்கரசி என்று செல்லபெயர் சூட்டி தன் நன்றியை தெரிவித்தான். பல திருப்பணிகளும் செய்தான்.
இக்கோயில் ஸ்தல விருக்ஷத்தின் (வில்வம்) கீழ் சிவலிங்கம் உள்ளது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்குநோக்கிய 3 நிலை ராஜகோபுரம். ஒரு பிரகாரம்.
கருவறை அகழி வடிவில் உள்ளது. கருவறையில் திகழும் லிங்கத் திருமேனியின் பாணமானது சாளக்கிராமத்தை ஒத்த நீள்வட்ட வடிவமுடையது. அர்ச்சகர் காட்டும் தீபஒளி திருமேனியில் தெரியும் வண்ணமுடையது.
செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு உள்ள சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர்.
பிரகாரத்தில் லக்ஷ்மிநரசிம்மர், அருகில் கிரீடம் இல்லாமல் வணங்கியபடி ஆஞ்சநேயர் இருக்கிறார்.
சிவன் சந்திதியை சுற்றிலும் 108 லிங்கங்கள் உள்ளன.
சோழர் காலத்து தல்வெட்டுகள் உள்ளன.
வாழைமடுவில் இறைவன் தோன்றிய காரணத்தினால் “வாழைமடு நாதர்” என்ற பெயரும் உண்டு. பல்லவ மன்னர்களும் திருப்பணி.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமண தடை (Mainly)
இத்தலம் வந்து இறைவனையும் அம்மனையும் வழிபட்டு சம்பந்தரின் பதிகத்தை வீட்டில் அமர்ந்து காலை மாலை விடாது படித்து வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
கல்வி மற்றும் ஞானம் பெற: நான்கு வேதங்களும் பூஜித்த தலம் என்பதால், இங்குள்ள வேத விநாயகரை (வேத பிள்ளையார்) வழிப்பட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் மற்றும் ஞாபக சக்தி பெருகும்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருவையாறு சப்தஸ்தான திருவிழா
சிவபெருமானுக்குரிய மற்ற திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மா, வேதங்கள், மஹாவிஷ்ணு, இந்திரன், வியாசர், சூரியன், குபேரன், நந்தியம்பெருமான், சுயம்பிரகாசை, சோழ மன்னன், சம்பந்தர், அப்பர், சேக்கிழார்…
அமைவிடம்,நேரம், தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தஞ்சாவூர் 12KM திருவையாறு 7KM
திருக்கண்டியூர் 5KM
வீரசிங்கம்பேட்டை வழியாக கோவிலை அடையலாம்.
திருச்சோற்றுத்துறை 3KM
கண்டியூரில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு.
9.30AM – 12.30PM 6PM – 7.30PM
89733 87839 மோகன் குருக்கள்
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நீறுவரி ஆடரவொ டாமைமன
என்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரும் இறைஞ்சுகழல்
ஆதியர் இருந்தவிடமாந்
தாறுவிரி பூகம்மலி வாழைவிரை
நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள
மாரும்வயல் வேதிகுடியே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply