திருத்துறையூர் சிஷ்டகுருநாதேஸ்வரர்

🌻மூலவர் : சிஷ்டகுருநாதேஸ்வரர் / பசுபதிசுவரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்

அம்பாள் : சிவலோகநாயகி / பூங்கோதை

ஸ்தல விருக்ஷம் : கொன்றை

தீர்த்தம் : சூரிய புஷ்கரணி,

பாடல் : சுந்தரர், சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம் 47, நடுநாட்டு ஸ்தலம் 15

🌻ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்திரை மாதம் முதல் வாரத்தில் மாலை வேளையில் லிங்கம் மீது சூரிய ஒளி விழுகிறது.

🌻ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹திருவெண்ணைநல்லூரில் சிவனை பித்தா என்று பாடி வணங்கிய சுந்தரர் இத்தலத்திற்கு வந்தார். அப்போது தென்பெண்ணை ஆறு குறிக்கிடவே, கரையில் இருந்து சிவனை வேண்டி பதிகம் பாடினார்.

🌹அப்போது அங்கு ஒரு வயதான தம்பதியினர் வந்தனர். அவர்கள் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறுகரைக்கு அழைத்து வந்தனர். அப்போது சிவன் அவரது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கொண்டார்.

🌹சுந்தரர் சுற்றிலும் தேடிப் பார்த்தார். ஆனாலும் சிவனை காண முடியவில்லை. அப்போது முதியவர் அவரிடம், நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார், என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.

🌹சுந்தரர் மேலே பார்த்தபோது சிவன் அம்பாளுடன் ரிஷப வாஹனத்தில் காட்சி தந்தார். சுந்தரர் அவரிடம் தனக்கு உபதேசம் செய்யும்படி கூறினார். எனவே சிவன், சுந்தரருக்கு குருவாக இருந்து, “தவ நெறி” உபதேசம் செய்தார். ஆதலால் சிவனுக்கு “தவநெறி ஆளுடையார் “, “சிஷ்டகுருநாதேஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.

🌹சிவன் இங்கு குருவாக அருள் செய்வதால் வியாழக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடக்கிறது.

🌻ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கைலாயத்தில் சிவன் , பார்வதி திருமணம் நடந்த போது அகஸ்தியர் தென்திசைக்கு வந்தார். அவர் பல தலங்களில் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனின் திருமண கோலம் கண்டார். அவர் இத்தலம் வந்தபோது  திருமண கோலம் காண விரும்பி சிவலிங்கம் அம்பாள் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இருவரும் அவருக்கு மணக்கோலத்தில்  காட்சி தந்தனர்.

🌹இத்தலத்தில் அகஸ்தியர், சிவனை மேற்கு நோக்கியும், அம்பாளை வடக்கு நோக்கியும் வைத்து வழிபட்டாராம். அவர்களது திருமணம் வடக்கு திசையில் உள்ள கைலாய மலையில் நடந்ததால் இவ்வாறு செய்தாராம். 

🌹இதன் அடிப்படையில் அம்பாள் வாமதேவ முகமாக (வடக்கு பார்த்து) தனி சந்நிதியில் இருக்கிறாள். அம்பாளை இக்கோலத்தில் காண்பது அபூர்வம். 

🌻 நந்திகொடி பிரதோஷம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இக்கோயிலில் பிரதோஷத்தன்று நந்திக்கு பூஜைகள் செய்யப் படும்போது, அருகில் நந்திக் கொடி கட்டுகின்றனர். சிவ வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்ற நந்திக்கு பிரதோஷத்தின் போது, நந்தியின் படம் அச்சிடப்பட்ட கொடியை கட்டி வழிபடும் வழக்கம் முன்பிருந்தது. காலப்போக்கில் இவ்வழக்கம் மறைந்து விட்டது. 

🌹இலங்கையில் உள்ள சிவாலயங்களில் இந்த வழிபாடு தற்போதும் கடைபிடிக்க படுகிறது. இத்தலத்தில் நந்தி கொடிகட்டி பிரதோஷ பூஜைகள் நடப்பது விசேஷம்.

🌹சிவன் இத்தலத்தில் பெரிய லிங்க வடிவில் இருக்கிறார். ஆவுடை வலது பக்கம் இருக்கிறது. பௌர்ணமி மற்றும் திங்கள் சிறப்பு பூஜை நடக்கிறது. திருமண புத்திர தோஷம் உள்ளவர்கள் இந்நேரத்தில் நெய் விளக்கு ஏற்றி வில்வ இலை அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். 

🌹இங்கு முருகன், ஆறுமுகங்களுடன் சுப்பிரமணியராக இருக்கிறார்.

அருணகிரிநாதர் இவரை குருநாதர் என்று திருப்புகழில் பாடி இருக்கிறார். இவருக்கு அருகில் ஆதிகேசவர் தெற்கு நோக்கி தனி சன்னதியில் இருக்கிறார். 

🌹இங்குள்ள சுந்தரர் இடது கையில் செங்கோலை வைத்தபடி காட்சி தருகிறார். இவருக்கு மரியாதை செய்யும் விதமாக தலையில் தலைப்பாகை அணிவித்து அழகு பார்க்கின்றனர்.

🌹 கோவிலுக்கு எதிரே சுந்தரரை முதியவர் வடிவில் வந்து சிவன் தடுத்த இடத்தில், “தடுத்தாட் கொண்டீஸ்வரர்” 

மற்றும் “அஷ்டபுஜகாளி”க்கு சன்னதிகள் உள்ளன. சன்னிதிக்கு அருகில் மெய்க்கண்ட நாயனாரின் சீடரான அருணந்தி சிவாச்சாரியார் முக்தி அடைந்த இடம் இருக்கிறது.

🌻ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி சந்நிதிக்கு அருகே சிவன் – சுந்தரருக்கு காட்சி தந்த சிற்பம் உள்ளது. பிரகாரத்தில் பைரவர், சூரியலிங்கம் , ராமலிங்கம், பீமலிங்கம், சூரியன், ஆதிகேசவ பக்தவச்சலர், கஜலக்ஷ்மி..

இங்குள்ள நர்த்தன விநாயகர், தனி சன்னதியில் கிழக்கு பார்த்தபடி இருக்கிறார்.

மேற்கு நோக்கி சத்யோஜாத மூர்த்தியாக சிவபெருமானும் (அனுகிரஹ), வடக்கு நோக்கி ஞான சக்தி ஸ்வரூபியாக சிவலோக நாயகியும், தெற்கு நோக்கி வள்ளி தெய்வயானை  சமேத ஆறுமுகம் காட்சி அளிக்கின்றனர். இது வெகு அபூர்வம் சிறப்பு. கோயிலை வலம் வருகையில் விஷ்ணு துர்க்கை, பிரம்மா, லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி  தரிசனம்.

🌻 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹குரு ஸ்தலம் என்பதால் சிவன் & தக்ஷிணாமூர்த்தி 👉 வியாழன் சிறப்பு வழிபாடு – கல்வி ஞானம் சிறக்க வேண்டுதல்.

🌹தக்ஷிணாமூர்த்திக்கு 👉 மஞ்சள் புஷ்பம் சூட்டி, கொண்டை கடலை மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் வஸ்திரமும் சாத்துகிறார்கள். குருவின் அருளால் கோடி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம்.

மேலும் 

புத்திர பாக்கியம்

திருமணத் தடை நீங்க 

சூரிய தோஷ நிவர்த்தி மற்றும் லக்ன பலன்கள்

எதிரிகள் தொல்லை, பயம் நீங்க பிரார்த்தனைகள்..

🌻திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வைகாசி விசாகம் 10 நாள் பிரம்மோற்சவம், கந்த சஷ்டி, மஹாசிவராத்திரி,

ஐப்பசி அன்னாபிஷேகம்,  திருக்கிருத்திகை, சுந்தரர் குருபூஜை, பிரதோஷம், பௌர்ணமி 👉 விசேஷ நாட்கள்

தமிழ் வருடப்பிறப்பு, ஆருத்ரா தரிசனம், தை 5ம் நாள் 👉 ஆற்று திருநாள் + பல உற்சவங்கள் சிறப்பு.

🌻 வழிபட்டோர்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அகத்தியர் / நாரதர் / வசிஷ்டர் / பீமன் / சூரியன் / ராமர் / சீதை / அப்பர் / சுந்தரர் / சேக்கிழார்

🌻அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

10 KM from திருவதிகை.

பண்ருட்டி புதுப்பேட்டை சாலை வழியாக, சின்னப் பேட்டை வழியில் திரும்பி பெண்ணையாறு ஏறியவுடன்  கன்றக்கோட்டை வழியாக..

6.30AM – 11.30AM & 5PM – 7.30PM

9443046376 துரைசாமி குருக்கள்

9444807393 முரளி குருக்கள் 

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌻கோயில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மலையார் அருவித்

திரள்மா மணிஉந்திக்

குலையாரக் கொணர்ந்தெற்றி

யோர்பெண்ணை வடபால்

கலையார் அல்குற்கன்

னியர் ஆடும்துறையூர்த்

தலைவா உனைவேண்டிக்

கொள்வேன் தவநெறியே. 1

சுந்தரர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *