திருவையாறு ஐயாரப்பன் பஞ்சநதீஸ்வரர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூலவர் : ஐயாரப்பன், பஞ்சநதீஸ்வரர்.
அம்பாள் : தர்மசம்வர்த்தினி
ஸ்தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி / காவேரி,
பாடல் : சம்பந்தர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 51. தர்ம சக்தி பீடமும் கூட..
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு இறைவனையும் சுவாசிக்கலாம் இசையையும் சுவாசிக்கலாம். கூடவே அல்வாவும் அன்னை காவேரியும்.. திருவையாறு என்றால் தியாகராஜர் ஆராதனை தானே முதலில் நினைவுக்கு வரும்..
கோவில் என்றாலே சுவாமி சன்னதியை பிரதக்ஷணமாக வருவோம். இங்கு சுற்றிவர அனுமதி இல்லை. ஈசன் தன் ஜடாமுடியை உலர்த்தி உள்ளார்.
3ம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ஐயாறா ஐயாறா என குரல் கொடுத்தால் 7 முறை எதிரொலிக்கும்.
அப்பர் பெருமானுக்குக் கயிலைக் காட்சி அருளிய தலம்.
சுந்தரர் & சேரமான் நாயனார் தரிசிக்க வரும்போது, காவிரியின் இரு மருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சுந்தரர் பதிகம் பாட, வெள்ளம் ஒதுங்கி நின்று வழி தந்த பதி.
சிவனுக்கு வடைமாலை : தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடை மாலை சாத்தும் வழக்கம் உள்ளது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைகள் கூட சாற்றப்படுவதுண்டு.
திருவையாறு எல்லை குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோவில்களை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே மஹாவிஷ்ணுவின் அம்சமாக அம்பாள் கருதப்படுகிறார். நின்ற கோலத்தில் இடுப்பில் இடக்கரம் ஊன்றி, மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் தாங்கி மஹாவிஷ்ணு ஸ்வரூபம்.
நவக்கிரகங்களில் இது சூரிய தலம். சூரியன் இத்தலத்தில் பூஜை செய்துள்ளார். சூரியன் இங்கு மேற்கு திசை நோக்கி உள்ளார்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவாச்சாரியார் ஒருவர் காசியாத்திரை சென்று உரிய காலத்தில் வர தாமதம் ஏற்பட, இறைவன், சிவாச்சாரியார் வடிவம் கொண்டு தம்மைத் தாமே பூசித்துக்கொண்டார்.
அம்பாள் அறம் வளர்த்த நாயகி. ஆண்கள் தர்மம் செய்வத விட குடும்பத்தில் உள்ள பெண்களும் செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கு எல்லாம் படியளக்கும் நாயகியாக தர்ம சம்வர்த்தினி.
எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.
இறைவர், நந்திதேவருக்கு சுயம்ப்ரகாசை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்த தலம். இதனைச் சுற்றி ஏழூர்த் தலங்கள் (சப்தஸ்தானம்) இதனோடு தொடர்புடையன.
தியாகய்யர் வெளியூர் சென்றிருக்கும் பொழுது அவர் மனைவியின் உடல்நிலை மோசமாக, ஒரு மாமி வந்து கஷாயம் கொடுத்து குணப்படுத்தினார். அவர் பெயர் கேட்ட பொழுது தர்மா என்று கூறினார். பின்னர் வந்தது அம்பாள் என்று அறிந்து அம்பாள் மேலும் ஈசன் மீதும் நிறைய கீர்த்தனைகள் பாடியுள்ளார்.
சுண்ணாம்பு கருப்பட்டி கலந்து கட்டப்பட்ட தியான மண்டபம் சிறப்பு. பொருட்களை சேகரித்து வைக்க மிகப்பெரிய குழிகள் தோண்டப்பட்டிருந்தன. இதை கட்டியவர்களுக்கும் தங்கமும் வெள்ளியும் கூலியாக தரப்பட்டதாம். இவற்றையும் இரண்டு குழிகள் தோண்டி போட்டு வைத்திருந்தனர். ஒருவர் தன்னால் முடிந்த அளவு இதனை அள்ளிச் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது
இந்த நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.
ஸ்தல வரலாறு :
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நந்தீஸ்வரர் நந்திகேசர் இருவரும் DIFFERENT. நந்தீஸ்வரர் சிவபெருமானின் முன் காளை வடிவில் இருப்பார். சிவனின் வாஹனம். நந்திகேசர் திருகைலாய பரம்பரையை உருவாக்கியவர். தர்மபுரி ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம் ஆகியவை திருகைலாய பரம்பரையைச் சேர்ந்தவை. சிலாது மகரிஷி மகனாக அவதரித்தார் நந்திகேசர். பிறக்கும் பொழுது நான்கு கரங்களுடன் அவதரித்த குழந்தையை ஒரு பெட்டியில் வைத்து மூடி திறந்தார். இரண்டு கைகளுடன் அழகான குழந்தை ஆனது. குழந்தையை திருவையாற்றிலேயே விட்டுச் சென்றார்.
பரமேஸ்வரன் குழந்தைக்கு ஐந்து விதமான அபிஷேகம் செய்தார். அம்பிகையின் பால், அமிர்தம், கங்கை நீர், பிரம்மன் கமண்டல நீர், நந்தி வாய் நுரை நீர். So ஐயாரப்பர். இந்த நீர் காவிரியில் கலந்து திரு ஐ ஆறு ஆனது..
காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு என அருகில் ஓடும் ஐந்து ஆறுகளால் அபிஷேகம் செய்யப்பட்டது என திருவையாறு மக்களின் நம்பிக்கை.
ஈசனின் லிங்கம் மண் லிங்கம் (பிரித்வி). No அபிஷேகம். புனுகு சாத்தப்படும்.
அப்பர் இத்தலத்தில் வழிபட்டு ஆடி அமாவாசையன்று கைலாய காட்சியை பெற்றார். எனவே இத்தலத்தை வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம். மானசரோவர் ஏரியில் மூழ்கிய அப்பர் இந்த திருத்தலத்தில் உள்ள சூரிய புஷ்கரணி வந்து எழுந்தார். விசேஷமான தீர்த்தம்..
ஆமை மிதித்த தக்ஷிணாமூர்த்தி : சுவாமி பிரகாரத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி மிகவும் விசேஷம். இவரை பெருமாள் வழிபட்டு இருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளார். எனவே இவருக்கு ஹரி உரு சிவயோக தக்ஷிணாமூர்த்தி. இவர் முயல் அரக்கனுக்கு பதில் ஆமையை மிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது
தக்ஷிணாமூர்த்தியின் மேல் நோக்கிய வலது கையில் கபாலமும், கீழ்நோக்கிய வலது கையில் சின் முத்திரையும், மேல்நோக்கிய இடது கையில் சூலமும், கீழ்நோக்கிய இடது கையில் சிவஞான போதமும் உள்ளன.
ஓலமிட்ட கணபதி, தனுசு சுப்பிரமணியர், திருவோடு மரம் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்…
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
15 ஏக்கர் பரப்பளவில், கிழக்கே 7நிலை ராஜகோபுரம் மற்றும் கோவிலின் நான்கு புறமும் கோபுரங்கள், 5 பிரகாரங்கள்.
முதல் சுற்று கருவறை சுற்று
2ம் சுற்று அழகிய வெண்கல சிலைகளும் 63 நாயன்மார்கள் சிலைகளும்
3ம் சுற்று புகழ்பெற்ற ஏழு முறை எதிரொலிக்கும் சுற்று
4ம் சுற்று பஞ்சபூத சுற்று இங்கு சன்னதிகள் மண்டபங்கள்
5ம் சுற்றி வெளிப்புற சுற்று பகுதி
தெற்கு கோபுரம் எதிரே உள்ள எமபயம் நீக்கும் ஆட்கொண்டார் சன்னதி , ஆதிசங்கரால் நிறுவப்பட்ட குங்கிலிய ஹோம குண்டம் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும்.
பிராகாரத்தில் வில்லேந்திய வேலவர் (முருகன்) மற்றும் வல்லப கணபதி சன்னதிகள் உள்ளன.
நடராஜர் சன்னதியில் சண்டிகேஸ்வரர் சிவபூஜை செய்யும் தனித்துவமான அமைப்பில் உள்ளார்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எம பயம் நீங்க
ஆயுள் விருத்தி
தீவினைகள் அகல
குடும்ப வளம்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை திருவிழா & பஞ்ச ரத தேரோட்டம் 13 நாட்கள்
சப்தஸ்தானத் திருவிழா (ஏழு ஊர் திருவிழா)
தியாகராஜ ஆராதனை விழா
மூன்றும் மிக முக்கியமான திருவிழாக்கள். சிவாலயங்களில் கொண்டாடப்படும் எல்லா திருவிழாக்களும் உண்டு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் , திருநந்தி தேவர், இலக்குமி, இந்திரன், வருணண், வாலி, சேரமான் பெருமாள், ஐயடிகள் காடவர்கோன், பட்டினத்துப் பிள்ளையார், அருணகிரிநாதர் முதலியோர்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தஞ்சாவூர் கும்பகோணம் சாலையிலேயே உள்ளது.
தஞ்சாவூரில் இருந்து 12KM
6AM – 12NOON, 4PM – 9PM
90951 86571 சுரேஷ் சிவாச்சாரியார்
04362 2260332
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply