திருவிசநல்லூர் யோகநந்தீஸ்வரர் சிவயோகிநாதர்

🌼மூலவர் : யோக நந்தீஸ்வரர் சிவயோகிநாதர்

அம்பாள் : சௌந்தரநாயகி சாந்தநாயகி

ஸ்தல விருக்ஷம் : வில்வம்

தீர்த்தம் : எட்டு தீர்த்தங்கள் அதில் ஜடாயு தீர்த்தம் முக்கியமானது.

ஆகமம் : காரண ஆகமம்

பாடல் : சம்பந்தர்,

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 43.

🌼 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்திரை 1 2 3 தேதிகளில் சூரிய ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுகிறது.

கோயிலில் தென்புற மதில்சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை, சூரியன் செல்லும் பாதையை கணக்கிட்டு அமைந்துள்ளது. அரை வட்ட கோளம் அமைக்கப்பட்டு, அதைச் சுற்றிலும் காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதைய நேரம். தமிழர்கள் வானவியல் அறிவியல் வல்லுனர்களாக திகழ்ந்தார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு.

🌼 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

👉இது 4 யுகம் கண்ட ஸ்தலம்.

👉கிருத யுகம் – புராதனேஸ்வரர் திரேதா யுகம் – வில்வாரண்யேஸ்வரர்

துவாபர யுகம் – யோகநந்தீஸ்வரர்

கலியுகம் – சிவயோகிநாதர்.

👉திருவந்தியார் எனும் சித்தாந்த சாஸ்திர நூலை பாடிய உய்ய வந்த தேவநாயனார் அவதரித்த தலம்.

👉சிவராத்திரி தோறும் அகத்தியர் இத்தளத்தில் பூஜை செய்வதாக ஐதீகம்.

👉 சில சிவாலயங்களில் பெருமாள் தனித்து இருந்தாலும், இங்கே லக்ஷ்மியுடன் சேர்ந்து லக்ஷ்மி நாராயணனாக அருள் பாலிக்கிறார்.

👉 ராமாயண காலத்தில் ஜடாயுவின் இறக்கை இத்தலத்தில் விழுந்ததாகவும் அந்த இடத்தில் ஜடாயு தீர்த்தம் இருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

🌹 சதுர் கால பைரவர் 👉

யுகத்திற்கு ஒரு பைரவராக தோன்றி இங்கு அருள் பாலிக்கிறார்கள்.

👉ஞானகால பைரவர் அருகில் தக்ஷிணாமூர்த்தையும்,

👉சொர்ணாகர்ஷண பைரவர் அருகில் மஹாலக்ஷ்மியும்,

👉உன்மத்த பைரவர் அருகில் பால சனியும்,

👉யோக பைரவர் அருகில் உத்திர கைலாய லிங்கமும் உள்ளனர். இவர்களை அஷ்டமி திதியில் வழிபடுவது சிறப்பு.

🌹 இங்கேயும் ஒரு கங்கை 👉

சுமார் 300 வருடங்கள் முன்பு, ஸ்ரீதர் ஐயாவாள் என்பவர் தன் வீட்டில் திவசம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது பசியால் ஒருவன் யாசகம் கேட்டான். திவசம் முடியாமல் யாருக்கும் எதுவும் கொடுக்கக் கூடாது என்பது மரபு. இருந்தும் பசியுடன் வந்த அவனுக்கு இவர் உணவளித்தார். இதனால் அவ்வூர் மக்கள் இவரை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். இதற்கான பரிகாரம் கேட்க கங்கையில் குளிக்க வேண்டும் என்றார்கள். கங்கையில் குளித்துவிட்டு தான் திவசம் கொடுக்க வேண்டும். இவர் இத்தல இறைவனை வேண்ட, அவர் வீட்டு கிணற்றிலேயே கங்கை நீர் பெருக்கெடுத்தது.

🌼 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

படைப்பு கடவுளான பிரம்மா விஷ்ணு சர்மா என்பவருக்கு புத்திரனாகப் பிறந்தார். இவர் தன்னுடன் பிறந்த ஆறு யோகிகளுடன் சிவனை வேண்டி தவம் புரிந்தார். சிவராத்திரி தினத்தில் சிவன் தரிசனம் கொடுத்து இவர்களை 7 ஜோதி ஆக்கி தன்னுடன் ஐக்கிய படுத்தினார். எனவே இத்தல இறைவன் சிவயோகி நாதர் ஆனார். இந்த வரலாற்றை விளக்கும் விதத்தில் சிவலிங்க திருமேனியில் 7 முடி கற்றைகள் இன்றும் இருக்கின்றன.

ஒரு காலத்தில் ஏராளமான பாவம் செய்த ஒருவன், தன் கடைசி காலத்தில் இத்தல இறைவனை அழைத்தான். அப்போது சிவன் நந்தியிடம் அழைத்தது யார் என கேட்க, நந்தி திரும்பிப் பார்த்தது. அவன் அப்படி அழைத்தது பிரதோஷ தினமாகும். நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்தது. அக்கணத்தில் அவனுக்கு விதி முடிய இருந்தது. எமன் அங்கு வந்தான். நந்தி அவனை தடுத்தார். சண்டை ஏற்பட்டது. நந்தி எமனை வென்று கோயில் கொடி மரத்திற்கு வெளியே அனுப்பியது. வழக்கமாக கொடி மரத்தின் உள்ளே நந்தி இருக்கும்

ஆனால் இங்கே கொடிமரத்தின் வெளியே நந்தி இருப்பதை இன்றும் காணலாம்.

🌼 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடன் அழகிய கோவில். நந்தி , கொடிமரத்திற்கு வெளியே உள்ளது. விநாயகர் முருகன் கோஷ்டமூர்த்தங்கள் மற்றும் சதுர் கால பைரவர்கள்,

லட்சுமி நாராயணன் காணலாம்.

நந்தி, லட்சுமி, சரஸ்வதி, பிரம்ம, கங்கை, சக்கர, சூல மற்றும் ஜடா ஆகிய 8 தீர்த்தங்கள்.

சூரிய கடிகாரம் சிறப்பு.

🌼 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆயுள் பலம் மற்றும் மரண பயம் நீங்குதல் (எம பய நிவர்த்தி)

ரிஷப ராசிக்காரர்களின் பரிகாரத் தலம்

பெண் சாபம் மற்றும் ஸ்திரீ தோஷ நிவர்த்தி

சதுர்கால பைரவர் வழிபாடு

🌼 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஐப்பசி பிரம்மோற்சவம் & ஐப்பசி கடைமுழுக்கு

சித்திரையில் சூரிய பூஜை விழா

மஹா சிவராத்திரி

மார்கழி திருவாதிரை

மாசி அன்னாபிஷேகம்

கார்த்திகை அமாவாசை கங்கை அவதார விழா

🌼 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்ம தேவனும் ஏழு யோகிகளும், மஹாவிஷ்ணு லக்ஷ்மி தேவி, அகத்தியர், ஜடாயு, ஸ்ரீதர் அய்யாவாள், உய்யவந்த தேவநாயனார், சதாசிவ பிரமேந்திரர் மற்றும் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள், கேரள மன்னன்,

அப்பர், சம்பந்தர் முதலியோர்

🌼அமைவிடம், நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

👉 திருவிடைமருதூர் வேப்பத்தூர் சாலையில். அனைத்து முக்கிய ஊர்களில் இருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.

நண்டாங் கோவில் 1KM

திருவிடைமருதூர் 6KM

கும்பகோணம் 12KM

7.30AM – 12NOON, 4PM – 7.30PM

94429 86778 சோமசுந்தரம் சிவாச்சாரியார்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌼 கோவில் தேவார பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

குரவங்கமழ் நறுமென்குழல்

அரிவையவள் வெருவப்

பொருவெங்கரி படவென்றதன்

உரிவையுடல் அணிவோன்

அரவும்மலை புனலும்மிள

மதியுந்நகு தலையும்

விரவுஞ்சடை யடிகட்கிடம்

விரிநீர்விய லூரே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *