திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர்

🪷 மூலவர் : தர்பாரண்யேஸ்வரர் திருநள்ளாற்றீஸ்வரர்

அம்பாள் : பிரணாம்பிகை / போகமார்த்த பூண்முலையாள்

ஸ்தல வீருக்ஷம் : தர்ப்பை

தீர்த்தம் : நள, பிரம்ம, வாணி,

அன்ன, கங்கா & அஷ்டதிக்பாலகர் 8 தீர்த்தம்..

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்

சுயம்பு (மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி, முளைத்த தழும்பும் உள்ளது ) / விடங்க ஸ்தலம்..

சோழர்களால் கட்டப்பட்டது.

சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 52.

🪷 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்று. சக்தி பீட ஸ்தலங்களில் ஒன்று. நவக்கிரஹ ஸ்தலங்களில் ஒன்று.

🌷திருமால் இங்கு இறைவனை வணங்கி, மன்மதனை மகனாகப் பெற்றார் என்பது ஐதீகம். அதற்குப்பரிசாக முருகப்பெருமானை அம்பாள் சுவாமி இடையே அமர்த்தி புதிய வடிவை உருவாக்கினார்.. சோமாஸ்கந்த மூர்த்தி வடிவின் பிறப்பிடம்..

🌷இவரை இந்திரன் வழிபட்டு ஜெயந்தன் ஜெயந்தி என்ற இரண்டு பிள்ளைகளைப் பெற்றான்.

🌷ஒரு கட்டத்தில் வாலாசுரன் தேவேந்திரனுடன் போருக்கு வந்த போது முசுகுந்த சக்கரவர்த்தி அவனை வென்றான். இந்திரனிடம் இதற்கு பரிசாக பெற்று வந்த 7 விடங்க லிங்கத்தில் ஒன்றை திருநள்ளாற்றில் வைத்தார். அதுவே தற்போது தியாக விடங்கர் என வழங்கப்படுகிறது.

🪷 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷வாசல்படிக்கு மரியாதை 👉 திருநள்ளாறு செல்பவர்கள் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்ததும் முதல் படியை தொட்டு வணங்க வேண்டும். ஏனெனில் நளன் இங்கு கோவிலுக்குள் நுழைந்ததுமே, நியாயத்திற்கு புறம்பாக செயல்பட்டதற்காக இறைவனிடம் தண்டனை அடைய வேண்டி வருமோ என்று பயந்த சனி விலகி வாசல் படியிலேயே நின்று நளனை விட்டு விலகிவிட்டார். இறைவன் சனியின் நிலையை பாராட்டி ஈஸ்வரப் பட்டம் வழங்கி சிவன் கோயில் முகப்பிலேயே வைத்துக் கொண்டார்.. சிவனருள் பெற்றவர் என்பதாலும் கிழக்கு நோக்கிய சனீஸ்வரன் என்பதாலும் இவரை வழிபட்டால் சனி தொல்லை நீங்கும்.

சனீஸ்வரர் இங்கு பிரசித்தி பெற்ற முக்கிய சந்நிதி ..

நள மகாராஜாவிற்கு சனித்தொல்லை நீங்கிய தலம்.

சிவனை வணங்கி விட்டு சனீஸ்வரனை வணங்க வேண்டும்.

🌷சனிப் பெயர்ச்சி மற்றும் முக்கிய காலங்களில் சனீஸ்வரன் தங்க காக வாகனத்தில் தங்க கவசம் அணிந்து பவனி வருவது கண்கொள்ளாக் காட்சி.

🌷திருநள்ளாறு என்றாலே தீர்த்த ஸ்தலம். நளதீர்த்தம்👉 சனித்தொல்லை நீங்க,

பிரம்மதீர்த்தம்👉 சாபம் நீங்க, வாணி தீர்த்தம்👉 கல்வி சிறக்க,

மேலும் பல தீர்த்தங்கள் அன்ன, கங்கா, அஷ்டதிக்பாலகர் என இருந்தன.

🌷முன்பு உலகத்திற்கு கேடு நேர இருக்குமானால் கங்கா,பிரம்ம தீர்த்தம் சிவப்பாக மாறிவிடும். பின்னர் தகுந்த பரிகார பூஜைகள் செய்து தப்பித்திருக்கிறார்கள் என்கின்றனர்.

🪷 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

நிடத நாட்டு மன்னன் நளன் சேதி நாட்டு இளவரசி தமயந்தியுடன் திருமணம். இப்பெண்ணை தேவர்கள் மணக்க விரும்பினர். ஆகவே பொறாமை கொண்டனர் சனீஸ்வரனை நாடினர். 71/2 ஆண்டுகள் பிடித்து ஆட்டினார். மனைவி மக்கள் உடுத்தும் துணி கூட இழந்து அவஸ்தை பட்ட மன்னன் எதற்கும் கலங்கவில்லை.

பரத்வாஜ முனிவர், இந்த இடத்திற்கு வந்து, இக்கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, சிவபெருமானை வழிபடுமாறு அவருக்கு அறிவுரை கூறினார். திருநள்ளாறு வந்த பொழுது நீங்கியது.

🌷நளன் பூஜித்தக் காரணத்தால், நள்ளாறு எனப்படுகிறது. இறைவனருளால், நளன் சனியின் இடர் நீங்கப்பெற்றான்.

🌷உள்ளூர் மன்னரின் அறிவுறுத்தலின் பேரில், ஒரு இடையன் இந்தக் கோவிலுக்குத் தவறாமல் பால் வழங்கி வந்தான். இந்தக் கோவிலின் கணக்காளர், அந்தப் பாலில் ஒரு பகுதியைத் தன் வீட்டிற்கு அனுப்பி, கோவிலின் கணக்குகளைத் தவறாகப் பதிவு செய்து வந்தார். ஒருமுறை, கோவிலுக்குப் பால் வரவில்லை என்பதை அறிந்த மன்னர், அந்த இடையனைத் தண்டிக்க விரும்பினார். அந்த இடையன் இறைவனிடம் உதவி வேண்டிப் பிரார்த்தனை செய்தான். அந்த இடையனைக் காப்பாற்றவும், கணக்கரைத் தண்டிக்கவும், இறைவன் சூலத்தை ஏவிய பொழுது நந்தியும் கொடிமரமும் விலகிக்கொண்டது. கணக்கண் தலை கொய்தது. இறைவன் இடையனுக்கு காட்சி. தென்புறம் சன்னதி உள்ளது. இப்பொழுதும் கொடிமரமும் நந்தியும் விலகியே உள்ளது..

🌷திருஞானசம்பந்தர், திருஆலவாயில் (மதுரை) சமணரோடு நடத்திய அனல் வாதத்தின்போது, இத்தலப் பதிகமான போகமார்த்த பூண்முலையாள் என்ற பதிகத்தை அனலில் இட, அது தீப்பற்றாமல், பச்சைப் பதிகமாய் நின்று, சைவத்தை நிலைநாட்டியது. 

🌷தமிழகம் புதுவை மட்டுமின்றி, பல ஊர்களில் இருந்தும் வருகிறார்கள்..

🪷 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், திராவிடக் கலைப்பாணியில் செவ்வக வடிவ அமைப்பில் granite (கல்லால்) ஆன உயர்ந்த சுற்றுமதில்களுடன், 7 நிலை ராஜகோபுரத்துடன் கட்டப்பட்டுள்ளது. மூலவர் தர்ப்பையில் முளைத்த சுயம்பு மூர்த்தி.

மூலவர் தர்ப்பாரண்யேஸ்வரர் சன்னதிக்கும், இறைவி பிராணம்பிகை (பிராணேஸ்வரி) சன்னதிக்கும் இடையில் அல்லது நுழைவுவாயிலின் வடக்குப் பகுதியில் சனி பகவானின் சன்னதி அமைந்துள்ளது. இங்கு சனி பகவான் அருள்பாலிக்கும் நிலையில் (அனுகிரக மூர்த்தி) தரிசனம் தருகிறார்.

• சோமாஸ்கந்தர் சன்னதி

• தட்சிணாமூர்த்தி, துர்கை, லிங்கோத்பவர் போன்ற தெய்வங்களின் கோஷ்டப் பிரகாரக் கோலங்கள்

• சுந்தரர் மற்றும் பிற நாயன்மார்களின் உள்சுற்று சன்னதிகள்

• நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவை சுவாமிக்கு நேரே இல்லாமல் சற்று ஒதுங்கியமைந்துள்ளது இத்தலத்தின் சிறப்பாகும்.

🪷 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சனி தோஷ நிவர்த்தி பிரதானம்

நவகிரக சாந்தி ஹோமம்,

பாவ விமோசனம் பெறுதல், நோய்கள் நீங்குதல்,

சிறந்த வாக்கு வன்மை (பேச்சாற்றல்) பெறுதல்,

நல்ல திருமணம் அமைய,

குழந்தை பாக்கியம் பெற

🪷 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சனிப்பெயர்ச்சி விழா

பிரம்மோற்சவம் 18 நாட்கள்

சனி ஜெயந்தி

புரட்டாசி பௌர்ணமி மற்றும் மரகத லிங்க வழிபாடு

நவராத்திரி

திருக்கார்த்திகை

பங்குனி உத்திரம்

ஐப்பசி அன்னாபிஷேகம்

🪷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமால், பிரமன், இந்திரன், அகத்தியர், புலஸ்தியர், அர்ச்சுனர், நளச் சக்கரவர்த்தி, திக்குப் பாலகர்கள், வசுக்கள், போஜன், முசுகுந்த சக்கரவர்த்தி, சம்பந்தர்,அப்பர், சுந்தரர், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் முதலியோர்

🪷 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காரைக்காலில் இருந்து 5KM தொலைவில், மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் பேருந்து வழித்தடத்தில் அமைந்துள்ளது.

காரைக்கால் பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடி திருநள்ளாறுக்கு நகரப் பேருந்துகள் மற்றும் மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கும்பகோணம் மயிலாடுதுறை பேருந்துகள் திருநள்ளாறு வழியாக செல்கின்றன. அனைத்து முக்கிய ஊர்களில் இருந்தும் காரைக்காலுக்கு பேருந்து வசதிகள் உண்டு. சென்னையில் இருந்து ECR வழியில் திருநள்ளாறு அடையலாம்.

6AM – 12NOON, 4PM – 9PM

94439 84634 ரமேஷ் குருக்கள்

75983 36922 அப்பு குருக்கள்

94435 87641 நடராஜ குருக்கள்

🪷 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

போகமார்த்த பூண்முலையாள்

தன்னோடும் பொன்னகலம்

பாகமார்த்த பைங்கண்வெள்

ளேற்றண்ணல் பரமேட்டி

ஆகமார்த்த தோலுடையன்

கோவண ஆடையின்மேல்

நாகமார்த்த நம்பெருமான்

மேயது நள்ளாறே.

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *