திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் உதவிநாயகர்
மூலவர் : வாமனபுரீஸ்வரர் மாணிக்கவரதர்
அம்பாள் : அம்புஜாட்சி மாணிக்கவல்லி,
ஸ்தல விருக்ஷம் : கொன்றை
தீர்த்தம் : ஸ்வேத & கெடில நதி, பாடல் :சம்பந்தர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் 49, நடுநாட்டு ஸ்தலம்17
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இக்கோயில் சூரிய பகவானால் உண்டாக்கப்பட்டு, அவரே பூஜை செய்ததாக வரலாறு. யுகத்திற்கெல்லாம் முந்தைய கோயில். கிருத யுகத்திலே சூரிய பகவான், திரேதா யுகத்திலே திரிசங்கு மகாராஜா, துவாபர யுகத்திலே அகஸ்தியர், கலியுகத்திலே பல புண்ணிய புருஷர்கள், சோழ சேர பாண்டியர் etc.
கோனேரிராஜபுரம்
சிவபெருமானும் பார்வதியும் நேர் எதிரே மாலை மாற்றிய ஸ்தலம்.
திருவீழி மிழலை
கரம் பற்றி திருமாங்கல்ய தாரணம்
திருமணஞ்சேரி
திருமணம் பாணிகிரஹம் முடிந்து காட்சி தரும் ஸ்தலம்.
திருவேதிக்குடி
யஞ்யம் நடந்த ஷேத்திரம்.
இப்படி பற்பல க்ஷேத்ரம் முடித்து, பள்ளியறைக்கு பகவான் உமையம்பிகையோடு எழுந்தருளிய ஷேத்திரம்.
கர்ப்பகிரஹமே பள்ளியறையாக அமைந்திருக்கிறது.
கர்ப்ப கிரஹத்திலேயே மூல லிங்க பெருமான் சூட்சுமமாக உமயம்பிகையோடு பள்ளியறையிலேயே எழுந்தருளி இருக்கக்கூடிய ஒரு கோலம். ஆகவே தேவாதி தேவர்களுக்கு கூட கர்பகிரஹ தரிசனம் கிடையாது. கருவறையின் தரிசனம் யாருக்குமே கிடையாது. அதற்கு முன்பாக இருக்கக்கூடிய திரைச் சீலையை தான் வணங்க வேண்டும்.
அதில் காவலுக்கு ஏகாதச ருத்ரர்களிலே பீமசங்கரராக பற்பல கரங்களோடு, நமக்கு அனுக்கிரகம் செய்யக்கூடிய மூர்த்தியாக, பூஜை வழிபாடு அர்ச்சனை தீபாராதனை ஆகிய அனைத்தும் அந்த திரைக்கே.
அதற்கு பிற்பாடு 2 நொடி மட்டுமே மூல விக்ரஹ தரிசனம் நமக்கு கிடைக்கப்பெறும். தனிப்பட்ட பள்ளியறை கிடையாது. பள்ளியறை பூஜை.
எப்பொழுதும் உமையம்பிகையோடு சேர்த்தியாக காட்சி தரக்கூடிய உன்னதமான ஒரு ஷேத்திரம்.
ஸ்தலபெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிறப்பம்சம் : தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அவர்களது அஃஞ்ஞானத்தை நீக்கவும், சதா சர்வ காலம் இணைந்து இருப்பதால் இங்கு இறைவனை நேரடியாக தரிசிக்க இயலாது.
ஞானசம்பந்தர் இத்தல இறைவனைப் பாடும்போது “உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவி நாயகன்” என பாடுகிறார். எனவே இறைவருக்கு உதவிநாயகன் உதவிநாயகி என பெயர்கள்.
மஹாலக்ஷ்மி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதி தேவி ஸ்வேத நதியின் வடிவில், கெடிலத்தில் சங்கமம் ஆகும் ஸ்தல தீர்த்தமாகவும் விளங்குகின்றனர்.
விநாயகர் மூஷிக வாஹனம் எதிரில் இல்லாமல், அருகில் அமைந்துள்ளது விசேஷம்.
துர்கையின் பாதத்திற்கு கீழ் எருமை தலை கிடையாது. உள்ளங்கை திரும்பி உள்ளதுடன் கதாயுதம் தாங்கி..
சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் 4 வேதங்களும் 4 தூண்களாக அமைந்துள்ளன.
திரைக்குப்பின் அம்மனும் சுவாமியும் இருப்பதால் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டி நந்தி நேர்த்திசையில் உள்ளது. வழக்கமான தலை சாய்ந்த நிலை இல்லை.
மதுரை காஞ்சி காசி திருவாரூர் நாகப்பட்டினம் போன்று இங்கும் அம்மனின், அம்புஜாக்ஷியின் ஆட்சி நடக்கிறது.
அம்மனின் 2 கைகளிலும் பூ. ஒன்றில் தாமரை மற்றது நீலோத்பலம். பூ வைத்துள்ள அம்மனை தரிசிப்பதால் துன்பம் பூப்போல ஆகிவிடும் என்பது ஐதீகம்.
இங்கு அருணகிரிநாதர் முருகனை திருப்புகழில் பாடல்
கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரத்தில் கோவிலுக்கு எதிரில் உள்ள மலை மீது மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது.
பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.
விநாயகர் முதல் சண்டிகேஸ்வரர் வரை அனைவருக்கும் ஆதித்ய விமானம் உள்ளது.
வடநாட்டு வணிகன் அத்ரி – திருடர் கொள்ளை – இறைவன் காத்து உதவி – ஆதலால் இறைவன் உதவி நாயகன், அம்பாள் உதவி நாயகி, இத்தலம் உதவி. கல்வெட்டிலும் இத்தலம் as உதவி.
இத்தலத்திற்கு வாமனபுரி, இந்திரலோகம், பீம சங்கர க்ஷேத்ரம் என வேறு பெயர்கள்..
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தேவர்களெல்லாம் வந்து காத்துண்டு இருக்கா. அவாளுக்கெல்லாம் தரிசனம் இல்லை. திருவண்ணாமலைக்கு வாங்கோனுட்டார். இந்திரன் பிரார்த்தனை பண்ணினானாம். இந்திரனுக்கு ஒரு க்ஷன காலம் காட்சி கொடுத்தாராம்.
அகஸ்தியர் இந்த மலையில் தபஸ் செய்கிறார். அதற்குப் பின்பு தான் அவருக்கு ஒரு நொடி தரிசனம் கொடுத்தாராம். அகஸ்தியர் பிரார்த்தனை
கலியுகத்தில் மனுஷா எல்லாம் இப்படி எல்லாம் பார்த்தா பூரணம் அடைய மாட்டா, அவாளுக்கு எல்லாம் அனுக்கிரகம் பண்ணனுமே. பகவான் மனமிரங்கி 2 நொடி தரிசனம் தரேன்னார். 2 நொடி மட்டும் தான் நமக்கு தரிசனம்..
“மிகுந்த புண்ணியம் செய்தவர்களுக்கே கிடைக்கக்கூடியது.”
அது என்ன மாணிக்குழி..
மாணி=பிரம்மச்சாரி, குழி= ரகசியம். நமக்குத் தெரியக் கூடியது மூலமூர்த்தி. மஹான்களுக்கு தெரிய கூடியது அவற்றின் மூல விதை. இவற்றின் ஆற்றல் என்ன என்பதை தெரிந்துகொள்ள முடியும்.
திருமால் வாமனாவதாரம் எடுத்த பொழுது பிரகலாதனின் பேரன் மஹாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பி – காசிப + அதிதி 12வது குழந்தையாக- வாமன பிரம்மச்சாரியா – மஹா விஷ்ணு அவதாரம் செய்தார்.
மஹாபலியின் தர்ம சிந்தனை குறித்த கர்வத்தை அடக்க 3 அடி மண் கேட்டார். 1 அடியில் பூமியையும், 2வது அடியில் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், 3வது அடி எங்கே என கேட்டார். அதற்கு மஹாபலி இந்த உலகை ஆளும் என்னையே அளந்து கொள்ளுங்கள்” என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார்.
பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளில் ஒருவன் ஆக்கினார். இப்படி மஹாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது.
இந்த பழியை போக்க திருமால் இங்கு வழிபட்டதால் இத்தலத்திற்கு திருமாணிக்குழி என பெயர் ஏற்பட்டது.
இப்போதும் 61/2 வயது பாலகனாக, வாமணனாக இந்த சிவ உமை ரூபத்தைக் கண்டு பூஜித்து கொண்டிருப்பதாக ஐதீகம். அந்த பூஜையின் தாத்பரியம் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக திரை போட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திரையை மூலவராக கொண்டாட படுகிறது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
3 பிரகாரங்களுடன் 5 நிலை கோபுரத்துடன் பிரம்மாண்டமான கோவில். உள் பிரகாரத்தில் செல்வ விநாயகர், உதவி விநாயகர், ஆறுமுகர், 63வர், சப்த மாதர்கள், பஞ்ச மூர்த்திகள், யுக லிங்கங்கள், விஷ்ணு லிங்கம் , நால்வர், கஜலக்ஷ்மி, நவகிரஹம், பைரவர், சூரியன், சந்திரன் சந்நிதிகள்..
திரிசங்கு மஹாராஜா, ஹரிச்சந்திரன் போன்ற சூரிய குல வம்சத்தினரால் சீரமைப்பு.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அறியாமல் செய்யும் பிழைகள் தோஷ நிவர்த்திக்கு &
பழி மற்றும் சாபங்கள் விலக &
மன அமைதி மற்றும் அருள் கிடைக்க, களத்திர தோஷம் மற்றும் திருமணத் தடை நீங்க
கடன் மற்றும் வறுமை நீங்க பிரார்த்தனை.
குழந்தைவரம் வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் ஈரத் துணியுடன் அம்மனை 11 முறை சுற்றிவர வேண்டும். பின் அம்மனுக்கு வெண்ணெய் நெய்வேத்யம் செய்து அதை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கார்த்திகை பிரம்மோற்சவம் சிறப்பு கொடியேற்றம் திருக்கல்யாணம் பரிவேட்டை பஞ்சமூர்த்தி வாஹனம் முக்கியம்.
மஹா சிவராத்திரி, நவராத்திரி, ஆருத்ரா தரிசனம் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு ( வாமனன் )
சூரிய பகவான், நாகதேவர்கள்,
திரிசங்கு, ஹரிச்சந்திரன், அப்பர் சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார் முதலியார்..
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கடலூர் குமணங்குளம்வழி 1 பஸ் NO 14 ( கோவில் வாசலிலேயே )
திருவகீந்திபுரம் பானூர் சுந்தரப்பாடி சாத்தான்குப்பம் வழி 2 பஸ் NO 3
கடலூர் பண்ருட்டி பாதை 3 பஸ் NO 15, 16
5 KM FROM திருவகீந்திபுரம்
7.30AM to 11.30AM, 5PM to 8PM
89407 30248 & 9787607727 மணிகண்ட குருக்கள்
89407 30140 நடராஜ குருக்கள்
(மணிகண்டன் தந்தை)
கோயில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு
பங்கர்புனல் தங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல்
வித்தகர் மகிழ்ந்துறைவிடங்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள
வள்ளைபடர் அள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை
சேருதவி மாணிகுழியே. 1
ஞான சம்பந்தர்.


Leave a Reply