திருக்குரக்கா திருக்குரக்காவல் குந்தளேஸ்வரர் கோயில்

🌸 மூலவர் : குந்தளேஸ்வரர்

அம்பாள் : குந்தளாம்பிகை

ஸ்தல விருக்ஷம் : வில்வம் / அசோக மரம்

தீர்த்தம் : கணபதிநதி, அனுமன்தீ

பாடல் : அப்பர், சுயம்பு தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை தலம் 28.

🌸ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹தொழில் அபிவிருத்தி ஸ்தலம்

🌹இங்கு சிவபெருமான் சுயம்பு மணல் லிங்கமாக அருள் பாலிக்கிறார்

🌹 திருநீற்றுப் பட்டையுடன் அனுமன், சிவ பக்த ஆஞ்சநேயராக அருள் பாலிக்கும் ஒரே ஆலயம்.

🌹இங்கு ஆஞ்சநேயர் படைக்கும் தொழிலை பெறுவதற்காக தவம் செய்து கொண்டிருக்கிறார், மற்றும் பிரம்மாவின் காலம் இந்த கலியுகம் முடியும் பொழுது முடிவடைகிறது என அர்ச்சகர் சொல்கிறார்.

🌹சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.

🌹இக்கோவிலில் தக்ஷிணாமூர்த்தி சற்று வலது புறமாக திரும்பி உள்ளார்.

🌸ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சிவ ஆஞ்சநேயர் : ஆஞ்சநேயர் சன்னதி சிவன் சன்னதி எதிரிலேயே உள்ளது. திருமால் ராமாவதாரம் எடுத்த பொழுது அவருக்கு உதவுவதற்காக சிவனே ஆஞ்சநேயராக வந்தார். எனவே ஆஞ்சநேயர் சிவாம்சம் ஆகிறார். அவ்வகையில் சிவனே இத்தலத்தில் தன்னை வழிபடும் கோலத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே சிவ ஆஞ்சநேயர் என்றும் சிவபக்த ஆஞ்சநேயர் என்றும் அழைக்கிறார்கள். இவரே இத்தலத்தில் பிரசித்தி பெற்ற மூர்த்தி ஆவார். ஒவ்வொரு அமாவாசை அன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடக்கிறது.

🌸 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ராமர் யுத்தம் முடிந்த பிறகு ராவணனை கொன்ற பிரம்மஹத்தி பாவம் தீர, ராமேஸ்வரத்தில் பூஜை லிங்க பிரதிஷ்டை செய்து பூஜை செய்யுமாறு அகஸ்தியர் சொல்ல, ஆஞ்சநேயர் இடம் காசியில் இருந்து இரண்டு நாழிகைக்குள் லிங்கம் எடுத்து வருமாறு பணிந்தார்.

காசிக்கு அதிபதியான கால பைரவரிடம் அனுமதி பெறாமல் லிங்கத்தை எடுத்ததினால் பைரவருக்கும் ஆஞ்சநேயருக்கும் யுத்தம் ஏற்பட, ஆஞ்சநேயர் வருவதற்கு நேரம் ஆகியதால் சீதை மணலில் லிங்கம் பிடிக்க, ராமர் பூஜையை முடித்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கினார். அங்கே நேரமாகி விடும் என்று அனுமன் பறக்க, சனி பகவானும் அவரை தடுக்கிறார். குருநாதரோடு ஒருவர் போர் செய்யும் பொழுது தானும் உதவ வேண்டும் என்று. சனிபகவானின் குருநாதர் பைரவர். சனியும் இடையூறு செய்யும் பொழுது இவரிடம் சண்டை இட்டு கொண்டிருந்தால் இன்னும் நேரம் ஆகும் என்பதால் அவரை வாலில் சுருட்டிகொண்டு பறக்கிறார். பல காத தூரம் பறந்து வந்து மகாராஷ்டிரா அருகில் அவரை விடுவிக்கிறார். சனிபகவான் ஒரு பாறை மீது விழுகிறார். கோபம் கொண்ட சனி பகவான், எல்லோரையும் பீடித்து ஆட்டும் என்னையே பிடித்த உன் வால் அறுந்து போக கடவட்டும் என சாபம் விடுகிறார்.

அனுமன் வருவதற்குள் பூஜை முடிந்து விட வருந்தினான், நான் எவ்வளவு கஷ்டப்பட்டு யுத்தங்கள் எல்லாம் செய்து என் ராமனுக்காக இந்த லிங்கத்தை கொண்டு வந்துள்ளேன். இதை பிரதிஷ்டை செய்த பூஜை செய்யாமல் நிலையற்ற மணல் லிங்கத்தில் பூஜை செய்து உள்ளீர்களே என சொல்ல, என்னால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் நிலையற்ற லிங்கம் என்றால் நீயே அந்த லிங்கத்தை யதா ஸ்தானம் செய்துவிட்டு (வடக்கு பக்கம் நகர்த்தி வைத்தல் ) நீ கொண்டு வந்த லிங்கத்தை ஸ்தாபிப்பாயாக என்று சொன்னார்.

அந்த லிங்கத்தை தன் கைகளால் நகர்த்த முயலும் பொழுது முடியாமல், வாலால் கட்டி இழுக்க முயலும் போதும் முடியவில்லை. அவன் வால் தான் அருந்தது. அனுமனுக்கு சிவ அபராதம் ஏற்பட்டது. இன்றும் ராமேஸ்வரம் அருகில் அனுமந்த குண்டம், அனுமன் விஸ்வரூபம் எடுத்து லிங்கத்தை எடுக்க முயன்ற பொழுது வால் அறுந்து விழுந்த இடம். அனுமன் வாலை இழந்தபொழுது சக்தி பலத்தையும் இழந்து விடுகிறார்.

ராமர் அகஸ்தியரின் ஆலோசனையின் பேரில் சிவ அபச்சாரம் நீங்க இங்கு சிவ பூஜை செய்தார்.

தினமும் பூஜை செய்து தியானத்தில் இருக்கும் அனுமனிடம் வந்த ஒரு வயோதிக அந்தணர், அவர் பாவங்கள் தீர ஆசீர்வதிக்கிறேன் என்று காதில் அணிந்திருந்த குண்டலத்தை தானமாக கேட்க, இது கழற்ற இயலாத, சிவபெருமானால் அனுக்கிரகம் பண்ணப்பட்ட குண்டலம், ஆகவே இதை அறுத்து தானம் அளிக்கிறேன் என அறுத்து தானம் அளித்து அவரை நமஸ்கரிக்க, எழுந்து பார்த்த பொழுது சிவபெருமான் காட்சி கொடுத்து ஆசீர்வதித்து அவரது பாவங்களை போக்கினார். மன அமைதி பெற்றார். அவருடைய அபச்சாரம் தீர்ந்து வால் வளர்ந்தது, இழந்த சக்திகள் அனைத்தையும் பெற்றார். எனவே இறைவன் குந்தளேஸ்வரர்.

இறைவனை வணங்கி இங்கேயே சிவபக்த ஆஞ்சநேயர் ஆக, உலகில் வேறு எங்கேயும் இல்லாத பெயருடன், வரும் பக்தர்களின் வேண்டுதல்களையும் துயர்களையும் தீர்த்து, படைக்கும் தொழிலை மேற்கொள்வதற்காக தவம் இருந்து கொண்டிருக்கும் ஸ்தலம் திருக்குரக்காவல்.

🌸 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மூலவர்மணல் லிங்கம் என்பதால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை.

அம்பாள் குந்தளாம்பிகை தனி சன்னதியில் தெற்கு நோக்கி அருள் பாலிக்கிறாள்.

பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், கோஷ்டத்தில் வன துர்க்கை, கிராம தேவதையான செல்லியம்மன் ஆகியோர் உள்ளனர். அப்பர் சிலை அழகு, அனுமன் ஓவியம் அழகு.

பரம்பரை அறங்காவலர் ஸ்தானீகத்திற்கு சொந்தமான சிவாலயம். 22 தலைமுறைகளாக இந்த ஸ்தலத்தை பரிபாலனம் செய்கிறார்கள்.

🌸 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தொழில் அபிவிருத்தி ஸ்தலம்.

சனிக்கிழமை & அமாவாசை விசேஷம். வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவது குறிப்பிடத்தக்கது. மென்மேலும் உயர்கிறார்கள்.

புத்திரபாக்யம் குந்தளநாயகி அம்மனுக்கு வளையல் அணிவித்து வேண்டி கொள்கின்றனர்.

தோஷ நிவர்த்தி- ராகு சனி தோஷ நிவர்த்திக்கு,

மன அமைதி மற்றும் குற்ற உணர்வு நீங்க பிரார்த்தனை.

கால்நடைகள் வைத்திருப்போர் செல்லியம்மனை வேண்டிக் கொண்டால் அவை நோயின்றி வாழ பிரார்த்தனை.

🌸 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மஹா சிவராத்திரி

திருக்கார்த்திகை

அனுமன் ஜெயந்தி

🌸 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அனுமன் அப்பர் சேக்கிழார்

🌸அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாயவரம் 17KM

வைத்தீஸ்வரன் கோவில் 12KM

திருப்புன்கூர் 8KM

மாயவரம் பட்டவர்த்தி பேருந்து &

வைத்தீஸ்வரன் கோவில் திருப்பனந்தாள் பேருந்து 👉

இளந்தோப்பு வந்து அங்கிருந்து 3 KM திருக்குரக்காவல்.

கோவில் வரை சாலை வசதி உள்ளது, ஆட்டோ காரில் செல்லலாம்.

7.30AM – 12NOON, 5PM – 7.30PM

7708820533 நடராஜ சிவம் குருக்கள். ( அவ்வளவு அழகாக ஸ்தல புராணம் கூறுகிறார் )

🌸 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மரக்கொக் காமென

வாய்விட் டலறிநீர்

சரக்குக் காவித்

திரிந்தய ராதுகால்

பரக்குங் காவிரி

நீரலைக் குங்கரைக்

குரக்குக் காவடை

யக்கெடுங் குற்றமே. 1

திருநாவுக்கரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *