திருக்கச்சிமேற்றளி மேற்றளிநாதர் திருமேற்றளீஸ்வரர்

💐மூலவர் : திருமேற்றளீஸ்வரர் மேற்றளிநாதர்

மூலவர் : ஓத உருகீஸ்வரர் 

உற்சவர் : சந்திரசேகரர் 

அம்பாள் :மேற்றளிநாயகி

ஸ்தல விருக்ஷம் : மா 

ஆகமம் : சிவாகமம்

பாடல் : சுந்தரர் அப்பர் 

தீர்த்தம் : விஷ்ணு தீ, சுயம்பு தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம் தொண்டை நாடு 2

💐 ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சுயம்பு மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். கோயிலில் 2 தனி தனி மூல ஸ்தானத்தில் சிவ பெருமான் அருள்கிறார்.

தொண்டைநாடு2, ஸ்தல விநாயகர் – சித்தி விநாயகர்

3நிலை ராஜகோபுரம்.

💐ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹காஞ்சிபுரத்தில் உள்ள சிவன் கோவில்களுக்கு காமாக்ஷியே பிரதான அம்பாளாக  கருதப்படுவதால் இங்குள்ள பெரும்பாலான கோவில்களில் அம்பாள் இருப்பதில்லை.

🌹இங்கு பராசக்தி அம்பாள் தனி சந்நிதியில் கிழக்குப் பார்த்து அருள்புரிகிறாள். இவள் சாந்தமான கோலத்தில் இருப்பது சிறப்பு.

🌹சிவன் மேற்குநோக்கி இருப்பதால்  மேற்றளீஸ்வரர் (மேற்கு பார்த்த தளி) என்ற பெயர் வந்தது. தளி= கோவில்.

🌹ஓதஉருகீஸ்வரர் கருவறை யில் சிவ வடிவமான லிங்கத்தையும் அருகே திருமாலின் பாதத்தையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதால் வாழ்க்கையில் குறைவில்லாத வளம் பெறலாம் என்பது நம்பிக்கை.

🌹அப்பர் இத்தலத்தை “கல்வியை கரையிலாத காஞ்சி மாநகர் தன்னுள்ளால்” என குறிப்பிட்டு பாடியுள்ளார். இதனால் இத்தலத்து இறைவனை வணங்கினால் கல்வியில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை. 

🌹சுந்தரர் அப்பர் பாடிய 

திருமேற்றளீஸ்வரரே இங்கு பிரதானம். ஆனாலும் கோயில் ராஜகோபுரமும் பிரதான வாயிலும் ஓதஉருகீஸ்வரருக்கே உள்ளது. இவருக்கு நேரே உள்ள நந்திக்கு தான் பிரதோஷ வழிபாடுகளும் நடக்கிறது.

🌹 கோஷ்டத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி  கீழ் இருக்கும் முயலகன் அவருக்கு இடது பக்கமாக திரும்பி இருப்பது வித்தியாசமான கோலம் ஆகும். 100 ருத்ரர்கள், சீகண்டர், வீரபத்திரர், குரோதர், மண்டலாதிபதிகள் உள்ளிட்ட 116 பேரும் புதனும் வழிபட்ட தலம் இது, ALSO சுந்தரர் அப்பர் சேக்கிழார்.

🌹தென் கோடியில் நின்று பாடிய ஞானசம்பந்தர், அவ்விடத்திலேயே தனி சன்னதியில் இருக்கிறார்.

சாதாரணமாக கையில் தாளத் துடன் காட்சி தரும் சம்பந்தர், இங்கு வணங்கிய கோலத்தில் இருக்கிறார்.

🌹இவருக்கு ‘ஆளுடை பிள்ளையார்’ ‘சம்பந்த பிள்ளையார்’ என்ற பெயர்களும் உள்ளதால் இவரது பெயராலேயே இப்பகுதி பிள்ளையார் பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இவருக்கு “பச்சிமாலயம்’ என்று மற்றொரு பெயரும் வழங்கப்படுகிறது.

💐ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த மஹா விஷ்ணுவிற்கு, (சிவ சாருூப்யம் ) சிவனின் லிங்க வடிவம் பெற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. எனவே சிவ ஸ்வரூபம் அருளும் படி சிவனிடம் வேண்டினார்.

🌹சிவனோ அது சாத்தியப்படாது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார். விஷ்ணுவும் விடுவதாக இல்லை. சிவனை வேண்டி தவம் செய்ய தொடங்கினார்.

🌹விஷ்ணுவின் மனதிடத்தை கண்டு வியந்த சிவன் அவருக்கு அருள் புரிய எண்ணம் கொண்டார்.

🌹 இத்தலத்தில் மேற்கு நோக்கி சுயம்புவாக வீற்றிருக்கும் தன்னை வேண்டி தவம் செய்து வழிபட்டு வர, ஞானசம்பந்தன் இங்கு வருகை தந்து பதிகம் பாடும் போது அது கிடைக்கும் என்று வரமளித்தார். அதன்படி இத்தலம் வந்த மஹாவிஷ்ணு, தீர்த்தத்தில் நீராடி, வேகவதி நதிக்கரையில் சிவனை நோக்கி கிழக்குப் பார்த்து நின்ற கோலத்திலேயே தவம் செய்தார்.

🌹சிவ தல யாத்திரை சென்ற ஞான சம்பந்தர், இத்தலம் வந்த போது தவக்கோலத்தில் நின்று கொண்டிருப்பது சிவன் தான் என எண்ணிக்கொண்டு, சிவனுக்கு பின்புறத்தில் தூரத்தில் நின்றவரே பதிகம் பாடினார்.

🌹 அவரது பாடலில் மனதை பறிகொடுத்த MV, அப்படியே உருகினார். பாதம் வரை உறுகிய விஷ்ணு, லிங்க வடிவம் பெற்றபோது ( சிவ சாரூப்யம்) சம்பந்தர்  பாடலை முடித்தார்.

🌹எனவே இறுதியில் அவரது பாதம் மட்டும் அப்படியே நின்று விட்டது. தற்போதும் கருவறையில் லிங்கமும் அதற்கு முன்பு பாதமும் இருப்பதை காணலாம். சம்பந்தரின் பாடலுக்கு உருகியவர் என்பதால் இவர், “ஓத உருகீஸ்வரர்” என்ற பெயர் பெற்றார்.

💐ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 கோயில் உள்ள இத்தெரு வின் நடுவில் “உற்றுக்கேட்ட முத்தீசர்” ஆலயம் உள்ளது.

🌹ஞா.ச பாடியபோது சிவP அருகில் இருந்து கேட்பதற்காக இங்கு அமர்ந்ததாகவும், கேட்டதாகவும் வரலாறு.

🌹வீதியில் மேற்கோடில திருமேற்றளி கோவில் உள்ளது.

🌹அம்பாள் சந்நிதி- மூல திரு உருவம் நின்ற கோலம் – காஞ்சி மண்டலம் முழுமைக்கும் அம்பாள் காமாக்ஷி தான். இம்மூர்த்தம் பிற்கால பிரதிஷ்டை ஆகும்.

🌹 இத்தெருவின் கீழ் கோடியில் ஞானசம்பந்தர் ஆலயம் உள்ளது.

🌹தல பதிகம் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.

🌹இக்கோவில் காஞ்சி புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

💐 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தன்னை மனமுருகி வழிபட்ட மஹாவிஷ்ணுவிற்கு தன் வடிவத்தையே கொடுத்தவர் என்பதால், திருமேற்றளீஸ்வரரை வணங்க, வேண்டும் வரங்கள் கிடைக்கும்.

💐 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பங்குனி உத்திரம் மஹாசிவராத்திரி திருஞானசம்பந்தர் குருபூஜை 

கந்த சஷ்டி விழா மற்றும்

ஆருத்ரா தரிசனம் கார்த்திகை தீபம் பிரதோஷம் சிறப்பு 

💐 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹாவிஷ்ணு, புதன் பகவான், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார் மற்றும்

116 தேவர்கள்/ருத்திரர்கள்: ஆன்மீகப் புராணங்களின்படி, நூறு ருத்திரர்கள், சீகண்டர், வீரபத்திரர், குரோதர் மற்றும் மண்டலாதிபதிகள் உள்ளிட்ட மொத்தம் 116 திவ்ய புருஷர்கள் இத்தலத்து மேற்றளிநாதரை வழிபட்டுள்ளனர்.

💐அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிள்ளையார் பாளையம் 2.3KM from பேருந்து நிலையம்

1.9 KM from ஏகாம்பரேஸ்வரர் கோவில்.

7.30AM – 11.30AM, 5PM- 7.30PM,

98653 55572 & 70107 10055 ஜெ.சந்திரமௌலி அர்ச்சகர்.

💐 கோயில் தேவாரம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மறையது பாடிப் பிச்சைக் 

  கென்றகந் திரிந்து வாழ்வார்

பிறையது சடைமு டிமேற் 

  பெய்வளை யாள்தன் னோடுங்

கறையது கண்டங் கொண்டார் 

  காஞ்சிமா நகர்தன் னுள்ளால்

இறையவர் பாட லாடல் 

  இலங்குமேற் றளிய னாரே. 1

அப்பர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *