திருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் துறைகாட்டும் வள்ளலார்

🌺மூலவர் : உச்சிரவனேஸ்வரர் ( துறை காட்டும் வள்ளலார் ) வஜ்ரவனேஸ்வரர்

அம்பாள் : வேயுறு தோளியம்மை

ஸ்தல விருக்ஷம் : விழல் என்ற புல் செடி

தீர்த்தம் : காவிரி, மெய்ஞான தீ, பொய்கை தீ,

பாடல் : சம்பந்தர்

புராண பெயர் : விழல்நகர்/ திருவிளநகர்.

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 40

🌺 ஸ்தல சிறப்பு

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கபித்தன் என்னும் அரசன் பூஜித்து பிரமஹத்தி தோஷம் நீங்கப்பெற்றான்.

🌹அம்மன் வேயுறு தோளியம்மை சங்கு சக்கரத்துடன் பக்தர்களை காப்பாற்றுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.,

.

🌺 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹முன் காலத்தில் இப்பகுதி முழுவதும் விழர் செடிகள் அடர்ந்து இருந்ததால் ‘விழர் நகர்’ எனப்பட்டது. இது காலப்போக்கில் ‘திருவிளநகர்’ ஆனது.

🌹ஞானசம்பந்தர் ஒருமுறை கடைமுடி முதலிய தலங்களுக்கு சென்று மயிலாடுதுறை வரும் வழியில், காவிரி ஆறு கரைபுரண்டு ஓடியது. அப்போது வழி தெரியாமல் திண்டாடிய சம்பந்தர், “இங்கு துறை காட்டுவோர் யாரேனும் உளரோ” என்று கேட்க இறைவன் வேடனாக தோன்றி துறைகாட்டி கரை சேர உதவி செய்தார்.

🌺 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்பவன் இத்தளத்தில் இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். தினமும் நிறைய பூ கைங்கரியம் செய்பவன். தினமும் ஆற்றைக் கடந்து சென்று பூக்களை சேகரித்துக் கொண்டு வந்து இறைவனை பூஜை. ஒருமுறை சோதனையாக வெள்ளம் வர, தன்னைப் பற்றி கவலைப்படாமல், மூழ்கினாலும் பூ கூடையை காப்பாற்ற இறைவனைப் பிரார்த்திக்க 👉 ஆற்றின் துறையை காட்டி உதவினார்.

அருள்வித்தனின் பெருமை உலகிற்கு தெரிந்தது. ஆதலால் இறைவன் “துறை காட்டும் வள்ளல்”

🌺 ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹5 நிலை ராஜகோபுரம், 2 பிரகாரமும் உள்ளன. ராஜகோபுரம் அடுத்து பலிபீடம் நந்தி ஆஸ்தான மண்டபம் அமைந்துள்ளது. மஹா மண்டபத்தின் வடபுறத்தில் அம்மன் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள். சிவபெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

சுற்று பிரகாரத்தில் அழகிய உப சன்னதிகள். சிவன், பார்வதி தேவி சன்னதிகள் தவிர விநாயகர், முருகன், நடராஜர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, அருணாசலேஸ்வரர், சோமாஸ்கந்தர், கஜலட்சுமி, துர்க்கை, சனீஸ்வரர், நவகிரகம், சூரியன், சந்திரன், நால்வர், பைரவர் ஆகியோரின் சன்னிதிகளையும், பைரவர்களையும் தரிசிக்கலாம்

🌺 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹வாழ்க்கைப் பாதையில் திகைத்து நிற்கும்போதும், சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறும்போதும், எந்தவித பிரச்சனையாக இருந்தாலும் இங்கு வந்து தரிசனம் செய்தால் விரைவில் நீங்கிவிடும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தலவிருட்சம் விழர்செடியில் முடிச்சுப் போட்டு வேண்டிக் கொண்டால் விரைவில் பலன் கிடைக்கும்.

மன உறுதி கிடைக்கும்.

🌺 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருக்கல்யாண உற்சவம்.

விநாயகர் சதுர்த்தி

திருக்கார்த்திகை

ஐப்பசி அன்னாபிஷேகம்

மஹா சிவராத்திரி

🌺 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அருள்வித்தன், கபித்தன், ஞானசம்பந்தர் முதலியோர்

🌺 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மயிலாடுதுறை 12KM 👉செம்பனார் கோயில் பாதையில் செம்பனார் கோயிலில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவு.

மயிலாடுதுறை அல்லது செம்பனார்கயிலில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன..

8AM – 11.30AM, 5PM – 7.30PM

96881 91059 திருமேனி குருக்கள்

குருக்களை அழைத்துவிட்டு சொல்வது சிறப்பு.

🌺 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஒளிரிளம்பிறை சென்னிமேல்

உடையர் கோவணஆடையர்

குளிரிளம்மழை தவழ்பொழிற்

கோலநீர்மல்கு காவிரி

நளிரிளம்புனல் வார்துறை

நங்கைகங்கையை நண்ணினார்

மிளிரிளம்பொறி அரவினார்

மேயதுவிள நகரதே. 

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *