திருக்கூடலையாற்றூர் நர்த்தன வல்லபேஸ்வரர்

🌹 மூலவர் : நர்த்தனவல்லபேஸ்வரர்

அம்பாள் : ஞானசக்தி & பராசக்தி

ஸ்தல விருக்ஷம் : கல்லால மரம்

தீர்த்தம் : பிரம்ம அகஸ்திய சங்கம கார்த்தியாயன தீ+ வெள்ளாறும் மணிமுத்தாறும் கூடும் இடம்.

புராணப் பெயர் : தக்ஷிணப்ரயாகை

பாடல் :சுந்தரர், சுயம்பு,

35வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், நடுநாட்டு ஸ்தலம் 3

🌹ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻சித்திரை மாதம் முதல் மூன்று தேதிகளில், மூலவரின் மீது சூரிய ஒளி பட்டு, சூரிய பூஜை நடக்கிறது. சோழர்களால் கட்டப்பட்ட சிவாலயம்.

🌹ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻பொதுவாக படிக்கிற குழந்தைகளுக்கு மறதி பெரிய குறைபாடு ஆகும். எவ்வளவு படித்தாலும் மறுநாளே மறந்து விடுகிறார்கள். மஹரிஷி அகஸ்தியர் கூட இத்தலத்தில், தான் கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்க இறைவனை பிரார்த்தித்தார். எனவே இங்கு குழந்தைகளை அழைத்து வந்து படித்த பாடங்கள் மறக்காமல் இருக்க வேண்டுதல்.

🌻மேலும் பிரம்மாவும் சரஸ்வதியும் விஜயம் செய்த ஸ்தலம் இது. எனவே கல்விக்கு தொடர்பான பிரார்த்தனைகளை செய்ய ஏற்ற ஸ்தலமாக இதை கருதுகின்றனர்.

🌻பிரம்மாவும்  சரஸ்வதியும் இங்கு தவம் புரிந்து சிவனின் நர்த்தனம் கண்டனர். எனவேதான் இத்தல இறைவன் நர்த்தன  வல்லபேஸ்வரர். சுந்தரர் பாடல்.

🌻மணிமுத்தாறு வெள்ளாறு நதிகள் கூடுவதனால் இத்தலத்திற்கு “தக்ஷிண பிரயாகை” என்ற பெயர் உண்டு

🌻எமதர்மராஜாவின் பிரதிநிதி சித்திரகுப்தருக்கு சன்னதி இருப்பது சிறப்பு ( வெகு சில கோவில்களில் மட்டும் )

🌻நவகிரஹ சந்நிதி கிடையாது. தனி சன்னிதியில் பொங்கு சனீஸ்வரர் அருள் பாலிக்கிறார். ஏழரை சனி நடப்பவர்கள் பிரதோஷ காலத்தில் நந்தியையும் பொங்கு சனியையும் தரிசித்தால் தோஷம் குறையும் என்பது நம்பிக்கை.

🌹மஹாலக்ஷ்மி அவதாரம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻அகத்தியருக்கு கார்த்தியாயனன் என்ற மகன் பிறந்தான். அவனும் தந்தையை போல பெரிய ரிஷி ஆனான். அதன்பின் அகஸ்தியர், தனக்கு ஒரு மகள் வேண்டும் என இங்குள்ள இறைவனை வேண்டினார். இறைவனின் விருப்பப்படி மஹாலக்ஷ்மி, இங்கு ஓடும் மணிமுத்தாறு நதியில் இருந்த தாமரை மலர் மீது விளையாடுவதைக் கண்டார். குழந்தையை எடுத்து அம்புஜவல்லி என பெயரிட்டு வளர்த்து வந்தார். மஹாவிஷ்ணு வராஹ அவதாரம் எடுத்தபோது, தன் துணைவி இங்கு அம்புஜவல்லியாக வளர்வதை அறிந்து மணம் செய்து கொண்டார். இங்கு விஷ்ணுவிற்கும் சன்னதி உள்ளது.

🌹ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻சோழநாட்டு மன்னன் தினகரன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவளை கொன்று விட்டான். இதனால் அவனுக்கு பிரம்மஹத்தி தோஷம்.  அதனால் மனைவி மக்களை இழந்து சுற்றித் திரிந்தான். அவனை ஒரு சொறி நாய் தான் பின் தொடர்ந்தது. ஒரு நாள் அந்த நாய் ஒரு நதியில் மூழ்கி எழுந்தவுடன் ஆரோக்கியத்துடனும் தோற்ற பொலிவுடனும் விளங்கியது.

🌻இதைப் பார்த்த மன்னன் தானும் அந்நதியில் நீராடி, தனது தோஷம் நீங்க பெற்று, நாடு நகரத்தை திரும்பப் பெற்றான். அவன் நீராடிய இடம் 2 நதிகள் கூடும் இடம். SO திருக்கூடலயாற்றூர் என பெயரும் வைத்தான். அந்த நதிகளின் கரையில் சிவாலயமும் கட்டினான்.

🌻மன்னன் கட்டிய கோவில் பின்னாளில் பழுதடைந்தது. சிலைகளை காணவில்லை. அப்போது அம்மன், அவ்வூர் பொன்னப்ப குருக்கள் இன் கனவில் தோன்றி நான் ஆற்றில் கிடக்கிறேன் என்றாள். அதன் பின் குருக்கள் ஆற்றில் கிடந்த சிலைகளை எடுத்து தற்போதுள்ள கோவிலைக் கட்டி சிலைகளை பிரதிஷ்டை செய்தார்.

🌹ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻சுயம்பு, பொதுவாக சிவன் கோவில்களில் ஒரு அம்மன் சன்னதி, இங்கே 2, ஞானசக்தி சன்னதியில் குங்குமமும் பராசக்தி சன்னதியில் விபூதியும் பிரசாதமாக தரப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு விருத்தியாகும் ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை.

🌻3 நிலை ராஜகோபுரம், கோஷ்டத்தில் துர்க்கை பிரம்மா  லிங்கோத்பவர், தக்ஷினாமூர்த்தி உள்ளனர்.

சித்ரகுப்தருக்கு தனி சன்னதி சிறப்பு, உற்சவர் ஒரு கையில் எழுத்தாணியும் மறு கையில் ஏடும் வைத்திருக்கிறார். 

முருகன் பன்னிரு கரங்களுடன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது கிழக்கு நோக்கி உள்ளார்.

🌹 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻கல்வி அறிவு மேம்படுவதற்கும், கற்ற வித்தைகள் மறவாமல் இருப்பதற்கும் சிறப்பானதாக விளங்குகிறது. 

🌻கல்வி வளர்ச்சி: இத்தலத்தில் உள்ள ஞானசக்தி மற்றும் பராசக்தி அம்மன்களை வழிபடுவதால் கல்வி அறிவு விருத்தியாகும்.

🌻ஞாபக சக்தி: கற்ற வித்தைகள் மறக்காமல் இருக்கவும், கல்வித் தடைகள் நீங்கவும் மாணவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

🌻சனி தோஷம் நிவர்த்தி: இத்தலத்தில் உள்ள பொங்கு சனீஸ்வரரை வழிபட சனி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்

🌻குழந்தை பேறு : கார்த்தியாயனர் இத்தலத்தில் வழிபட்டு மகப்பேறு பெற்றுள்ளார். குழந்தை வரம் வேண்டுவோர் பிரார்த்தனை.

🌹திருவிழாக்கள் :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻மாசி 13 நாள் பிரமோற்சவம் சிறப்பு.

மாசி மகம் கொடியேற்று விழா.

சித்திரை முதல் மூன்று நாட்கள் சூரிய பூஜை.

மஹா சிவராத்திரி, திருக்கார்த்திகை, பௌர்ணமி பிரதோஷம் வழிபாடுகள் சிறப்பு.

🌹வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻திருமால், மஹாலக்ஷ்மி பிரம்மா,  சரஸ்வதி, யமன், சித்ரகுப்தன், அகத்தியர், கார்த்யாயனர், கண்வர், வான்மீகி முனிவர், சுந்தரர், சேக்கிழார், தினகர மன்னன், அருணகிரிநாதர்

🌹அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌻கடலூர் மாவட்டத்தில் வெள்ளாறு மணிமுத்தாறு கூடும் இடத்தில் உள்ளது.

கும்பகோணம் – சேத்தியாதோப்பு சாலையில் குமாரகுடி வந்து, அங்கிருந்து ஸ்ரீமுஷ்ணம் செல்லும் பாதையில் பிரிந்து 2 கி.மீ சென்று, காவாலகுடி சாலையில் திரும்பி மேலும் 2 கி.மீ சென்று காவாலகுடியை அடைந்து, அங்கிருந்து திருக்கூடலையாற்றூரை அடையலாம்.

விருத்தாசலத்தில் இருந்து ஸ்ரீமுஷ்ணம் வழியாக சுமார் 31 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது.

நிறைய பேருந்து வசதிகள் உள்ளது.

6AM – 12NOON 4PM – 8PM

சிவசுப்பிரமணியம் குருக்கள் 

75388 17934

கோவில் குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🌹 கோயில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வடிவுடை மழுவேந்தி

  மதகரி உரிபோர்த்துப் 

பொடியணி திருமேனிப்

  புரிகுழல் உமையோடும் 

கொடியணி நெடுமாடக்

  கூடலை யாற்றூரில் 

அடிகள்இவ் வழிபோந்த

  அதிசயம் அறியேனே. 1

 சுந்தரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *