திருவைகாவூர் வில்வவனேஸ்வரர் வில்வவனநாதர்

🪷மூலவர் : வில்வவனேஸ்வரர் வில்வவனநாதர்

அம்பாள் : சர்வஜன ரக்ஷகி, வளைக்கை வள்ளியம்மை

ஸ்தல விருக்ஷம் : வில்வம்

தீர்த்தம் : யம & அக்னி தீர்த்தம்

பாடல் : சம்பந்தர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு வடகரை ஸ்தலம் 48

🪷 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மஹாசிவராத்திரி விழாவிற்கு காரணமான ஸ்தலம்.

🌹தக்ஷிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். கையில் வீணைய ஏந்திய வீணா தட்சிணாமூர்த்தியாக காட்சி தருகிறார்.

🌹நந்தி எதிர்ப்புறமாக திரும்பி இருக்கிறது

🌹அர்த்த மண்டபத்தின் வாயிலில் எங்குமே காணப்படாத துவார பாலகர்களாக பிரம்மாவும் விஷ்ணுவும்.

🌹 ஒரே கல்லில் மயில் திருவாச்சி ஆகியன ஒன்றாக அமைந்த ஆறுமுகம்- கைரேகை நகம் எல்லாமே தெளிவாகத் தெரியும். மயில் இடப்புறமாக திரும்பி இருப்பது சிறப்பு. மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் தத்ரூபம். சிக்கல் எண்கண் எட்டுக்குடி முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை என்பதால் கலை நயத்துடன் காணப்படுகிறது. அருணகிரிநாதர் பாடல்.

🪷 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 அம்பாள் உத்தரவு 👉 அம்பாள் சர்வ ஜன ரக்ஷகி மிகவும் சக்தி வாய்ந்தவர். செவ்வாய் வெள்ளி மாலை 6 – 7.30 அம்பாளுக்கு அர்ச்சனை விசேஷம். குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும் பொழுது, அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும். இங்கு நின்று வழிபட்டுக் கொண்டிருக்கும் பொழுதே, சுவாமி சன்னதியில் தீபாராதனை காட்டி முடித்துவிட்டு, அம்பாள் சன்னதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கைகூடும் என்றும் கூறிவிடுவார் அவர் கூறியது போலவே நிகழ்கிறது.

🌹 வில்வ வடிவில் வேதங்கள்👉

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி தாம் அழியாமல் இருக்க உபாயம் கேட்டதாகவும், அவர் ஆலோசனைப்படி, இத்தளத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும், இதனால் வில்வாரண்யம் & சுவாமி வில்வவனேஸ்வரர் என்றும் பெயர்.

🌹பிரம்மா விஷ்ணு இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் ஸ்தலம். மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்து இருப்பார்களோ, அதுபோல் சுவாமி அம்பாள் சன்னதிகள் உள்ளன.

தீர்த்தம் குளித்தாளோ தெளித்து கொண்டாலோ பிணிகள் நீங்கும் தோஷங்கள் விலகும்.

மற்ற இடங்களில் சப்த மாதாக்கள் தான் வழிபட்டதாக இருக்கும். இத்தலத்திலோ சப்த கன்னிகைகள் வழிபட்டுள்ளனர்.

🪷 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்த பொழுது, ஒரு மானை துரத்திக் கொண்டு வேடன் ஓடி வர, மானுக்கு முனிவர் அபயம் அளித்தார். வேண்டியும் விடாததால் வேடன் தாக்க, முனிவர் சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் புலி வடிவம் எடுத்து வேடனை துரத்த, வேடன் பயந்து ஓடி அருகில் இருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தின் அடியிலேயே நின்றது. வேடன் வேறு வழியின்றி மரத்திலேயே இரவு முழுவதும் கழித்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்து விடுவோமோ என்று நினைத்த வேடன், ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க, அவை புலி வடிவில் இருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன. அன்று மஹா சிவராத்திரி நாள். ஊண் உறக்கமின்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனை அறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார்.

🌹அன்று காலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால், எமன் அங்கு வந்தான். நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோலேந்தி விரட்டினார். எமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி எமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட்டார். பின் எமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலயம் எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டு சென்றதாக ஸ்தல வரலாறு.

🌹சிவபெருமான் எமனை துரத்துவதற்காக துவார பாலகர்களை அனுப்பியதால் அங்கு மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் துவாரபாலகர்களாக உள்ளனர். பிரம்மாவும் இங்கு ஒரு தீர்த்தம் உண்டாக்கி, இறைவனை வழிபட்டு படைப்பு தொழிலை தக்க வைத்துக் கொண்டார். மஹாவிஷ்ணு சலந்திரன் என்ற அரக்கனை கொல்வதற்கு முன் அவனுடைய மனைவியியை ஏமாற்றினார். அதற்காக அவளிடம் சாபம் பெற்றார். நிவாரணத்திற்கு இங்கு சிவனை வழிபட்டார். சிவபெருமான் ஸ்ரீ ஹரீசர் என்று பெயர் பெற்றார்.

பூமாதேவி இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றாள். ஆகவே பூமிபுரம்.

ஒரு சிவராத்திரி நாளில் ஒரு திருடன் குழந்தையின் ஆபரணங்களைத் திருட முயன்ற போது, தூங்கிக் கொண்டிருந்த குழந்தை இறந்தது. தீவிர சிவபக்தரான குழந்தையின் தந்தை சிவனிடம் வேண்ட, குழந்தைக்கு மறு பிறவி தந்து எழுந்தது. ஆகவே மஹாவருளேசர்.

🌹அக்னி பகவானும் தீர்த்தம் உண்டாக்கி சிவனை வழிபட்டுள்ளார்.

🌹சர்வ ஜன ரக்ஷகி சன்னதியில் துவாரபாலகிகள் பதிலாக விநாயகர் சிலைகள்

🪷 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கோயிலில் முகப்பு வாயில் மட்டும் கிழக்கு நோக்கி உள்ளது.

உள்ளே இடப்பக்கம் வேடன் நிகழ்ச்சி சுதையால் சித்தரிக்கப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் சப்த கன்னியர் சன்னதி, சுந்தரமூர்த்தி விநாயகர் சன்னதி வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகம் சன்னதியில் உள்ளது

நவக்கிரகங்கள் இல்லை. துர்க்கை சன்னதிக்கு எதிரே இரண்டு சண்டிகேஸ்வரர் உள்ளனர். மூவராலும் பாடப்பட்ட இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. சிவபெருமானும் பார்வதி தேவியும் மனமகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். எம பயம் தீர்த்த தலம் மற்றும் இந்த ஊரில் தான் சிவராத்திரி பிறந்தது.

🪷 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மரண பயம் நீங்க

பாவங்கள் அகல

குடும்ப நலம், மன அமைதி

மேலும் வேலைவாய்ப்பு

தொழில் விருத்தி பிரார்த்தனை

🪷 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹா சிவராத்திரி

வைகாசி விசாகம் ஆடிப்பூரம் புரட்டாசி நவராத்திரி உற்சவம்

ஐப்பசி அன்னாபிஷேகம்

தீர்த்தவாரி லட்சதீப திருவிழா, சித்திரை திருவிழா, விடயாற்றி உற்சவம் மற்றும் தெப்ப உற்சவம் திருக்கார்த்திகை,

மார்கழி திருவாதிரை

🪷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மா மஹாவிஷ்ணு பூமாதேவி வேதங்கள் அக்னி சப்த கன்னிகைகள் வேடன் அப்பர் சம்பந்தர் சுந்தரர்

🪷அமைவிடம்,நேரம்,தொடர்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

7KM கும்பகோணத்தில் இருந்து

கும்பகோணம் – திருவைகாவூர் செல்ல நகரப் பேருந்து (Town Bus) வசதிகள் உள்ளன.

அனைத்து ஊர்களில் இருந்தும் போக்குவரத்து வசதி உள்ளது.

7AM – 12NOON, 4PM – 7PM

93443 30834 ஹரிஹர குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🪷 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கோழைமிட றாககவி கோளுமில

வாகஇசை கூடும்வகையால்

ஏழையடி யாரவர்கள் யாவைசொன

சொல்மகிழும் ஈசனிடமாம்

தாழையிள நீர்முதிய காய்கமுகின்

வீழநிரை தாறுசிதறி

வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல்

சேறுசெயும் வைகாவிலே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *