திருச்சோற்றுதுறை ஓதவனேஸ்வரர் சோற்றுத்துறை நாதர்

🌹மூலவர் : சோற்றுத்துறைநாதர் ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர்

அம்பாள் : அன்னபூரணி தொலையாச் செல்வி

ஸ்தல விருக்ஷம் : வில்வம்

தீர்த்தம் : காவிரி தீ, சூரிய தீ, குடமுருட்டி,

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 13.

🌹ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻இத்தல இறைவளை வழிபடும் அடியார்களின் பசிப்பிணி தீர இறைவன் சோறு வழங்குபவன் எனும் பொருளை தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பணி தீர வீடுபேறு தருபவன் எனும் பொருளும் உண்டு.

🌻இது காசிக்கு அடுத்த படியாக ‘அட்சய பாத்திரம்’ கொடுத்த தலமாகும்.

🌻அருளாளருக்காக “அட்சய பாத்திரம்” அருளிய சிவபெருமான்

எழுந்தருளியிருக்கும் இத்தலமே ஏழூர் தலங்களில் ஒன்றான திருசோற்றுத்துறை.

🌻திருவையாற்றில் தொடங்கி, திருபழனம், திருச்சோற்றுத்துறை என்ற சப்தஸ்தான தலங்களில் இது 3வது.

🌻இத்தலத்தை ராமலிங்க வள்ளலாரும் அருணகிரிநாதரும் போற்றியுள்ளனர்.

🌹 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻நந்தி பகவானுக்கும் ,

வியாக்ரபாதரின் மகளான சுயம் பிரகாசைக்கும் பங்குனி மாதம் புனர்பூச திருநாளன்று மழப்பாடியில் திருமணம் நடைபெறும்.

🌻சித்திரை மாதம் திருவையாறு பெருமானான ஐயாரப்பருக்கு பிரம்மோற்சவம்.

🌻அதன் நிறைவு நாளில் நந்திதேவரையும் சுயம் பிரகாசையையும் வெட்டிவேர் பல்லக்கில் ஏற்றுவர்.

ஐயாரப்பரும் அறம் வளர்த்த நாயகியும் கண்ணாடி பல்லக்கில் ஏற்றி கொள்வர்.

🌻காலை 6 மணிக்கு திருவையாறில் புறப்படும் இந்த கோஷ்டி, முதலில் திருபழனம் செல்லும். அங்கு ஆபத்சகாயரும் பெரியநாயகியும் இவர்களை எதிர்கொண்டு அழைத்து உபசாரம் செய்வர்

🌻பின்னர் அவர்களும் சேர்ந்துகொள்ள, அடுத்த இடம் திருச்சோற்றுதுறை. அதன் எல்லையிலேயே அவர்களை எதிர்கொண்டு அழைக்கும் சோற்றுதுறை நாதரும் அன்னபூரணி அம்மையும் ஊருக்குள் அழைத்து போவார்கள்.

🌻திருச்சோற்றுதுறையில் வருபவர் அனைவருக்கும் அன்னம் பாலிக்கப்படும் . பின்னர் இந்த ஊர்வலம் திருவேதிக்குடி நோக்கி தொடரும்.

🌹சப்தஸ்தான விழா :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻திருவையாறு பஞ்சநதீஸ்வரர், நந்தி & சுயம்பிரகாசை திருமணத்தை தமிழ்

மாதமான பங்குனி புனர்பூசம் திருமழப்பாடியில்

நடந்த முடிவு செய்தார்.

அதற்கு தேவையான விஷயங்கள் 👉

🌷வேத பிராமணர்கள் @திருவேதிக்குடி

🌷பழங்கள் @திருப்பழனம்

🌷கண்டி (ஆபரணங்கள்) @திருக்கண்டியூர்

🌷பூ & மாலைகள் @திருப்பூந்துருத்தி

🌷 யாகங்களுக்கு நெய் பெற @திருநெய்தானம்

🌷திருமணத்திற்கு பிறகு நன்றி தெரிவிக்கும் விதமாக பஞ்சநதீஸ்வரரும்,

தர்மசம்வர்த்தினி தேவியும் பல்லக்கில் ஒவ்வொரு தலத்திற்கும் வந்ததாக நம்பப்படுகிறது. இந்த நிகழ்வு தான் சப்தஸ்தானம். இந்த அற்புதமான திருவிழாவை காண நாடு முழுவதுமிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

7 கோயில்கள்👉

🌷ஐயாரப்பர் கோயில் திருவையாறு.

🌷ஆபத்சகாயேஸ்வரர் கோவில் திருப்பழனம் ,

🌷ஓதவனேஸ்வரர் திருச்சோற்று துறை,

🌷வேதபுரீஸ்வரர் கோவில் திருவேதிக்குடி ,

🌷கண்டீஸ்வரர் கோவில் திருக்கண்டியூர்.

🌷புஷ்பவன நாதர், திருப்பூந்துருத்தி

🌷நெய்யாடியப்பர் கோவில், திருநெய்தானம்

🌹ஸ்தல வரலாறு :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻ஒரு முறை நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட பொழுது அருளாளன் என்ற சிவபக்தன் பசியால் வாடினான். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பசியால் துடித்தனர். வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், “என்ன கொடுமை இது இறைவா! இப்படி மக்களை பசியால் தவிக்க விடுகிறாய்..❓இது நியாயமா❓என சண்டை போட்டான்!!

🌻பசியின் கொடுமையால் கோவில் அர்ச்சகர் ஒரு மாதம் முன்பே வருவதை நிறுத்திவிட்டார். மாலையில் வந்து விளக்கு மட்டும் வைத்த ஊழியன் இரண்டு நாட்கள் முன்னால் கீழே விழுந்து விட்டான்.

🌻விளக்கு கூட இல்லாமல் இருட்டில் கிடந்த சிவ மூர்தத்தை பார்த்து கொண்டிருந்த அருளாளர் திடீரென்று வாயில்படியில் மோதி அழத் தொடங்கினார்.

🌻திடீரென்று மழைபொழிய ஊரே வெள்ளக் காடானது.

அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. அதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுத்தார்.

🌻“அருளாளா! அது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.” இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு என அசரீரி கேட்டது. இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும் நெய்யும் குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார். கடவுள் கண்களை திறந்துவிட்டார் என ஊர் மகிழ்ந்தது.

🌹 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கிய கோவில்.

உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரம். அதன் தென்கிழக்கு பகுதியில் தனிக்கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்கு பார்த்து.

மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை. இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு. அள்ள அள்ள குறையாமல் வழங்கிய சிவனுக்கு தொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும்

அம்மைக்கு அன்னபூரணி என்றும் திருநாமங்கள். அம்மையை உளமார

வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகிவிடும்.

🌻ராஜகோபுர வாயிலில் ஒரு புறம் விநாயகர் . மறுபுறம் முருகன். அடுத்துள்ள பெரிய மண்டயத்தின்

வலப்பக்கம் நடராஜ சபை.

🌻மண்டபத்திலிருந்து நேரே மூலவர், கிழக்கு பார்த்த தனி சந்திதி. உள்ளே ஆறுமுகர், மஹாவிஷ்ணு, அடுத்து கௌதமர் வழிபட்ட காட்சியை விளக்கும் சிற்பம்.

🌻அதிகார நந்தியை வணங்கி விட்டு உள்ளே நுழைந்தல் மஹாமண்டபம், அர்த்தமண்டபமும் தான்டி உள்ளே நோக்கினால் சோற்றுதுறை நாதர் எனும் தொலையாச் செல்வர்

🌻இந்த பழமையான கோயில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் உள்ளது.

சோழமன்னர்களின் பல

கல்வெட்டுகள் உள்ளன.

🌻கருவறைக்கு அருகில் அருளாளர் தம்பதிகளின் ( சிவபெருமானிடம் அட்சய பாத்திரம் பெற்ற ) சிலைகளையும் காணலாம்.

🌹பிரார்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻பசிப்பிணி மற்றும் வறுமை நீங்குதல்

🌻மறுபிறவி இன்மை (முக்தி)

🌻திருமணதடை உள்ளவர்கள் சித்திரையில் நடைபெறும் நந்தியின் திருமணவிழாவை கண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

🌹 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சப்தஸ்தான விழா,

( ஏழூர் திருவிழா )

சித்திரை விசாகம்,

மஹா சிவராத்திரி,

மார்கழி திருவாதிரை,

திருக்கார்த்திகை

🌹 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻பிரம்மா விஷ்ணு இந்திரன் கௌதமமுனிவர், சூரியன், சம்பந்தர், அப்பர் ,சுந்தரர், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், அருணகிரிநாதர், ராமலிங்க வள்ளலார்

ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

இத்தல இறைவனை வழிபட்டு இந்திரன் பதவி பெற்றான். கௌதமர் முக்தி பெற்றார்.

🌹அமைவிடம், நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻தஞ்சாவூர் திருவையாறு வழி வருபவர்கள் கண்டியூரை அடைந்து அய்யம்பேட்டை சாலையில் 5KM சென்றால் கோவில். கும்பகோணத்தில் இருந்து வருபவர்கள் அய்யம்பேட்டை அடைந்து கண்டியூர் சாலையில் 5KM சென்றால் கோவில்.

திருவையாற்றிலிருந்து திருச்சோற்றுத்துறை செல்ல நகரப் பேருந்து (Town Bus) மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.

திருக்கண்டியூர் 4KM

திருவையாறு 6.5KM

திருப்பூந்துருத்தி 7KM

7 AM – 12 NOON, 5 PM – 8 PM

99438 84377 கண்ணன் INCHARGE

கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்

துப்ப னென்னா தருளே துணையாக

ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்

றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *