திருமுண்டீச்சரம் சிவலோகநாதர்

🌺 மூலவர் : சிவலோகநாதர் முண்டீச்சுரர் 

அம்பாள் : சௌந்தர்யநாயகி,

கானார்குழலி செல்வாம்பிகை 

புராண பெயர் : முண்டீச்சரம், திருகண்டீச்சரம்

ஊர்: கிராமம்,

பாடல் : அப்பர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் 51,

நடு நாட்டு ஸ்தலம் 19

🌺 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மன், இந்திரன் வழிபாடு செய்த தலம்,

தக்ஷிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் அமையாமல் ரிஷப வாஹனத்தில் அருள் பாலிக்கிறார்.

திண்டி முண்டி இருவருக்கும் இங்கு சிலை உள்ளது. பழமையான கல்வெட்டுகளில் திருமுடீஸ்வரம் என உள்ளது.

🌺 ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வீரபாண்டியன் என்ற மன்னனுக்காக சிவன், திருநீற்றுப்பை (பொக்களம்) அளித்துள்ளார். இதனால் சிவபெருமானுக்கு

“பொக்களம் கொடுத்த நாயனார்” என்ற பெயரும் ஆற்றின் கரையில் இருப்பதால் ” ஆற்றுத் துளி மகாதேவர்”.. 

🌺ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சிவனின் வாயில் காவலர்களான திண்டி முண்டி இத்தலத்தில் வழிபாடு செய்துள்ளனர். முண்டி வழிபட்டதால் முண்டீச்சரம். புராணப் பெயர் : முடீச்சரம்.

🌹துவாபர யுகத்தில்- சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டைக்கு செல்லும் பொழுது இங்கு குளத்தில் அதிசய தாமரையை காண, சேவகர்களை பறிக்க சென்ற பொழுது, மலர் குளத்தை சுற்றிவர, அவர்களால் பறிக்கவே முடியவில்லை.

🌹 மன்னனே நேரில் சென்று அம்பு விட, குளம் முழுவதும் செந்நிறம் ஆக, மன்னன் மயங்கி விழுந்தார்- மலரின் நடுவில் லிங்கம் இருப்பதைக் கண்டு, குளத்தின் கரையிலேயே கோவில் கட்டி, லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார்.

🌹லிங்கத்தில் மன்னன் விட்ட அம்பின் அடையாளம் இன்றும் உள்ளது.

இதனால் இறைவன் 👉 முடீஸ்வரர்.

இப்பெயரே கல்வெட்டில் உள்ளது 👉 “மௌலி கிராமம்”

மௌலி= முடி = கிரீடம். காலப்போக்கில் மக்கள் மௌலியை விட்டு, கிராமம் என அழைக்க தொடங்கி விட்டனர்..

🌺 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இங்குள்ள விநாயகர் – வரசித்தி விநாயகர்.

கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். நுழைவு வாயிலில் விநாயகர் முருகன் இடம் மாறி உள்ளனர்.

🌹முருகனின் இடது கை நவரச முத்திரையுடன் – அகமர்ஷண நீரை கீழே விழும் அமைப்பில் இருப்பது கவனிக்கத்தக்கது.

🌹கோவிலின் அமைப்பு சோமாஸ்கந்த அமைப்பு. சிவன் பார்வதி சந்நிதிக்கு நடுவில் முருகன் சந்நிதி. 

🌺பிரார்த்தனை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இழந்த செல்வம் மீளவும், தோஷ நிவர்த்திக்கும் மன அமைதிக்கும் பிரார்த்தனை. 

நடனத்திலும் இசையிலும் ஆர்வம் உள்ளவர்கள் இத்தல அம்மனை வழிபாடு செய்கிறார்கள்.

🌺 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்திரை வருட பிறப்பு,

சித்ரா பௌர்ணமி,

ஆனி திருமஞ்சனம் சிறப்பு

ஐப்பசி அண்ணாபிஷேகம், திருகார்த்திகை, கார்த்திகை சோமவாரம், திருவாதிரை, மஹாசிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோஷம், etc..

🌺 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மன் இந்திரன் திண்டி, முண்டி வீரபாண்டிய மன்னன் சொக்கலிங்க மன்னன் அப்பர் ஆகியோர்

🌺அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருவெண்ணைநல்லூர் 5 KM

T. எடையார் 10 KM

விழுப்புரம் அல்லது திருக்கோவிலூர் 👉 அரசூர் வழியாக திருவெண்ணைநல்லூர் செல்லும் பேருந்து 👉 கிராமம் நிறுத்தத்தில் இறங்கினால் அருகே கோவில்.

7AM – 11AM & 5PM – 7PM

89402  32393 கண்ணன் குருக்கள் 

கிராமத்து கோவில், குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌺 கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா

 அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்

போர்த்தான்காண் புரிசடைமேற் புனலேற் றான்காண்

 புறங்காட்டி லாடல் புரிந்தான் றான்காண்

காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்

 கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே

சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய

 சிவலோகன் காணவனென் சிந்தை யா4னே. 1 அப்பர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *