திருப்பாச்சிலாசிரமம் திருவாசி மாற்றுறைவரதீஸ்வரர்
மூலவர் : மாற்றுறைவரதர் பிரம்மபுரீஸ்வரர் சமீவனேஸ்வரர்
அம்பாள் : பாலாம்பிகை,
ஸ்தல விருக்ஷம் : வன்னி
தீர்த்தம் : அன்னமாம்பொய்கை / சிலம்பாறு
புராண பெயர் : திருப்பாச்சிலாசிரமம்
ஊர் : திருவாசி
பாடல் : சம்பந்தர் சுந்தரர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 62
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கருவறையில் சுவாமி ருத்ராக்ஷ பந்தலின் கீழ் அருள் பாலிக்கிறார்.
அதிகார நந்தி மனைவியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
சகஸ்ரலிங்க சன்னதி உள்ளது
கல் தூணில் சுழலும் உருளை அதிசயம்.
நவகிரகத்தில் சூரியன் மனைவியருடன், மற்ற கிரகங்கள் அவரைப் பார்த்தபடி உள்ளன.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூர்த்தி தலம் தீர்த்தம் 3ம் சிறப்பு
உமாதேவி அன்னப்பறவை வடிவுடன் இருந்து நீராடி வழிபட்டதால் அன்னமாம் பொய்கை. பொய்கை என்பது தானே தோன்றிய நீர் நிலை ஆகும். அம்பாள் சன்னதி எதிரிலே உள்ளது. இங்கு வன்னி மரத்தின் அடியில் தவமிருந்து சுவாமியை மணந்து கொண்டார்.
நீர்வளம் நிலவளம் செல்வ வளம் நிறைந்த சோழவள நாட்டின் காவிரி நதியின் வடகரையில் உள்ளது இந்த திருத்தலம். திருப்பாச்சிலாச்சிராமம் என்பது இதன் இயற்பெயர்
திரு = தெய்வத்தன்மை அழகு செல்வம்
பாச்சில் = ஊர் பெயர்
ஆச்சிராமம்= கோயில்பெயர்
ஒரு காலத்தில் பாச்சூரைச் சேர்ந்த கமலன் என்ற தொழிலதிபர், தீவிர சிவ பக்தராக இருந்தார், அவருக்குக் குழந்தை இல்லை. ஒரு நாள் அவர் கோவிலில் இருந்து வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டு, அக்குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்று, அதற்கு அமாலை என்று பெயரிட்டு, தன் சொந்த மகளாக வளர்த்தார். அக்குழந்தைக்குத் திருமணம் தயாரானபோது, அவர் தன் மைத்துனருக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். அமாலை சிவபெருமானின் தீவிர பக்தையாக இருந்ததால், அவள் சிவபெருமானையே திருமணம் செய்துகொள்ள விரும்பினாள். அவளுடைய பிரார்த்தனைகளால் மகிழ்ந்த சிவபெருமான், கமலனின் மைத்துனராக அவர்கள் வீட்டிற்கு வந்து அமலாயைத் திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்குப் பிறகு, புதுமணத் தம்பதியினர் தாங்கள் கோவிலுக்குச் செல்வதாக கமலனிடம் கூறிவிட்டு சென்றனர். அவர்கள் சென்ற பிறகு, கமலனுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில், அவருடைய உண்மையான மைத்துனர் வீட்டிற்கு வந்தார். அப்போதுதான் என்ன நடந்தது என்பதை அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் அமலாயைத் தேடி கோவிலுக்குச் சென்றனர். சிவபெருமான் தனது ரிஷப வாகனத்தில் அமர்ந்து அவர்களுக்கு முன் தோன்றி, பார்வதி தேவியான அமாலையுடன் தரிசனம் அளித்தார். பார்வதி தேவி தனது சிலம்பை எறிந்தார், அது தரையில் பட்ட இடத்திலிருந்து நீர் ஆறாகப் பாயத் தொடங்கியது. இந்த ஆறு சிலம்பு ஆறு என்று அழைக்கப்பட்டது, ஆனால் பின்னர் அதன் பெயர் பங்குனி ஆறு என்று மாற்றப்பட்டது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஞான சம்பந்தர், கொல்லிமலை மன்னன் கொல்லிமழவன் மகளுக்கு முயலகன் (வலிப்பு) நோயை தீர்த்து இன்றளவும் கொடிய நோய்கள் பலவற்றுக்கு தீர்வு தரும் தலம் திருவாசி.
மன்னன் எவ்வளவோ வைத்தியம் செய்து குணப்படுத்த முடியாமல், இறைவன் அருள் புரியும் கோயிலில் அவளைக் கிடத்தி அவளின் பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சிவனிடமே விட்டுவிட்டு சென்றார். ஞானசம்பந்தர் இத்தலம் வருவதை அறிந்த மன்னன் அவரை வேண்ட, சம்பந்தர் சிவனை வேண்டி, “துணிவளர் திங்கள் துலங்கி விளங்க” எனும் பதிகம் பாடி இறைவனை வணங்க, நோய் நீங்கி மகள் குணமடைந்தாள் என்பது வரலாறு.
சிவ பெருமான் அவளது நோயை ஒரு பாம்பாக மாற்றி அதன் மீது நின்று ஆடினார். So இங்குள்ள நடராஜர் காலுக்கு கீழே முயலகன் இல்லை, சர்ப்ப நடராஜர் காணலாம். இங்குள்ள ஆவுடையார் மண்டபத்தில் கொல்லிமலவன் மகளுக்கு சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.
சுவாமி சன்னதியில் சுந்தரருக்கு பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் உள்ளது. முதலில் அவரை சோதிக்க எண்ணிய சிவன் பொன் தராமல் அமைதியாக இருந்தார். பொறுமையுடன் இருந்த சுந்தரர் சற்று நேரத்தில் கோபம் கொண்டார். ” சிவன் இருக்கிறாரா இல்லையா என்ற அர்த்தத்தில் அவரை இகழ்ந்து ” வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் ” எனத் தொடங்கும் பதிகம் பாடினார். அதற்கு மேல் சுந்தரரை சோதிக்க எண்ணாத சிவன், அவருக்கு ஒரு பொன்முடிப்பை பரிசாக தந்தார்.
சுந்தரருக்கு சிவன் கொடுத்த பொன் தரமானதுதானா என சந்தேகம் வரவே, அதையே உற்றுப் பார்க்க, வந்த இரு வணிகர்கள், உரைத்துக் காட்டி உறுதி கூறினர். பின்னர் மறைந்தனர். வியந்த சுந்தரர், இவனை தான் இகழ்ந்து பாடவில்லை என்ற அர்த்தத்துடன், – திருநாவலூரில் தோன்றிய நம்பி ஆரூரன் இவரை பேசிய பேச்சுக்கள் உண்மையில் ஏசினவும் அல்ல இகழ்ந்தனவும் அல்ல என்று பாடி முடித்தார். அவருக்கு காட்சி தந்த சிவன் தங்கத்தை உரைத்துக் காட்டியது தான் தான் எனவும் உடன் வந்தது மஹாவிஷ்ணு எனவும் உணர்த்தினார். “மாற்றுரைவரதர்” என பெயர் பெற்றார்.
இவ்விடத்தைக் கல்வெட்டு “கிழி கொடுத்தருளிய திருவாசல்” என்ற பெயரால் குறிக்கின்றது. இங்குள்ள சுந்தரர் மூர்த்தம், இரு கைகளிலும் தாளம் ஏந்திப்பாடும் அமைப்பில் உள்ளது.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்கு நோக்கிய ஆலயம், 5 நிலை ராஜகோபுரம், 2 பிரகாரம் ஈசனே தனக்கு பிடித்த தலம் என்று சொன்னது திருவாசி.
சிவன், பார்வதி தேவி சன்னதிகளைத் தவிர, விநாயகர், முருகன், நடராஜர், நால்வர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், 63 நாயன்மார்கள், சப்தமதக்காள், நவக்கிரகம், சூரியன், சந்திரன், சஹஸ்ரலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன.
நுழைவாயிலின் இடதுபுறத்தில் பாலம்பிகை தேவிக்குத் தனிக் கோயில் உள்ளது. பாலம்பிகை தேவி சன்னதிக்கு எதிரே செல்வ விநாயகர் சன்னதியும் அன்னமாம் பொய்கையும் (புனிதக் கிணறு) அமைந்துள்ளன. பாலம்பிகை தேவியின் இடது கை நண்டு போல உள்ளது. இங்கு மட்டும் தான் இப்படி காண முடியும். தொடர்ந்து மூன்று ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இந்த தேவியின் அபிஷேகப் பாலை அருந்தினால், ‘பாலரிஷ்ட தோஷத்துடன்’ பிறக்கும் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது ( பாலரிஷ்ட தோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை , வழக்கமான மருத்துவ சிகிச்சைகளுக்குக் கட்டுப்படாத, அடிக்கடி ஏற்படும் விவரிக்க முடியாத நோய்களால் அவதிப்படும்). இது காசிக்கு இணையான க்ஷேத்ரம்.
முதற் கோபுரத்திற்கும் இரண்டாம் பிராகாரத்திற்கும் இடையிலுள்ள மண்டபம் ‘ஆவுடையாப்பிள்ளை மண்டபம் ‘ எனப்படுகிறது. இம்மண்டபத்தூணில் சம்பந்தர், கொல்லி மழவன், புதல்வியின் நோயைத் தீர்த்த சிற்பங்கள் அழகாக உள்ளன.
இக்கோயிலுக்கு முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியன், முதற் குலோத்துங்கன், கிருஷ்ணதேவராயர் ஆகியோர் திருப்பணிகள் செய்துள்ளது தெரியவருகிறது. கி. பி. 1253-ல் சமயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹொய்சளமன்னனான, வீரசோமேஸ்வரன் காலத்தில் இக்கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்து வந்ததாக கல்வெட்டு மூலம் அறிகிறோம்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தீராத நோய்கள் தீர : வலிப்பு நோய், நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம்,தீராத வயிற்றுவலி etc
பாலாரிஷ்ட தோஷம்
திருமணத் தடை நீங்க
குழந்தைப் பேறு மற்றும் குடும்ப நலம்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வைகாசி பிரம்மோற்சவம்
மஹா சிவராத்திரி
திருக்கார்த்திகை
ஆருத்ரா தரிசனம்
தைப்பூசம் மற்றும்
பிரதோஷம்
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரமன், லட்சுமி, உமாதேவி, ஐயடிகள் காடவர்கோன், சம்பந்தர் சுந்தரர் சேக்கிழார்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து முசிறி செல்லும் நகரப் பேருந்துகளில் ஏறி திருவாசி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். திருவாசி பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஊருக்குள் செல்லும் கிளைச் சாலையில் 500m தூரம் பயணித்தால் எளிதில் இச்சிவாலயத்தை அடையலாம்.
11KM-சத்திரம் பேருந்துநிலையம்
7AM – 12NOON, 5PM – 7.30PM
98656 64880 & 97913 44332
விஜயகுமார் குருக்கள்
94894 467423
ஹரிஹரன் குருக்கள்
குருக்களை அழைத்துவிட்டு சொல்வது சிறப்பு
கோவில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச்
சுடர்ச்சடை சுற்றிமு டித்துப்
பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ
வாரிட மும்பலி தேர்வர்
அணிவளர் கோலமெ லாஞ்செய்து பாச்சி
லாச்சிரா மத்துறை கின்ற
மணிவளர் கண்டரோ மங்கையை வாட
மயல்செய்வ தோஇவர் மாண்பே
ஞானசம்பந்தர்


Leave a Reply