திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் தீயாடியப்பர்

💐மூலவர் : அக்னீஸ்வரர் / தீயாடியப்பர்

அம்பாள் : சௌந்தர்ய நாயகி / அழகம்மை

ஸ்தலவிருக்ஷம்:வன்னி வில்வம்

தீர்த்தம் : சூரிய தீ, காவிரி & குடமுருட்டி நதி, அக்னி தீர்த்தம் இங்கு கிணறு வடிவில் உள்ளது.

புராண பெயர் : மேலைதிருக்காட்டுப்பள்ளி

பாடல் : சம்பந்தர்,

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 9

💐 ஸ்தல சிறப்பு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷சுமார் 2000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க சிவத்தலமாகும்.

🌷இத்தலத்தின் நவக்கிரக சன்னதியில் உள்ள அனைத்து கிரகங்களும் சூரிய பகவானை நோக்கியவாறு ஒரே திசையில் அமைந்திருப்பது இக்கோயிலின் தனித்தன்மையாகும்.

💐 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷உறையூரில் இருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில் இறைவனுக்கு ரியதாக பூத்து வந்த செவ்வந்தி மலர்களை பணியாளன் பறித்து வர, அவற்றைப் பெற்று தன் இரு மனைவியருக்கும் தந்தான். மூத்த மனைவி அம்மலரை சிவ பெருமானுக்கு அணிவித்து வந்தாள். இளையவள் தான் சூடி மகிழ்ந்தாள். இதனால் இளையவள் இருந்த உறையூர் மண் மாரியால் அழிந்தது. மூத்தவள் இருந்த திருக்காட்டுப்பள்ளி மட்டும் அழியாமல் பிழைத்தது எனக் கூறுவர்.

🌷 இக்கோயிலின் 3ம் பிரகாரத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தியை கீழே உள்ள துவாரத்தின் வழியாக தரிசிக்க வேண்டும். கர்ப்பகிரஹத்தை சுற்றியுள்ள பிரகாரத்தில் புடைப்புத் சிற்பமாக காணப்படும் யோகதக்ஷிணாமூர்த்தியை நேரே தரிசிக்கலாம்.

🌷பண்டைய கால சித்தர்களில் ஒருவரான ரோமரிஷி சித்தர் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரரை வழிபட்டு சித்தி அடைந்துள்ளார். கோயிலின் 3ம் பிரகாரத்தில் ரோமரிஷி சித்தர் இறைவனை மலர் கொண்டு பூஜை செய்வது போன்ற விக்ரஹம் அமைந்துள்ளது.

🌷பள்ளி என்ற சொல்லை கொண்டு இவ்வூரில் ஒரு காலத்தில் சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என கருதுகின்றனர். அதற்கு ஏற்ப 24வது தீர்த்தங்கரின் சிலை இத்தலத்தில் கிடைத்துள்ளதாம்.

💐 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷அக்னி பகவானுக்கு யாகங்களில் உண்ட நெய்யால் வந்த வயிற்று நோயும், யாகத்தில் போடப்படும் பொருட்களை சுட்டெரித்த பாவமும் நீங்க, இங்கு இறைவனை வேண்டியுள்ளார்.

🌷இறைவன் கட்டளைப்படி இந்த கோவிலில் அக்னி தீர்த்தம்

ஏற்படுத்தி, அந்த தீர்த்த நீரால் இறைவனை நீராட்டி வழிபட்டு தனது வயிற்று நோயும் பாவங்களும் நீங்க பெற்றார்.

🌷 மேலும் அக்னி பகவான் இறைவனிடம் இத்திருத்தலத்திற்கு வருகை புரிந்து என்னால் தோற்றுவிக்கப்பட்ட அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டால் அவர்களது பாவங்களையும் வயிற்று நோயும் போக்கி அவர்களுக்கு சிறந்த வாழ்வை அளிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். இறைவன் அக்னி தேவனின் வேண்டுகோளை ஏற்று வேண்டிய வரங்களை அளித்தார். So வயிற்று நோய் உள்ளவர்கள் இத்தனை இறைவனை முறையாக வணங்கினால் நோயிலிருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை/வழக்கம்

🌷இந்த கோயிலின் தீர்த்தம்

தற்போது திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகில் மிகச் சிறிய அளவில் அக்னி தீர்த்தம் அமைந்துள்ளது. தேடி பார்த்து விட்டோம். தடுப்பிற்கு அப்பால் இருந்ததால் அருகில் செல்ல முடியவில்லை.

🌷 சிறப்பு விசேஷ நாட்களில் மட்டும் திறக்கிறார்கள். அன்று இத்தீர்த்தத்தில் ஸ்நானம் செய்தால், இந்தப் பிறப்பில் எல்லா செல்வங்களும் மறு பிறப்பில் நட்பு பிறப்பும் பெற்று குற்றம் எல்லாம் பிரிந்து பெருமையுடன் வாழ்வார்கள் என சொல்லப்பட்டு இருக்கிறது.

💐 ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷சோழர்களின் கலைப் பாணியில், கோட்டை மதில்களுடன் கூடிய ஒரு பெரிய வளாகத்தில் அமைந்துள்ளது.

🌷 மூலவர் கருவறை தரைமட்டத்திலிருந்து சற்று கீழே பள்ளமான பகுதியில் அமைந்திருப்பது இக்கோயிலின் சிறப்பம்சமாகும்.

🌷5 நிலைகளுடன் கூடி பொலிவுடன் ராஜகோபுரம், செப்புக்கலசமிட்ட கொடிமரம், வலமாக விநாயகர் சந்நிதி, உட் சென்றதும் வலப்பால் அம்மன் சன்னதி தெற்கு நோக்கி நின்ற கோலம். வாயிலில் துவார பாலகிகள். நிறைய உப சன்னதிகளும் உள்ளன.பிரம்மன் தன் தவறை உணர்ந்து வழிபட்ட தலம் என்பதால், இங்குப் பிரம்மாவுக்குத் தனிச் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.

உள் பிரகாரத்தில் விநாயகர் உள்ளார். லிங்கோத்பவர் கோஷ்டமூர்த்தமாக இல்லாமல் விநாயகர் அடுத்த சந்நிதியில் உள்ளார். லிங்கோத்பவரிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். வள்ளி தேவையான உடன் சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர் விசாலாட்சி, கஜலக்ஷ்மி துர்க்கை சந்நிதிகள் உள்ளது. முன் மண்டபத்தின் வலப்பால் பைரவர் நால்வர் சன்னதிகள் உள்ளன.

💐 பிரார்த்தனைகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வயிற்று நோய் நிவர்த்தி

தோஷ நிவர்த்தி

திருமணத்தடை நீங்க

கல்வி மற்றும் ஞானம் பெற

💐 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

பங்குனி உத்திரப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பு.

மாசி மகம்

மஹா சிவராத்திரி

ஐப்பசி அன்னாபிஷேகம்

மார்கழி திருவாதிரை

திருக்கார்த்திகை

கார்த்திகை ஞாயிறு அக்னி தீர்த்தத்தில் நீராடுதல் மரபு.

💐 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

அக்னி, திருமால், பிரமன், சூரியன், பகீரதன், உரோமச மஹரிஷி, உறையூர் அரசி, சம்பந்தர், அப்பர், சேக்கிழார் முதலியோர்.

💐 அமைவிடம் நேரம் தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம் அருகில், 250 மீட்டர். இது திருவையாறு – கல்லணை சாலையில் குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ளது. தஞ்சாவூர், திருச்சி, திருவையாறு மற்றும் கல்லணை ஆகிய ஊர்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

8AM – 11.30AM, 5PM – 8PM

94423 47433 & 73734 84732

குமார் குருக்கள்.

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

💐 கோவில் தேவாரப் பதிகம் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வாருமன் னும்முலை

மங்கையோர் பங்கினன்

ஊருமன் னும்பலி

யுண்பதும் வெண்டலை

காருமன் னும்பொழில்

சூழ்ந்தகாட் டுப்பள்ளி

நீருமன் னுஞ்சடை

நிமலர்தந் நீர்மையே. 1

ஞானசம்பந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *