திருப்புள்ளமங்கை ஆலந்துறைநாதர் பசுபதீஸ்வரர்

🏵️மூலவர் : பசுபதீஸ்வரர் /பசுபதிநாதர்/பிரம்மபுரீஸ்வரர்

அம்பாள் : அல்லியங்கோதை சௌந்தரநாயகி

ஸ்தல விருக்ஷம் : ஆலமரம்

தீர்த்தம் : காவிரி, குடமுருட்டி, காமதேனு, சிவ தீர்த்தங்கள், திருக்குளம்.

புராணபெயர் : திருப்புள்ளமங்கை

பாடல் : சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 16

🏵️ ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷திருச்சக்கரப்பள்ளியின் சப்தஸ்தான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

🌷நவகிரஹங்களுக்கு நடுவில் நந்தி உள்ளது.

🌷கோபுரத்தின் மேல் எப்போதும் கழுகுகள் உறைகின்றன.

🌷சோழர்களால் கட்டப்பட்ட சிவாலயம்.

🌷பிரம்மா பூஜித்து சாபவிமோசனம் பெற்றமையால் சுவாமி இங்கு பிரமபுரீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு விளங்குகின்றார்.

🌷தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது எழுந்த விஷத்தை அருந்திய இடம் இதுவே என்றும் அதனால் தலத்திற்கு ஆலந்துறை என்ற பெயர் வந்தது என்றும் தலபுராணம் குறிப்பிடுகிறது. தேவாரத்திலும் இப்பெயர் எடுத்தாளப்படுகிறது.

🌷சப்தமாதர்களில்சாமுண்டி

வழிபட்ட ஆலயம். அஷ்ட நாகங்களோடு வந்து சாமுண்டி தேவி சிவபூஜை செய்தபடியால் இங்கு வந்து வழிபடுவோர் நாக தோஷங்கள் நீங்கப்பெறுவதாக கூறப்படுகிறது.

🌷நாகாபரண தரிசனம்

தனக்கும் கிடைக்க வேண்டும் என்று ஜகதம்பிகையும் தவம் செய்யவே, இறைவனும் அவ்வாறே காட்சி அளித்ததாக வரலாறு.

🏵️ ஸ்தலபெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 துர்கை 👉 இங்குள்ள துர்கை மகிஷாசுரமர்த்தினி தனி சிறப்பு ( வடக்கு பிரகாரத்தில் ). கருங்கல் குடை நிழலில், எருமை தலை மீது நின்று, சங்கு சக்கரம் வாள் வில் கதை சூலம் கேடயம் அங்குசம் முதலிய ஆயுதங்கள் ஏந்தி, இருபுறமும் கலைமானும் சிங்கமும் இருக்க, இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவது போலவும், தொடையை கிழித்து ரத்த பலி தருவது போலவும் காட்சி தருகின்றனர். திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் பின்புறம் அம்பறாதூணி விளங்க, துர்காம்பிகை விளங்கும் கோலம்👉 இக்கோலம் கோயிலுக்கே தனித்திறப்பை தரும்.

🌷திருநாகேஸ்வரம் பட்டீஸ்வரம் திருப்புள்ள மங்கை ஆகிய இம்மூன்று ஊர்களிலும் உள்ள துர்க்கை ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும் இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.

🌷காவிரியால் பேரழிவும்

பராந்தகசோழன் திருப்பணியும் 👉 இப்பொழுது காவிரியிலும் உப நதிகளிளும் நிறைய அணைகள் 👉 இப்போது கூட வெள்ளம் வருகிறது.

அந்தக் காலத்தில் காவிரி வெள்ளம் புயலால் சீறி பாய்ந்து பேரழிவை ஏற்படுத்தியதுடன் சுவடு இழந்து போன கிராமங்கள் ஏராளம். திருப்புள்ளமங்கை சிவாலயத்தை கட்டிய முதல் பராந்தக சோழன் பசுபதீச்சுரத்தையும் திருப்பணி செய்துள்ளான்.

மாலிகாப்பூர் ஆற்காடு நவாபின் அழிச்சாட்டியம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷500 ஆண்டுகளுக்கு முன் முதலில் மாலிகாபூர் படையெடுத்து கோவில்களை கொள்ளை எடுத்தது மட்டுமல்லாமல் சிதைத்து சின்னா பின்னமாக்கி சென்றான். அப்பொழுது விஜயநகர வேந்தர்களால் திருப்பணி செய்யப்பட்டு, ஆலயம் புதுப்பித்ததுடன், 5நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு நிவந்தங்களும் வழங்கப்பட்டன. சான்றாக நாயக்கர் கலை பாணி சிற்பங்களும் ஒரு வரி தெலுங்கு கல்வெட்டும்..

🌷300 ஆண்டுகளுக்கு முன் மராட்டிய மன்னன் பிரதாப சிம்மன் தஞ்சாவூர் மன்னனாக ஆற்காடு நவாபிற்கு கப்பம் செலுத்தி வந்தார். கப்பம் செலுத்த தாமதமானதால் தஞ்சையின் மீது படை எடுத்து வந்தார். ஆற்காடு நவாபு அன்வருதீன் பெரும்படையுடன் வந்து பசுபதி கோவில் கிராமத்தில் முகாமிட்டு தங்கினார்.

🌷தஞ்சை மன்னனை கலவரப்படுத்த இப்பகுதியிலுள்ள கலைக்கருவூலங்களை பீரங்கி குண்டுகளுக்கு இரையாக்கினார். இச்செயலால் வெகுண்டு எழுந்த தஞ்சை தளபதி மனோஜியப்பாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அன்வருதீன் சிறைபிடிக்கப்பட்டது தனி கதை.

🌷இப்படி அடி மேல் அடி,

இடி மேல் இடி விழுந்து அழிந்து மீண்டும் மீண்டும் திருப்பணி. So சோழர் நாயக்கர் மராட்டியர் கலை பாணிகள் கலந்து இருப்பதே சான்று,

🌷 சப்தரிஷிகள் சப்த கன்னியர் மட்டுமல்லாது பாற்கடல் தந்த, கேட்ட வரம் அளிக்கும் காமதேனு பசு நாள்தோறும் சிவனை தன் மடி சுரந்த பாலினால் அபிஷேகம் செய்து வழிபட்ட தலம். இதை மெய்ப்பிக்கும் வகையில் பசு ஒன்று சிவலிங்க திருமேனியில் பால் சொரிந்து நிற்கும் காட்சி புடைப்பு சிற்பமாக உள்ளது. சிலந்தி வழிபாடு யானையின் வழிபாடு போன்ற புடைப்பு சிற்பங்கள் சிறிய அளவில் உள்ளன.

🏵️ ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பூலோகத்தில் இந்த புள்ளமங்கை ஸ்தலத்திற்கு வந்த அம்பிகை, இங்கிருந்த ஆலமரத்தின் கீழ் வீற்றிருந்த சிவபெருமானை (ஆலந்துறைநாதர்) மனமுருகி வழிபட்டார். பசு வடிவில் அம்மன் ஈசனை பூஜித்ததால், இந்த ஊருக்கு ‘பசுபதிகோயில்’ என்ற பெயர் ஏற்பட்டது.

🌷‘புள்’ என்றால் பறவை என்று பொருள். ராமாயண காலத்தில் ராவணனால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட சீதா தேவியைக் காப்பாற்றப் போராடி, சிறகுகள் வெட்டப்பட்டு வீழ்ந்த ஜடாயு என்னும் கழுகு வேந்தன், இத்தலத்து இறைவனை வழிபட்டு மோட்சம் அடைந்ததாக நம்பப்படுகிறது. பறவை வழிபட்டதால் இத்தலம் ‘புள்ளமங்கை’ என்று பெயர் பெற்றது.

🌷அம்பிகையின் வடிவங்களான சப்தகன்னியர்களில் (பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி) சாமுண்டி தேவி இத்தலத்தில் தவம் இருந்து ஈசனின் அருள் பெற்றார். தஞ்சாவூரைச் சுற்றியுள்ள சப்தமங்கைத் தலங்களில் (ஏழு மங்கைத் தலங்கள்) இத்தலமே முதன்மையானதாகக் கருதப்படுகிறது.

🏵️ ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷கோச்செங்சோழன் கட்டிய மாடக்கோயில். மாடக் கோவில்கள் காவிரிக்கரை கிராம மக்களை வெள்ள காலத்தில் பாதுகாக்க கட்டப்பட்டவை என அறிவியல் அடிப்படையிலும் அறியலாம்.

கிழக்கு நோக்கி மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.கோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும் நந்தியும் உள்ள முக மண்டபம் காணப்படுகிறது. அகழி அமைப்புடைய கர்ப்பக்கிருகம்; கீழே கருங்கல் கட்டமைப்பும் மேலே சுதை அமைப்பும் உடையது. 

சோழர் காலச் சிற்பக் கலைக்கு எடுத்து காட்டாக அமைந்துள்ளது மூலவரின் கருங்கல் விமானத்தை சுற்றிலும் அமைந்துள்ள சிற்பங்கள் நம்மைப் பரவசப்படுத்துபவை. சின்னஞ்சிறிய வடிவில் உள்ள ராமாயண சிற்பங்களும், நாட்டியச் சிற்பங்களும் சிற்பிகளின் கைத்திறனைப் பறைசாற்றுவதாக உள்ளது. சுமார் 65 சிற்றுருவச் சிலைகளைக் கொண்ட அடித்தளத்தில், கஜசம்ஹார மூர்த்தி, காலாரி, அந்தகாசுர சம்ஹார மூர்த்தி, தாண்டவ மூர்த்தி, வராகர் ஆகிய சிற்பங்கள் கலை நுணுக்கம் மிக்கவை.

அர்த்த மண்டபத்தின் மேல் உள்ள பூத கணங்களும் விமானத்திலுள்ள சுப்பிரமணியர், ரிஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர் ஆகிய மூர்த்திகளின் சிற்பங்களும் இணையற்றவை.

ஒவ்வொரு கோவிலிலும் ஒவ்வொரு அனுபவம், 🙏

🏵️ பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ராகு-கேது மற்றும் நாக தோஷ நிவர்த்தி

குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம்

மறுபிறவியற்ற முக்தி மற்றும் பாவ விமோசனம்

விஷ பயம் மற்றும் பிணிகள் நீங்குதல்

கல்வி மற்றும் ஞானம் பெற

🏵️ திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹாசிவராத்திரி பெருவிழா

சக்கரப்பள்ளி சப்தஸ்தானத் திருவிழா

நவராத்திரி திருவிழா (7-ஆம் நாள் சிறப்பு வழிபாடு)

மற்றும் சிவபெருமானுக்குரிய அனைத்து விழாக்களும்.

🏵️ வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பிரம்மன் அம்பாள் காமதேனு ஜடாயு, சப்த ரிஷிகள், அஷ்ட நாகங்கள், சப்தமாதர்கள், சம்பந்தர் ராமலிங்க அடிகளார் முதலானோர்

🏵️அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தஞ்சாவூர் கும்பகோணம் பிரதான சாலையில் 14KM, பசுபதி கோவில் ஸ்டாப். அங்கிருந்து பிரியும் உட்புறச் சாலையில் (சுமார் 3 கி.மீ தொலைவு) சென்றால் புள்ளமங்கை ஆலந்துறைநாதர் கோவில்.

9.30AM – 10.30AM, 6PM – 7PM

97513 51212 குமார் குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🏵️ கோவில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பாலுந்துறு திரளாயின

பரமன்பிர மன்தான்

போலுந்திற லவர்வாழ்தரு

பொழில்சூழ்புள மங்கைக்

காலன்திற லறச்சாடிய

கடவுள்ளிடங் கருதில்

ஆலந்துறை தொழுவார்தமை

யடையாவினை தானே.

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *