திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர்

மூலவர் : ஸ்வேதாரண்யேஸ்வரர்

/ வெண்காட்டுநாதர்

அம்பாள் : பிரம்ம வித்யாம்பிகை

ஸ்தல விருக்ஷம் : வடவாள் வில்வம் கொன்றை

தீர்த்தம் : சூரிய சந்திர அக்னி

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர் என நால்வரும்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் 65, சோழ நாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 11.

🌻 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

•மூர்த்தி ஸ்தலம் தீர்த்தம் 3ம் சிறப்பு

•51 சக்தி பீடங்களில் ஒன்று பிரணவ சக்தி பீடம்.

•புதன் பரிகார ஸ்தலம்.

•காசியை விட முக்கியம் வாய்ந்ததாக கருதப்படும் காவிரி ஆற்றங்கரையில் உள்ள ஆறு சிவாலயங்களில் ஒன்று.

•இக்கோவில் வால்மீகி ராமாயணத்திலும் சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள தொன்மை வாய்ந்த கோவில்.

•காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல் இங்கு ருத்ர பாதம் வடவாள் விருக்ஷத்தின் கீழ் உள்ளது.

•சிதம்பரம் போன்று நடராஜர் சந்நிதிக்கு அருகில் விஷ்ணு சந்நிதி உள்ளது.

•சிதம்பரம் போலவே இங்கும் சிவ தாண்டவம் விழா கொண்டாடப்படுகிறது. இங்கு நடராஜர் மிகவும் அழகு.

அனைத்து பூஜைகளும் சிதம்பரம் போலவே தான். •இங்கும் ஸ்படிக லிங்கம் & சிதம்பர ரகசியம் காணலாம்.

ஸ்படிக லிங்கம் தினமும் 4 முறை அபிஷேகம். நடராஜருக்கு ஆண்டுக்கு 6 அபிஷேகம் மட்டுமே.

•பட்டினத்தார் சிவதீக்ஷை பெற்றதும் மெய்கண்டார் அவதரித்ததும் இத்தலத்தில் தான்.

🌻 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 பிள்ளை இடுக்கி அம்பாள்👉

மாடவீதியில் சன்னதி உள்ளது. ஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது, இந்த இடம் கைலாச மலை போலவும், மணல் திட்டுகள் சிவலிங்கம் போலவும் இருப்பதைக் கண்டார். அதனால் இந்த புண்ணிய பூமியில் காலடி எடுத்து வைக்க மனமில்லாமல், பார்வதி தேவியை அம்மையே என்று அழைத்தார். அவரது குரலை கேட்ட பார்வதி தேவி, அங்கு வந்து ஞான சம்பந்தரை இடுப்பில் தூக்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்றாள்.

🌹அவர் அம்மனை அழைத்த இடம் “கூப்பிட்டான் குளம்” என்றும் இந்த குளத்திற்கு அருகில் உள்ள விநாயகர், சம்பந்த விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள அம்மனை வழிபடுவதன் மூலமும், தொட்டில் காணிக்கை செலுத்துவதன் மூலமும் சந்தான பிராப்தி பெறுகிறார்கள்.

🌹ஸ்வேத கேது 👉

தர்மத்தின் அதிபதி எமன் – அரசன் ஸ்வேத கேது உயிரை பறிக்க முயன்றதால் சிவபெருமானால் தண்டிக்கப்பட்டார். எமன் தனது பாவங்களைப் போக்க இங்கு சிவபெருமானை வேண்டினார்.

🌹 புனித மெய்க்கண்டார் 👉

சிவஞான போதம் எழுதியவர். ஸ்வேதாரண்யேஸ்வரர் அருளால் பிறந்தவர். இவர் இயற்பெயர் ஸ்வேதவனப் பெருமாள். இங்குள்ள அக்னி தீர்த்தக் கரையில் அவர் சன்னதி உள்ளது. கிழக்கு வாயிலில் மெய்கண்டார் பாடசாலை உள்ளது.

🌹 ஆனந்த தாண்டவம்👉

பார்வதி தேவியின் விருப்பப்படி, சிவபெருமான், தனது ‘ஆனந்த தாண்டவத்தை’ இங்கு நிகழ்த்தினார். இந்த நடனம் ஆடும் பொழுது, அவரது 3 கண்களிலிருந்து விழுந்த நீர் துளிகள் இந்த கோவிலின் 3 தீர்த்தங்களாக உருவாகியது.

🌹 பிரம்ம வித்யாம்பாள் 👉 பிரணவ சக்தி பீடம்.

இத்தலத்தின் தன்நிகரில்லா தலைவி. இவள் திருவெண்கார்டரின் சக்தி ஸ்வரூபம். மதங்க முனிவருக்கு மகளாக தோன்றி மாதங்கி என்ற பெயருடன், ஸ்வேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார்.

பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்யாம்பிகை ஆனாள். கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபடுவது சிறப்பு. நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வ செழிப்பு), வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதை காணலாம். கீழ்கரம் அபயஹஸ்தம். இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமைகளை – பணிந்தார் எவரும் தெய்வம் போல் உயரலாம் என்பதாகும். பெருமை வாய்ந்த சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.

🌹காளி தேவி 👉

ஸ்வேதவனத்தில் எழுந்தருளியுள்ள மாசக்தியாகளால் ஸ்வேதவன காளி. 8 கரங்கள் – பாசம் சக்கரம் வாள் உடுக்கை கேடயம் கபாலம் ஆகிய படைக்கலன்களை தாங்கியுள்ளார். பாவத்தில் எடுப்பும் மிடுக்கும் கொப்பளிக்கிறது. உடலின் சாய்விற்கு ஏற்ப வலக்காலை பீடத்தின் மீது உயர்த்தி வைத்துக்கொண்டு, இடக்காலை தொங்க விட்டிருக்கிறார். பக்தியோடு கலையை ஆராதிப்பவர்களுக்கு இவள் அருள் புரிகிறாள்.

🌹 துர்கா தேவி 👉

துர்கையின் உருவை கண்ட மாத்திரத்தில் மேற்கொண்டு அடி வைக்க மனம் வராது. மகிஷனை அழித்த இந்த மாதேவி இப்படியும் கூட அழகினளாக இருப்பாளா என்ற ஆச்சரியம் வரும். இவள் தன் 8 கரங்களில் சங்கு சக்கரம் வில் அம்பு உடையவள்.

🌹 புதன் பகவான் 👉

வித்யாதரன் எனப்படும் புதன் பகவான் அன்னை வித்யாம்பிகையின் அரசாட்சிக்குட்பட்டவர். போற்றும் தாயின் அரவணைப்போடும் கூடி வீற்றிருக்கும் சேய் போன்றும், அன்னையர் கோவிலின் இடப்பாகத்தில் அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் திருவெண்காடரை புதன் தன் தோஷம் நீங்கி நவகோள்களில் ஒருவரானார். இவர் செய்த மாதவத்தின் பலனாகவே ரிக் வேதத்தின் ஐந்தாவது காண்டத்துக்கு அதிபதியானார்.

புதன் சந்திரனின் மகன். சந்திரன் சன்னதியும், சந்திர தீர்த்தமும் எதிரிலேயே உள்ளது.

புதனுக்கு பச்சை வஸ்திரம் சாத்துகிறார்கள்.

நவகிரஹங்களில் புகழும் சிறப்பும் இது.

🌻 ஸ்தல புராணம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹 பிரம்ம சமாது : ( பிரம்ம அதிஷ்டானம் ) 👉 பிரம்மா பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை விளக்க முடியாமல், முருகன் பிரம்மாவை சிறையில் அடைத்ததாக நம்பப்படுகிறது. சிவபெருமான் தானே முருகப்பெருமானிடம் சென்று, பிரம்மாவின் பணியின் முக்கியத்துவத்தை விளக்கினார்

சிவபெருமான் பிரம்மாவை விடுவித்தார். சிறையில் இருந்ததால் பிரம்ம தேவன் பிரம்ம ஞானத்தை மறந்தார். ( உலகின் சமநிலையை பேணுவது அவர் கடமை )

🌹பிரம்மதேவன் இத்தலத்திற்கு வந்து தனது நினைவாற்றலை மீட்டெடுக்க கடுமையான தவம் செய்ததாக நம்பப்படுகிறது. இங்கு அவர் கடைபிடித்த தவம் “சமாது நிலை” என ( மூச்சை பிடித்துக் கொண்டு ) அழைக்கப்படுகிறது.

🌹அவரது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், தக்ஷிணாமூர்த்தி வடிவில் அவருக்கு மீண்டும் பிரம்மஞானம் கற்பித்தார்.

மேலும் பார்வதி தேவி அவருக்கு பிரம்ம கலை ( பிரம்மாவின் கலைகள் ) கற்பித்ததாக நம்பப்படுகிறது. எனவே இங்குள்ள பார்வதி தேவி ஸ்ரீ பிரம்ம வித்யாம்பிகை என அழைக்கப்படுகிறார். இங்கு “பிரம்ம சமாது” என தனி சன்னதி உள்ளது.

🌹ஸ்ரீ அகோர மூர்த்தி 👉 புராணங்களின்படி, சிவபெருமானுக்கு ஈசானம் தத்புருஷம் அகோரம் வாமதேவம் சத்யோஜாதம் ஆகிய 5 முகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு திசையையும் ஒரு அம்சத்தையும் குறிக்கும்.

🌹சலந்திரன் என்ற அரக்கனின் மகன் மருத்துவன் சிவபெருமானின் பக்தன்.

கடுமையான தவம் செய்து பல வரங்களைப் பெற்ற அவன், தேவர்களை துன்புறுத்த, தேவர்கள் சிவபெருமானை வேண்டுகிறார்கள். சிவபெருமான் நந்தியை தண்டிக்க அனுப்பினார். அப்பொழுது ஏற்பட்ட சண்டையில் மருத்துவன் நந்தியை 9 இடங்களில் தாக்கினார்.

இதை அறிந்த சிவபெருமான் அகோர மூர்த்தி அவதாரம் எடுத்து அரக்கனை வென்றார்.

இந்த மூர்த்தி சிவபெருமானின் உக்கிர அவதாரம். இது அவரது 5 முகங்களில் ஒன்றை குறிக்கிறது அகோரம். இங்குள்ள மரத்தடியில் அகோர மூர்த்தி அசுரனை கொன்றதாக ஐதீகம். இந்த மரத்தை இன்றும் கோவிலில் காணலாம். இறைவன் முன் இருக்கும் நந்தி சிலை, உடலில் 9 இடங்களில் தழும்பகளுடன் காணப்படுகிறது

🌻 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இத்தலத்தில் அனைத்தும் 3

3 ஸ்வாமி – ஸ்வேதாரண்யேஸ்வரர் நடராஜர் அகோரமூர்த்தி

3 அம்பாள்- பிரம்மவித்யாம்பிகை காளி துர்கை

3 தீர்த்தம் – சூரிய சந்திர அக்னி

3 ஸ்தல விருக்ஷம் – வடவாள் வில்வம் கொன்றை

சிவபெருமான் சிதம்பரத்தில் நடனம் ஆடுவதற்கு முன்பு இங்கு நடனம் ஆடியதாக நம்பப்படுவதால் இந்த கோவில் ஆதி சிதம்பரம்.

5 நிலை ராஜகோபுரம், 12 ஏக்கர் பரப்பளவு, நிறைய கல்வெட்டுகள் உள்ளன. இங்கு மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடுவது காசியில் உள்ள 64 கட்டங்களில் நீராடுவதற்கு சமம்.

இத்தல விநாயகர் பெரிய விநாயகர்.

சந்திர தீர்த்தம் அருகே, பழமையான பெரிய ஆலமரம், அதன் கீழ் சிவபெருமானின் காலடித்தடம் ருத்ரபாதம், “கயா” வில் காணப்படும் விஷ்ணுபாதம் போன்றே வைக்கப்பட்டுள்ளது. இங்கு சிரார்த்தம், தர்ப்பணம் செய்கிறார்கள்.

ஸ்ரீ வல்லப கணபதி ( கணபதியுடன் ஸ்ரீ வல்லப தேவி) ஒரு சன்னதியில் எழுந்தருளியுள்ளார். உண்மையில் அது தானியங்களையும் நெல்லையும் சேமித்து வைக்கும் ஒரு களஞ்சியமாகும். இந்த விநாயகரை வழிபடுவது ஒருவரை வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கும். இங்கு விநாயகர் தன் மனைவியுடன் காட்சியளிப்பதால், அவர்களை வழிபடுவது திருமண வரன்களில் ஏற்படும் தடைகளை நீக்க உதவும்.

🌻 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கல்வி, அறிவு, பேச்சுத்திறன் மற்றும் வியாபாரத்தில் மேன்மை பெற & புதன் தோஷம் நீங்க புதன் வழிபாடு.

பித்ரு தோஷம் நீங்க

புத்திரப்பேறு திருமணத்தடை

எதிரிகள் தொல்லை நீங்க,

துயரம் நீங்கி மன அமைதி பெற

நரம்பு வியாதிகள் குணமாக

தொழில் விருத்தி உத்தியோக உயர்வு பிரார்த்தனை

🌻திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாசியில் 13 நாள் பிரம்மோத்ஸவம் (இந்திர விழா),

ஆடியில் 10 நாள் ஆடி பூரம்.

ஆவணியில் விநாயகர் சதுர்த்தி.

புரட்டாசி நவராத்திரி,

ஐப்பசியில் கந்த சஷ்டி மற்றும் அன்னாபிஷேகம்.

மார்கழியில் ஆருத்ரா தரிசனம்

பங்குனியில் அகோரமூர்த்திக்கு “லட்சார்ச்சனை”.

கார்த்திகை 3வது ஞாயிறு நள்ளிரவில், அகோரமூர்த்திப் பெருமானுக்கு “அகோரபூஜை” எனப்படும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.

வைகாசி ஐராவதம் திருவிழா

ஆடி பட்டினத்தார் சிவபெருமானிடமிருந்து ‘சிவ தீக்ஷய்’ பெற்ற திருவிழா.

பிரதோஷமும் தவறாமல் அனுசரிக்கப்படுகிறது.

🌻 வழிப்பட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பார்வதிதேவி, பிரம்மா, மஹாவிஷ்ணு, இந்திரன், ஐராவதம், புதன், சூரியன், சந்திரன், அக்னி, அகத்தியர், நாரதர், வியாக்ரபாதர், வியாசர், ஸ்வேதகேது, சுவேதன் சிவபிரியர், வேதராசி, பட்டினத்தார், மெய்க்கண்டார், அப்பர் சம்பந்தர் சுந்தரர் மாணிக்கவாசகர் கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் முதலியோர்.

🌻அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாயவரம் மங்கைமடம் சாலையில் கோவில் உள்ளது.

15 KM சீர்காழியில் இருந்து

15 KM திருக்கடையூரில் இருந்து

25 KM மாயவரம் இருந்து

நிறைய போக்குவரத்து வசதிகள் உண்டு.

7AM – 12.30PM 4PM – 8PM

75399 55677 & 80987 41025

தக்ஷிணாமூர்த்தி குருக்கள்

93849 36308 & 94435 06994

வினோத் குருக்கள்

90030 49392 கீர்த்திவாசன் குருக்கள்

94435 64370 ராஜப்பா குருக்கள்

94438 99511 பாபு குருக்கள்

90953 44322 சரபா குருக்கள்

🌻கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கண்காட்டு நுதலானுங்

கனல்காட்டுங் கையானும்

பெண்காட்டும் உருவானும்

பிறைகாட்டுஞ் சடையானும்

பண்காட்டும் இசையானும்

பயிர்காட்டும் புயலானும்

வெண்காட்டில் உறைவானும்

விடைகாட்டுங் கொடியானே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *