திருக்கள்ளில் திருகண்டலம் சிவாநந்தீஸ்வரர்

🌺 மூலவர் : சிவாநந்தீஸ்வரர்

உற்சவர் : சோமாஸ்கந்தர் 

அம்பாள் : ஆனந்தவல்லி 

ஸ்தல விருக்ஷம் : கள்ளி

தீர்த்தம் : நந்தி & சிவானந்த தீ 

ஆகமம் : காரணாகமம்

பாடல் : ஞான சம்பந்தர்

 புராண பெயர் : திருக்கள்ளில் 

சுயம்பு, தேவாரப் பாடல் பெற்ற சிவாலயம் தொண்டை நாட்டு ஸ்தலம் 18

🌺 ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°′°

🌹இக்கோயிலில் சிவன் , சக்தி தக்ஷிணாமூர்த்தியாக, தனி சந்நிதியில் இருக்கிறார். இவர் இடது கையில் அமுத கலசமும், ஏடும் ஏந்தி அம்பாளை அணைத்தபடி காட்சி தருகிறார். அருகில் பிருகுமுனிவர் அவரை வணங்கியபடி உள்ளார்.

🌺 ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சக்தி தக்ஷிணாமூர்த்தி  – பிருகு முனிவர் சிவனை மட்டும் வணங்கும் பழக்கம் உடையவர். ஒரு சமயம் சிவனை பார்க்க அவர் கைலாயம் சென்றார். அங்கு சிவன் , பார்வதி தேவியுடன் அமர்ந்திருந்தார். அருகில் சென்ற பிருகு சிவனை மட்டும் வணங்கி அவரை சுற்றி வந்தார்.

🌹இதை கண்ட பார்வதி தேவி மனதில் கோபம் கொண்டாள். பிருகு தன்னையும் சேர்த்து வணங்க வேண்டும் என்று நினைத்த அவள், சிவனை ஒட்டியபடி அமர்ந்து கொண்டாள். பிருகுவோ வண்டு உருவம் எடுத்து சிவனை மட்டும் சுற்றி வந்தார்.

🌹சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்துவதற்காக சிவன், தனது இடப்பாகத்தில் சக்திக்கு இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்தார். அப்போதும் பிருகு முனிவருக்கு திருப்தி ஏற்படவில்லை. என்னதான் இருந்தாலும் சிவன் தானே பெரியவர் என்ற எண்ணம் அவர் மனதில் இருந்தது.

🌹 பின்னர் பிருகு பூலோகத்தில் சிவ தல யாத்திரை வந்த போது கள்ளில் {ஒரு வகையான மரம்} வனமாக இருந்த இங்கு, அகஸ்தியர் பூஜித்த சுவாமியை கள்ளில் மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டார். 

🌹அப்போது சிவன் அவர் முன் தோன்றி, “சிவமும் சக்தியும் ஒன்றுதான். சக்தி இல்லாமல் சிவமும், சிவம் இல்லாமல் சக்தியும் இருக்க முடியாது” என உபதேசம் செய்து, அம்பாளை தன் மடியில் அமரவைத்து, “சக்தியுடன் இணைந்த தக்ஷிணாமூர்த்தியாக” காட்சி தந்தார். ப்ருகு உண்மையை உணர்ந்தார்.

🌺 ஆனந்தவல்லி அம்பாள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹சக்தியின் பெருமையை உணர்ந்த பிருகு முனிவர், அம்பாளிடம் தன் செயலை மன்னிக்கும்படி வேண்டினார். இதனால் அம்பாள் மனதில் ஆனந்தம் கொண்டதோடு, தன்னையும் சிவனையும் வழிபட்டு ஆனந்தமாக இருக்கும் படி அருளினார். ஆதலால் அம்பாளுக்கு ஆனந்தவல்லி என பெயர்.

🌹இவர் சுவாமிக்கு இடது புறத்தில் தனி சந்நிதியில் நின்றகோலத்தில் இருக்கிறார். இவளது இடது கரம் பாதத்தை காட்டிய படியும், வலது கரம் அபய ஹஸ்தம் அருள் வழங்கும் கோலத்தில் இருக்கிறது. இதனை தன் பாதத்தை சரணடைபவர்களுக்கு என்றும் குறைவில்லாத ஆனந்தத்தையும் அருளையும் அம்பாள் தருவாள் என்பதை உணர்த்தும் கோலம் என்கிறார்கள்.

🌺சிறப்பம்சம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹திருவெண்பாக்கம் (பூண்டி) தலத்திற்கு சென்ற ஞான சம்பந்தர், சிவனை வணங்கி விட்டு, தன் யாத்திரையை தொடர்ந்தார். அவர் குஷஸ்தலை ஆற்றின் கரையில் தான் கொண்டு வந்திருந்த பூஜை பொருட்கள் விபூதி பிரசாதம் ஆகவற்றை வைத்துவிட்டு குளிக்க சென்றார்.

🌹குளித்து விட்டு திரும்பி வந்த போது காணவில்லை, தேடிய போது  சுயம்பு லிங்கத்திற்கு அருகே பூஜை பொருட்கள் இருந்ததை கண்டார்.

🌹ஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வரவேண்டும் என்பதற்காகவே பூஜை பொருள்களை மறைய செய்து அருள் செய்ததாக அசிரீதியாக ஒலித்தார் சிவன். பின் ஸ்வாமியை வணங்கி பதிகம்.

🌺 பிரம்ம முருகன்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கோயில் குஷஸ்தலை ஆற்றின் கரையில் உள்ளது. சுவாமி அம்பாள் சன்னதியில் எப்போதும் அணையா விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. ப்ருகு முனிவர், கள்ளி மலர்களால் பூஜித்த சிவன் என்பதால் சுவாமிக்கு திருக்கள்ளீஸ்வரர் & ஸ்தலம் திருக்கள்ளில் என்ற பெயரில் உள்ளது.

🌹அகஸ்தியருக்கு  காட்சி தந்தது போலவே ஸ்வாமி அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் பாலசுப்பிரமணியர் தனி சந்நிதியில் அமைந்து சோமாஸ்கந்த வடிவமா கோயில் இருக்கிறது. முருகனின் வலது கையில் ஜபமாலை, இடது கையில் தீர்த்த கலசத்துடன் பிரம்மாவின் அம்சத்துடன் தனியே நின்ற கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.

🌺 விசேஷ நந்தி👉 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இங்குள்ள நந்தி விசேஷமானது.

இவரது பெயரிலேயே சிவனை சிவாநந்தீஸ்வரர் என்றும் தீர்த்தத்தை நந்தி தீ என்றும் அழைக்கின்றனர். பிரகாரத்தில் சுந்தர விநாயகர், காளஹஸ்தீஸ்வரர், ஆஞ்சநேயர், நெல்லி மரத்தின் கீழ் நாகர், நவகிரகங்கள், பைரவர் ஆகியோரும் உள்ளனர் . 

🌹பொருட்களை திருட்டு கொடுத்தவர்கள் பைரவருக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்கின்றனர். இவ்வாறு செய்தால் அப்பொருள் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவ்வாறு பொருள்கள் கிடைத்து விட்டால் இவருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

🌺 ஸ்தல வரலாறு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹கைலாயம் சிவன் பார்வதி திருமணம் – வடக்கு தெற்கு சமநிலை படுத்த அகஸ்தியர் தெற்கு பகுதிக்கு  சிவன் அனுப்ப , விரும்பும் இடங்களில் திருமண காட்சி காணும் வரத்துடன், தென்பகுதி வந்தார் அகஸ்தியர் – திருப்பாலைவனம் வந்த அகஸ்தியர் இறைவனை வணங்கி அங்கேயே தங்கினார். அன்றிரவு அவர் கனவில் சிவன் தோன்றி, இத்தலத்தையும், தீரதத்தையும் குறிப்பால் உணர்த்தி சோமாஸ்கந்தராகவும் காட்சி தந்தார்.

🌹 அவருடைய தரிசனத்தால் அகஸ்தியர், சிவ ஆனந்தம் அடைந்தார். தனக்கு அருண் பாலித்தது போலவே இத்தலத்தில் இருந்து அனைவருக்கும் அருள வேண்டும் என வேண்டினார். சிவன் இங்கு சுயம்புவாக எழுந்தருளி சிவாநந்தீஸ்வரர் என்ற பெயரும் பெற்றார்.

🌺ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹இத்தல விநாயகர், சுந்தர விநாயகர். மூலவரின் மேல் உள்ள விமானம்: கஜபிருஷ்டம். தூங்காணை மாட அமைப்பு. மூல திருமேனி சிவலிங்கம் சதுர ஆவுடையார், 5 நிலை ராஜ கோபுரம்.

🌺 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹பிரிந்திருக்கும் தம்பதிகள் தக்ஷிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கள்ளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். திருமண தடைகள் நீங்கும். வறுமை நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும், நிலையான ஆனந்தமும் மன அமைதியும் என்பது நம்பிக்கை. 

🌺திருவிழாகள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

கார்த்திகை சிவராத்திரி திருவாதிரை கந்த சஷ்டி 

🌺 வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

ப்ருகு முனிவர், சம்பந்தர், சேக்கிழார் 

🌺அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சென்னை பெரியபாளையம் வழியில் கன்னிகைபேர் என்னும் ஊரில் இறங்கி 4KM ஆட்டோவில் சென்றால் கோவில்.

திருவள்ளூரில் இருந்து பெரியபாளையம் சென்று அங்கிருந்து கன்னிகைபேர் வழியே கோவிலுக்கு செல்லலாம்.

7AM – 12NOON, 5PM -7.30PM

97907 87616 ஆருத்ரன் பாலாஜி குருக்கள். (குருக்களிடம் கைப்பேசியில் பேசிவிட்டு செல்வது சிறப்பு )

89460 07873 ஆனந்த் பாபு

OFF உதவியாளர்

🌺 கோயில் தேவார பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை

வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த

கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்

உள்ளுமேல் உயர்வெய்தல் ஒருதலையே. 1

ஞான சம்பந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *