திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் கிருதபுரீஸ்வரர்
மூலவர் : நெய்யாடியப்பர்
உற்சவர் : கிருதபுரீஸ்வரர்,
அம்பாள் : பாலாம்பிகை, இளமங்கையம்மை
ஸ்தல விருக்ஷம் : வில்வம்,
தீர்த்தம் : காவிரி தீ,
பாடல் : அப்பர் சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 52
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு, வெந்நீர் அபிஷேகம் நடப்பது தலத்தின் சிறப்பம்சமாகும்.
சப்தஸ்தானத்தில் இத்தலம் 7வது. திருவிழா காலத்தில் ஏழுர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம்.
நர்த்தன கணபதி இங்கு சிறப்பு, தக்ஷிணாமூர்த்தி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், பல்லவ மன்னர்களும் திருப்பணி.
இலங்கையை ஆண்ட மன்னர்கள் தங்கள் குலதெய்வமாக இத்தலத்தில் பூஜித்துள்ளனர்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆண்டுக்கு 3 முறை ஐயாரப்பர் இங்கு வருகிறார்
நோய் நிவர்த்தி: நெய் அபிஷேகம் செய்யும் இத்தல நெய்யாடியப்பர் கோயிலில் வேண்டிக்கொண்டால் நெஞ்சு மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
சப்தஸ்தானத் தலம்: திருவையாறு தருமபுரீஸ்வரர் சப்தஸ்தான விழாவில், நந்தியின் திருமணத்திற்கு நெய் வழங்கிய பெருமை பெற்ற தலம் இதுவாகும்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பசு ஒன்று தினமும் தன் பாலை குறிப்பிட்ட இடத்தில் சொரிவதை வழக்கமாக கொண்டிருந்தது.
தினமும் இப்படி செய்ததால் வெய்யிலுக்கும் மழைக்கும் பால் முழுவதும் நெய்யாக மாறியது. மக்கள் நெய்யிருந்த இடத்தை தோண்டிப் பார்த்தபோது அங்கே சிவலிங்கம் இருந்தது. மன்னனுக்கும் அந்த செய்தி பரவியது.
சிவபக்தனான அவன் சிவனுக்கு கோயில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான். இன்றும் இந்த சிவனுக்கு நெய்யினால் அபிஷேகம் நடக்கிறது. எனவே இறைவன் நெய்யாடியப்பர் ஆனார்.
அம்மன் பாலாம்பிகை என்றும் இளமையாகவே காட்சி தருகிறாள். எத்தலத்து அம்மனையும் பாடாத அப்பர் இத்தல அம்மனின் அழகில் மயங்கி “ஏந்திளமங்கையும் நீயும் நெய்தான திருந்துருவே” என பாடுகிறார்.
இங்கு நெய்யபிஷேகம் செய்வது சிறப்பு.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் அமைந்துள்ளது.
உள் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. கோஷ்டத்தில் லிங்கோத்பவர் மற்றும் பிரம்மா ஆகியோர் காட்சியளிக்கின்றனர்
பிரகாரத்தில் 7 சப்தஸ்தான கோவில்களின் சிவலிங்கங்களும் உள்ளன.
அழகான துர்க்கை. தூண்களில் நிறைய சிங்கங்களின் சிற்பங்கள், பல்லவர்களின் கைவண்ணம்.
சுந்தரர் வைப்புத்தலமாக பாடியுள்ளார், அருணகிரிநாதர் திருப்புகழில் முருகனை பாடியுள்ளார்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிணி மற்றும் தீராத நோய்கள் நீங்க
இதய நோய் நிவர்த்தி
பாவங்கள் மற்றும் துயரங்கள் நீங்க
மன அமைதி மற்றும் குறைகள் தீர்தல்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சப்தஸ்தானத் திருவிழா (ஏழூர்த் திருவிழா) மிகவும் சிறப்பு.
சிவபெருமானுக்கு உண்டான அனைத்து திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சரசுவதி, காமதேனு, கஷ்யபர் கௌதமமுனிவர் சம்பந்தர், அப்பர், சுந்தரர் , சேக்கிழார், ஆகியோர்.
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருவையாறிலிருந்து சுமார் 2.1 KM தொலைவில் திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் அமைந்துள்ளது. நிறைய போக்குவரத்து உதவிகள் உள்ளது.
10AM – 11.30AM 5PM – 7PM
94893 60553 சங்கரன் குருக்கள்
கிராமத்துக் கோவில் குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மையாடிய கண்டன்மலை
மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி
யுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர்
நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம்
நெய்த்தானமெ னீரே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply