திருத்தெளிச்சேரி கோயில்பத்து பார்வதீஸ்வரர்

🌺 மூலவர் : பார்வதீஸ்வரர்

அம்பாள் : சுயம்வர தபஸ்வினி

ஸ்தலவிருக்ஷம்:வில்வம் வன்னி

தீர்த்தம் : சூரிய தீ, சக்தி தீ

புராண பெயர் : கூவிபத்து மருவி கோவில்பத்து,

பாடல் : ஞானசம்பந்தர்

சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 50.

🌺 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் 10 நாட்கள் மாலையில் சூரியனின் ஒளி கதிர்கள் மூலவர் மீது பட்டு பூஜை நடக்கிறது.

🌻பார்வதிதேவி காத்யாயன முனிவரின் மகளாக அவதரித்து, இத்தல இறைவனை வழிபட்டு அவருடன் கலந்தாள். பார்வதி தேவி “சுயம்வர தபஸ்வினி” என்றும் பெயர் பெற்றார். திருமண வரம் தரும் நாயகியாக அருளுகிறார்.

🌻சிவபெருமான் இத்தலத்தில் கிராட மூர்த்தி எனும் பெயரில் வேடன் வடிவில் அருளுகிறார்.

🌻இத்தலம் கிருத யுகத்தில் பிரம்மவனம், திரேதா யுகத்தில் சமீவனம், துவாபர யுகத்தில் ஆனந்தவனம், கலியுகத்தில் முக்திவனம் என்றும் அழைக்கப்படுகிறது

🌺 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻சம்பந்தர் தன் அடியார்களுடன் இப்பகுதிக்கு வந்த பொழுது, வேறொரு மதத்தை சேர்ந்தவர்கள் அவரை தடுத்தார்கள். இதனால் வருந்திய சம்பந்தர், இறைவனிடமே இது பற்றி முறையிட்டு பாடினார். இறைவனின் கட்டளையால் தடுத்தவர்களின் தலையில் இடி விழுந்தது. ஆனாலும் அவர்கள் திருந்தவில்லை.

🌻“சாரிபுத்தன்” என்பவரின் தலைமையில் சம்பந்தருடன் தங்கள் மதமே உயர்ந்தது என்றும் சைவம் தாழ்ந்தது என்றும் வாதிட்டனர். இதை மறுத்து சம்பந்தர் பேசி, அவர்கள் வாதத்தை முறியடித்தார். பின்னர் அவர்களும் சைவத்திற்கு மாறினர்.

🌻அம்பரீஷ் ராஜா இத்தல இறைவனை வழிபட்டு குழந்தை பாக்கியம் பெற்றார். இதனால் இத்தல இறைவருக்கு ‘ராஜலிங்கம்’ என்ற பெயரும் உண்டு. பல்குணன் வழிபட்டதால் பல்குணன் என்றும், சூரியன் வழிபட்டதால் பாஸ்கர லிங்கம் என்றும் திருநாமங்கள்.

🌻 சோழ நாட்டில் சரிவர மழை பெய்யாததால் பஞ்சம்

ஏற்பட்டது. மன்னன் இத்தல

இறைவனிடம் வேண்டினான். இதை ஏற்ற சிவபெருமான், பார்வதி தேவியுடன் உழவன் வேடத்தில் வந்து, நிலங்களில் விதை தெளித்து சென்றார். பயிர்கள் சிறப்பாக விளைந்து பஞ்சம் நீங்கியது.

இறைவனே விதை தெளித்து சென்றதால் இத்தலம் ‘திருத்தெளிச்சேரி’ ஆகியது.

🌻 கூவி அழைத்த பிள்ளையார் 👉 சம்பந்தர் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரரை தரிசித்து விட்டு இத்தலத்தின் வழியாகச் சென்றார். அவர் இங்கிருந்த கோயிலை கவனிக்கவில்லை.

🌻உடனே இத்தலத்து பிள்ளையார் சம்பந்தரை, பத்து முறை கூப்பிட்டு இங்குள்ள இறைவனை பாடும் படி கூறினார். அதன் பின் தான் ஞானசம்பந்தர் பதிகம் பாடினார்.

🌻 பிள்ளையார் 10 முறை கூவி அழைத்ததால் இத்தலம் ‘கூவிபத்து’ மருவி காலப்போக்கில் கோயில் பத்து என மாறிவிட்டது.

🌻ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சூரிய பகவான் தனது துணைவியிடம் அன்பு செலுத்தாத காரணத்தினால் அவள் மிகுந்த வருத்தம். இதனை நாரதர் மூலம் அறிந்த அவளது தந்தை சூரியனை சபித்து விட்டார். இதனால் சூரியன் தனது ஒளியை இழந்து வருந்தினார்.

🌻 இத்தலத்தில் தீர்த்தம் உண்டாக்கி பார்வதீஸ்வரரை வழிபட்டார். இவரது வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன் சாபத்தை நீக்கி அருளினார். சூரியன் வழிபட்டதால் பாஸ்கர லிங்கம்.

🌷ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻5 நிலை ராஜகோபுரம், 2 பிரகாரம், மேற்கு பார்த்த

சிவன் சிறப்பு, கோயிலின்

இடது பக்கம் மஹாமண்டபம் & அர்த்தமண்டபம்.

🌻 அம்மன் தெற்கு பார்த்து தனி சன்னதி. பிரகாரத்தில் அனைத்து சன்னதிகளும் உள்ளது.

இத்தல விநாயகர் – சம்பந்த விநாயகர், 63வர் அழகு. கோயிலின் எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. வெளி சுற்றில் வன்னி மரம் – ஸ்தல விருக்ஷம் – சமீவனம்.

🌻சனீஸ்வரர் இங்கே காகத்தின் மேல் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அமர்ந்திருப்பது வித்தியாசமான காட்சி.

🌻சனீஸ்வரனுக்குரிய திருநள்ளாறு கோயிலோடு இணைந்த கோவில் என்பதால், இங்கும் சனீஸ்வரருக்கு சிறப்பு உள்ளதெனவும் சனீஸ்வரருக்கு உற்சவ மூர்த்தி உள்ளதெனவும் தெரிவிக்கின்றனர்.

🌻 ஏர் ஏந்திய சிவன், மேற்கு நோக்கிய தனி சன்னதியில். சுவாமி அம்பாள் ஐம்பொன் திருமேனிகள் கண்ணை கவரும். சுவாமி கையில் ஏர் கலப்பை ஏந்தியுள்ளது பெரும் சிறப்பு.

🌻உள்சுற்றின் தென்புறம் தக்ஷிணாமூர்த்தி சிங்கங்கள் தாங்கி நிற்கும் சிம்மாசனத்தின் மீது அமர்ந்துள்ளார். எனவே இவர் அரசனைப் போல் அள்ளி தருவார்.

🌻 காரைக்கால் அம்மையார் அவதாரஸ்தலம். தனிசந்நிதி

🌻இறைவன் திருத்திணை நகரிலும், திருநாட்டியத்தான்குடி, கோவை பேரூரிலும் விவசாயியாக அம்புகையுடன் வயலில் வேலை செய்த செய்திகள் சிலிர்ப்பு..

🌷 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருமணத் தடை நீங்க

புத்திர பாக்கியம் கிடைக்க

கல்வி மற்றும் உத்தியோக மேன்மை

வறுமை மற்றும் பசிப்பிணி நீங்க

சூரிய தோஷ நிவர்த்தி

🌷 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆனி மாத விதை தெளி உற்சவம்

பங்குனி மாத சூரிய பூஜை

பங்குனி உத்திரம்

மஹா சிவராத்திரி

திருவாதிரை

நவராத்திரி

திருக்கார்த்திகை

ஐப்பசி அன்னாபிஷேகம்

🌷 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பார்வதிதேவி, பிரம்மா, சூரியன் அம்பரீசன், பல்குணன், சம்பந்தர் சேக்கிழார்

🌷 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

காரைக்கால் பேருந்து நிலையத்தின் பின்புறம் அல்லது அதன் மிக அருகிலேயே பாரதியார் சாலை மற்றும் திருநள்ளாறு செல்லும் பாதையின் தொடக்கத்தில் அமைந்துள்ளது.

அனைத்து பகுதிகளில் இருந்தும் காரைக்காலுக்கு பேருந்து வசதிகள் உண்டு.

7AM – 12NOON, 5PM – 8PM

95003 45451 & 99943 45452

சரவணபவ ஈசானசிவம் குருக்கள்.

99439 38104 கார்த்திகேயன் குருக்கள்.

குருக்களை அழித்துவிட்டு செல்வது சிறப்பு.

🌷 கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பூவ லர்ந்தன கொண்டுமுப்

போதுமும் பொற்கழல்

தேவர் வந்து வணங்கு

மிகுதெளிச் சேரியீர்

மேவ ருந்தொழி லாளொடு

கேழற்பின் வேடனாம்

பாவ கங்கொடு நின்றது

போலுநும் பான்மையே. 

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *