திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் மனோக்ஞநாதசுவாமி
மூலவர் : நீலகண்டேஸ்வரர்/ மனோஞ நாதஸ்வாமி
அம்பாள் : ஒப்பிலாமுலையாள் /
அநுபமஸ்தினி (திருமணகோலம்), பக்தாபிஷ்டாதாயணி
(தவக்கோலம்) 2 சன்னதிகள்.
ஸ்தல விருக்ஷம் : 5 இலை வில்வம், பலாமரம்
தீர்த்தம் : தேவி, மார்க்கண்டேய, பிரம்ம தீர்த்தம், க்ஷீரகுண்டம் 4தீ
புராணப் பெயர் : தென்னலகுடி / திருநீலக்குடி..
பாடல் : அப்பர்
சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவத்தலம் சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 32
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரே காம்பில் ஐந்து இலை வில்வம் அதிசயம்..
மார்க்கண்டேயர் சிரஞ்சீவி வரம் பெற்ற சிறப்பு தலம் இதுதான்.
தக்ஷனின் யாகத்திற்கு சென்ற தாக்ஷாயினி அவமதிக்கப்பட்டு திரும்பி இத்தலத்தில் வந்து இறைவனை பூஜித்து இறைவனோடு ஒன்று பட்டார்.
பிரம்மா, தேவமாதர், வசிஷ்டர் சூரபத்மன், காமதேனு வழிபட்டு சாப நிவர்த்தி பெற்ற தலம்.
வருணன், தேவகன்னி வழிபட்டு வரம்பற்ற தலம்
‘கல்லினோடு அவன் கையர்’ என்று தன்னை கல்லோடு கட்டி போடும் பொழுது அப்பர் இத்தல இறைவனைத் தான் பாடி உயிர் பெற்றதாக இத்தல வரலாறு கூறுகிறது.
யோகமார்க்கத்தில் செல்பவர்களுக்கு மூலாதாரமான தலம்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மூலவருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யும் பொழுது பாத்திரம் பாத்திரமாக ஊற்றி, சுவாமி மேலேயே உவரி விடும். எண்ணெய் முழுவதும் சிவலிங்கத்திற்குள்ளேயே உறிஞ்சி இறங்கி விடுவது அதிசயம். நாள் பூராவும் எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், குடம் குடமாக கொட்டினாலும் எண்ணெய் அனைத்தும் உறிஞ்சிவிடும்..
அடுத்த நாள் காலை பார்க்கும் பொழுது ஒரு வருடம் எண்ணெயே தடவாதது போல் உள்ளது.. எங்கே மாயம் என்று தெரியவில்லை.. எப்பொழுதும் அபிஷேகம் என்றால் வழுவழு என்று தானே இருக்க வேண்டும். ஈசனின் மேனியோ சொரசொரப்பாக உள்ளது, இறைவனுக்கு சிகைமுடி வளர்ந்தது போல்..
ஈசன் ஆலஹால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மை குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம்.
இக்கோயிலின் ஸ்தலவிருட்சம் வில்வம் போல பலாவும் FAMOUS & தெய்வீக பலா.. காய்க்கும் பலா அறுத்து சுவாமிக்கு சுளைகளை நெய்வேத்தியம் செய்த பின்னர்தான் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அதை மீறி எடுத்துச் சென்றால் இறைவனால் தண்டனை வழங்கப்படும்.சிலர் பரிசோதித்து தண்டனையும் பெற்று இருக்கிறார்கள்..
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
யோக மார்க்கத்தில் செல்பவர்களுக்கு இது மூலாதாரமான ஸ்தலம். மொத்தம் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம்
அநாகதம் விசுத்தி ஆக்ஞை. இந்த ஆறு ஆதாரங்களில் இது மூலாதாரமான தலம். குண்டலினி சக்தியை தட்டி எழுப்புவர்களுக்கு உடனடியாக பலன் தரும் விசேஷ சக்தி படைத்த சிவஸ்தலம் இது.
மார்க்கண்டேயர் தன் ஆயுள் பலம் அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறார். அப்போது நாரதர் திருநீலக்குடியில் உள்ள இறைவனை பூஜிக்குமாறு கூறுகிறார். மார்க்கண்டேயனும் நாரதரின் அறிவுரையின் பேரில், இங்கு வந்து நாளும் பொழுதும் சிவனை தியானித்து பூஜை செய்கிறார். முடிவில் சிவன் அவர் முன் தோன்றுகிறார். என்ன வரம் வேண்டும் என கேட்கிறார். மார்க்கண்டேயர் தனது எண்ணத்தைச் சொன்னவுடன் அதன்படியே மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவி வரம் தரப்பட்டது. அதற்கு நன்றி கடனாக மார்க்கண்டேயர் இறைவனை பல்லக்கில் வைத்து இளந்துளை ஏனாதிமங்கலம் திருநாகேஸ்வரம் திருபுவனம் திருவிடைமருதூர் மருத்துவக்குடி என்று ஊர் ஊராக அழைத்துச் சென்றார். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் முகமாகவே இந்த ஊரில் சப்தஸ்தானம் ஊர்வலம்.இதுவே இத்தலத்து சித்திரை திருவிழா. இங்கு பிரம்மோற்சவம் 18 நாள் சிறப்பு.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கோயிலின் முகப்பில் இராஜகோபுரம்/நுழைவு வளைவு அமைந்துள்ளது. இதைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி மண்டபம் ஆகியவை நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. உட்பிரகாரத்தில் சூரியன், பிரம்மலிங்கம், விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகம், பைரவர் சந்நிதிகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தெய்விகப் பலாமரம் ஆகியவை அமைந்துள்ளன.
விநாயகர் நர்த்தன கணபதி..
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆயுள் விருத்தி மற்றும் எம பயம் நீங்க
தோஷ பரிகாரங்கள்
குடும்ப ஒற்றுமை
கல்யாண வரம், குழந்தை வரம்,
வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு என பிரார்த்தனை.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் ஏழூர் பல்லக்கு விழா 15 நாட்கள்.
மார்க்கண்டேயன் பெருவிழா
மஹா சிவராத்திரி
ஐப்பசி அன்னாபிஷேகம் திருக்கார்த்திகை திருவாதிரை மற்றும் பிரதோஷம் சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மா, பார்வதி தேவி, வருண பகவான், தேவர்கள், தேவ கன்னியர், மார்க்கண்டேயர், மிருகண்டு முனிவர் மற்றும் அவர் மனைவி, வசிஷ்டர்,
துர்வாசர், பரத்வாஜர், ரோமச முனிவர், தேவகண்ட முனிவர், காமதேனு, பாண்டவர்கள், சூரபத்மன், அப்பர், சம்பந்தர்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கும்பகோணம் – காரைக்கால் சாலையில் கும்பகோணத்திலிருந்து 13KM ஆடுதுறை 3KM தொலைவில் உள்ளது.
கும்பகோணம் பேருந்து நிலையம் மற்றும் ஆடுதுறை பகுதிகளில் இருந்து கும்பகோணம் – காரைக்கால் சாலை வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகள் மூலம் கோயிலை எளிதில் அடையலாம்.
8AM – 12NOON, 5PM – 8PM
__
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வைத்த மாடும்
மனைவியும் மக்கள்நீர்
செத்த போது
செறியார் பிரிவதே
நித்த நீலக்
குடியர னைந்நினை
சித்த மாகிற்
சிவகதி சேர்திரே. 1
திருநாவுக்கரசர்


Leave a Reply