திருமாற்பேறு திருமால்பூர் மணிகண்டீஸ்வரர்

🌻மூலவர் : மணிகண்டீஸ்வரர்  

அம்பாள் : அஞ்சனாட்சி

ஸ்தல விருக்ஷம் : வில்வம்

தீர்த்தம் : சக்கரதீ

பாடல் : ஞான சம்பந்தர்

புராண பெயர் : ஹரிசக்கரபுரம் திருமாற்பேறு 

ஊர் : திருமால்பூர், சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம் & தொண்டை நாட்டு ஸ்தலம் 11

🌻 ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பார்வதி தேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க லிங்கத்தின் மீது குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம் ) சாத்தியே அபிஷேகம்.

🌹சிவபெருமானை மூலஸ்தானம் அருகே திருமால் கைகூப்பி வணங்கிய நிலையில் செந்தாமரை கண்ண பெருமாள் என்ற நாமத்துடன் உள்ள ஸ்தலம்.

🌹மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார்.

🌹சிவன் கோவில் என்றாலும், பெருமாள் அருள் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்சவ காலத்தில் கருட சேவையும் நடக்கிறது.

🌻ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பராந்தக சோழன் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ்வரர் மேற்கு நோக்கி அருள் பாலிக்கிறார். 8 கரத்துட ன் துர்கை நளினமாக காட்சி தருகிறாள்.

🌹சிவன் கோவில் என்றாலும் பெருமாள் அருள் பெற்ற ஸ்தலம் ஆதலால், பிரம்மோற்சவ காலத்தில் கருட சேவை நடக்கிறது.

10 கரங்களுடன் வல்லப விநாயகர் அனுகிரஹம்.

🌻ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹குபன் என்ற அரசனுக்காக திருமால் ததீசி முனிவர் மீது தனது சக்கரத்தை வீசினார். ஆனால் அது முனிவரின் தெய்வீக உடம்பில் பட்டு முனை மழுங்கி விட்டது. கவலை அடைந்தார் திருமால்.

🌹என்ன செய்வதென்று தேவர்களுடன் கலந்தாலோசித்து சலந்தாசுரணை அழிப்பதற்காக உண்டாக்கிய சுதர்ஷன சக்கரம் சிவனிடம் உள்ளதை அறிந்தார்.

🌹 உடனே இத்தலம் வந்து அம்பிகை பூஜித்த லிங்கத்தை தினமும் 1000 தாமரை மலர்களால் பூஜை செய்தார். ஒரு நாள் சிவன் இவரின் பக்தியை சோதிக்க ஒரு மலரை மறையச் செய்து விட்டார்.  ஒரு மலர் குறைய, பெருமாள் தன் கண்ணை பறித்து, இறைவனின் திருவடியில் அர்ப்பணித்தார். இந்த பூஜையினால் மகிழ்ந்த சிவன், தாமரை மலருக்காக நீ கண்களை பறித்ததனால், தாமரைப் போலவே உனக்கு கண் கொடுக்கிறேன் – உன்னை பத்மாக்ஷன் என அழைப்பார்கள். இத்தலமும் திருமாற்பேறு என அழைக்கப்படும் என்று வரம் அளித்து  திருமால் வேண்டிய சக்கரத்தை கொடுத்தருளினார்.

🌹மேலும் அவர் திருமாலிடம், நீ கூறிவழிபட்ட 1000 நாமங்களால் என்னை துதிப்பவர்களுக்கு முக்தியை கொடுப்பேன். அதை சொல்ல இயலாதவர்கள் என்னை தீண்டச் சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவள மலையார், வாட்டம் தவிர்த்தார், சாகிசனார் ஆகிய திருநாமங்களை சொல்லி பூசித்தால் வேண்டிய வரம் தருவேன் என அருளினார்.

🌹இத்தலத்தில் ஒரு கன நேரம் தங்கியவர்களுக்கும் முக்தி அளிக்க வேண்டும் எனவும், இங்கு வழிபட்டால், எல்லா கோவில்களிலுள்ள லிங்கங்களையும் வழிபட்ட பலன் கிடைக்க வேண்டுமெனவும் வரம் கேட்டார். சிவன் மகிழ்ந்து திருமால் கேட்ட வரம் தந்ததாக வரலாறு.

🌻ஸ்தல புராணம் 2👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹திருப்பாற்கடலை கடைந்த பொழுது தோன்றிய விஷத்தால் துயருற்று, தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அவ்விஷத்தை இறைவனுக்கு கொடுத்து உண்ணுமாறு செய்த பாவம் நீங்குமாறு, திருமால் பிரம்மன் தேவர்கள் முதலானோர் காஞ்சிக்கு வந்து தங்களை காத்த இறைவனின் மணிக்கண்டத்திற்கு ( கண்டம் கழுத்து ) போற்றி செய்யும் வகையில், மணிகண்டன் என்ற பெயரிலேயே சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தங்களின் பாவத்தை போக்கிகொண்டனர். எனவே இத்தலம் மணிகண்டீசம் என்றும் சுவாமி மணிகண்டீஸ்வரர் என்றும் திருநாமம் பெற்றது.

🌻பழைய நூல் ஒன்று இக்கோவிலில், “விஷக்கண்டீஸ்வரர்” சந்நிதி இருந்ததாக கூறுகிறது. இக்கோயில் காஞ்சி புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

அஞ்சனாட்சி 👉கண்ணின் கருவிழி போல மக்களை காப்பாற்றும் தேவியாக அருள் பாலிக்கிறாள்.

🌻ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சுமார் 1.2 ஏக்கர் அளவில் சுற்று மதில் சுவர்களுடன், கிழக்கு நோக்கிய ராஜ கோபுரமும், 2 பிரகாரங்களுடன் கோவில் அமைந்துள்ளது. கோயிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம்.

🌹 கிழக்கு நோக்கி சுவாமி சன்னதியும், தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும், உள் பிரகாரத்தில் விநாயகர், சிதம்பரேஸ்வரர் சோமாஸ்கந்தர் சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் நடராஜர் கஜலக்ஷ்மி முதலிய சந்நிதிகள்.

🌹 பெருமாள் வணங்கி சக்கரம் பெற்ற தலமாகளால் இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குகளில் வெற்றி பெறலாம்.

🌻 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கோவிலில் தரிசனம் செய்தாலே 1000 சிவாலயங்கள் தரிசித்த பலன் என்பது ஐதீகம்.

கண் பார்வை மற்றும் உடல் குறைபாடுகள் நீங்க

எதிரி பயம் நீங்க

வழக்குகளில் வெற்றி பெற 

பிரார்த்தனை

🌻திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாசி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம், மகம் நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி, இந்த திருவிழாவில் தான் பெருமாளுக்கு உரிய கருட சேவையும் நடக்கிறது. ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, ஆனி திருமஞ்சனம், திருகார்த்திகை, மார்கழி திருவாதிரையும் விசேஷம்..

🌻 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹாவிஷ்ணு, சந்திரன், சம்பந்தர், அப்பர், பட்டினத்துப் பிள்ளையார்,சேக்கிழார், முதலியோர்.

🌻அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அரக்கோணம் காஞ்சி இரண்டுக்கும் நடுவே உள்ளது 20 KM, இருப்புப் பாதையில் (15KM பாலூர் ) மேற்கே 5KM சென்றால்  ஊர்.

7AM – 12 NOON, 5PM – 8PM

9444386412 சண்முகம் குருக்கள் 

93454 49339 

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு..

🌻 கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஊறி யார்தரு நஞனை யுண்டுமை

நீறு சேர்திரு மேனியர்

சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின்

மாறி லாமணி கண்டரே. 1

ஞான சம்பந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *