பூம்புகார் திருப்பல்லவனீச்சுரம் பல்லவனேஸ்வரர்

🌺மூலவர் : பல்லவனேஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்பாள் : சௌந்தர்ய நாயகி

ஸ்தல விருக்ஷம் : மல்லிகை புன்னை

தீர்த்தம் : ஜானவி, சங்கம தீ & காவிரி

பாடல் : சம்பந்தர்

புராணப் பெயர் : பல்லவனேஸ்வரம் காவிரி பூம்பட்டினம்

ஊர் : பூம்புகார், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் 64, சோழ நாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 10

🌺ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

யுகங்களுக்கெல்லாம் முன்னால் தோன்றிய மூலமூர்த்தி.

பல்லவ மன்னன் தன்னுடைய ஆயுதங்கள் அனைத்தையும் இறைவன் முன்னால் சமர்ப்பித்து தன்னுடைய ராஜ்யத்தை சிவபெருமான் முன்பாக வைத்து வழிபட்ட காரணத்தினால் பல்லவ மன்னனுக்கு ஈஸ்வர பட்டம் கொடுத்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

எனவே ஊர் பல்லவனீஸ்வரம் & மூலவர் பல்லவனேஸ்வரர்.

இது வேதத்தை மையப்படுத்திய அற்புதமான சிவாலயம்.

🌺 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கோவிலுக்கு எதிரே வங்காள விரிகுடா கடல் உள்ளது. சுவாமி கடலை பார்த்தபடி காட்சி தருகிறார். இங்கு நவக்கிரஹ மண்டபத்தில் அனைத்து கிரஹங்களும் சுவாமியை நோக்கி, மேற்கு பார்த்தபடி இருப்பது சிறப்பான அமைப்பு.

சண்டிகேஸ்வரர் சன்னதியில் 2 பேர், கோஷ்டத்தில் 2 துர்கை ஒருவரின் காலுக்கு கீழே மகிஷன் இல்லை. பிரகாரத்தில் மயில் வாஹனம் இல்லாமல் முருகன் வள்ளி தெய்வானையுடன் நின்று கொண்டிருக்கிறார். இத்தலத்திற்கு அருகில் தான் காவிரி, வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காவிரி கடலுக்குள் புகும் இடம் என்பதால், “காவிரி புகும் பட்டினம்” என்றழைக்கப்பட்ட ஊர் தற்போது “பூம்புகார்” என்று அழைக்கப்படுகிறது.

🌺 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் சிவநேசர் ஞானகலாம்பிகை எனும் சிவபக்த தம்பதியர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சிவன் அருளால் ஒரு மகன் பிறந்தான்.

அவர் திருவெண்காடர். கடல் கடந்து வாணிபம் செய்யும் பணி செய்து வந்தார். 16ம் வயதில் சிவகலை என்பவரை மணந்து கொண்டார். திருமணமாகி பல்லாண்டுகளாக இத்தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை. எனவே திருவெண்காடர் சிவனை வழிபட்டார்.

இவருக்கு அருள் செய்ய விரும்பிய சிவன், வறுமையில் வாடிய சிவபக்த தம்பதியரான சிவசருமர் சுசிலை என்பவர்களின் மகனாகப் பிறந்தார். மருதவாணர் என அழைக்கப்பட்டார். ஒரு சமயம் சிவசருமரின் கனவில் தோன்றிய சிவன், மருதவாணரை திருவெண்காடருக்கு கற்று கொடுக்கும்படி கூறினார். அதன்படி திருவெண்காடு மருதவாணரை தத்தெடுத்து வளர்த்தார். மருதவாணரும் தந்தையின் தொழிலை செய்தார்.

ஒரு சமயம் வாணிபம் செய்துவிட்டு திரும்பிய மருதவாணர், தாயாரிடம் ஒரு பெட்டியை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். வீட்டிற்கு வந்த திருவெண்காடர், மகன் சம்பாதித்து வந்திருப்பதை காண பெட்டியை திறந்தார். திறந்தவருக்கோ அதிர்ச்சி! அதில் தவிட்டு புவிகளைக் கொண்டு செய்யப்பட்ட எரு மட்டும் இருந்தது. மகனை சம்பாதிக்க அனுப்ப அவன், தவிட்டு எருவை கொண்டு வந்ததைக் கண்டவர் கோபத்தில் அதை வீசி எறிந்தார். அதில், “காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே” என்று எழுதப்பட்டிருந்தது..

அதைக் கண்ட திருவெண்காடருக்கு ஒரு உண்மை உரைத்தது. “மனிதன் எவ்வளவுதான் சம்பாதித்தாலும், கடைசியில் பயனில்லாத காதற்ற ஊசியைக் கூட கையில் கொண்டு செல்ல முடியாது” என்ற உண்மையை உணர்ந்தார்.

உடனே இல்லற வாழ்க்கையை துறந்த அவர், இங்கு சிவனை வணங்கி, அவரை குருவாக ஏற்றார். தனது இல்லற வாழ்க்கையை முடித்து முக்தி கொடுக்கும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தகுந்த காலத்தில் முக்தி கிடைக்கும் என்றார்.

அதன்படி பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு சென்னை திருவொற்றியூரில் முத்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர், “பட்டினத்தார்” என்று அழைக்கப்பட்டார். இவருக்கு அருள் செய்த சிவன் இத்தலத்தில் காட்சி தருகிறார்.

🌺 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இங்கு ஸ்தல விநாயகர், அணுக்கை விநாயகர்.

மூலஸ்தானத்தில் சிவன் பெரிய லிங்கமாக காட்சி தருகிறார். காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார். பட்டினத்தார் தனி சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். சிவன் சன்னதி விமானத்தில் பட்டினத்தார் மனைவி அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது.

இங்கு சிவனுக்கு பிரம்மோற்சவம் கிடையாது. ஆனால் பட்டினத்தாருக்காக விழா எடுக்கப்படுகிறது. இதை ‘அடியார் உற்சவம்’ என்கிறார்கள்

ஆடி மாதத்தில் பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது.

விழாவில் பத்தாம் நாள் பட்டினத்தாரைக்கு சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரிய அளவில் நடக்கும்.

மருதவாணராகப் பிறந்த சிவன், அவரைப் பெற்ற சிவ சர்மா சுசீலை தம்பதியினர், வளர்த்த பட்டினத்தார் சிவகலை தம்பதியினர், பட்டினத்தாரின் தாய் ஞான கலாம்பிகை, பட்டினத்தாரின் சீடர் பத்திரகிரியார், நாயடியார் மற்றும் முருகனை மடியில் அமர்த்தியபடி குகாம்பிகை ஆகியோர் உற்சவமூர்த்திகள்.

கிழக்கு நோக்கிய கோயிலில் இரண்டு பிரகாரங்கள் உள்ளன. இதன் பிரதான கோபுரமான ராஜகோபுரம் 5 அடுக்குகளைக் கொண்டுள்ளது. இங்கு கொடிமரம் இல்லை.

🌺 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அறிவான குழந்தை பிறக்கவும் பொருட்களின் மீதான ஆசை குறையவும்

கிரக தோஷ நிவர்த்திக்கும் பிரார்த்தனை

🌺 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆடி மாதம் பட்டினத்தார் திருவிழா & 10ம் நாள் மோட்சம் தரும் நிகழ்ச்சி சிறப்பு.

வைகாசி விசாகம் பங்குனி உத்திரம், மஹாசிவராத்திரி கார்த்திகை மற்றும் பிரதோஷம் & பௌர்ணமி.

🌺 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அகத்தியர், பல்லவ மன்னன், சம்பந்தர், சேக்கிழார், பட்டினத்தார் முதலியோர்.

🌺அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பூம்புகார் கண்ணகி வளைவை தாண்டியதும் கோவில்.

சாயாவானேஸ்வரர் கோவிலின் மிக அருகில் 750மீ.

திருவெண்காடு 5KM

அன்னப்பன்பேட்டை 10KM

7AM – 12NOON, 5PM – 8PM

94437 19193 D.கணேசமூர்த்தி குருக்கள்

90030 49392 கீர்த்திவாசன் குருக்கள்

9944665998 பிரபு குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌺 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அடையார் தம்புரங்கள் மூன்றும்

ஆரழ லில்லழுந்த

விடையார் மேனிய ராய்ச்சீறும்

வித்தகர் மேயவிடம்

கடையார் மாடம் நீடியெங்கு1

கங்குல்புறந் தடவப்

படையார் புரிசைப் பட்டினஞ்சேர்

பல்லவ னீச்சரமே.

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *