திருவதிகை வீரட்டானேஸ்வரர் வீரட்டேஸ்வரர்
மூலவர் : வீரட்டேஸ்வரர் வீரட்டானேஸ்வரர்
அம்பாள் : பெரியநாயகி திரிபுரசுந்தரி
ஸ்தலவிருக்ஷம் :சரக்கொன்றை தீர்த்தம் : சூல தீ + கெடில நதி, பாடல் : அப்பர் சுந்தரர் சம்பந்தர் மாணிக்கவாசகர் ALL 4,
புராணப் பெயர் : திருஅதிகை வீரட்டானம், அதிகாபுரி, சுயம்பு, 39வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம் 7
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அட்டவிரட்டான தலங்களில் ஒன்று. ஸ்வாமி பிரம்மாண்டமான திருமேனி. அம்பாள் அழகான திருவருவம். கைலாயத்திற்கு ஒப்பான சிவ க்ஷேத்ரம். கருவறை விமானம் (கர்ப்பகிரஹ ) கோபுரம் மாதிரி அமைப்பில், அழகான சுதை சிற்பங்களோடு அமைந்துள்ளது ஸ்வாமி வீர செயல்களில் திரிபுர சம்ஹாரம் நடைபெற்ற இடம் இது.
அட்டவீரட்டான தலங்களில் மூலவர் அனைவருக்கும் வீரட்டேஸ்வரர் என்ற பெயர். அங்கே இருக்கும் உற்சவ மூர்த்திக்கும் ஒரு சிறப்பு. எதை யாரை சம்ஹாரம் செய்தாரோ அந்த மூர்த்தியும் இருப்பார். இங்க திருப்புராந்தகரா சுவாமி இருக்கார். திரிபுர சம்ஹாரம் நடந்த இடம்.
இங்கே மூலஸ்தானத்தில் உள்ள மூர்த்தி- லிங்கத்தின் பானம் அழகு -16 பட்டைகளுடன் உடைய பெரிய பானம் – ஜன்மாவில் ஒரு முறை பார்த்தால் – ஷோடச கலாபூர்ண தரிசனம், கோடி ஜன்ம பாப நிவாரணம் என்பது பிரமாணம்.
அதாவது 16 கலை- பிரதமையிலிருந்து ஆரம்பித்து பௌர்ணமி பர்யந்தம் இருக்கக் கூடிய 15 சேர்த்து, ஸ்வாமி தன் கிட்டே இருந்தே அதை கிரணங்களாகவும், 16 கலைகளுக்கு தானே அதிபதியாக இருக்கக்கூடிய ஸ்வாமி, 16 பட்டைகளுடன் கூடிய சிவலிங்கமாக மூலஸ்தானம்.
கணபதியிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு சந்நிதியும் சிறப்பு. கணபதிக்கு தேங்காய் உடைப்போம். சதுர் தேங்காய் உடைப்பது- அது இந்த க்ஷேத்திரத்திலிருந்து தான் உண்டானது.
அம்பாள் வரபிரசாதி. இந்திராதி தேவர்கள் எல்லாம் தொழுத மூர்த்தி. ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொருவரால் பூஜை செய்யப்பட்ட ஷேத்திரம். மஹாவிஷ்ணு பூஜை செய்த க்ஷேத்ரம். வாயிலின் உள்ளே நுழையும் இடத்தில் 108 கரண நடன சிற்பங்கள்.
யார் இந்த அப்பர் / எப்படி தடுத்தாட்கொண்டார்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருவதிகை நகரின் மேற்கே சுமார் 8 KM தொலைவில் திருவாமூர் என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கரசர் சமண மதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்திலேயே இருந்து வீரட்டானேஸ்வரருக்கு புஷ்பக் கைங்கரியம் தொண்டு செய்து வந்தார்.
இறைவனிடம் மனம் உருகி வேண்டினார். அப்போது மருள் நீக்கியாருக்கு கடுமையான சூலை நோய் (வயிற்று வலி) தாக்கியது. சமண சமயத்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ முயன்றனர். ஆனால் முன்னை விட மேன்மேலும் வலி அதிகமானது.
ஒரு நாள் அதிகாலை யாரிடமும் சொல்லாமல் திருப்பாதிரிப்புலியூரிலிருந்து திருவதிகை அடைந்து, திலகவதியாரின் காலில் விழுந்து, தமது நோயை போக்கும்படி கூற, திலகவதியாரும் மனமிரங்கி வீரட்டானேஸ்வரர் சன்னதிக்கு தன் தம்பியை அழைத்துச் சென்று, ஐந்து எழுத்தை ஓதி திருவாளன் திருநீறு அளித்தார்.
அந்த திருநீரை பூசிக் கொண்டு திருவாயில் போட்டுக் கொண்டவுடன், வயிற்று வலி பனிபோல் நீங்கிவிட்டது உடனே வீரட்டானேஸ்வரரை வணங்கி “கூற்றாயினவாறு விலக்கலீர்” எனும் கோதில் நீடிய திருப்பதிகம் பாடினார். அதனால் மணமகிழ்ந்த கண்ணுதற் பெருமான் “நாவுக்கரசு” என்று “நின் நன் நாமம் நயப்புற மண்ணுக” என்று பட்டம் கொடுத்தார். அன்று முதல் திருநாவுக்கரசர் சைவத்தையே உயிர் மூச்சாக கொண்டு உழவாரம் செய்து வந்தார். இந்த இறைவனை வழிபடுபவருக்கு ஆணவம் கண்மம் மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.
யார் இந்த அப்பர் பெருமான் / மருள்நீக்கியார்..? இதற்கு முந்தைய ஜென்மாவில் கைலாய பர்வதத்தில் வாகீச முனிவர் என்ற திருநாமத்தோடு கைலாய மலையின் கீழ் பஞ்சாட்சர மந்திர ஜெபம், தவம்
ராவணன் ஒருமுறை தனது புஷ்பக விமானத்தில் கைலாயம் வழியாக செல்லும் பொழுது, தாமதமாகும் என்று இடப்பக்கமாக செல்ல – நந்தி தடுத்து வலப்பக்கமாக செல்லுமாறு பணிக்க – ராவணன் கோபமாக- எனக்கா ஆணையிடுகிறாய், அதுவும் குரங்கு போல் முகம் வைத்துக் கொண்டு – அதற்குத்தான் நந்தி
எப்ப குரங்கு உன் க்ஷேத்ரத்துல உள்ள நுழைகிறதோ அப்ப இருந்தே உனக்கு நிர்மூலம்… ஆரம்பம்.. சுந்தரகாண்டம் ஹனுமான்..
நான் யார் பார் என்று ராவணன் கயிலாயத்தை தூக்க முயற்சி- இறைவன் கட்டை விரலால் அழுத்த- வலி தாங்காமல் கத்த- அருகில் ஜபம் செய்து கொண்டிருந்த வாகீசர் கண்ணை திறக்காமலேயே யாரென்று வினவ- பிரம்மா வம்சம், பேரன் என சொல்ல- ஏன் கத்துகிறாய் வேதம் தான் தெரியுமே- ஸ்வாமியை ஆராதனை பண்ணு, சாம வேதத்தில் என்றார்..
தன் உடம்பை எடுத்தான்- யாழாக மாற்றினான்- சாமகானம் இசைத்தான்- ஸ்வாமி சந்தோஷமாய் அனுக்கிரகம்- மந்தஹாசம் எனும் வில் கொடுத்து..
இந்த பக்கம் திரும்பி – உம்மை யார் உபதேசம் செய்ய சொன்னது – பூமியின் போய் பிறக்கக் கடவது – அவர்தான் இந்த ஜென்மால அப்பர்.. அப்பர் என்றாலே உசத்தி UPPER, அவரை இந்த திவ்ய க்ஷேத்ரத்தில் தான் தடுத்தாட்கொண்டார்..
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இறைவன் தேரில் வந்ததால் திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில்.
இத்திருக்கோயிலின் கர்ப்பகிரஹ விமானத்தை பார்த்து தான் ராஜ ராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினான்.
திருவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டது.
எந்த ஆயுதமும் இன்றி ஓர் அழகான சிரிப்பினாலேயே ஒரே நொடியில் நடைபெற்ற சிவபெருமானின் திரிபுர சம்ஹாரம் நடைபெற்ற ஸ்தலம்.
முப்புரம் எரிசெய்த பெம்மான் மூவருக்கு அருள் செய்தார்.
ஐந்தெழுத்தால் இறைவன் மும்மலங்களையும் சிதைத்தது இத்தலத்திலே.
தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும்.
முதன்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறு இதுவே ஆகும்.
இன்றைக்கு கோவில்களில் தேர் இருக்க வேண்டிய ஐதீகம் உருவானதே இத்தலத்தில் தான்
அட்டவீரட்டான தலங்களில் சிறப்புடையது. அட்ட வீரட்டான தலங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இதுவே. அட்ட வீரட்டான தலங்களில் நால்வர் தமிழும் பெற்ற சிறப்பு தலம் இது.
சிதறு தேங்காய் (சூறை தேங்காய்) என்ற பழக்கம் உருவானதும் இத்தலத்தில் தான்
மூலவருக்கு பின்புறம் சுதையால் ஆன ஸ்வாமி அம்பாள் திருமண கோலம் உள்ளது. திருநாவுக்கரசருக்கு திருமண கோலத்தில் காட்சி தந்த ஸ்தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன.
கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது. கருவறை விமான அமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பைக் கொண்டது.
சித்திரையில் 10 நாட்கள் அப்பர் பெருமானுக்கு திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. உழவாரம் முதன் முதலில் திருநாவுக்கரசரால் இங்குதான் செய்யப்பட்டது.
12 திருமுறைகளிலும் திரிபுர சம்ஹார நிகழ்ச்சி பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது.
இந்த இறைவனை வழிபடுபவருக்கு ஆணவம் கன்மம் மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும்.
அம்பாள் சன்னதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனி சிறப்பு. இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக அமைந்துவிடும்.
ஆணவமாய் வந்தவர்கள் இங்கு திரும்பவும் வரமாட்டார்கள். அந்த அளவு சக்தி வாய்ந்த தலம்.
இத்தலத்தில் குனிந்து தான் விபூதி பூச வேண்டும்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தாருகாட்சன் கமலாட்சன் வித்யுன்மாலி எனும் 3 அரக்கர்கள், கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று, தங்களை யாராலும் வெல்லவோ கொல்லவோ முடியாது எனவரம்
பெற்றனர். அவர்கள் தங்கம் வெள்ளி தாமிர (நகரம் கோட்டை) வட்டப்பாதையில் பறந்து கொண்டே இருப்பர்.
பூமி அதிரும், அனைவருக்கும் பாதிப்பு. நாரதர் to பிரம்மா to மஹாவிஷ்ணு – அனைவரும் to பரமேஸ்வரன். கவலைப்படாதீங்கோ என்று அனைவரையும் அழைத்துக் கொண்டு போய்
பூமியை தேராகவும், சூரிய சந்திரர் தேர் சக்கரங்களாகவும், 4 வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும், ஸ்வாமி மேரு மலையை வில்லாகவும், வாசுகி எனும் பாம்பை நாணாகவும், திருமாலை அம்பாகவும், அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார்.
தேவர்களை எல்லாம் தேரில் மற்ற பாகங்களாக + தேருடன் (அதற்கு வைதிக தேர் என பெயர் ) வரச் செய்தார். ரதம் அச்சு முறிந்து நின்று போச்சாம், கணபதியை பிரார்த்தனை பண்ணாததால்.
அச்சு முறிந்த ஷேத்திரம் அச்சிறுப்பாக்கம், அங்கும் போவோம். கணபதி பூஜை செய்து அருளை பெற்று தொடர்ந்தனர்.
தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடிய போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார் அவ்வளவுதான்.
உலகமே நடுக்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பல் ஆயினர். தங்கள் உதவி இல்லாமலேயே சிவன் சம்ஹாரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலை குனிந்தனர். ஒரே சமயத்தில் தேவர்கள் அசுரர்கள் ஆணவத்தை அடக்கினார் ஈசன்.
உண்மையில் மூவரும் ஸ்வாமியின் திருமுகத்தை பார்த்துவிட்டு சரணாகதி பண்ண வந்தார்களாம். பின்பு 3 அசுரர்களையும் மன்னித்து இருவரை துவார பாலகர்களாய் ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கிக்கொண்டார்.
வந்ததோ திரிபுர சம்ஹாரம் செய்ய, நடந்ததோ அனுகிரஹம் – துவார பாலக ஸ்தானம். பரமேஸ்வரனின் சரணத்தில் விழுந்துட்டோம்னா அனுகிரஹம் பண்ணிடுவார். அப்பேர்ப்பட்ட திவ்ய க்ஷேத்ரம்.
கோவில் அவ்வளவு அழகு. ஒவ்வொரு மூர்த்தியும் சிறப்பு. அர்ஜுனன் தபஸ் பண்ணின ஷேத்திரம். பஞ்சபாண்டவா தனித்தனியா வந்து வேண்டிய ஷேத்திரம். ராமபிரான் தோஷ நிவர்த்திக்காக “க்ஷனிக லிங்கம்” பிடித்து வைத்த ஷேத்திரம். இங்குள்ள மணல்கள் எல்லாம் ரத்த வண்ணத்திலே இருக்கும்.
திரிபுர சம்ஹாரம் செய்தது. பின்னர் உயிர் கொடுத்தார்.
சுவாமியின் லீலார்த்தம்.
“துஷ்டானுகிரஹ சிஷ்ட பரிபாலனம்”
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வழிபடுவோருக்கு நிம்மதி.
உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. வயிற்று வலி, அல்சர், சத்ரு உபாதைகள் – சூலை தீர்த்தம் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும்.
எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சபை தோஷ நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.
குடும்பப் பிரச்சனை மற்றும் வழக்குகள் தீர
திருமணத்தடை நீங்க
குழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிஷேகம் செய்து இந்த பாலை உட்கொண்டால் உடனே குழந்தைபேறு உண்டாகும்.
மேலும் வேலைவாய்ப்பு குடும்ப ஐஸ்வர்யம்
பிரார்த்தனை.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி & சித்திரை 10 நாள் திருவிழா வசந்தோற்சவம்- ஸ்தலநாயகர் வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வதால் சித்திரை சதயம் 10 நாட்கள். அப்பர் மோக்ஷம், திருக்கைலாய காட்சி, வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாட்கள், பஞ்சமூர்த்தி வீதி உலா வெள்ளி வாஹன புறப்பாடு, ஸ்தலநாயகர் திருத்தேரில் வீதி உலா ஆடிப்பூர உற்சவம் 10 நாட்கள், மாணிக்கவாசகர் உற்சவம் மார்கழி 10 நாட்கள், திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி ஆருத்ரா தரிசனம் மஹாசிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், பங்குனி உத்திரம்,
திலகவதியார் குருபூஜை, ஸ்வாமி திருக்கல்யாண உற்சவம், பிரதோஷ பூஜைகள்..
வழிபட்டவர்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்திரன், பிரம்மா மஹாவிஷ்ணு, சப்தரிஷிகள், ராமர், பஞ்சபாண்டவர்கள், வாயு வருணன் எமன் தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி, ராஜராஜ சோழன், அப்பர், திலகவதியார், சுந்தரர் சம்பந்தர் மாணிக்கவாசகர் …
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பண்ருட்டி கடலூர் பாதையில் பண்ருட்டியில் இருந்து 1.5 KM
நேரம் 6AM-12NOON, 4.30PM-8PM,
குருக்கள் கைபேசி எண் 94439 88779 ஞானசேகர் குருக்கள்
94427 80111 சீனிவாச சிவாச்சாரியார்
94863 90376 கல்யாண் குமார் குருக்கள்
94448 07396 பசுபதி குருக்கள்
கோவில் தேவாரம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே. 1
அப்பர்
குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக்
கெண்டைப் பிறழ்தெண்ணீர்க் கெடில வடபக்கம்
வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை
விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே. 1
ஞான சம்பந்தர்


Leave a Reply