திருக்கருப்பறியலூர் தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர்
மூலவர் : குற்றம் பொறுத்த நாதர், அபராத க்ஷமேஸ்வரர்
அம்பாள்: கோள்வளை நாயகி விசித்ர பாலாம்பிகை
ஸ்தல விருக்ஷம் : கொடிமுல்லை
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி, பொற்றாமரை, இந்திர தீர்த்தம்
புராண பெயர் : கருப்பறியலூர் கர்மநாசபுரம் மேலைகாழி
ஊர் : தலைஞாயிறு
பாடல் : சம்பந்தர், சுயம்பு தேவார பாடல் பெற்ற தலம், சோழநாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 27
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தலத்தில் செய்யும் அறச்செயல்கள் ஒன்றுக்கு பத்தாக பெருகும் என்பதை பிரம்மன் வசிஷ்டருக்கு கூறினார். அதனால் வசிஷ்டர் இங்கு வந்து லிங்கம் அமைத்து வழிபட்டு மெய்ஞானம் பெற்றார்.
அவருடன் வந்த 72 மஹரிஷிகள் இங்கு வழிபாடு செய்து முக்தி பெற்றுள்ளனர். இத்தலத்தில் வந்து வழிபடுபவர்கள் அடுத்த ஜென்மத்தில் தாயின் கருவில் தங்க மாட்டார்கள். அதாவது அவர்களுக்கு மறுபிறவி இல்லை. சிவன் பாதத்தில் சேர்ந்து விடுவார்கள் என்பது ஐதீகம். எனவே தான் இத்தலம் “கருப்பறியலூர்” என வழங்கப்படுகிறது.
சூரிய பகவான் இத்தலத்தில் வழிபட்டதால் தலை ஞாயிறு. ( சூரியன் வழிபட்ட முதல் தலம் இது )
விசித்திராங்கதன் என்ற மன்னன் தன் மனைவி சுசீலையுடன் குழந்தை பாக்யம் வேண்டி இங்கு வந்து வழிபட்டு இறைவன் அருளால் குழந்தை பெற்றான். இதனால் மகிழ்ந்த மன்னன் இந்த திருக்கோயிலை அழகுற கட்டினான்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு முறை கைலாயத்தில் இறுமாப்புடன் வந்த இந்திரன் முன் சிவபெருமான் பூதகனமாக தோன்றினார். இது சிவபெருமான் என்பதை அறியாமல் சண்டையிட்டு தன் வஜ்ராயுதத்தால் தாக்கினான். தன் தவறை உணர்ந்து பாவம் தீர, மன்னிப்பு கோர இந்த இடத்திற்கு வந்தான். அவனது அவசர செயலுக்கு சிவபெருமான் அவனை மன்னித்தார். ஆகவே அபராத க்ஷமேஸ்வரர், குற்றம் பொறுத்த நாதர். இந்த இடம் கர்ம நாசபுரம்.
அனுமன் தோஷம் நீக்கிய ஸ்தலம்
ராம ராவண யுத்தத்தில் ராவணனை கொன்ற தோஷம் நீங்க, ராமர், சிவபூஜை செய்ய நினைத்தார். எனவே அனுமனிடம் இரண்டு நாழிகைக்குள் ஒரு சிவலிங்கம் கொண்டு வா என்றார். உத்தரவை ஏற்ற அனுமன் வட திசை நோக்கி பறந்தார். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமன் வராததால் ராமர் மணலால் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரது பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது
ராமர் பூஜை செய்த ஸ்தலம் ராமேஸ்வரம் ஆயிற்று. தான் வருவதற்குள் லிங்கம் பிரதிஷ்டை செய்ததை அறிந்த அனுமன் வருந்தினான். அத்துடன் அந்த லிங்கத்தை தன் வாலினால் கட்டி இழுத்தான். ஆனால் அவனால் முடியவில்லை. அவன் வால் தான் அருந்தது. அனுமனுக்கு சிவ அபராதம் ஏற்பட்டது.
சிவனைக் குறித்து தவம் இருந்தால் சிவ அபராதம் நீங்கும் என்று ராமர் அனுமனுக்கு யோசனை கூறினார். அனுமன் அவ்வாறே செய்ய சிவன் தோன்றி, “அனுமனே! நீ கன்மபுரம் எனப்படும் தலை ஞாயிறு சென்று வழிபாடு செய்தால் இந்த தோஷம் விலகும் என அருள்புரிந்தார்.
அதன் பிறகு அனுமனும் தலைஞாயிறு வந்து வழிபட்டு தோஷம் நீங்க பெற்றார். அதன் பிறகு சிவனின் கருணைக்கு வியந்து, இத்தலத்தின் வடகிழக்கில் தன் பெயரால் ஒரு லிங்கம் அமைத்து அதை வழிபாடு செய்ய ஆரம்பித்தார். அத்தலம் தற்போது ‘திருக்குரக்கா’ என வழங்கப்படுகிறது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ராவணனின் மகன் மேகநாதன்.
இந்திரனை போரில் வென்றதால் இந்திரஜித். ஒருமுறை இந்திரஜித் வானத்தில் புஷ்பக விமானம் மூலம் பறந்து கொண்டிருந்தான். வழியில் விமானம் தடைபட்டு நின்றது. கீழே பார்த்தபோது சிவாலயத்தின் மீது பறந்ததை உணர்ந்தான். இதனால் தடை ஏற்பட்டது என அறிந்தான்.
இதனால் வருந்திய இந்திரஜித் இத்தல தீர்த்தத்தின் நீராடி, இறைவனை பூஜித்தான். இவனது கவலை நீங்கி விமானம் மறுபடியும் பறந்தது.
இப்படிப்பட்ட அற்புத லிங்கத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அது முடியாமல் போனதால் மயங்கி விழுந்தான்.
இந்த செய்தியை கேட்ட ராவணன், இத்தல சிவனின் திருவடியில் விழுந்து, தன் மகனின் குற்றத்தை பொறுத்து அருளுமாறு வேண்டினான். இறைவனும் அருள் செய்தார். எனவே இத்தல இறைவன் “குற்றம் பொறுத்த நாதர்.”
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிழக்கு நோக்கிய கோவில் மூன்று நிலை ராஜகோபுரம்
தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மூலவர் அம்பாள் சன்னதிகள் தவிர சித்தி விநாயகர் முருகன் மகாலட்சுமி உமா மகேஸ்வரர் மூவர் ஆகியோரின் சன்னதிகள் மற்றும் சிலைகள்.
கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தக்ஷிணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா துர்கை.
சண்டிகேஸ்வரர் மனைவியுடன் அமர்ந்துள்ளார்.
சீர்காழி கோவில் அமைப்பை போலவே, முதல் தளத்தில் உமா மகேஸ்வரம் இரண்டாவது தளத்தில் சட்டைநாதரும் அருள்பாலிக்கின்றனர். தோனியப்பர் மற்றும் அம்பாள் இங்கு கர்ப்ப ஞானேஸ்வரர் கர்ப்ப ஞான பரமேஸ்வரி.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
•தோஷ நிவர்த்தி, அறியாமல் செய்த பாவங்கள், குற்றங்கள் நீங்க
•குழந்தை பாக்யம் இல்லாதவர்கள்
•குழந்தை பிறந்து இறந்து விடும் தோஷம் உள்ளவர்கள்
•ஆண் வாரிசு / பெண் வாரிசு வேண்டுபவர்கள் பிரார்த்தனை.
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹா சிவராத்திரி
சுந்தரர் சம்பந்தர் குருபூஜை
திருக்கார்த்திகை திருவாதிரை
ஐப்பசி அன்னாபிஷேகம்
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இந்திரன், சூரியன், வசிஷ்டர், 72 மஹரிஷிகள், ஆஞ்சநேயர், இராவணன், இந்திரஜித், விசித்ராங்கதன், சம்பந்தர் சுந்தரர் முதலியோர்..
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
12 KM மாயவரம் இருந்து.
வைத்தீஸ்வரன்கோயில் – திருப்பனந்தாள் சாலையில் சென்று, “தலைஞாயிறு” கைகாட்டி உள்ள இடத்தில் வலதுபுறம் பிரியும் சாலையில் 1 கி.மீ.
மற்றொரு வழி: மயிலாடுதுறை – மணல்மேடு சாலையில் உள்ள பட்டவர்த்தி சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மீ.
7.30AM – 10.30AM, 5PM – 7PM
9659256685 சரவணன் குருக்கள்
குருக்களை அழைத்துவிட்டு சொல்வது சிறப்பு
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுற்றமொடு பற்றவை
துயக்கற அறுத்துக்
குற்றமில் குணங்களொடு
கூடும்அடி யார்கள்
மற்றவரை வானவர்தம்
வானுலக மேற்றக்
கற்றவ னிருப்பது
கருப்பறிய லூரே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply