திருக்கோழம்பம் திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர்
மூலவர் : கோகிலேஸ்வரர் / கோழம்பநாதர் / கோகர்னேஸ்வரர்
அம்பாள் : சௌந்தர்யநாயகி
ஸ்தல விருக்ஷம் : வில்வம் / முல்லைக்கொடி
தீர்த்தம் : பிரம்ம தீ,
பாடல் : அப்பர் சம்பந்தர்
சுயம்பு, தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம் சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 35
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தல லிங்கத்தின் பானம் மிகவும் பெரியது.
பார்வதி பசுவாய் இருந்து பூஜித்ததை எடுத்துக்காட்ட
பசுவின் கால்குளம்பு ஆவுடையின் மேல் பதிந்துள்ளது
திருவாவடுதுறை ஆதீனம் கோவில்.
கிருத யுகத்திலே PD யால்
(பசு வடிவில்) பூஜை செய்யப்பட்டது. திரேதா யுகத்தில் மஹாவிஷ்ணு பூஜை. துவாபர யுகத்தில் சந்தன் எனும் வித்தியாதரனின் சாபம் நீங்க பெற்றது. கலியுகத்தில் ஞானசம்பந்தர் அப்பர்.
ரொம்ப உசத்தியான க்ஷேத்ரம்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சில க்ஷேத்ரங்கள் நக்ஷத்திரத்தை ஒட்டி வரும். இது யோகத்திற்கு உண்டான க்ஷேத்ரம். திதி வார யோக நக்ஷத்ர கரண என்கிறோம் இல்லையா, அதுதான் பஞ்சாங்கம். அதுல “வ்யதிபாதம்”னு யோகம் இருக்கும். அந்த யோகத்திற்கு உண்டான க்ஷேத்ரம். So ஸ்வாமிக்கு “வ்யதிபாதேஸ்வரர்” என்ற திருநாமமும் உண்டு. மார்கழி மாதத்தில் வ்யதிபாத தினத்தில் சிவபெருமானை நெய் தீபம் போட்டு ஆராதனை பண்ணினால் ஆயிரம் சூரிய சந்திர கிரகணத்திற்கு சமம். இங்கே வந்தாலே ஆயிரம் சூரிய சந்திர கிரஹண தரிசன பலாபலன் கிடைக்கும்.
1946/47 மஹா பெரியவா சாதுர் மாஸ்ய விரதம் கும்பகோணம் தங்கி இந்த க்ஷேத்ரம் மஹிமையை EXCLUSIVEஆ எடுத்துப் பேசி இருக்கா. ஜன்மாவின் பாவம் தீரனும்னா வ்யதிபாதத்துல நடராஜ தரிசனம் பண்ணனும்.
பிரம்மா பொய் சொன்னதற்காக சாப நிவர்த்திக்காக இங்க வந்து தீர்த்தம் அமைத்து பூஜை பண்ணி இருக்கார். (ஏன் அடி/ முடி )
இந்திரன் தனக்கு அகலிகை கௌதமரின் சாபம் நீங்க பல காலம் இங்கு சிவனை பூஜித்து சாபம் நீங்க பெற்றான். மேலும் ஜகன்மாதாவே பூமிக்கு வந்து பூஜித்த ஸ்தலம்.
சாப விமோசனம் தரும் ஸ்தலம்.
ஸ்தல புராணம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவனும் பெருமாளும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடினர். ஆட்டத்தில் காய் உருட்டுவதில் சந்தேகம் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன். பார்வதி தேவி பெருமாளுக்கு சாதகமான பதில் கூறினார். இதனால் பார்வதி தேவியை பசுவாக பூமியில் பிறக்கும்படி சாபம் இடுகிறார். இப்படி பசுவாகப் பிறந்த அம்பாள், இத்தலம் வந்து இறைவனை பூஜித்து மீண்டும் தன் கணவனை அடைந்தாள்.
தேவலோகத்தில் தேவேந்திரன் சிவபூஜை செய்து கொண்டிருக்கும் பொழுது எங்கேயோ விசனமாக பார்த்துக் கொண்டிருந்தான் சந்தன் எனும் வித்யாதரன். பறவை மாதிரி பறந்துண்டே இருக்கியே பறவயாகப் போ என சாபம். குயிலாகப் பிறந்தான். அவனுக்கு நிவர்த்தியே கிடைக்கலை. பிரம்மா பூஜை செய்த இந்த க்ஷேத்ரம் வந்து தினமும் பூஜை செய்கிறான்.
தனுர் மாதத்தில் வ்யதிபாத தினத்தில் பிரம்ம தீ ல் குளித்ததும் சிறிது நிறம் மாறியது. தனது அலகால் கீழே கிடந்த வில்வத்தை எடுத்துக்கொண்டு சுவாமியிடம் செல்ல, வில்வம் சுவாமியின் மேல் விழுகிறது. தன் சுயரூபம் பெறுகிறான்.
தன்னை மறந்து இந்த சந்நிதியில் ஒரு நொடி பொழுது நின்றாலும் சாப நிவர்த்தி. குயில் (கோகில) வடிவத்துடன் வந்து பக்தன் பூஜித்ததால் இப்பெருமான் கோகிலேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
ஆனந்த தரிசனம், அனைவருக்கும் சௌபாக்யமே.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சோழர்களின் முற்காலக் கலைப்பாணியில் அமைந்த கிழக்கு நோக்கிய பழமையான கற்றளி கோயிலாகும். கோயிலின் எதிரில் தீர்த்தக் குளமும், கிழக்கு நோக்கிய ராஜகோபுரமும் உள் பிரகாரமும் உள்ளன. மூலவர் பசுவின் காற்குளம்பு இடறியபோது வெளிப்பட்ட சுயம்பு மூர்த்தி நீண்டபாணம். அம்பிகையின் திருநாமம் செüந்தர்ய நாயகி. மிகுந்த லாவண்யத்துடன், சுமார் 5 1/2 அடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், அபய வரத ஹஸ்தங்களுடன், அட்சர மாலை, கமண்டலத்தைத் தாங்கி தோற்றமளிக்கும் அதிஅற்புத தரிசனம் நல்குகிறாள். மகாமண்டபம் மற்றும் நடராச சபை ஆகியவை உள் பிராகாரத்தில் அமைந்துள்ளன. 1200 வருடங்கள் பழமையான கோவில்.உள் சுற்றில் விநாயகர், முருகப்பெருமான், கஜலட்சுமி, பைரவர் மற்றும் அப்பர் ஆகியோரின் சன்னதிகள் தனித்தனியாக அமைந்துள்ளன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சாப விமோசனம் மற்றும் பாவங்கள் நீங்குதல்
தீராத நோய்கள் குணமாகுதல்
மன அமைதி மற்றும் வாழ்வியல் தடைகள் நீங்குதல்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மார்கழி தனுர் மாத வ்யதீபாதம்
பங்குனி உத்திரம்
கார்த்திகை சோமவாரம்
மஹாசிவராத்திரி
திருவாதிரை
நவராத்திரி
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அம்பிகை, பிரம்மன், மஹாவிஷ்ணு, சந்தன் என்னும் வித்யாதரன், இந்திரன், சம்பந்தர், அப்பர், சேக்கிழார், முதலியோர்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தலம் கும்பகோணம் – மயிலாடுதுறை சாலை மற்றும் கும்பகோணம் – காரைக்கால் சாலைக்கு அருகில், திருவாவடுதுறைக்குக் கிழக்கே சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் செல்லும் பேருந்துகளில் ஏறி, திருநீலக்குடிக்கு அடுத்துள்ள எஸ். புதூர் (S.Pudur) என்ற நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து வடக்கே பிரியும் தனிப்பாதையில் சுமார் 1.5 முதல் 2 கி.மீ பயணித்தால் கோயிலை அடையலாம்.
கும்பகோணம் மயிலாடுதுறை வழி ஆடுதுறை அல்லது திருவாவடுதுறை நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ அல்லது உள்ளூர் வாகனங்கள் மூலம் கிழக்கே 5 கி.மீ பயணித்து கோயிலை அடையலாம்.
8AM – 1PM, 5PM – 8PM
93810 29050 வைத்தியநாத குருக்கள்
ஒரு கால பூஜை மட்டும் உள்ள கிராமத்துக் கோவில், குருக்கள் 9AM – 10AM மட்டும் இருப்பார்.
மெய்காவல் முழு நேரமும் இருப்பார். குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோயில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நீற்றானை நீள்சடை மேல்நிறை வுள்ளதோர் ஆற்றானை அழகமர் மென்முலை யாளையோர் கூற்றானைக் குளிர்பொழில் கோழம்பம் மேவிய ஏற்றானை ஏத்துமின் நும்மிடர் ஏகவே.”


Leave a Reply