திருவிற்கோலம் கூவம் திரிபுராந்தகர்
மூலவர்: திருவிற்கோல நாதர் திரிபுராந்தகேஸ்வரர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்பாள் : திரிபுராந்த நாயகி திரிபுரசுந்தரி
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : அக்னி, கூபாக்னி தீ
பாடல் : சம்பந்தர்
ஆகமம் : சிவாகமம்
புராணப் பெயர் : கூவரம் திருவிற்கோலம்
ஊர் : கூவம், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் & தொண்டை நாட்டு ஸ்தலம் 14
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இப்பகுதியில் மழை வரும் பொழுது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு சிவப்பு நிறமாகவும் மாறுவதாக சொல்கிறார்கள். சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள பஞ்ச பூத தலங்களில் இது “அக்னி ஸ்தலம்” ஆகும்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வில் ஏந்திய சிவன்
சுவாமியின் தலையில் கூரம் பட்ட இடத்தில் காயதழும்பு இருப்பதால், லிங்கத்தை தொட்டு பூஜை செய்வதில்லை. தலைக்கு மேல் பச்சை கற்பூரம் தடவி, பாலாபிஷேகம் செய்கின்றனர்.
இத்தலத்தில் சிவன் தவக் கோலத்தில் இருக்கின்றாராம். எனவே இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் குறிப்பாக தவளைகள் மட்டும் வாழ்வதில்லை. தவளை எழுப்பும் சத்தம் சிவ தவத்திற்கு தொந்தரவாக இருக்கும் என்பதால் தவளைகள் வசிப்பதில்லை என்கிறார்கள்.
வெளியிலிருந்து தவளைகளை கொண்டு வந்து தீர்த்தத்தில் விட்டால் கூட வெளியேறி விடுகின்றன.
திருபுராந்தக வதத்திற்கு சென்ற சிவன் என்பதால், திரிபுராந்தகர் & அம்பாள் திரிபுராந்தகி.
சக்கர அச்சு முறிந்து நின்ற போது, போருக்கு கையில் வில்லுடன் சென்ற சிவன், தேரிலிருந்து இறங்கி கையில் வில்லேந்திய கோலத்திலேயே நின்றார்.
இறைவன் மேலும் மலையை வில்லாக கையில் பிடித்து நின்ற கோலம்.
So திரு+வில்+கோலம் இதுவே ஸ்தல பெயர், சுவாமி திருவிற்கோல நாதர்.
கோயிலுக்கு வெளியே, திரிபுர சம்ஹார காலத்தில், தேர் அச்சு முறிந்திட, உடனே பெருமானை விடையாக இருந்து தாங்கியதாக சொல்லப்படும், கரிய மாணிக்க பெருமாள் கோவில் உள்ளது.
சித்திரையில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது மட்டும் ஸ்வாமி வில்லை ஏந்தியபடி காட்சி தருகிறார். சிவனின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது.
தர்க்க மாதா
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூஞ்சி கேசர், கார்கோடகர் என்ற 2 முனிவர்கள் வேண்டுதலுக்காக சிவன், திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவ நடனம் ஆடி காளியின் செறுக்கை அடக்கினார். இதனால் அவள் மிகுந்த கோபத்துடன் இருந்தாள்.
அவளிடம் சிவன் இத்தலத்தில் ரக்ஷா (காத்தல்) நடனம் ஆடப் போவதாகவும் அப்போது தன்னை தரிசித்து கோபம் அடங்கி மகிழும்படி கூறினார். அதன்படி சிவன் இத்தலத்தில் காத்தல் நடனம் ஆடிய போது காளி சுவாமியை தரிசித்து அமைதி அடைந்தாள்.
இவள் இக்கோவிலுக்கு அருகில் சற்று தூரத்தில் தனி சன்னிதியில் தர்கா மாதா என்ற பெயரில் அருள் பாலிக்கிறாள். சிவனுடன் தர்க்கம் புரிந்து அவருடன் போட்டியிட்டவள், ஆதலால் இப்பெயர்..
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன் கமலாக்ஷன் வித்யுன்மாலி ஆகிய 3திரிபுர அசுரர்கள் சேர்ந்து தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள் அவர்கள அழித்து தங்களை காக்கும் படி வேண்டினர்.
தேவர்களை காப்பதற்காக சிவன் வில்லை ஏந்தி கொண்டு தேரில் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்கி விட்டு or மனதிலாவது நினைத்து விட்டோ தான் செல்ல வேண்டும் என்பது நியதி. அது சிவனுக்கும் பொருந்தும்.
சிவன் & தேவர்கள் மீது கோபம் கொண்ட விநாயகர் – அச்சிறுப்பாக்கம்- அச்சு முறித்த இடம், அப்போது தேரின் கூரம் (ஏர்கால்) இத்தலத்தில் முறிந்து நின்றது.
இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். பின் விநாயகர், தேரின் அச்சை சரி செய்ய, சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார்.
கூரம் (ஏர்க்கால்) பூமியில் பதிந்த இடத்தில் சிவன் சுயம்புவாக எழுந்தருளினார்; கூரம் முறிந்து நின்ற இடம் என்பதால் இத்தலம் கூரம் என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் கூவம் என்று மருவியது.
ஸ்தல சிறப்பு செய்திகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஸ்தல புராணம் சிவப்பிரகாச சுவாமிகளால் பாடபெற்றுள்ளது
மூலவர் தீண்டாத் திருமேனி சுயம்பு, அபிஷேகங்கள் செய்வ தால் உண்டாகும் மேற்புற படிவு கள் தானாகவே பெயர்ந்து விழுந்து திருமேனி சுத்தமாகி விடுமாம்.
சுற்றிலும் உள்ள 10 ஊர்களுக்கு இம்மூர்த்தியே குலதெய்வம்
மணல் லிங்கம். இங்கு மூர்த்தியை பாலாலயம் செய்யும் வழக்கமில்லை.
16 முழ வேஷ்டி தான் சுவாமிக்கு சாற்றப்படுகிறது.
கூவம் நதி இங்கிருந்துதான் துவங்குகிறது.
இவ்வூருக்கு ‘கூபாக்னபுரி’ என்றும் பெயர் சொல்வதோடு, கோயிலுக்கு எதிரில் உள்ள நிலங்களும் ‘குமாரவட்டம்’ என்று முருகன் பெயராலேயே வழங்க படுகிறது.
கோவிலிலிருந்து 2KM தொலைவிலுள்ள “திருமஞ்சன மேடை” என்று சொல்லப்படும் (கூவம் ஆற்றின் கரையில் உள்ள) இடத்திலிருந்து தான் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதற்காக ஒருவர் நியமிக்கப் பட்டு, தினந்தோறும் 4 காலங்களுக்கும் அவ்வப்போது தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு தீர்த்தம் கொண்டு வருவதில் தவறு நிகழ்ந்து – அதாவது தீர்த்தம் கொண்டு வருபவர்- அத் தீர்த்ததிற்கு பதில்- செல்ல வேண்டிய தொலைவுக்கு பதிலாக வேறு தீர்த்தம் கொண்டு வந்து, அதை அபிஷேகம் செய்துவிட்டால் சுவாமி மீது சிற்றெறும்புகள் படரும் என்றும் அதை கொண்டு அத்தவறை கண்டு கொள்ளலாம் என்றும் சொல்லப்படுகிறது.
துர்கை சன்னதி எதிரில் சந்தன மேடை உள்ளது. அதில் அரைத்த சந்தனம் சுவாமிக்கு சார்த்தப்படுகிறது.
உச்சி கால அபிஷேக அரிய செய்தி
கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் ‘பிஞ்சிவாக்கம்’ கிராமத்திலிருந்து வேளாளர்கள் தர, ஆயர் ஒருவர் நாள்தோறும் சுவாமிக்கு உச்சிகால அபிஷேகத்திற்கு பால்கொண்டு வருகிறார்
அவர் அப்பாலை வரும் வழியில் எங்கும் கீழே வைக்காமல், பயபக்தியுடன் கொண்டு வருகிறார். அவருக்கு அதற்காக அவ்வூரில் நிலம் மானியமாக தரப்பட்டுள்ளது.
கோயிலிலும் நாள்தோறும் அவருக்கு சுவாமிக்கு படைத்த பிரசாதம் (அன்னம்) தரப்படுகிறது. இந்த பால் அன்றாடம் வந்த பிறகே உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. தொன்று தொட்டு இன்று வரை ஒரு நாளும் தடங்கலின்றி இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோவில் தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்குள்ள விமானம் கஜபிருஷ்டம். ஞான சம்பந்தர் தனது பதிகங்களில் சிவன் திரிபுராந்தக அசுரர்களை வதம் செய்த வரலாற்றை குறித்து பாடியுள்ளார்.
சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும் வித்யுன்மாலியும் கருவறைக்கு முன்புறம் துவார பாலகர்களாக இருக்கின்றனர். மூலவருக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கொடி மரங்கள் உள்ளன.
ராஜகோபுரத்திற்கு நேரே காத்தல் (ரக்ஷா) தாண்டவம் ஆடிய நடராஜர் தனி சன்னதியில் இருக்கிறார்.
அம்பாள், ஸ்வாமிக்கு வலப்பக்கம் தனி சன்னதியில் கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் இருக்கிறாள்.
இது திருமண கோலம்.
இவளுக்கு முன்புறத்தில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் திருமண தடைகள் நீங்கும். அம்பாளின் கருவறை விமானம், கோபுரம் போன்ற அமைப்பில் வித்தியாசமாக உள்ளது. பிரகாரத்தில் சண்முகர் ஆறு முகங்களுடன் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திரிபுராந்தகரிடம் வேண்டி கொண்டால் ஆளுமை திறன் வளரும். தீய குணங்கள் ஆணவம் துன்பங்கள் நீங்கும். குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.
தேர் அச்சை முறித்த விநாயகர், “அச்சிறுத்த விநாயகர்” பிரகாரத்தில் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை.
திருமணத்தடை நீங்க, புத்திரபேறு உண்டாக,
நரம்பு நோய்கள் தீர பிரார்த்தனை.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை 10 நாள் பிரம்மோற்சவம், ஆடி 10 நாள் அம்மனுக்கு பூ பாவாடை திருவிழா, சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம்.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூஞ்சிகேசர், கார்கோடகர்,
சம்பந்தர் சேக்கிழார் முதலியோர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சென்னையில் இருந்து பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை (NH 4) வழியாகச் சென்று, சவீதா மருத்துவமனைக்கு அருகில் வலதுபுறமாகப் பேரம்பாக்கம் / அரக்கோணம் செல்லும் சாலையில் திரும்ப வேண்டும். அங்கிருந்து கூவம் கூட்ரோடு வழியாக ஊரை அடையலாம்.
சென்னையிலிருந்து பேரம்பாக்கம் வழியாக கூவம் செல்லும் நேரடிப் பேருந்துகள் உள்ளன.
புறநகர் ரயில் மூலம் திருவள்ளூர் சென்று அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் செல்லலாம்.
8 KM from அரம்பேஸ்வரர் கோவில்
நேரம் 7AM – 11AM, 5PM – 7.30PM
63831 38578 & 94444 29775
சேனாபதி குருக்கள்
95517 20035 பிரபாகர் குருக்கள்
98847 33312 சுப்ரமணியன் (கோவில் மணியம் )
98418 94804
(ஓதுவார்) சிவசங்கர்
கோயில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
உருவினார் உமையொடும்
ஒன்றி நின்றதோர்
திருவினான் வளர்சடைத்
திங்கள் கங்கையான்
வெருவிவா னவர்தொழ
வெகுண்டு நோக்கிய
செருவினான் உறைவிடந்
திருவிற் கோலமே. 1
ஞான சம்பந்தர்


Leave a Reply