மேலப்பெரும்பள்ளம் வலம்புரநாதர்

🌸 மூலவர் : வலம்புரநாதர் முக்தீசர் கைலாசநாதர் தாளவனநாதர்

அம்பாள் : வடுவகிர்கண்ணி ஸ்வர்ணபத்மாம்பிகை பத்மநாயகி சங்கரி

ஸ்தல விருக்ஷம் : ஆண்பனை,

தீர்த்தம் : பிரம்ம, லக்ஷ்மி, சிவகங்கை, கயா தீ

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்

சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 44

🌸 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷ஹேரண்ட (ஆத்ரேய) மகரிஷி திருவலஞ்சுழி காவிரியில் இறங்கி, வலமாக வந்து இவ்வூரில் கரையேறினார். அதனால் இத்தலம் ‘திருவலம்புரம்’ ஆனது. அவரது ஜீவசமாதி இங்கு தனி கோயிலாக உள்ளது.

🌷சம்பந்தருடன் திருநாவுக்கரசர் பல தலங்கள் சென்று வழிபட்ட போது சிவபெருமான் இத்தலத்தில் திருநாவுக்கரசரை அழைத்து காட்சி கொடுத்துள்ளார்.

🌷இங்குள்ள சுயம்புலிங்கத்தின் மேல் பகுதியில் ஒரு கை நுழையும் அளவிற்கு இரு பள்ளங்கள் உள்ளது. லிங்கத்திற்கு சாம்பிராணி தைலம் புனுகு சட்டம் சாத்தப்படுகிறது. அபிஷேகத்தின் போது குவளை சாத்தப்படுகிறது. இதனால் இத்தலம் ‘மேலபெரும்பள்ளம்’ ஆனது

🌸 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷திருமால் சிவனை நோக்கி தவம் செய்யப் போன போது திருமகளை இத்தலத்து அம்பிகையின் தோழியாக விட்டுச் சென்றார். தவத்தின் பலனாக சக்ராயுதமும் கதையும் பெற்றார். அதன் பின் இங்கு வந்து அம்மனை வணங்கி சங்கும் பத்மமும் பெற்றார் என தல வரலாறு கூறுகிறது.

🌷மகத நாட்டு மன்னன் தனஞ்செயன், தன் மகனிடம் ‘நான் இறந்த பிறகு எனது அஸ்தி எங்கு மலராக மாறுகிறதோ அங்கு

அஸ்தியை கரைத்து விடு’

எனக் கூறிவிட்டு மறைந்தான். அதன்படி மைந்தன் பல தலங்களுக்கு சென்றான்.

இறுதியில் இத்தலம் வந்ததும் அஸ்தி மலராக மாறியது. தந்தையின் ஆசைப்படி இத்தலத்தில் அஸ்தியை கரைத்து விட்டான். எனவே இத்தலத்தை காசியை விட புனிதமானது என புராணங்கள் கூறுகிறது.

🌷தக்ஷனும் அவனது மனைவியும் தங்கள் மகளாக தாக்ஷாயினி பிறக்க வேண்டும் என இத்தலத்தில் வேண்டியதாக வரலாறு. அதன்படி பார்வதி தேவி அவர்களுக்கு மகளாகப் பிறந்தாள்.

🌷இத்தலத்தில் உள்ள பிக்ஷாடனர் பேரழகுடன் இருப்பவர். இவரை அர்த்தநாரீஸ்வர பிக்ஷாடனர் என்பர்.

🌸 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷காசி மன்னன் ஒருவன்

தன் மனைவி கற்புடையவள் என்பதை சோதிக்க நினைத்தான்.

🌷ஒருமுறை மன்னனும் அமைச்சர்களும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றனர். அப்போது மன்னன் அமைச்சரிடம், “மன்னர் காற்றிற்கு வேட்டையாடச் சென்ற பொழுது புலி அடித்து இறந்துவிட்டார் என்ற பொய்யை அரசியிடம் கூறும்படி உத்தரவிட்டார். “

🌷அமைச்சரும் அதன் படி கூற, அரசி இச்செய்தி கேட்ட உடனேயே உயிரை விட்டாள். இந்த பொய் செய்தி கூறியதால் மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

🌷 இந்த தோஷம் நீங்க மன்னன் சான்றோர்களிடம் விவாதித்தான். அதற்கு அவர்கள், ‘மன்னா!

திருவலம்புர திருத்தலத்தில் தினமும் 1000 அந்தணர்களுக்கு அன்னதானம் வழங்கினால் தோஷம் விலகும்’ என்றனர். 🌷மன்னனும் அதன்படி செய்து வந்தான். ஒருமுறை அன்னதானம் நடந்து கொண்டிருந்தபோது, அசரீரி ஒலித்தது. அன்னதானம் நடக்கும் இக்கோயிலில் நீண்ட காலமாக ஒலிக்காத மணி தானே ஒலிக்கும். அப்போது மன்னனின் தோஷம் விலகும் எனக் கூறியது.

🌷அன்னதானம் தொடர்ந்து

நடந்து வந்தது.பட்டினத்தார் ஒருமுறை இக்கோயிலுக்கு பசியோடு வந்தார். மடப்பள்ளியில் இருந்தவரிடம் தனக்கு உணவு தருமாறு கேட்டார். அவர் உணவு தர மறுக்கவே, மடப்பள்ளியின் பின்பக்கம் வழிந்தோடும் சாதம் வடித்த கஞ்சியை இரு கைகளால் அள்ளி குடித்து பசியாறியதாகவும், உடனே இது நாள் வரை அடிக்காமல் இருந்த மணியானது தானே ஒலிக்க ஆரம்பித்ததாகவும் ஸ்தல புராணம்.

🌷அன்னதானமே இன்னும் ஆரம்பிக்கவில்லை, அதற்குள் மணி ஒலித்து விட்டதே என அனைவரும் ஆச்சரியமடைந்து போய் பார்த்த பொழுது அங்கே பட்டினத்தடிகளை அனைவரும் தரிசித்தனர். மன்னனும் மன்னிப்பு கேட்டு நமஸ்கரிக்க, மன்னனின் தோஷமும் விலகியது. இதற்கான திருவிழா இப்போதும் சிறப்பாக நடைபெறுகிறது.

🌸 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷2000 வருடங்களுக்கு முந்தைய, சோழ மன்னரான கோசெங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில் அமைப்பில், கிழக்கு நோக்கிய கோவில். ராஜகோபுரம் கொடிமரம் இல்லை.

•முதலில் திராவிட ராஜ்ஜிய மன்னன் அபிசித்து கட்டியது. மன்னனுக்கு இங்கு இறைவனை வேண்டி

குழந்தை பாக்யம் கிடைத்தது.

•இந்த இடம் தலவனம். (கணபதி ஸ்தலம்). இத்தல விநாயகர் வல்லப விநாயகர். மாடக்கோயில் எதிரேயுள்ள தீர்த்தகரையில் விநாயகர் வீற்றிருக்கிறார். இங்கு தலபதிக கல்வெட்டுஉள்ளது.

•ஹேரண்ட மகரிஷியின் ஜீவசமாதி இக்கோவிலில் உள்ளது.

•இங்கு முருகப்பெருமான் வீணை ஏந்திய கோலத்தில் (வீணாதர முருகன்) அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

•ஸ்ரீராமர் வழிபட்ட ராமநாதர் மற்றும் லட்சுமணன் வழிபட்ட விஸ்வநாதர் சிவலிங்க சன்னதிகள்.

•தட்சிணாமூர்த்தி, திருமால், சூரியன், கால பைரவர், சனீஸ்வரர், சப்தமாதாக்கள் மற்றும் நாகர் சன்னதிகள்.

•சூரியன் சிவபெருமானால் இங்கிருந்தே கைலாய தரிசனம் பெற்றார்.

🌸 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பிரம்மஹத்தி தோஷம் நீங்க

🌷பெண் சாபம் /பாவங்கள் நீங்க

🌷திருமணதடை நீங்க

🌷குழந்தை பாக்யம் பெற

🌷நிறைவான கல்வி மற்றும் செல்வம்

🌷தோல் வியாதி, நாக தோஷம் நீங்க இங்கு வேண்டுதல்.

🌸 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்திரை விசு

மார்கழி உற்சவம்

கந்த சஷ்டி

மஹா சிவராத்திரி

பிச்சாண்டவர் திருவிழா

🌸 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷முருகன், மஹாவிஷ்ணு, பிரம்மா, ஹேரண்ட மஹரிஷி, ஏகாதசருத்ரர்கள், இந்திரன், தேவர்கள், மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, சூரியன், சந்திரன், காவேரி, காமதேனு, ஐராவதம், தாளவன ரிஷிகள், வாசுகி, சங்கன், வருணன் ராமன் லக்ஷ்மணன் அப்பர் சம்பந்தர் சுந்தரர் ஆகியோர் வழிபாடு.

🌸 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் பேருந்துகளில் ஏறி சட்ரஸ் (Satras) பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவு நடந்து அல்லது ஆட்டோ மூலம் கோயிலை அடையலாம்.

மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் சாலையில் காவிரி கடைமுக அணையை (கடைமுடி) கடந்தும் இத்தலத்தை அடையலாம்.

மயிலாடுதுறையிலிருந்து வானகிரி செல்லும் நகரப் பேருந்து (Bus No: 21C) மூலமாகவும் நேரடியாகக் கோயிலை அடைய முடியும்

•சீர்காழியிலிருந்து பூம்புகார்/காவிரிப்பூம்பட்டினம் செல்லும் பேருந்தில் ஏறி மேலயூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து பிரிந்து செல்லும் மயிலாடுதுறை சாலையில் சிறிது தூரம் பயணித்து (ஆட்டோ வசதி உள்ளது) இந்த ஆலயத்தை அடையலாம்.

9AM – 11AM, 6PM – 7.30PM

81108 05059 ஞான ஸ்கந்தன் குருக்கள்.

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

மெய்காவல் எப்பொழுதும் காலை மாலை கோவிலில் இருக்கிறார்.

🌸 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கொடியுடை மும்மதி லூடுருவக்

குனிவெஞ் சிலைதாங்கி

இடிபட எய்த அமரர்பிரான்

அடியார் இசைந்தேத்தத்

துடியிடை யாளையொர் பாகமாகத்

துதைந்தா ரிடம்போலும்

வடிவுடை மேதி வயல்படியும்

வலம்புர நன்னகரே. 

ஞானசம்பந்தர்

தெண்டிரை தேங்கி ஓதஞ்

சென்றடி வீழுங் காலைத்

தொண்டிரைத் தண்டர் கோனைத்

தொழுதடி வணங்கி யெங்கும்

வண்டுகள் மதுக்கள் மாந்தும்

வலம்புரத் தடிகள் தம்மைக்

கொண்டுநற் கீதம் பாடக்

குழகர்தாம் இருந்த வாறே. 

திருநாவுக்கரசர்

எனக்கினித் தினைத்தனைப்

புகலிடம் அறிந்தேன்

பனைக்கனிப் பழம்படும்

பரவையின் கரைமேல்

எனக்கினி யவன்தமர்க்

கினியவன் எழுமையும்

மனக்கினி யவன்றன

திடம்வலம் புரமே. 

சுந்தரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *