வைத்தீஸ்வரன் கோவில் புள்ளிருக்குவேளூர் வைத்தியநாதர்

👑மூலவர் : வைத்தியநாதன்

அம்பாள் : தையல்நாயகி

ஸ்தல விருக்ஷம் : வேம்பு

தீர்த்தம் : சித்தாமிர்தம்

ஆகமம் : காமிக ஆகமம்

புராணப் பெயர் : புள்ளிருக்கு வேளூர்

பாடல் : அப்பர் சம்பந்தர்

சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் 70, சோழ நாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 16.

👑 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.!

🌹அதி அற்புதமான ஆச்சரியமான ஒரு திவ்ய க்ஷேத்ரம். பஞ்ச மூர்த்திகளின் ஒரு திவ்யமான சிறப்பை சொல்லாலே கொண்டு வந்து சேர்க்க முடியாது. நவகோள்களிலே அங்காரகன்

🌹தினம்தோறும் வந்து சிவபூஜை புரியக்கூடிய ஒரு உன்னதமான இடம்.

🌹கிருத யுகத்திலே ஆதிசேஷனும் பிரம்மாவும் சேர்ந்து பூஜித்த பெருமைக்குரியது. திரேதா யுகத்தில் பகவான் ஸ்ரீ ராமபிரான் லட்சுமணன் ஜடாயு சம்பாதி போன்றிருக்கக் கூடிய தேவாம்சம் பொருந்திய பறவை.

துவாபர யுகத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணராலும் தன்வந்திரியினாலும் கலியுகத்தில் சித்த புருஷர்களாலும் ரிஷிகளாலும் பூஜிக்க கூடிய, பூஜிக்கப்பட்ட பூஜித்துக் கொண்டிருக்கக் கூடிய திவ்ய க்ஷேத்ரம்.

🌹இங்கு அனைத்துமே விசேஷம். தீர்த்தம், விபூதி, பிரசாதம், சன்னிதி, ஸ்தல விருக்ஷம், பிரகாரம், க்ஷேத்ரம் etc. ஒவ்வொரு மூர்த்தியும் சிறப்பு.

🌹நமது நாட்டில் 3 வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது. இது, பரளி & JCD ஜார்க்கண்ட்.

தேவாதி தேவர்களாலே நித்யம் பூஜிக்க கூடியது.

🌹மூலஸ்தானத்திலே இருக்கக்கூடிய சுவாமி மஹா மந்திரங்களாம். அக்ஷரங்களை எல்லாம் கொண்டு வந்து கொட்டினாளாம். அந்த அக்ஷரங்களில் இருந்து சுவாமி கிளம்பி வெளியே வந்தாராம். அக்ஷரங்களின் ஸ்வரூபமாக சுவாமி இருக்கிறார். அப்போது முளை ஒன்று எழும்பியது. ஒரு விருக்ஷம் கிளம்பியது. அதை வேத மந்திரங்கள் எல்லாம் சொல்லி பூஜை பண்ணினார்கள் அதுவே புள்ளிருக்கு வேளூர்.

🌹வைத்தீஸ்வரன் என்றால் இங்கு அனைவருமே !!!

முதலில் வணங்கும் கற்பக விநாயகர் ஆக இருக்கட்டும், செல்வ முத்துக்குமார சுவாமியாக இருக்கட்டும், வைத்தியநாதர் தையல்நாயகி வைத்தீஸ்வரியாக இருக்கட்டும் அங்காரகனாக இருக்கட்டும் இவர்கள் அத்தனை பேருமே!!!

🌹4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது.

👑 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இங்குள்ள 5 கோபுரங்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.

இங்குள்ள மரகதலிங்கம் புகழ்பெற்றது.

மூலவருக்கு முன் தங்கம் வெள்ளியால் ஆன 2 கொடி மரங்கள் உள்ளன.

பொதுவாக நவகிரகங்கள் திசை மாறி இருக்கும். ஆனால் இங்கு நவகிரகங்கள் அனைத்தும் சிவன் சந்நிதிக்கு பின்புறம், ஒரே நேர்கோட்டில் நின்று, மற்ற கோவில்களில் முன்பக்கம் இங்கு மட்டுமே மூலவரின் பின்பக்கம். அங்காரகன் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்

🌹புள்ளிருக்கு வேளூர் 👉

புள் = பறவை ஜடாயு

ரிக் = வேதம் ரிக் வேதத்தோடு எல்லா வேதங்களும் வந்து சுவாமியை பூஜை பண்ணியது.

வேள் = முருகன்

ஊர் = சூரியன். இவர்கள் அனைவரும் சேர்ந்து சுவாமியை பூஜை செய்ததனால் “புள்ளிருக்கு வேளூர்”.

🌹 சித்தாமிர்த தீர்த்தம் 👉

இந்த தீர்த்தக் கரையில் சதானந்த மகரிஷி தபஸ் செய்து கொண்டிருந்தார். அவர் த்ரிகால ஞானி. யார் வந்து எதை கேட்டாலும் அருள்வார். தவம் செய்து கொண்டு இருக்கும் பொழுது ஒரு நீர்வாழ் ஜந்து தவளை இங்கே இருக்க, அதை முழுங்க பாம்பு வருகிறது. ஒரு நொடிப்பொழுது அவருக்கு கோபம் வருகிறது. அவர்களின் பூர்வ ஜென்ம சாபத்தினால் இங்க வந்து பிறந்திருக்கிறார்கள். இருவருக்கும் அனுக்கிரகம் செய்ய பரமேஸ்வரனை வேண்டுகிறார். தேவ விமானம் வருகிறது, 2 பேருக்கும் சுய வடிவம், அழைத்து சென்றது – இவர் பார்வை பட்டதால்.

இனிமேல் இங்கு பாம்பு தவளை எல்லாம் இருக்ககூடாது என்றார்.

இந்த ஷேத்திரத்தில், தீர்த்தத்தில் இன்று வரை ஒரு பாம்பு தவளை கூட வந்ததில்லை

🌹இது பெரிய தீர்த்த குளம். இங்கு 118 தீர்த்தங்கள் ரகசியமாக உறைகிறது. சித்தர்கள் இறைவனை அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்ட பொழுது சிந்திய அமிர்தமும் தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. ஆகவே சித்தாமிர்த தீர்த்தம். அனைத்து நோய்களுக்கும் மருந்து.

🌹சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் கூட இதில் ஸ்நானம் செய்ய வைத்து, கற்பக விநாயகர் & முத்துக்குமார சுவாமியை வணங்கி, அம்பாள் கிட்ட இருந்து தைலம் வாங்கி தலையில் தடவி சுவாமியை நமஸ்காரம் செய்தால் போதும் சரியாகி விடும். நம்ம ஜென்மாவே பைத்தியம் தானே! அது தீருவதற்கு இந்த ஸ்தலம் வந்தால் போதும். தீர்ந்துவிடும்!!

🌹18 சித்தர்கள் 👉 தவம் செய்த பூமி. அகஸ்தியருக்கு சுவாமி பிரத்யக்ஷம், 2 த்வஜஸ்தம்பம் தங்கம் வெள்ளி 👉 சோழர்கள் முதல் மராட்டியர்கள் வரை திருப்பணி.

அப்பர் சம்பந்தர் மட்டுமல்லாது அருணகிரிநாதர் குமரகுருபரர் படிக்காசுதம்பிரான் சிதம்பர முனிவர் காளமேகப்புலவர் ராமலிங்க அடிகள் வடுகநாத தேசிகர் தருமைஆதீனம் அனைவரும் சுவாமியை பாடி இருக்கிறார்கள்.

🌹ஸ்தல விருக்ஷம் & பிரசாதம்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹வேப்பமரம், ஒவ்வொரு யுகத்திலும் பெருமை. வேறு எங்கும் இவ்வளவு பழமை பார்க்க முடியாது. நிறைய மகரிஷிகள் உட்கார்ந்து தபஸ் பண்ணி இருக்கிறார்கள். இந்த வேப்பமண் புத்துமண் தான் பிரசாதமாக தருகிறார்கள்.

🌹இங்கே தயார் செய்யக்கூடிய பிரசாதம் – திருச்சாந்து உருண்டை – ஸ்ரீ பிரசாதம்னு பேர்

தீராத வியாதியை எல்லாம் தீர்த்து விடும். ஸ்வாமியினுடைய அபிஷேக தீர்த்தம், விபூதி, புத்து மண், வேப்பிலை, மிளகு, சந்தனம் இதெல்லாம் சேர்த்து தயாரிக்கக்கூடிய சின்னதாக இருக்கக்கூடிய (ரகசியமாக இருக்கக்கூடிய) மருந்து பிரசாதம் ரொம்ப உசத்தி. 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது.

👑 ஸ்தல புராணம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இக்கோயிலின் மகத்துவமே இதன் புராணம் தான்.

நவகோள்கள் வழிபட்டன 👉 நாம் தானே எல்லோருக்கும் பலா பலன்களை கொடுக்கிறோம்னு அகந்தை வந்ததாம். அவர்களின் தன்மை, யார் யாரிடம் என்னென்ன உண்டோ அனைத்தும் காணாமல் போய்விட்டதாம். எல்லோரும் வந்து சுவாமியை பூஜை பண்ணினார்கள்.

அங்காரகன் நினைத்தாராம் – நம்ம கிட்ட தான் தபஸ் இருக்கே என.. அப்பொழுது அவர் சருமமெல்லாம் நிறம் மாறி விட்டதாம். அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்து, ஒரு மண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்து, சுவாமியை பூஜை செய்து நோய் குணமானது. இந்த வைத்தியநாத சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தேவி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் தைலநாயகி என்று பெயர்.

நவ கோள்களும் ஸ்வாமிக்கு பின்னால், சுவாமியை பார்த்தா போல் வரிசையாக நிற்கும். பூஜை செய்கிறார்கள்.

அதுவும் அங்காரகன் நித்தியம் பூஜை பண்றார். இது செவ்வாய் ஸ்தலம்.

அங்காரகன்- பூமி காரகன்- நவ கோள்களினால் & செவ்வாயினால் ஏற்படக்கூடிய இடர்பாடுகள் – இங்கு வழிபட்டால் போய்விடும்.

அங்காரகனுக்கு தேவதை சுப்பிரமணியர். சுப்பிரமணியர் பூஜிக்கின்ற சுவாமி. சுவாமியை வழிபடும் அம்பிகை. அம்பிகையை ஆராதிக்க கூடிய கற்பக விநாயகர் இப்படி யாரை வழிபட்டாலும் போய்விடும்.

🌹முத்துக்குமார சுவாமி 👉

முத்துக்குமாரசுவாமி இங்கு ரொம்ப உசத்தி. முருகப்பெருமான் குழந்தையாகவே இங்கு வந்து தபஸ் செய்கிறார். முதல் பூஜை முருகனுக்கே.

அர்த்த ஜாமத்தில் முருகப்பெருமானுக்கு பூஜை செய்யும் பொழுது முருகனின் திருவடிகளில் வைக்கக்கூடிய சந்தனமும் விபூதியும் அவ்வளவு விசேஷம். சந்தனம் விபூதி எலுமிச்சம்பழம், புணுகு, பால் பால் சாதம் இதெல்லாம் திருவடியில் வைப்பார்கள். வாசனாதி புஷ்பங்கள் எல்லாம் சாத்துவார்கள். மறுநாள் காலையில் விபூதியும் சந்தனமும் பிரசாதமாக தருவார்கள். மடியில் வாங்கிக் கொண்டால் மலடிக்கு கூட குழந்தை பிறக்குமாம்.

முருகன் வேல் பெற்ற காரணத்தினாலே வேளூர்.

முருகன் வேல் கொண்டு பூஜித்த காரணத்தினால் வேளூர்.

முருகன் வேலை சுவாமி கிட்ட வைத்ததினால் வேளூர்.

🌹ராமபிரான் & ஜடாயுகுண்டம்👉

ராமர் லக்ஷ்மனரோட இந்த க்ஷேத்ரத்திற்கு வந்து தங்கி ஜடாயுவிற்கு அந்திம சம்ஸ்காரம் பண்ணி இங்கேயே தங்கியிருந்து சுவாமியை பூஜை பண்ணி இராவண சம்ஹாரம் பண்ணினார். பிற்பாடு மீண்டும் சீதா பிராட்டியோடு வந்து அவகிரக ஸ்நானம் பண்ணி, சுவாமியை திரும்ப புனர்பூஜை பண்ணி, அனுக்கிரகம் வாங்கிண்டு போனார். அவ்வளவு உசத்தி. முடியாத காரியங்களையும் முடித்து தந்து விடுகிறாராம் சுவாமி.

👑 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கோயிலின் கிழக்கே பைரவர், மேற்கே வீரபத்திரர், தெற்கே விநாயகர், வடக்கே காளி ஆகியோர் இத்தலத்திற்கு காவல் புரிகின்றனர்.

5 பிரகாரங்களை கொண்ட இந்த கோவில் மேற்கு திசை நோக்கியது.

7 நிலை ராஜகோபுரம் உள்ளது. திருக்கைலாயப் பரம்பரை தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானது.

இங்கே சுவாமி மேற்கு பார்த்து இருக்கிறார். என்ன பலன்? 1000 சிவாலயங்கள் போன பலன்.

முதலில் நுழைந்து உள்ளே சென்றால் த்வஜஸ்தம்பம் நமஸ்காரம், வலது பக்கம் கற்பக விநாயகர்- என்ன வரம் கேட்டாலும் தருவார். கடந்த சென்றால் சித்தாமிர்த தீர்த்தம்.

படித்துறையில் இறங்கி ப்ரோக்ஷணம். வெல்லம் கொண்டு போனால் கரைக்கலாம். மிளகு உப்பு போடலாம் ( சரும நோய்). மானசீகமா தீர்த்தத்தை பிரதக்ஷிணம். மேலே வந்தால் மீண்டும் கற்பக விநாயகர் வேண்டி, வெளிப்பிரகாரம் பிரதக்ஷணம், அனைத்து சன்னதி வணங்கி, அங்காரகன் – செவ்வாய் தோஷம் திருமண வரம். பிரதக்ஷணம், சம்பூரணம் பண்ணி உள்ளே போனால் நேரே அம்பாள் தையல் நாயகி கையில் தைல பாத்திரத்துடன், சுவாமி சன்னதி இடது பக்கம் முத்துக்குமார சுவாமி சந்ததி மூலவரும் உற்சவரும் அவரே. அவ்ளோ அழகு, சுவாமியை நன்னா பார்க்கிறோம். பிரார்த்தனை செய்கிறோம். தட்சிணாமூர்த்தியை வணங்கி பூர்த்தியாகும் இடத்தில் அங்காரகன் உற்சவ திருமேனி பார்த்து மூலஸ்தானத்தில் மூர்த்தி, பஞ்சாட்சரம் சொல்லி வணங்கி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம்.

👑 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

உடல் பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசி கொள்கின்றனர்.

செல்வ முத்துக்குமார் சுவாமி சன்னதியில் அர்த்த ஜாம பூஜையில் வைத்த சந்தனமும் திருநீரும் நோய்கள் தீர்க்க + குழந்தை பேறு.

மூலவரை வணங்குவோருக்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு தொழில் விருத்தி திருமண வரம் குழந்தை வரம் தோஷ நிவர்த்தி க்கும் பிரார்த்தனை.

இவரது சன்னதியில் தரப்படும் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீரும். செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

👑 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தை மாதம் 10 நாள் செல்வமுத்துக்குமாரசுவாமிக்கு தைப்பூச திருவிழா

பங்குனி மாதம் 28 நாள் பிரம்மோற்சவம் கோலாகலம்.

ஐப்பசி கந்த சஷ்டி 6 நாள்

வைகாசி மண்ணாபிஷேக மண்டலாபிஷேக கிருத்திகை,

செவ்வாய் அங்காரகன் ஆட்டு வாகனத்தில் எழுந்தருளும் வைபவம்,

சித்திரை மாதம் நகரத்தார் குலதெய்வ பாரம்பரிய விழா

பிரதோஷம் பொங்கல் தீபாவளி புத்தாண்டு சிறப்பு

👑வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சம்பந்தர், அப்பர், சேக்கிழார், முருகர், சூரியன், ரிக் வேதம், அங்காரகன்(செவ்வாய்), இராமர், இலட்சுமணன், அநுமான், சீதை, ஜடாயு, சம்பாதி, பிரம்மன், சரஸ்வதி, லட்சுமி, துர்கை , துர்வாசர், சிவசன்மன், சதானந்த மகரிஷி, நவ கோள்கள், 18 சித்தர்கள், மகரிஷிகள் முதலியோர்.

👑அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சீர்காழி அருகே உள்ளது 7KM.

6.30AM – 1PM, 4PM – 8PM

94435 64347 துரை குருக்கள்

91598 34338 சபரி குருக்கள்

94435 26860 கல்யாணசுந்தரம் குருக்கள்

90955 66490 கைலாசம் குருக்கள்

94438 18032 பாலு குருக்கள்

78689 62706 பிரவீன் காந்தி குருக்கள்

👑 கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கள்ளார்ந்த பூங்கொன்றை

மதமத்தங் கதிர்மதியம்

உள்ளார்ந்த சடைமுடி எம்

பெருமானார் உறையுமிடம்

தள்ளாய சம்பாதி

சடாயென்பார் தாமிருவர்

புள்ளானார்க் கரையனிடம்

புள்ளிருக்கு வேளூரே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *