திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர்
மூலவர் : பிராணநாதேஸ்வரர்/ பிராணவரதேஸ்வரர்
அம்பாள் : மங்களாம்பிகை
ஸ்தல விருக்ஷம் :கோங்கு, இலவு ( வெள்ளெருக்கு )
தீர்த்தம் : மங்கள தீ.
பாடல் : அப்பர், சம்பந்தர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 38
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பொதுவாக கோவில்களில் சிவலிங்கத்தில் பாணம் ஆவுடையாரை விட சற்று உயரம் குறைவானதாக இருக்கும். ஆனால் இக்கோவிலில் பாணம் பவுடரை விட உயர்ந்ததாக இருக்கிறது. நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் உள்ளது.
இரவில் திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் போன்ற கோவில்களில், காலையில் திருக்கல்யாணம் நடந்து, மதிய வேளையில் திருக்கல்யாண விருந்து வைக்கப்படும். ஆனால் இக்கோவிலில் இரவில் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பங்குனி பிரம்மோற்சவத்தின் 7ம் நாளன்று திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு மேல் மாப்பிள்ளை அழைப்பு, சுவாமி அம்பாள் மாலை மாற்றும் வைபவமும் ஊஞ்சல் காட்சியும் நடக்கிறது. இரவு 9 மணி அளவில் சுவாமி அம்பிகை திருக்கல்யாணம். அதன்பின் திருமண விருந்தும் நடக்கும்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பஞ்ச மங்கள க்ஷேத்ரம்
1) ஊர் : மங்கலக்குடி,
2) அம்பாள்,: மங்களாம்பிகை
3) விமானம் : மங்கள விமானம்
4) தீர்த்தம : மங்கள தீர்த்தம்
5) விநாயகர் : மங்கள விநாயகர்
கிரஹங்கள் வழிபட்ட சிவன்
ஒரு சமயம் காலமா முனிவருக்கு உண்டாகியிருந்த நோயை நவகிரஹங்கள் தடுத்ததால் அந்நோய் கிரஹங்களுக்கு பிடிக்கும் படி பிரம்மா சாபம் கொடுத்தார். எனவே அவர்கள் பூலோகத்தில் இத்தலம் வந்து சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருந்த சிவனை வேண்டி தவமிருந்து சாப விமோசனம் பெற்றனர். இவ்வாறு கிரகங்களின் தோஷம் போக்கிய சிவனாக இத்தலத்தில் சிவன் அருளுகிறார்.
நின்ற லிங்கம்
பொதுவாக பானம் ஆவுடையாரை விட சிறியதாக இருக்கும், இங்கு பெரியது. அகத்தியர் இத்தலத்திற்கு வந்தபோது, அவருக்கு சுவாமி உயர்ந்தவராக காட்சி தந்தாராம். இதன் அடிப்படையில் தான் பாணம் மட்டும் பெரிதாக இருப்பதாக சொல்கிறார்கள். குள்ள முனிவரான அகத்தியர், சுவாமியின் மானத்தின் மீது தன் கையை உயர்த்தித்தான் மலர் வைத்து பூஜித்தாராம்.
முதல் கோவில்
கிரஹங்கள் வழிபட்ட இத்தலத்தில், நவகிரஹத்திற்கு சன்னதி கிடையாது. இங்கிருந்து சற்று தூரத்தில் நவகிரஹ திசையான வடகிழக்கில் கிரகங்களுக்கென தனிக்கோயிலே (சூரியனார் கோவில்) அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ஒரு கோயிலே இவ்வாறு இரட்டைக் கோவிலாக தனித்தனியே அமைந்திருக்கிறது. இதில் பிராணநாதர் கோவிலே பிரதான கோவில் ஆகும். கிரஹதோஷம் உள்ளவர்கள் முதலில் பிராண நாதரை வழிபட்டு அதன் பின்பே சூரியனார் கோவிலில் வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
எருக்க இலையில் தயிர்சாதம்
நவகிரஹங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர்சாத நைவேத்தியம் படைத்து வழிபட்டதாக ஐதீகம். எனவே ஒவ்வொரு ஞாயிறு உச்சிகால பூஜையின் போது, உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள்.
மரகத லிங்கம்
நடராஜர் சன்னதியில் உள்ள மரகதலிங்கம், தினமும் உச்சி காலத்தில் மட்டும் இதற்கு பூஜை செய்கின்றனர். அப்பொழுது வாழைப்பழம் வெற்றிலை பாக்கு நைவேத்தியம் படைத்து, வலம்புரி சங்கில் பால் பன்னீர் தேன் சந்தனம் ஆகிய நான்கு திரவிய அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய் நீங்கும்.
தாலி தரும் தாய்
அம்பிகை மங்களாம்பிகை தெற்கு நோக்கி தனி சந்நிதியில் வரப்பிரசாதியாக அருள் பாலிக்கிறாள். அவ்வளவு பெயரிலேயே கோவிலும் உள்ளது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக் கயிறு அனுபவிக்கப்பட்டு இருக்கிறது. அம்பிகையே வழிபடும் பெண்களுக்கு, இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையவும், திருமணமான பெண்கள் நீண்ட காலம் தீர்க்க சுமங்கலிகளாக வாழ்வர் எனவும் நம்பிக்கை. இந்த அம்பிகை தன்னை வேண்டுபவர்களுக்கு தாலி தரும் தாயாக இருந்து அருள்கிறாள்.
சந்தன அலங்காரம்
நவராத்திரியின் பொழுது பொதுவாக உற்சவர் சிலைக்கு தான் அலங்காரம் செய்வார்கள். இங்கு மூலவருக்கு வஸ்திரம் ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தன காப்பு மட்டும். சந்தனத்திலேயே பட்டு துணிகளுக்கு பயன்படுத்த படும் வண்ணச் சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்களை அணிந்தது போன்று அலங்காரம் செய்கின்றனர். சந்தனத்திலேயே சர்வ அலங்காரம். காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வருடம் தை மாதம், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை முழுவதும் அம்பிகையே சந்தன காப்பு அலங்காரத்தில் தரிசனம் செய்யலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°′°°°′′′′°°°°°°°°°°°°°
11ம் நூற்றாண்டு, I குலோத்துங்க சோழனின் மந்திரியான அலைவாணர், மன்னரிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார். குறை உண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறி இருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது.
அவர்கள் ஊரின் எல்லைக்கு வருவதற்கு முன்னால் மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோவில் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத் தருமாறு வேண்டினார். அவளது பிரார்த்தனை பலிக்கும் என அசரீரி கேட்டது. அதன்படி மந்திரி உயிர்பெற்றார். மகிழ்ச்சியில் கோவிலுக்குள் சென்று, பிராண நாதேஸ்வரரை கட்டிப்பிடித்து, ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்கு உள்ள பிம்பமானது பிராணநாதேஸ்வரர் (ஜீவதாயகன்) என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். கணவர் உயிரை திருப்பித் தந்த அம்பாள் மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக்க வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக் கொள்ள, அதன் படியே சுவாமியும் அம்பாளும் அருளியதாக வரலாறு.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தலத்தில் உள்ள புருஷ மிருகம் என்ற பெயரில் உள்ள விக்கிரகத்தில் மனிதன் விலங்கு பறவை என்று மூன்று முகங்கள் உள்ளது.
கோவில் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரம், 3 பிரகாரங்களுடன் உள்ளது.
மூலவர் சன்னதி செல்லும் பொழுது முன் மண்டபத்தில் மஹாலக்ஷ்மி சரஸ்வதி இருவரும் துவார பாறைகள் போல இருபுறமும் பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தருவது விசேஷம். இதில் சரஸ்வதி கையில் வீணை இல்லாமல் காட்சி தருகிறார்.
பிரகாரத்தில் உள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள் சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத்திற்கு ஏற்ப இசை கருவி வாசித்தபடி இருக்கிறது.
பிராணநாதர் கோயில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம் சந்திர தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய சந்திரர்களே இங்கு சிவனை குளிர்விப்பதற்காக தீர்த்தமாக இருப்பதாக சொல்வதுண்டு. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிஷேகம் செய்கின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள்
இது தவிர சிவதுர்கை, சோமாஸ்கந்தர் சந்நிதி பின்புறம் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவிரி சிவன் கோஷ்டத்தில், துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி 18ம் பெருக்கின் போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
•நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம்
•தீர்க்க சுமங்கலி பாக்கியம் & திருமண வரன்
•நவக்கிரக தோஷ நிவர்த்தி
புகழ்பெற்ற சூரியனார் கோவிலுக்குச் சென்று நவக்கிரக தோஷ பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், முதலில் திருமங்கலக்குடி வந்து பிராணநாதேஸ்வரரை வழிபட்ட பிறகே சூரியனார் கோவில் செல்ல வேண்டும் என்பது ஆன்மிக விதியாகும்.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி உத்திரம் பிரம்மோற்சவம் ( 10 நாட்கள் )
திருக்கல்யாண உற்சவம்
மார்கழி திருவாதிரை
மஹா சிவராத்திரி
நவராத்திரி
மாசி அன்னாபிஷேகம்
ஆடிப் பெருக்கு சிறப்பு. மற்றும்
ஞாயிற்றுக்கிழமை தயிரன்னப் பிரசாத வழிபாடு & பிரதோஷம் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
காளி, சூரியன், திருமால், பிரமன், அகத்தியர் அம்பாள் பூமாதேவி, அப்பர், சம்பந்தர் ஆகியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணம் – கதிராமங்கலம் – மயிலாடுதுறை அல்லது கும்பகோணத்திலிருந்து ஆடுதுறை வழியாகச் செல்லும் பேருந்துகள் மூலம் திருமங்கலக்குடி அடையலாம்.
சூரியனார் கோவில் 1KM
கஞ்சனூர் 4KM
திருக்கோடிக்கா 6KM
7AM – 12NOON, 4PM – 8PM
90957 15181 ஸ்வாமிநாத சிவாச்சாரியார்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சீரி னார்மணி யும்மகில்
சந்துஞ்செ றிவரை
வாரி நீர்வரு பொன்னிவ
டமங்க லக்குடி
நீரின் மாமுனி வன்நெடுங்
கைகொடு நீர்தனைப்
பூரித் தாட்டியர்ச் சிக்கஇ
ருந்த புராணனே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply