திருக்கலிக்காமூர் அன்னப்பன் பேட்டை சுந்தரேஸ்வரர்
மூலவர் : சுந்தரேஸ்வரர்
அம்பாள் : சுந்தராம்பாள் அழகம்மை
ஸ்தல விருக்ஷம் : வில்வம்
தீர்த்தம் : சந்திர தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
ஊர் : அன்னப்பன் பேட்டை சுயம்பு, 62வது தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழநாட்டு & காவிரி வடகரை ஸ்தலம் 8
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுந்தரேஸ்வரருக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, அதையே மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.
இத்தலத்து ஈசனை வழிபட்டால் முன்வினை நோய் நீங்கி, செல்வம் பெருகும் என்று ஞானசம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிரகாரத்தில் வில்வ வன நாதர் சன்னிதியும் உள்ளது.
கலி (துன்பம்) நீக்கும் சிவன் வீற்றிருக்கும் ஊர் என்பதால் திருக்கலிக்காமூர்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
துவாரபாலக விநாயகர் –
இங்குள்ள விநாயகர் விசேஷமானவர். சில சிவன் கோவிலில்களில் ஒரே சன்னதியில் 2 or 3 விநாயகர் இருப்பார். ஆனால் இங்கு விநாயகர் சந்நிதிக்கு முன்புறம் துவார பாலகர் போல் இரண்டு விநாயகர் இருக்கின்றனர். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
தீர்த்த நீராடும் அம்பிகை
கடற்கரை, நதிக்கரைகளில் உள்ள கோவில்களில் விழாவின் போது சிவன் தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி நீராடுவார். ஆனால் இத்தலத்தில் மாசி மகத்தன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டும் கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். இதற்கு ஒரு காரணமும் உண்டு
முற்காலத்தில் இக்கோயிலில் சிவன் சந்நிதி மட்டுமே இருந்தது
ஒரு சமயம் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில், இந்த அம்பிகையின் சிலை கிடைத்தது
சிலையை அவர் எடுத்த உடனேயே வயிற்று வலி வந்து விட்டது.
சிலையை தூக்கி வந்த அவர், இத்தலம் அருகில் வந்த போது வயிற்று வலி நின்று விட்டது. அதன் பின்பு இவ்விடத்தில் சிவலிங்கம் இருந்ததை கண்ட அவர், அம்பிகையையும் இங்கேயே பிரதிஷ்டை செய்தார்.
இந்த அம்பிகை கடலில் கிடைக்கப்பெற்றவள் என்பதால், வருடத்தில் ஒரு முறை இவள் பிறப்பிடமான கடலுக்குக் கொண்டு சென்று தீர்த்த நீராடி வருகிறார்கள். நவகிரஹ மண்டபத்தில் அனைத்து கிரஹங்களும் வாகனமின்றி நின்ற கோலத்தில் இருக்கின்றன.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வசிஷ்டரின் பிள்ளை சக்தி முனிவர். இவர் மனைவி திரிசந்தி. அவள் கர்ப்பமாக இருந்த பொழுது, சக்தி முனிவரை உத்திரன் எனும் அசுரன் கொன்று விட்டான்.
திரிசந்திக்கு பிறந்த மகன் தான் பராசர முனிவர். வேதத்தில் புலமை பெற்று மகரிஷி ஆனவர்.
தன் தந்தையைக் கொன்ற அசுரன் உத்திரனை அழிக்க பெரிய யாகம் ஒன்றை நடத்தினார். இந்த யாகத்தின் பலனைக் கொண்டு உத்திரனை அழித்தார்.
அசுரனாக இருந்தாலும் உயிரை கொலை செய்ததால் இவருக்கு தோஷம் உண்டானது. தோஷம் நீங்க அவர் பல தலங்களுக்கு யாத்திரை சென்றார். அவர் இத்தலம் வந்தபோது சிவன் காட்சி தந்து விமோசனம் கொடுத்தருளினார். பராசரரின் வேண்டுதலுக்காக பரமேஸ்வரர் இத்தலத்தில் எழுந்தருளினார்.
பராசர மகரிஷிக்கு அழகு பொருந்தியவராக காட்சி தந்ததால் இவர் சுந்தரேஸ்வரர் என பெயர் பெற்றார். வில்வ வனத்தின் மத்தியில் எழுந்தருளியவர் என்பதால் இவருக்கு வில்வவனநாதர் என்றும் பெயர் உண்டு.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அளவில் சிறிய கோவில், ராஜகோபுரம் & கொடிமரம் இல்லை. பிரகாரத்தில் சிவலிங்கத்தை வணங்கியபடி பராசர மகரிஷி காட்சி தருகிறார். கோஷ்டத்தில் உள்ள துர்க்கை 8 கரங்களுடன் காட்சி தருவது விசேஷம். பிரகாரத்தில் விஸ்வநாதர் அகிலாண்டேஸ்வரி அம்பாளுடன் தனி சன்னதியில் காட்சி தருகிறார்.
வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தனி சந்நிதி.
ஸ்தல விநாயகர் செல்வ சித்தி விநாயகர்.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
நோய்கள் தீர
முன்வினைப் பயன் அகல
பாவங்கள் தீர பிரார்த்தனை
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாசி பௌர்ணமி தீர்த்தவாரி, மஹா சிவராத்திரி, நவராத்திரி மற்றும் ஐப்பசி அன்னாபிஷேகம் திருவாதிரை சிறப்பு..
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பராசர முனிவர், சம்பந்தர், சேக்கிழார்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சீர்காழி திருவெண்காடு நடுவில் உள்ளது.
From திருவெண்காடு 6KM.
திருவெண்காடு-சீர்காழி சாலையில் மங்கைமடம் தாண்டி திருநகரி சாலை சென்று வலதுபுறமாக அன்னப்பன்பேட்டை.
சீர்காழியிலிருந்து கீழ்மூலவக்கரை செல்லும் பேருந்துகளில் சுமார் 15 கிலோமீட்டர் பயணம் செய்து இக்கோவிலை அடையலாம்.
பேருந்து வசதிகள் குறைவு.
9AM – 10AM 6PM – 7PM
94427 70451 & 93605 77673
ரமேஷ் குருக்கள்
97151 70451 ராஜாமணி குருக்கள் (அப்பா)
குருக்களை தொடர்பு கொண்டு விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மடல்வரை யின்மது விம்முசோலை
வயல்சூழ்ந் தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ்
சொரியுங் கலிக்காமூர்
உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய
வொருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும்
இறைவன் னருளாமே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply