திருசக்கரப்பள்ளி சக்கரவாகேஸ்வரர்
மூலவர் : சக்கரவாகேஸ்வரர்
அம்பாள் : வேதநாயகி
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : காவிரியாறு, காக தீ, திருக்குளம்
ஊர் : அய்யம்பேட்டை
பாடல் : சம்பந்தர் சுயம்பு DPPS.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என வழங்கப்படுகிறது.
திருமால் இத்தல இறைவனை வழிபட்டு சக்கராயுதம் பெற்றதினால் இத்தல இறைவனுக்கு சக்கரவாகேஸ்வரர் என்றும்,
ஊர் சக்கரப்பள்ளி என்றும் பெயர்.
மேலும் இத்தல இறைவனை பிரம்மன் சக்கரவாக பறவையாக உருமாறி பூஜை செய்து சாபம் நீங்க பெற்றதால் இப்பெயர் எனவும் வரலாறு.
கருவறை கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தல இறைவன் எமனை சாடியதால் இவர் எமபயம் போக்க வல்லவர் என்றும் அதற்கு சாட்சியாக வேதநாயகி சன்னதி எதிரில் பெண்களுக்கு மாங்கல்ய பலன் அருள்வதும், எம பயம் நீக்க வல்லதுமான குங்கிலிய குண்டம் அமைந்துள்ளது.
இத்தல இறைவி தன்னை துதிக்கும் பக்தர்களுக்கு அருள்வதற்தாக ஒரு காலை முன்பு எடுத்து வைத்த நிலயில் அருள் புரிகிறாள்.
தக்ஷிணாமூர்த்தி வேறு எங்கும் காண இயலாத சிற்ப அழகுடன் 5 தலை நாகம் குடை பிடிக்க ஆலமரத்தின் கீழே அமர்ந்து தன்னை நாடும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் .
இங்கு நவகிரஹம் இல்லை. இறைவனே நவகிரஹ நாயகனாக அருள் ஆட்சி செய்து வருகிறார்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இங்கு சப்த மாதர்கள் வழிபாடும் அதிகம். மஹிஷாசுரனை வதம் செய்ய அன்னை ஆதிபராசக்திக்கு துணையாக நின்றவர்கள் சப்த மாதர்கள்.
பிரம்மனின் சக்தியாக பிராம்மி மகேசன் சக்தியாக மகேஸ்வரி முருகனின் சக்தியாக கௌமாரி மகாவிஷ்ணுவின் சக்தியாக வைஷ்ணவி வராகருக்கு வாராகி இந்திரன் சக்தியாக இந்திராணி துர்க்கையின் சக்தியாக சாமுண்டி ஆகியோர் சப்தமாதர்.
சப்த மாதர்கள் சப்த ஸ்தலங்களில் தனித்தனியே சிவனை வழிபட்டு பெருநிலை பெற்றனர். சிவனை வழிபட்டு ஏழு விதமான தரிசனம் பெற்றனர். இது பற்றி அறிந்த பார்வதி தேவி இந்த ஏழு ஸ்தலங்களில் வழிபட்டு ஏழு விதமான தரிசனம் பெற்றார்.
சக்கரப்பள்ளியில்
சிவ நேத்திர தரிசனமும்
அரியமங்கையில்
கங்கா தரிசனமும்
சூலமங்கையில்
திரிசூல தரிசனமும்
நந்திமங்கையில்
திருக்கழல் தரிசனமும்
பசுமங்கையில்
உடுக்கை தரிசனமும்
தாழமங்கையில்
நாக தரிசனமும்
புள்ளமங்கையில்
ஆலகால விஷத்தை இறைவன் அமுதாக மாற்றிய காட்சி தரிசனமும் பார்வதி தேவிக்கு கிடைத்தது.
முக்தி அளித்தார்
காசியிலிருந்து வந்த அநவித்யநாத சர்மா- அனுக்ஞை தம்பதியினர் ராமேஸ்வரம் செல்லும் வழியில் இத்தலத்தில் தங்கினர். இறைவன் அவர்கள் கனவில் எழுந்தருளி சப்த மாதர்கள் வழிபட்ட சப்த ஸ்தலங்களை பல்லக்கில் புறப்பாடு செய்ய கூறினார். அவ்வாறு செய்ததால் அவர்களுக்கு முக்தி அளித்தார். இன்றும் இவ்விழா நடக்கிறது.
இந்திரன் குமாரனான ஜெயந்தனும் தேவர்களும் பூதித்த ஸ்தலம். இத்தல இறைவனை சக்கரவாக பறவை வழிபடும் புடைப்பு சிற்பமும், சோழ அரசி செம்பியன் மாதேவி வழிபடும் புடைப்பு சிற்பமும் உள்ளது
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம். கருவறை மற்றும் விமானத்துடன் கூடிய மூலவர் சன்னதி தரைத்தளத்திலிருந்து சற்று தாழ்ந்த நிலையில் காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை ஆகியோர் உள்ளனர். சன்னதியில் நால்வர், சூரியன், பைரவர், சந்திரன், நாகங்கள் & பிரகாரத்தில் விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் இடப்புறம் தேவநாயகி அம்மன் சன்னதி உள்ளது.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
எம பயம் நீங்குதல் மற்றும் ஆயுள் பலம்
மாங்கல்ய பலம் மற்றும் தீர்க்க சுமங்கலி வரம்
திருமணத் தடை நீங்குதல் மற்றும் குடும்ப ஒற்றுமை
கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி
சப்தமங்கை தலம் (பெண் குழந்தைகள் வழிபாடு)
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி உத்திரம் மற்றும் சப்தஸ்தான திருவிழா 10நாட்கள்
பொம்மை போடும் நிகழ்ச்சி
ஏழூர் பல்லக்கில் 2ம் நாளில் அய்யம்பேட்டை மதகடி பஜார் அருகில், அழகு நாச்சியம்மன் கோவில் முன்பு பொம்மை போடும் நிகழ்ச்சி சிறப்பு. 1000 கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெறும்.
எவ்வளவு ஆட்டம் ஆடினாலும் முடிவில் இறைவனிடம் தான் தஞ்சமடைய வேண்டும் என்பதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இந்த பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
ஐப்பசி அன்னாபிஷேகம்
மார்கழி திருவாதிரை / ஆருத்ரா தரிசனம்
மஹாசிவராத்திரி
வைகாசி ஆதிசங்கரர் ஜெயந்தி
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருமால், ஜயந்தன், தேவர்கள், சக்கரவாகப்பறவை, (பிரம்மன் சக்கரவாகப் பறவையாக உருமாறி வழிபட்டார் என்பார்.), சூரியன், இந்திரன், குபேரன், அநவித்யநாதசர்மா, அகவிக்ஞை, சம்பந்தர், சேக்கிழார் ஆகியோர்.
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தஞ்சாவூர் to கும்பகோணம் or கும்பகோணம் to தஞ்சாவூர், பேருந்துகளில் ஏறி அய்யம்பேட்டை பேருந்து நிலையம் இறங்கி, 250 மீ நடந்தால் கோவில்.
தஞ்சாவூர் 17 KM
கும்பகோணம் 23 KM
9AM – 11AM, 5PM – 7PM
97914 82102 கணேசன் குருக்கள்
குருக்களை அழித்துவிட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
படையினார் வெண்மழு பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவு இடம் சக்கரப்பள்ளியே.
ஞானசம்பந்தர்


Leave a Reply