திருப்பறியலூர் வீரட்டேஸ்வரர் தக்ஷபுரீஸ்வரர்

🍁 மூலவர் : வீரட்டேஸ்வரர்/ தக்ஷபுரீஸ்வரர்

உற்சவர் : யாக சம்ஹார மூர்த்தி

அம்பாள் : இளம் கொம்பனையாள் பாலாம்பிகை

ஸ்தல விருக்ஷம் : பலா, வில்வம்

தீர்த்தம் : உத்திரவேதிகா, ஹோமகுண்டம், சந்திரபுஷ்கரணி

ஊர் : கீழப்பரசலூர்,

பாடல் : சம்பந்தர்,

சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழநாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 41

🍁 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹அட்ட வீரட்ட தலங்களில் 4வது தலம். சிவபெருமானின் வீரதீர செயல்கள் வெளிப்பட்ட தலங்களாக ‘அட்ட வீரட்டங்கள்’ எனப்படும் எட்டு தலங்கள் உள்ளன. அவற்றில் 6 இடங்களில் சிவபெருமான் நேரடியாக தோன்றி எமன் அந்தகன் சலந்திரன் திரிபுராதிகள் கஜாசுரன் மன்மதன் ஆகியோரை அழித்தும் உயிர்ப்பித்தும் அருள் புரிந்தார். மற்ற இரு இடங்களில் வீரபத்திரர் பைரவர் ஆகியோரை அனுப்பி முறையே தக்ஷன் பிரம்மன் ஆகியோரை தண்டித்ததாகவும் அந்த ஸ்தல புராணங்கள் சொல்கின்றன.

🌷1பிரம்மாவின் தலை கொய்த 👉 திருக்கண்டியூர்

🌷2 அந்தகாசுர அரக்கனை

வீழ்த்தி👉திருக்கோவிலூர்

🌷3 திரிபுர சம்ஹாரம் செய்த👉 திருவதிகை

🌷4 தக்ஷ யாகம், தக்ஷ வதம் 👉 திருப்பறியலூர்

🌷5 சலந்திராசுரன் அரக்க வதம்👉 திருவிற்குடி

🌷6 கஜாசுரன் யானையை வீழ்த்திய 👉 திருவழுவூர்

🌷7 மன்மதன் எரிக்கப்பட்டு பின் அருள் பாலித்த 👉 திருக்கொருக்கை

🌷8 மார்க்கண்டேயனை காப்பாற்ற யமனை உதைத்தது👉திருக்கடையூர்

🌹உற்சவருக்கு வருடத்தில் 6 முறை அபிஷேகம், கார்த்திகை கடைசி ஞாயிறு, சிவன் வீதி உலா வருகிறார்.

🌹இங்கு ருத்ர அபிஷேகம் புகழ்பெற்றது.

🍁 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹தன்னை மதிக்காமல் தக்ஷன் நடத்திய யாகத்தையும் தக்ஷனையும் அழித்த தலமாகும். இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த ஜாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. இங்குள்ள தக்ஷபுரீஸ்வரரின் காலடியில் தக்ஷின் வீழ்ந்து கிடக்கும் காட்சி மிகவும் அற்புதம்.

🌹வீரபத்திரருக்கு இதுவே முதல் கோவில் என்று நம்பப்படுகிறது. வீரபத்திரர் 👉 ‘ஆகாசபைரவர்’ ‘அகோர வீரபத்திரர்’ ‘பெரியாண்டவர் ‘பெத்தாண்டவர்’ என போற்றப்படுகிறார்.

🌹கருவறைக்குப் பின்னால் லிங்கோத்பவரின் இருபுறமும் மகாவிஷ்ணு பிரம்மா வழிபடும் தோரணையில் சிலைகள் உள்ளன. திரிமூர்த்திகள் தரிசனம் மங்களம்.

🍁ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இந்த கோயிலின் புராண கதை தக்ஷ பிரஜாபதி சுற்றி வருகிறது. மகள் தாக்ஷாயினி. அவருக்குத் தெரியாமல் சிவபெருமானை மணந்து கொண்டாள். எனவே அவள் மீதும் ஈசன் மீதும் கோபம்.

🌹ஒருமுறை அவன் நடத்திய யாகத்திற்கு மஹாவிஷ்ணு , பிரம்மன், தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் அழைத்திருந்தான். ஆனால் ஈசன், பார்வதி தேவியை அழைக்கவில்லை. அவருக்கு உரிய அவிர்பாகத்தையும் வழங்கவில்லை. இதைத் தட்டிக் கேட்க சென்ற தாக்ஷாயினியை அவமதித்தான்.

🌹தன் தந்தையின் யாகம் வெற்றி அடையாது என சபித்து, தன்னை எரித்து கொண்டாள். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் வீரபத்ரரை உருவாக்கி தக்ஷன் மற்றும் யாகத்தை அழித்தார். அங்கு வந்த விருந்தினர்களையும் தண்டித்தார்.

🌹தக்ஷின் தன் உயிருக்காக சிவபெருமானிடம் மன்றாடினான். அதன் பின் சிவபெருமான் யாகத்தில் தோன்றி, விருந்தினரை மன்னித்து, வீரபத்திரர் அளித்த அனைத்து தண்டனைகளையும் திரும்பப் பெற்றார். அவர் தக்ஷனையும் மன்னித்து (அவர் தலை அக்னியில் எறியப்பட்டதால்) அசல் தலைக்கு பதிலாக ஒரு ஆட்டின் தலையை வைத்து அவரது உயிரை காப்பாற்றினார்.

🌹தக்ஷன் தன் தவறை உணர்ந்து சிவனை பிரார்த்தித்தான். அவனது பிராத்தனை ஆட்டின் சத்தம் போல் இருந்தது. இந்தப் பிரார்த்தனை ‘சமகம்’ என்று அழைக்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு வரியும் “மே” என்ற எழுத்துடன் முடிவடைகிறது. அவரது பிரார்த்தனையில் மகிழ்ந்த சிவபெருமான் அவருடைய பிரார்த்தனை, “ருத்ரம்” உடன் சேர்க்கப்படும் என்றும் எதிர்காலத்தில் ஒன்றாக படிக்கப்படும் என்றும் கூறினார்.

🌹தக்ஷன் புதிய ருத்ரம் கொண்டு பூஜை செய்தார். இதுதான் முதல்முறையாக

“ஸ்ரீ ருத்ர ஹோமம்”

“ஸ்ரீ ருத்ர அபிஷேகம்” என அழைக்கப்பட்டது.

ருத்ர ஹோமம் இக்கோயிலில் இருந்து தொடங்கியதாக நம்பப்படுகிறது.

🌹தக்ஷன் யாகம் நடத்த

இந்த இடத்தை தேர்ந்தெடுத்ததால் தக்ஷபுரி.

🌹சிவபெருமான் தக்ஷனுக்கு வழங்கிய வரங்களை திரும்பப்பெற்றதால் திருப்பறியலூர் (பறித்ததால்)

🍁ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மேற்கு நோக்கிய பழமையான கோயில். 5 நிலை ராஜகோபுரம், கொடிமரம் (2011) சமீபத்தில் கட்டப்பட்டது. கோயில் எதிரில் சாலை மறுபுறத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இத்தல விநாயகர் 👉சித்தி விநாயகர். வெளி முன் மண்டபத்தில் அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி உள்ளது. உபசன்னதிகள் கோஷ்ட மூர்த்தங்கள் அழகு.

🌹சுப்பிரமணியர் மயிலின் மீது ஒரு காலை வைத்து நின்றபடி உள்ளார். அருணகிரிநாதர் திருப்புகழில் பாடல். சூரியன் தனி சந்ததி. நவகிரஹம் இல்லை. இங்கு இறைவனுக்கு தயிர் சாதம், சுத்தன்னம் நைவேத்யம்.

🌹இக்கோயிலில் மன்னர் சுந்தரபாண்டியன் கால 3 கல்வெட்டுகள் உள்ளன. தருமபுர ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது.

பதிகம் படிக்கலாம் / ருத்ரம் சமகம் படிக்கலாம்.

🍁 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சத்ரு பயம் நீங்க

தோஷ நிவர்த்தி

வம்ச விருத்தி

அஷ்டமி வழிபாடு

🍁 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கார்த்திகை ஞாயிறு திருவிழா

ஆனி மாத அஸ்வினி நட்சத்திர உற்சவம்

தமிழ் வருடப் பிறப்பு

தை மாத அமாவாசை பூஜை

புரட்டாசி சதுர்த்தி

ஐப்பசி அன்னாபிஷேகம்

திருவாதிரை திருவிழா

🍁 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி, பிரம்மன், சரஸ்வதி, இந்திரன், அக்னி, எமன் நிருதி வருணன் வாயு குபேரன் சப்தரிஷிகள் மற்றும் அனைத்து வான் தெய்வங்களும், அப்பர் சம்பந்தர் சேக்கிழார் முதலியோர்.

🍁 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

செம்பொனார்கோயிலில் இருந்து நல்லாடை செல்லும் சாலையில் வலதுபுறமாகத் திரும்பிச் செல்ல வேண்டும். சிறிது தூரம் சென்றதும் “பரசலூர்” என்று காட்டும் வழிகாட்டிப் பலகை (Signboard) இருக்கும்.பலகை காட்டும் திசையில் வலதுபுறமாகப் பிரியும் குறுகலான சாலையில் சுமார் 2 கி.மீ. தூரம் பயணித்தால், சாலையோரமாகவே அமைந்துள்ள ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோயிலை அடையலாம்.

மயிலாடுதுறையிலிருந்து செம்பொனார்கோயில் வரை வந்துவிட்டு, அங்கிருந்து கீழப்பரசலூர் செல்லும் மினி பேருந்துகள் மூலமாகவும் இத்தலத்தை அடையலாம்.

9AM – 12NOON, 5.30PM – 8 PM

94437 85616 சண்முகசுந்தரம் குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🍁 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்

நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்

திருத்த முடையார் திருப்பறி யலூரில்

விருத்தன் எனத்தகும் வீரட்டத் தானே. 

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *