திரு ஓணகாந்தன் தளி ஓணகாந்தேஸ்வரர் 

திரு ஓணகாந்தன் தளி ஓணகாந்தேஸ்வரர் 

 

திரு ஓணகாந்தன் தளி ஓணகாந்தேஸ்வரர் 

🌺மூலவர் : ஓணகாந்தேஸ்வரர், சலந்தரேஸ்வரர் 

உற்சவர் : சலந்தரேஸ்வரர் 

பாடல் : சுந்தரர் 

ஸ்தல விருக்ஷம் : வன்னி & புளியமரம்

தீர்த்தம் : ஓணகாந்த & தான்தோன்றி தீர்த்தம்.

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம்,

தொண்டை நாட்டு ஸ்தலம் 3, 

🌺 ஸ்தல  சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹காஞ்சி 5 பாடல் பெற்ற சிவாலயங்களில் முக்கியமானது ஓணகாந்தன் தளி, சுயம்பு, இங்குள்ள எந்த சிவாலயத்திலும் அம்மன் சந்நிதி கிடையாது. காமாக்ஷி சர்வவியாபி.

🌹பொன் பொருள் வேண்டுபவர்கள் சுந்தரர் இத்தலத்தில் பாடிய பாடலை பாடினால் கிடைக்கும்.

🌺 ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இங்கே சிவன் 3 லிங்கங்களாக காட்சி தருகிறார். சுந்தரர்  இத்தலத்தில் அருளிய பக்தி பாடல்கள் இத்தலத்திலேயே கிடைக்கிறது. இதை பாடினால் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை.

🌹3 நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே சென்றால், தனி தனி சந்நிதிகளில் 3 லிங்கங்களும்  3 பிரதான சந்நிதிகளில் உள்ளது. ஓணேஸ்வரர் காந்தேஸ்வரர் ஜலந்தரேஸ்வரர் ஆகியோர்.

🌹 இது காணக் கிடைக்காத தரிசனம். அர்த்த மண்டபத்தில்  இறைவனின் திருப்பாத தரிசனமும் கிடைக்கிறது.

🌹 இங்குள்ள வயிறு தாரி விநாயகர் கேட்ட வரம் அருளுபவர். இது தவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாக சொல்லப்படுவதுண்டு.

🌺 ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹ஒரு காலத்தில் அசுர வேந்தனான லாணாசுரன் என்பவனின் சேனாதிபதிகளான ஓணன் காந்தன் என்பவர்கள் புழல் என்ற பகுதியில் உள்ள கோட்டையின் பாதுகாவலர்களாக இருந்தனர்.

🌹இவர்களில் ஓணன் என்பவன் அப்பகுதியில் சுயம்புவாய் எழுந்த லிங்கம் ஒன்றுக்கு தன் ரத்தத்தால் அபிஷேகம் செய்து, கடும் விரதம் இருந்து, பல வரங்களை பெற்றான்.

🌹 இதேபோல் காந்தனும் மற்றொரு லிங்கத்தை பூஜித்து சிறந்த வரங்களை பெற்றான். இப்பகுதியில் வசித்த ஜலந்தராசுரன் என்பவனும் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டான். பிற்காலத்தில் சிவனின் தோழரான சுந்தரர் இப்பகுதிக்கு வந்தார்.

🌹3 லிங்கங்கள் வெட்ட வெளியில் பூமிக்குள் பதிந்து இருந்தன. அசுரர்களுக்கும் கூட பக்தி இருந்துள்ளது என்பதை வெளிக்காட்டவும், லிங்கங்களுக்கு பாதுகாப்பு தரவும் கோயில் எழுப்ப விருப்பம் கொண்டார்.

🌹 அதற்குரிய பொன் பொருள் வேண்டி சிவனை பாடினார். அவரது பாட்டில் மயங்கிய சிவன், இன்னும் சில பாடல்கள் கேட்க விரும்பி தாமதம் செய்தார்.

🌹5ம் பாடலில் அருகில் இருந்த புளியமரம் ஒன்றைக் காட்டி அதில் மறைந்தார். அங்கு சென்று பாடல்களை சுந்தரர் தொடர்ந்தார்.

🌹அம்மரத்தில் உள்ள காய்கள் எல்லாம் சுந்தரர் பதிகம் கேட்டு பொன் காய்களாக மாறின. பின்னர் லிங்கங்களை வெளியே எடுத்து, கிடைத்த பணத்தில் கோவில் எழுப்பினார்.

🌺ஸ்தல சிறப்பு செய்திகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இங்கு வந்த சுந்தரர், இறைவனிடம் அடிமை திறம் பேசி, ” நெய்யும் பாலும் தயிரும் கொண்டு” தொடங்கும் பதிகம் பாடி பொன் பெற்றார்.

🌹இக்கோயிலும் காஞ்சி புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

🌺 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பண பிரச்சனைகள் தீர செல்வம் பெருக 

பாவங்கள் நீங்க பிரார்த்தனை 

பொன் பொருள் வேண்டுபவர்கள் சுந்தரர் இத்தலத்தில் பாடிய பதிகத்தை பாடினால் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ( பதிகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது )

🌺 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மார்கழி திருவாதிரை ஐப்பசி

பௌர்ணமி

மஹா சிவராத்திரி

🌺 வழிப்பட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஓணன், காந்தன், சலந்தரன், சுந்தரர் , சேக்கிழார் முதலியோர் 

🌺அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

3KM from பேருந்து நிலையம்

1KM from ஏகாம்பரேஸ்வரர் கோயில். காஞ்சிபுரம் அரக்கோணம் பேருந்து பாதை. பஞ்சுப்பேட்டை துணைமின் நிலையம் வலப்புறம் பிரியும் பாதை 

7AM – 11.30AM, 5PM – 7.30PM

98944 43108

93818 88737 (பாலாஜி குருக்கள்)

🌺 கோயில் தேவாரம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு    

  நித்தல் பூசனை செய்ய லுற்றார்    

கையி லொன்றுங் காண மில்லைக்    

  கழல டிதொழு துய்யின் அல்லால்    

ஐவர் கொண்டிங் காட்ட ஆடி    

  ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்    குய்யு மாறொன் றருளிச் செய்யீர்    

  ஓண காந்தன் தளியு ளீரே. 1

திங்கள் தங்கு சடைக்கண் மேலோர்    

  திரைகள் வந்து புரள வீசுங்    

கங்கை யாளேல் வாய்தி றவாள்    

  கணப தியேல் வயிறு தாரி    

அங்கை வேலோன் குமரன் பிள்ளை    

  தேவி யார்கோற் றட்டி யாளார்    உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்    

  ஓண காந்தன் தளியு ளீரே. 2

பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்    

  பேணி யும்கழல் ஏத்து வார்கள்   மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி    மதியு டையவர் செய்கை செய்யீர்    

அற்ற போழ்தும் அலந்த போழ்தும்    

  ஆவற் காலத் தடிகேள் உம்மை   ஒற்றி வைத்திங் குண்ண லாமோ    

  ஓண காந்தன் தளியு ளீரே. 3

வல்ல தெல்லாம் சொல்லி உம்மை    

  வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்    

றில்லை என்னீர் உண்டும் என்னீர்    

  எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர்    

பல்லை யுக்கப் படுத லையிற்    

  பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்    

கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்    

  ஓண காந்தன் தளியு ளீரே. 4

கூடிக் கூடித் தொண்டர் தங்கள்    

  கொண்ட பாணி குறைப டாமே    

ஆடிப் பாடி அழுது நெக்கங்    

  கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்    

தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்    

  சித்தம் என்பால் வைக்க மாட்டீர்    

ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்    

  ஓண காந்தன் தளியு ளீரே. 5

வாரி ருங்குழல் வாள்நெ டுங்கண்    

  மலைம கள்மது விம்மு கொன்றைத்    

தாரி ருந்தட மார்பு நீங்காத்    

  தைய லாள்உல குய்ய வைத்த  காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்   காமக் கோட்டம் உண்டாக நீர்போய்    

ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே    

  ஓண காந்தன் தளியு ளீரே. 6

பொய்ம்மை யாலே போது போக்கிப்    

  புறத்தும் இல்லை அகத்தும் இல்லை    

மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்    

  மேலை நாளொன் றிடவுங் கில்லீர்    

எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்    

  ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்    

உம்மை அன்றே எம்பெ ருமான்    ஓண காந்தன் தளியு ளீரே. 7

வலையம் வைத்த கூற்ற மீவான்    

  வந்து நின்ற வார்த்தை கேட்டுச்    

சிலைஅ மைத்த சிந்தை யாலே    திருவ டிதொழு துய்யி னல்லாற்    

கலைஅ மைத்த காமச் செற்றக்    குரோத லோப மதவ ரூடை    

உலைஅ மைத்திங் கொன்ற மாட்டேன்    

  ஓண காந்தன் தளியு ளீரே. 8

வார மாகித் திருவ டிக்குப்    

  பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே    

ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்    

  ஒற்றி யூரேல் உம்ம தன்று    

தார மாகக் கங்கை யாளைச்    

  சடையில் வைத்த அடிகேள் உந்தம்    

ஊரும் காடு உடையும் தோலே    

  ஓண காந்தன் தளியு ளீரே. 9

ஓவ ணமேல் எருதொன் றேறும்    ஓண காந்தன் றளியு ளார்தாம்  ஆவ ணஞ்செய் தாளுங்கொண்ட    

  வரைது கில்லொடு பட்டு வீக்கிக்    

கோவ ணமேற் கொண்ட வேடம்    கோவை யாகஆ ரூரன் சொன்ன    

பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்    

  பறையுந் தாஞ்செய்த பாவந் தானே. 10

சுந்தரர் 

🌺 திருச்சிற்றம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *