திருநெல்வாயில் சிவபுரி உச்சிநாதர்

🌹மூலவர் : உச்சிநாதர் / மத்யானேஸ்வரர்

அம்மன் : கனகாம்பிகை

ஸ்தல விருக்ஷம் : நெல்லி

தீர்த்தம் : கிருபா தீர்த்தம்

பாடல் : ஞானசம்பந்தர்

ஊர் : சிவபுரி

சுயம்பு, 57வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழநாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 3

🌹ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி தந்த தலங்களில் இதுவும் ஒன்று. சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமண கோலத்தில் அருளுகின்றனர். சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார். சிதம்பரம் நகருக்குட்பட்ட ஒரு பகுதியில் நெல் வயல்கள் அதிகமாக இருந்தன. அப்பகுதி திருநெல்வாயில் என அழைக்கப்பட்டது, NOW சிவபுரி. இங்குதான் கோவில் அமைந்துள்ளது. சக்தியிடம் ஞானப்பால் குடித்த ஞானசம்பந்தருக்கு இறைவன் உணவளித்த தலம் இது.

🌹ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருஞானசம்பந்தர் சீர்காழியில் வசித்த சிவபாத இருதயர் பகவதி அம்மையார் தம்பதியரின் மகனாக அவதரித்தார். 3ம் வயதில் சீர்காழி சட்டை நாதர் கோவில் பிரம்ம தீர்த்தக் கரையில் அம்பாளிடம் ஞானப்பால் குடித்தார். “தோடுடைய செவியன்” பதிகம் பாடினார். ( விரிவாக சீர்காழி பதிவில் )

சம்பந்தருக்கு 16 வயதில் திருமணம் நிச்சயமானது

உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோவிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில் மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர்.

சம்பந்தரும் அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோயில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை உணவளித்தார் / விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் உச்சிநாதர் என்றும் மத்யானேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

அம்மன் “கனகாம்பிகை”. இப்பகுதி மக்கள் இக்கோயிலை கனகாம்பாள் கோவில் என்று அழைக்கின்றனர். அகத்தியர் வழிபட்ட தலம். அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

🌹ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கிழக்குப் பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரம், ஒரு பிரகாரம். சிவபெருமான் கிழக்கு பார்த்தும், அம்மன் தெற்கு நோக்கியும்..

இக்கோயிலில் குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால் காலம் முழுவதும், அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவு பிரச்சனை வராது என்ற நம்பிக்கை உள்ளது.

🌹 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

•குழந்தைகளின் அன்னபிராசனம்

• பசிப்பிணி நிவர்த்தி

• ஞானம் மற்றும் கல்வி

🌹 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வைகாசி விசாகம், நவராத்திரி, மஹா சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம் சிறப்பு

🌹 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சம்பந்தர், அப்பர், சேக்கிழார், கண்வ மகரிஷி, அகத்தியர் முதலியோர்

🌹அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தாண்டி உள்ளது. 4KM, ஆட்டோ பேருந்து வசதி உண்டு. அருகிலேயே திருக்கழிப்பாலை பாடல் பெற்ற சிவாலயம். ( 300 மீ / 1 நிமிடம் )

7AM – 11AM, 5PM – 7PM

98426 24580 முத்துக்குமார குருக்கள்.

முதல் நாளே குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு

🌹கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

புடையி னார்புள்ளி

கால்பொ ருந்திய

மடையி னார்மணி

நீர்நெல் வாயிலார்

நடையில் நால்விரற்

கோவ ணந்நயந்

துடையி னாரெம

துச்சி யாரே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *