திருக்கானூர் செம்மேனிநாதர் கரும்பேஸ்வரர்

🌹மூலவர் : செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்

அம்பாள் : சிவயோகநாயகி, சௌந்தரநாயகி

ஸ்தல விருக்ஷம் : வில்வம்

தீர்த்தம் : வேத தீ, கொள்ளிடம்,

புராண பெயர் : மணல்மேடு,

பாடல் : அப்பர், சம்பந்தர்,

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம்

🌹ஸ்தல சிறப்பு:

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷 கொள்ளிட கரையில் உள்ளது.

🌷மணலில் மூடப்பட்டிருந்த கோயில் சுமார் 100 Yrs முன் வெளி கொணரப்பட்டது.

🌷பங்குனி (Apr2,3,4) இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுகிறது.

🌷அம்மனின் விக்ரஹம் சாளகிராமத்தால் ஆனது.

🌹ஸ்தல பெருமை:

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷ஒரு முறை அம்பிகை சிவனை நோக்கி தவமிருக்க பூமிக்கு வந்தார்.

🌷தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தை தேர்ந்தெடுத்து சிவனை நோக்கி கடுமையாக தவம் இருந்தார்.

🌷தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் அக்னி பிழம்பாக காட்சி தந்தார். இதனால் இத்தல இறைவன் செம்மேனி நாதர், அம்மன் சிவயோக நாயகி ஆனார்.

🌷கணவனும் மனைவியும் சேர்ந்து இத்தலம் வந்து வழிபட்டால் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்கலாம்.

🌹கரிகால்சோழன் வாழ்ந்த ஊர்:

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷ஒருமுறை கரிகால்சோழனின் தாய் எதிரிகளுக்கு பயந்து தன்

மகனுடன் இப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்தாள்.

🌷சோழநாட்டிற்கு மன்னன் இல்லாத காரணத்தினால் பட்டத்து யானை அரசாட்சிக்கு உரியவரை தேடி வந்தது.

🌷அப்போது திருக்கானூரில் விளையாடிக் கொண்டிருந்த கரிகாலனுக்கு மாலையிட்டு, தன் பிடரியில் அவனை ஏற்றி கொண்டு உறையூர் சென்றது.

🌷சோழமன்னன் ஆனான் கரிகாலன்.

🌹ஸ்தல வரலாறு :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷ஜமதக்னி முனிவருக்கும் ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தார் பரசுராமர். ஒரு முறை இவர் இல்லாதபோது கார்த்த வீர்யார்ஜுனன் என்ற அரசன் முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து,

அவரது காமதேனு பசுவை, பலவந்தமாக கவர்ந்து சென்றார்.

🌷திரும்பி வந்த பரசுராமர்

நடந்ததை கேட்டு கோபமடைந்து, கார்த்தவீர்யார்ஜுனனை

கொன்று பசுவை மீட்டார். அத்துடன் 21 தலைமுறை க்ஷத்ரியர்களையும் கொன்றார்.

இதனால் இவருக்கு க்ஷத்ரிய தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் போக்குவதற்காக பரசுராமர் இத்தலத்தில் நீராடி ஈசனை வழிபட்டார். சிவனின் அருளால் பரசுராமர் தோஷம் நீங்க பெற்றார்.

🌷1924 வெள்ளம் வந்தபோது கோயில் முழுவதம் மூடி விட்டது.

🌷அதன் மீது ஒரு கரும்பு மட்டுமே முளைத்திருக்க கண்டு, திரு.N.சுப்ரமணிய ஐயர் என்பர் முயன்று தோண்டி பார்த்த பொழுது கோயில் கண்டு பிடிக்ப்பட்டது. So கரும்பேஸ்வரர். 🌷மணற்பகுதியை அடுத்திருப்பதால் மணல்மேடு என்று பெயர் வந்தது.

🌹ஸ்தல சிறப்பு தகவல்கள் :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷கிழக்கு நோத்திய 2 நிலை ராஜகோபுரம் 1 பிரகாரத்துடன் கோவில் , மூலவர் லிங்கத் திருமேனி கரும்பு கட்டு வடிவில் ஒன்றாக இணைந்த அமைப்புடையது. நுழைந்ததும் வடப்புரம் அம்பாள் சன்னதி தெற்கு நோக்கி. பிரகாரத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், அர்த்தநாரீஸ்வரர் துர்க்கை, பிரம்மா சண்டிகேஸ்வரர் நாகர் மகாவிஷ்ணு, ஐய்யனார், சூரியன், சந்திரன், நால்வர்…

🌹பிரார்த்தனை

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷திருமணதடை உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்க பட்டவர்கள், குழந்தை பாக்யம் வேண்டுபவர்கள் மற்றும் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்கவும் தோஷ நிவர்த்திக்காகவும் இங்கு பிரார்த்தனை.

🌷உடல் நலக் குறைவு ஏற்பட்டவர்கள்- இத்தல வில்வ இலைகளால் செம்மேனிநாதருக்கு அரச்சனை செய்தால் விரைவில் குணமாகும்.

🌷சாளகிராமத்தினால் ஆன அம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி நெய் தீபமிட்டால் வரைவில் திருமணம் உண்டாகும்.

🌷 குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அபிஷேகம் செய்து எருக்கமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் கு.பா ஏற்படும்.

🌹 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ஆவணி மூலம், தை பௌர்ணமி, மஹாசிவராத்திரி, பிரதோஷம் சிறப்பு

🌹வழிபட்டோர்:

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பரசுராமர், பார்வதி, சூரியன் அக்னி, கரிகால் சோழன், சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்

🌹அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருவையாறு திருக்காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து விஷ்ணம்பேட்டை சாலை வழியாக கோயிலை அடையலாம்.

திருச்சி கல்லணை வழியாக திருக்காட்டுப்பள்ளி சென்றும் செல்லலாம்.

திருக்காட்டுப்பள்ளி 6KM

அன்பில் 9KM

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஆட்டோ வசதிகள் உள்ளது. ( பேருந்து வசதி சற்று குறைவு )

8.30 AM – 10 AM

காட்டு கோவில், ஒரு கால பூஜை மட்டுமே உண்டு, குருக்களை அழைத்துவிட்டு செல்வது சிறப்பு

93450 09344 விவேகானந்த குருக்கள்.

🌹 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வானார்சோதி மன்னுசென்னி

வன்னிபு னங்கொன்றைத்

தேனார்போது தானார்கங்கை

திங்க ளொடுசூடி

மானேர்நோக்கி கண்டங்குவப்ப

மாலை யாடுவார்

கானூர்மேய கண்ணார்நெற்றி

ஆன்ஊர் செல்வரே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *