திருவிடைமருதூர் மஹாலிங்கேஸ்வரர்

🏵️ மூலவர் : மஹாலிங்கம் மஹாலிங்கேஸ்வரர்.

அம்பாள்: பெருமுலையாள் / பிரஹத் சுந்தர குஜாம்பிகை.

ஸ்தல விருக்ஷம் : மருதமரம்

தீர்த்தம் : காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவத தீர்த்தம், காவேரி என 32 தீர்த்தம்..

புராண பெயர் : மத்யார்ஜூனம்

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 30

🏵️ ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கர்நாடகா கொல்லூர் மூகாம்பிகை போலவே, இத்தலத்தில் வீற்றிருக்கும் திருவுடைமருதூர் மூகாம்பிகையும் சிறப்பும் கீர்த்தியும் வாய்ந்தவள். இந்தியாவிலேயே கொல்லூரிலும் திருவிடைமருதூரிலும் மட்டுமே மூகாம்பிகை சன்னதி உள்ளது.

கர்ப்பகிரஹம் வட இந்திய கோவில் கோபுர அமைப்பில் அமைந்துள்ளது. இங்கு மிகவும் சக்தி வாய்ந்த “மஹாமேரு ஸ்ரீ சக்கரம்” பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

🌹27 நட்சத்திரங்களுக்கும் 27 லிங்கங்கள் உள்ளன.

🌹காஸ்யப முனிவருக்கு இடைமருதீசனாகிய மருதவாணர் பாலகண்ணனாக காட்டி தந்துள்ளார்.

🌹 அனைத்து பாவங்களையும் நீக்கும் காருண்யாமிருத தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், காவிரி என 32 தீர்த்தங்கள்.

🌹 வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்ற ஸ்தலம்.

🌹பத்திரகிரியார் & நாய் முக்தி கிடைத்த தலம்..

🌹அனுஷ நட்சத்திரத்திற்கு பரிகார தலம்..

🌹காசிக்கு சமமான தலங்களில் ஒன்று.

🌹திருவாவடுதுறை ஆதீனம் கீழ் இயங்குகிறது.

🌹அப்பர் சுந்தரர் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகர் என நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம்.

🌹அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம்.

🏵️ ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🏵️ மூல லிங்க தலம்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆலய அமைப்பு முறைப்படி

👉திருவலஞ்சுழி விநாயகர்

👉சுவாமிமலை முருகர்

👉சேய்ஞலூர் சண்டிகேஸ்வரர்

👉 பட்டீஸ்வரம் துர்க்கை

👉 ஆலங்குடி தட்சிணாமூர்த்தி

👉 சூரியனார் கோவில் சூரியன் முதலான நவ கோள்கள்

👉 சிதம்பரம் நடராஜர்

👉 சீர்காழி பைரவர்

👉 திருவாவடுதுறை திருநந்தி

ஆகிய பரிவாரத் தலங்களுடன் அவற்றின் நடுவில் மூலமூர்த்தியாக ஸ்ரீ மஹாலிங்க பெருமான் விளங்குகிறார் என்பது சிறப்பு வாய்ந்த அம்சம்.

சுவாமிதான் பெரியவர். So மஹாலிங்கம்..

அஸ்வமேத பிரதக்ஷிணம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹முதல் பிரகாரம் உட்புறத்தில் வலம் வருதலை அஸ்வமேத பிரதக்ஷிணம் என்பர்👉 எல்லா நலன்களும் பெறுவர்.. திருக்கார்த்திகை தீபம், தை மாத விழாவிலும் வலம் வருவர்.

🌹அடுத்துள்ளது கொடுமுடி பிரகாரம் 👉 கைலாய மலையை வலம் வருவதால் கிடைக்கும் பேறு இப்பிரகாரத்தை வலம் வந்தால் கிடைக்கும்.

🏵️மத்யார்ஜூனம்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹாலிங்க பெருமான் தன்னைத்தானே அர்ச்சித்த சிறப்புடைய தலம். வடக்கே மல்லிகார்ஜுனத்திற்கும் ( ஸ்ரீசைலம் ), தெற்கே திருநெல்வேலி மாவட்ட திருப்புடைமருதூர் (புடார்சுனம்) இடையில் இத்தலம் இருப்பதால் இடைமருது (மத்தியார்ஜுனம்) என பெயர் அமைந்தது. அர்ஜுனம் எனும் வடசொல்லுக்கு மருதமரம் என்று பொருள். இம்மூன்று தலங்களிலும் ஸ்தலவிருக்ஷம் மருதமரமே.

பட்டினத்தாரும் பத்திரகிரியாரும்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பட்டினத்தார் இத்தலத்து இறைவனை பல பாடல்கள் பாடியுள்ளார். இவரது சிஷ்யர் பத்திரகிரியார். ஒரு நாட்டுக்கு ராஜாவான இவர் துறவு பூண்டு பட்டினத்தாரின் சீடரானார். இருவரும் சிவ தலம் தோறும் தரிசித்து வந்து இங்கு தங்கினர். பட்டினத்தார் திருவோடு கூட வைத்துக் கொள்ளவில்லை. பத்திரகிரியாரிடம் ஒரு திருவோடும் கூடவே ஒரு நாயும் இருந்தது. இறைவன் ஒருநாள் அடியார் உருவில் வந்து பட்டினத்தாரிடம் பிச்சை கேட்க, நானோ பரதேசி, கோயிலின் மேலகோபுரம் அருகே ஒரு சம்சாரி இருக்கிறான் என்று அனுப்ப இறைவன் இவரிடம் வந்து பிச்சை கேட்கிறான்..

🌹ஒரு திருவோடும் நாயும் நம்மை சம்சாரி ஆக்கிவிட்டதே என்று திருவோட்டை நாய் மீது எறிந்த போது நாய் இறக்க.. இறைவன் தோன்றி பத்திரகிரியார் + நாய் முக்தி அளித்த இடம் உள்ளது. கிழக்கு மாட வீதியில் நாயடியார் கோவில் காணலாம்.

🏵️ ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹அகத்தியர் முனிவர்களோடு திருவிடைமருதூர் வந்தடைந்தார். உமையம்மையை நினைத்து தவம் செய்து காட்சி பெற்றார். அம்மையை முறைப்படி வழிபட்டு இறைவனையும் காண வேண்டும் என வேண்ட, அம்மையும் முனிவர்களுக்காக சிவ தவம் இருக்க, இறைவன் இரங்கி முனிவர்களுக்கு காட்சி தந்தார்..

🌹காட்சி கொடுத்த இறைவன் ஜோதி லிங்கத்தை தானே வழிபடலானார். வியந்த உமையம்மையும், பிரம்மா முதலானோர் தங்களை நாங்கள் வழிபடுவது தான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே என வினவ..

👉 முனிவர்கள் நம்மை பூசிக்க மறந்து விட்டனர். அதனாலே பூசிக்கிறேன் என பூசை முறைகளையும் காண்பித்தார். அன்று தொடங்கி எம்பெருமானை காமிகாவிதிப்படி பூஜை செய்து பேறு பெறலாயினர்.

🌹வரகுணபாண்டியன்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

குதிரையில் வேகமாக சென்ற பொழுது குறுக்கே வந்த அந்தணர் இறந்ததால் பிரம்மஹத்தி தோஷம் பீடிக்க, மனநிலை மாறி, நிம்மதி இழந்து, பயம், நடுக்கம் ஏற்பட்டு இறைவனை வேண்டுகிறார். ( மதுரையில் சோமசுந்தரர் ) அசரீரி கேட்டு திருவிடைமருதூர் செல்ல, அரசன் ஆலயத்திற்குள் பிரவேசித்த பொழுது பற்றிக் கொண்டிருந்த பிரம்மஹத்தி, சக்தி மிக்க ஈசனின் முன் செல்ல அஞ்சி கொண்டு, வெளி வாசலிலேயே ஒதுங்கி நின்றது. வழிபாடு முடிந்து மன்னன் திரும்பி வரும்பொழுது அவனைப் பிடித்துக் கொள்ள காத்திருந்தது.

🌹கோவில் வாசலில் தலையை சாய்த்தபடி உட்கார்ந்த நிலையில் இருக்கும் ஒரு கற்சிலை தான் பிரம்மஹத்தி என்கிறார்கள். வரகுணபாண்டியன் மஹாலிங்கத்தின் முன் மனம் உருகி வழிபட்ட போது, பஞ்சபூதங்களின் வடிவான பரமேஸ்வரரின் பேரருளால் பூரண குணமடைந்து தெளிவு பெற்றான். பிறகு இறைவனின் உத்தரவுப்படி வந்த வழியே திரும்பாமல் வேறு வழியே வெளியே சென்று விட்டான்.. இன்றும் கோவிலுக்கு செல்பவர்கள் நுழைந்த வாசல் வழியாக வெளியே வருவதில்லை..

🏵️ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹திருவிடைமருதூர் மஹா லிங்கேஸ்வரர் கோயில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில், 7 பிராகாரங்கள், மற்றும் 7 பிரம்மாண்டமான கோபுரங்களுடன் அமைந்துள்ள ஒரு மாபெரும் சிவாலயமாகும்.

🌹தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோவில்கள் உள்ளன.

🌹 தேரடியில் விநாயகர் கோவிலும், கீழ வீதியில் விஸ்வநாதர் கோவிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோவிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோவிலும் இருக்க, இவற்றிற்கு மத்தியில் மஹாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கிறார். எனவே இத்தலத்தை பஞ்சலிங்க தலம் என்றும் சொல்வர்.

இத்தல விநாயகர் ஆண்ட கணபதி எனப்படுகிறார்.

இந்த விநாயகர், பஞ்சாட்சர விதிப்படி மகாலிங்க பெருமானை சிறப்பாக பூஜித்து வருகிறார். தேவகணங்கள் குறையாமல் கொண்டு வந்து அளிக்கும் பூஜை பொருட்களைக் கொண்டு மிகவும் விசேஷமாக இறைவனை வழிபடுகிறார். மனித சஞ்சாரம் இல்லாத இந்த இடத்தில் தமது அருட்சக்தியால் விநாயகர் உலகத்தை ஆண்டு வருவதால் இவருக்கு “ஆண்ட விநாயகர்” என்ற காரண பெயர்.

🏵️ பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மன நோய்க்கு மருந்து :

🌹இன்றும் மனநிலை சரியில்லாதவர்களை அழைத்து வந்து மஹாலிங்கத்தின் முன் நிறுத்தி தரிசனம் செய்கிறார்கள்.. மேலும் திருமணத்தடை உள்ளவர்கள் சுற்றுதோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்ய விலகி விடும்.

🌹சுகப்பிரசவம், மனத்துயரம், தொழில் விருத்தி, உத்யோக உயர்வு வேண்டிக்கொண்டு, நேர்த்திக்கடனாக அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்துகிறார்கள்..

🌹 பிரம்மஹத்தி மற்றும் பிற தோஷ நிவர்த்தி.

🏵️ திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தைப்பூசத் திருவிழா 10 Days

வைகாசி திருவிழா

ஐப்பசி அன்னாபிஷேகம்

மஹாசிவராத்திரி

திருக்கார்த்திகை

நவராத்திரி

🏵️ வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

உமாதேவியார், ருத்திரர், மூத்த பிள்ளையார், முருகர், அகத்தியர், பிரம்மா சரஸ்வதி, மஹாவிஷ்ணு மஹாலக்ஷ்மி, இந்திரன், சந்திரன், கஷ்யபர், மார்க்கண்டேயன், மனுநீதி சோழன், வரகுண பாண்டியன், பட்டினத்தார், பத்திரகிரியார்,

சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் கருவூர்த்தேவர் ஸ்ரீதர்ஐயாவாள், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார்,

🏵️ அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் 9KM தொலைவில் உள்ளது.கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை நகரங்களில் இருந்து அடிக்கடி நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

6.30AM – 12NOON, 5PM – 9PM

94885 48248 மணிசேகர சிவாச்சாரியார்

94430 93103 ராஜா சிவாச்சாரியார்

96292 65959 சிவகனேஷ் சிவாச்சாரியார்

97917 82878 மணிகண்டன் சிவாச்சாரியார்

🏵️ கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மருந்தவன் வானவர் தானவர்க்கும்

பெருந்தகை பிறவினொ டிறவுமானான்

அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்

இருந்தவன் வளநகர் இடைமருதே. 1

ஞானசம்பந்தர்

🌹திருவிடைமருதூர் எனும் ஒரு மகத்தான திவ்யக்ஷேத்ரம். மகான்களாலே அனுபவிக்கப்பட்ட ஒரு புண்ணிய பூமி.. மந்திரங்களாலே சூழப்பட்ட ஒரு ஆனந்த மயமான க்ஷேத்ரம்… நம் பாவங்கள் அனைத்தும் தொலையும் இவ்விடத்தில் மஹாலிங்கேஸ்வரர் நமக்கு அருள் புரியட்டும்.. 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *