வட திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர்

🌼மூலவர் : மாசிலாமணீஸ்வரர், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர், அகளங்கரத்னேஸ்வரர் 

அம்பாள் : கொடியிடைநாயகி, லதாமத்யாம்பாள், சித்ரமத்யநாயகி, மனோபிரம்மணிநாயகி 

ஸ்தல விருக்ஷம் : முல்லை & மாதவி மரம்

தீர்த்தம் : அக்னி & கல்யாண தீ 

பாடல் : சுந்தரர் 

ஆகமம் : சிவாகமம், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் & தொண்டை நாட்டு ஸ்தலம் 22

🌼ஸ்தல பெருமை  👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷இத்தலம்

கிருத யுகத்தில் ரத்தினபுரம்,

திரேதா யுகத்தில் – வில்வவனம்,

துவாபரயுகத்தில் – செண்பக வனம் 

கலி யுகத்தில்- முல்லைவனம்.

🌷வசிஷ்ட முனிவர் இவரை வழிபட்டு காமதேனுவை பெற்றார் 

🌷 துர்வாச முனிவர் வணங்கி வழிபட்ட தலம்.

🌷சந்திரன் & 27 நட்சத்திரங்கள் வழிபட்டு சாபம் நீங்கிய தலம் 

🌷துர்வாசர் சாபம், இந்திரனை பிரிந்த இந்திராணி வழிபட்டு கணவனோடு சேர்ந்து வாழ வரம் பெற்ற தலம்.

🌷 குசலவர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்ற தலம் 

🌷தேவமித்ரன் சம்புதாசன் சித்திரதமன் பணி செய்து சிவகதி பெற்ற தலம். 

🌼 ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷சிவன் சுயம்புவாக அருள் பாலிக்கிறார், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் காட்சி, வெட்டுப்பட்ட காயத்தை குளிர்விக்கும் வகையில், ஆண்டு முழுவதும் சந்தன காப்பு அலங்காரத்துடன் அருளும் இவர், சித்திரை சதய நட்சத்திரத்தில் 2 தினங்கள் மட்டும் சந்தனகாப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் காட்சி.

🌷அந்நேரத்தில் இவரை வழிபட்டால் பாவங்கள் நீங்க பெற்று முக்தி பெறலாம் என்பது நம்பிக்கை. இவருக்கு அபிஷேகம் இல்லாததால் ஒரு பாதரச லிங்கத்தை தனி சந்நிதியில் வைத்து பூஜிக்கிறார்கள். மூலவரின் விமானம் கஜபிருஷ்டம்.

ஸ்தல விநாயகர் = வலம்புரி விநாயகர் 

🌷பௌர்ணமி அமாவாசை கிருத்திகை பிரதோஷம் ஆகிய நேரங்கள் தவிர பிற நேரங்களில் இங்குள்ள நந்திக்கு பூஜை செய்து சாத்திய மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

🌼 ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பல்லாண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி இருந்த வாணன் ஓணன் எனும் இரண்டு அசுரர்கள் முனிவர்களை துன்புறுத்தினர். அவர்களை விரட்ட வந்த தொண்டைமான் மன்னன் போரிட்டும் வெல்ல முடியாமல் திரும்பினான்.

🌷அப்போது பட்டத்து யானையின் கால் ஒரு முல்லை கொடியில் சிக்கிக் கொண்டது. யானையின் மீது இருந்தபடியே முல்லை கொடிகளை வெட்டினான். வெட்டப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் பீறீட்டது. அவன் பயந்து போய் கீழே இறங்கி பார்த்த போது மண்ணிற்கு அடியில் இருந்த லிங்கத்தை பார்த்தார்.

🌷சிவபெருமானின் வடிவமான லிங்கத்தை வெட்டிய வருத்தத்தில், தன் உயிரையே மாய்க்க சென்றான். அப்போது சிவன் அவனை பாதுகாக்கும் நோக்கில், அம்பாளைக் கூட அழைக்காமல், தனியாக மன்னனுக்கு காட்சி தந்தார். 🌷“தான் வெட்டுப்பட்டதற்காக வருந்த வேண்டாம் என்றும், வெட்டுப்பட்டாலும் மாசு இல்லாத தூய மணியாகவே விளங்குவோம்” எனக்கூறி அருள் செய்தார். பின் சிவன் நந்தியை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லும்படி செய்தார்.

🌷மன்னன் அசுரர்கள் வைத்திருந்த 2 வெள்ளருக்கு தூண்களை எடுத்து வந்து இவ்விடத்தில் வைத்து மாசிலாமணீஸ்வரருக்கு கோயில் கட்டினான். இவ்விரு தூண்களும் சிவன் கருவறைக்கு முன்பு தற்போதும் உள்ளதை காணலாம். இங்கிருந்து ஓடிய அசுரர்கள் காஞ்சி அருகே லிங்கம் அமைத்து பூஜை, ஓணகாந்தன் தளி .

🌼 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பிரசன்ன விநாயகருக்கு பின்னால் மதில் மீது தல வரலாற்று சிற்பங்கள் சுதையால் அமைக்கப்பட்டுள்ளது.

🌷யானை மீது இருந்து மன்னன் முல்லை கொடியை வெட்டுவது- சிவலிங்கம் – தன் கழுத்த அரிவது- காட்சி தருவது சுதையால் அமைக்கப்பட்டுள்ள.🌷இத்தலத்தில் தான் சிறப்பு மிக்க வைஷ்ணவி ஆலயமும் பிரார்த்தனை கோவிலாகிய பச்சையம்மன் கோயிலும் உள்ளன.

🌷 மீஞ்சூர் அருகில் மேலூரில் வீற்றிருக்கும் திருவுடை நாயகி அம்மை, திருவொற்றியூரில் வீற்றிருக்கும் வடிவுடையம்மை, திருமுல்லைவாயிலில் வீற்றிரு க்கும் கொடியுடையம்மை 👉 3றும் ஒரே ஸ்தபதியால் செய்ய பட்டவை + த்ரிபங்கி கோலம்.

🌷இம்மூவரும் இச்சா சக்தி கிரியா சக்தி, ஞானசக்தி ரூபமா இருக்காளாம். வெள்ளிக்கிழமை+பௌர்ணமி சேர்ந்து வரும் நாளில் 3 அம்பிகைகளையும் ஒரே நாளில் தரிசித்தால் பெரும் சிறப்பு.

🌷சுந்தரர் 👉இத்தல பதிகத்தில் ஒவ்வொரு பாட்டிலும், “அடியேன் படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே” எனும் தொடரை இறுதியில் வைத்து பாடும் திறம் நெஞ்சை நெகிழ வைக்க வல்லன.

🌷கணவன் மனைவி ஒற்றுமையை மேலே மேலே அனுகிரகம் பண்ணி தரக்கூடிய ஸ்தலம் இது.

🌷 சுந்தரருக்கு உன் கூடயே நான் இருக்கேன்னு அனுகிரகம் பண்ணின க்ஷேத்திரமிது.

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மனக் குழப்பங்கள் தீர

தோஷ நிவர்த்தி 

தைரியம் மற்றும் வெற்றி

திருமணத்தடை

புத்திர தோஷம் 

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°*

வைகாசி பிரம்மோற்சவம்,

மாசி தெப்பத் திருவிழா மற்றும் ஆனி வசந்த உற்சவம்

சித்திரை சதய திருவிழா

மஹா சிவராத்திரி திருக்கார்த்திகை

ஐப்பசி அன்னாபிஷேகம் 

 நவராத்திரி மற்றும் பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு

🌼வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

முருகன் மஹாவிஷ்ணு பிரம்மா இந்திரன் இந்திராணி சூரியன் சந்திரன் & 27 நட்சத்திரங்கள், ஐராவதம், துர்வாசர்,  ப்ருகு, வசிஷ்டர், குசலவர், தேவமித்ரன் சம்புதாசன் சித்திரதமன், தொண்டைமான் மன்னன், சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்..

🌼அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சென்னை ஆவடி சாலையில் or

பூந்தமல்லி அம்பத்தூர் தொழிற்பேட்டை செல்லும் வழியில் ஆவடி அடுத்து கோவில். ( அம்பத்தூர் ஆவடி நடுவில் )

பேருந்து & ரயில் வசதி உண்டு 

6AM to 12NOON, 4PM to 8PM

044 27376151

🌼 கோயில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் 

  சீருடைக் கழல்கள்என் றெண்ணி 

ஒருவரை மதியா துறாமைகள் செய்தும் 

  ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன் 

முருகமர் சோலை சூழ்திரு முல்லை 

  வாயிலாய் வாயினால் உன்னைப் 

பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் 

  பாசுப தாபரஞ் சுடரே. 1

சுந்தரர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *