திருநெடுங்களம் நெடுங்களநாதர்

🌺மூலவர் : திருநெடுங்களநாதர் நித்ய சுந்தரேஸ்வரர்

அம்பாள் : மங்களாம்பிகை / ஒப்பிலா நாயகி

ஸ்தல விருக்ஷம் : வில்வம் அரளி கஸ்தூரி

தீர்த்தம் : அகஸ்திய தீ / சுந்தர தீ

பாடல் : சம்பந்தர்

சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 8.

🌺 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷ஆடி 7-12 தேதி காலை 6.05 – 6.15AM சூரிய ஒளி மூலவர் மீது படர்ந்து பூஜை.

🌷 மூலஸ்தானத்தில் பார்வதி தேவி அரூபமாக உள்ளார். அதனால் மூலஸ்தானத்தின் மேல் 2 கோபுரங்கள் உள்ளது. மூலஸ்தானத்தில் சக்திக்காக தன்னிடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

🌷 காசிக்கு அடுத்தபடியாக இங்கு மட்டும்தான் இப்படி உள்ளது.

🌷உற்சவர் சோமாஸ்கந்தர் வலது கை கட்ட விரல் இல்லை. ஒரு அடியவருக்காக மாறுவேடம் கொண்டு வழக்கில் சாட்சி கூறி காப்பாற்றினார். இதை அறிந்த அரசன் பெருமானது விரலை துண்டித்து விட்டான்.

🌷சோமாஸ்கந்தர் அருகில் ஒரு வெண்கல குதிரையும் உள்ளது. அந்தக் காலத்தில் இதை தூக்கியவர்களுக்கே பெண் தருவார்களாம்.

🌺 ஸ்தல பெருமை

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 யுகம் கண்ட கோவில். கிருத யுகத்தில் பார்வதி தேவி, திரேதா யுகத்தில் அகத்தியர், துவாபர யுகத்தில் காமதேனு, கலியுகத்தில் நாயன்மார்கள் போற்றி வணங்கிய பதி.

🌷 இங்குள்ள தக்ஷிணாமூர்த்தி – யோக தக்ஷிணாமூர்த்தி – சித்தாசனத்தில் அமர்ந்து மேற்கரங்களில் மான் மழுவும் கீழ்கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி இடக்காலைச் சுற்றியவாறு யோகப்பட்டம் விளங்க காட்சி தருகிறார்.

🌷வந்திய சோழ மன்னனுக்கு பேரழகுடன் காட்சி கொடுத்த காரணத்தால் இத்தல இறைவன் நித்ய சுந்தரேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

🌷இத்தல ஈசனை தொடர்ந்து நெய் தீபமேற்றி வழிபட்டு வந்தால் முகப்பொலிவு கூடும்.

பிரதோஷ வழிபாடும் இங்கு சிறப்பு.

🌷அகத்தியர் வழிபட்டு பேறு பெற்ற தலமாகும்.

🌺 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பார்வதி தேவி (மங்களாம்பிகை) ஈசனை நோக்கி இத்தலத்தில் தவமிருந்தார். அப்போது இறைவன் ஒரு கள்ள வடிவம் (வேடன் உருவம்) கொண்டு தோன்றி தேவியைத் திருமணம் செய்ய முயன்றார். இதனால் அச்சமுற்ற அம்பிகை ஓடி ஒளிந்த இடம் என்பதால் இப்பகுதிக்கு ‘ஒளிமதிச்சோலை’ என்ற பெயர் வந்தது.

பொதுவாக பெரும்பாலான சிவஸ்தலங்களில் ஈசன் நடுநாயகமாக வீற்றிருப்பார். ஆனால், திருநெடுங்குளத்தில் அன்னை பார்வதிக்காக தனது இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்துவிட்டு, ஈசன் சற்று தள்ளி வீற்றிருக்கிறார். கருவறையில் சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும், அங்கு அம்பாளும் மறைமுகமாக (உருவமில்லாமல்) இருப்பதாக ஐதீகம். கருவறையில் அம்பாளும் ஈசனும் ஒன்றாக வீற்றிருப்பதைக் குறிக்கும் வகையில், ஒரே கருவறையின் மேல் இரண்டு கோபுரங்கள் (விமானங்கள்) அமைக்கப்பட்டுள்ளன.

🌺 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 கோயில் இரண்டு கோபுரம் இரண்டு பிரகாரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலில் முன்னால் திருக்குளம், முதல் வாயிலில் கோபுரம் இல்லை.

🌷2வது நுழைவாயிலில் அழகிய சிற்பங்கள் கொண்ட சிறப்பான கோபுரம் உள்ளது.

🌷 மேற்கு பக்கத்தில் தெய்வானையுடன் முருகர் தெற்கு பக்கத்தில் வரதராஜ பெருமாள் வடக்கில் அகஸ்தியர் சன்னதி +எதிரே அகஸ்தியர் தீர்த்தம்👉 இதில் எக்காலத்திலும் தீர்த்தம் வற்றவே வற்றாது.

🌷திருநெடுங்களம் என்றால் சமவெளியில் அமைந்த பெரிய ஊர் என்று பெயர்.

🌺 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

இடர்கள் நீங்க

திருமணத்தடை நீங்க

குழந்தை பாக்கியம் பெற

கல்வி மற்றும் ஞானம்

புதிய வீடு கட்ட

நோய் மற்றும் வறுமை நீங்க

🌺 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாசி மகம் / பிரம்மோற்சவம்

பங்குனி உத்திரம்

சம்பந்தர் குருபூஜை

மஹா சிவராத்திரி மற்றும் பிரதோஷம் சிறப்பு.

🌺 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அம்பாள், அகத்தியர், வந்தியச் சோழன், சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேக்கிழார்,

🌺 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருச்சி – மாங்காவனம் நகரப் பேருந்து (Town Bus) இத்தலம் வழியாகச் செல்கிறது. திருச்சி தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி தாண்டியதும் இடது பக்கம் பிரியும் கிராமத்து சாலையில் சென்றால் கோவில்.

திருவெறும்பூர் 12 KM

துவாக்குடி 4KM

7AM – 12NOON , 5PM – 8PM

95788 94382 & 63809 83566

ரமேஷ் குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌺 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும்

பிறையுடையாய் பிஞ்ஞகனே என்று உனைப் பேசின் அல்லால்

குறையுடையார் குற்றம் ஓராய் கொள்கையினால் உயர்ந்த

நிறையுடையார் இடர் களையாய் நெடுங்களம் மேயவனே.

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *