திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீஸ்வரர்

🏵️மூலவர் : பிரம்மசிரகண்டீஸ்வரர் / வீரட்டேஸ்வரர் / பிரம்மநாதர் / வில்வவனநாதர்

உற்சவர் : சோமாஸ்கந்தர்,

அம்பாள் : மங்களாம்பிகை,

ஸ்தல விருக்ஷம் : வில்வம்

தீர்த்தம்: நந்தி தீ, தக்ஷ தீ, பிரம தீ, குடமுருட்டி,

பாடல் : அப்பர், சம்பந்தர்

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 12

🏵️ ஸ்தல சிறப்பு :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷சிவனுக்குரிய சப்தஸ்தான ஸ்தலங்களில் 5வது தலம்.

🌷சூரியன் வழிபட்ட தலமாதலால் மாசி 13,14,15ம்

தேதியில் மாலை 5.45PM to 6.10PM வரை சூரிய ஒளி சுவாமி மீது விழுகிறது.

🌷இத்தலம் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்று.

🌷தண்டபாணி சன்னதி தனி கோயிலாக மண்டபத்துடன் உள்ளது. இம்மண்டபம் வௌவால் நெத்தி மண்டப அமைப்புடையது.

🌷சப்தஸ்தானத் திருவிழாவில் (ஏழுர் திருவிழாவில்) சுவாமி இங்கிருந்து புறப்பட்டு செல்லும்

🌷வழக்கமாக சிவன் கோவில்களில் துவாரபாலகர்களாக இருக்கும் சண்டி, முண்டி இங்கு இல்லை. இவர்களுக்கு பதிலாக முருகபெருமானே

இங்கு ஞான குரு, ஸ்கந்த குருவாக துவாரபாலகர்கள் இடத்தில் இருக்கிறார்.

🌷தந்தைக்கு மகனே இங்கு காவலாக இருப்பதாக ஐதீகம். அருகில் சதாதப மஹரிஷி உள்ளார்.

🏵️ ஸ்தல பெருமை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌹மாப்பிள்ளை விருந்து:

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷திருவையாறில் அவதரித்த நந்தி தேவருக்கு, சதாசபர் தன் மகள் ஊர்மிளாவை

திருமழப்பாடி தலத்தில் திருமணம் செய்து கொடுத்தார்.

இந்த விழாவின் போது திருவையாறு ஐயாறப்பன் , அம்பாள் அறம் வார்த்த நாயகி, நந்திதேவர், ஊர்மிளா ஆகிய நால்வரும் இங்கு எழுந்தருள்வர். அப்பொழுது நந்தி தேவர்க்கு மங்கள ஸ்னானம் (புனிதபடுத்தும் அபிஷேகம்) நடக்கும்.

அதன் பின் 1 கூடை நிறைய சாதம் வைத்து மணமகனுக்கு விருந்து கொடுப்பர்.

🌹பிரம்மா/சரஸ்வதி:

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பிரம்மாவின் தவத்திற்கு துணையாக சரஸ்வதியும் இங்கு வந்தாள். இதனடிப்படையில் பிரகாரத்தில் சரஸ்வதியுடன் பிரம்மாவிற்கு சன்னிதி உள்ளது.

தலையெழுத்து சரியில்லை என வருந்துவோர் பிரம்மாவிற்கும், படிப்பில் சிறப்பிடம் பெற

விரும்புவோர் சரஸ்வதிக்கும் வெண்ணிற ஆடை அணிவித்து, தாமரை மலர் வைத்து வழிபடுறார்கள். பிரம்மா, நவகிரஹங்களில் கேதுவிற்கு அதிபதி. குரு பகவானுக்கு ப்ரீதி தேவதையாக திகழ்கிறார். குரு பலன் இருந்தால் தான் திருமணம், குழந்தை பாக்யம் கிடைக்கும். கேது பலன் நன்றாக இருந்தால் ஞானம் உண்டாகும். எனவே இந்த பலன்கள் கிடைக்க பிரம்மா சன்னிதியில் நெய் தீபமேற்றி வேண்டி கொள்கிறார்கள்.

மகப்பேறு பெற்ற துரோணர்:

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷துரோனர் தமக்கு மகப்பேறில்லா குறையை போக்க இங்குள்ள இறைவனை தும்பை மலரால் அர்ச்சித்து மகப்பேறு பெற்றார்.

🌹அருள் பெற்ற சதாதபர்

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷சதாதப முனிவர் சிறந்த சிவபத்தர். நாள்தோறும், பல தலங்களை வணங்குவதுடன் பிரதோஷ நாளில் திருகாளஹஸ்தி சென்று காளஹஸ்தீஸ்வரரை வழிபடுவதை நியமமாக கொண்டிருந்தார்.

முனிவர் திருக்கண்டியூர் வந்த போது காளஹஸ்தி செல்ல முடியாமல் தடை ஏற்பட்டது. இறைவன் இவரை சோதிக்க கடும் மழை ஏற்படுத்தினான். இதனால் மிகவும் வருத்தமடைந்து நெருப்பில் விழுந்து தன் உயிரை போக்கிகொள்ள முற்பட்டார்.

காளஹஸ்தி இறைவன் வில்வ மரத்தில் தானும் உமையுமாய் காட்சி வழங்கி முனிவற்கு அருள்

புரிந்தார். எனவே இத்தலத்திற்கு ஆத வில்வாரண்யம்’ என பெயர். இன்றும் வில்வமரம் தான் ஸ்தல விருக்ஷம்.

🌹சித்ரவஜனுக்கு கிடைந்த அருள்:

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சித்ரவஜன் என்றொரு கந்தர்வன் ஒரு நாள் அழகிய பூங்காவில் தனது மனைவி குணவதியுடன் மகிழ்ந்திருந்தான். அப்போது அவ்வழியே சென்ற தேவலர் என்ற முனிவர் அக்காட்சியை காண சகியாது அவர்களை சபித்தார். அதனால் சித்ரவஜன் அசுரனானான். குணவதி பலாச மரமானாள். அவர்கள் சாப விமோசனம் கோரினர்.

அகத்தியரின் சீடரான சதாதப முனிவரால் சாபம் நீங்கும் என்றார் தேவலர். அசுரனான சித்ரவஜனும் பலாச மரமான குணவதியும் காவிரியின் தென்கரையில் வசித்து வந்தனர்.

ஒரு முறை சனி பிரதோஷத்தில் திருகாளத்தி நாதரை வழிபட சென்ற – சதாதபர் கண்டியூர் வழியே செல்லும் பொழுது பேய்மழை பிடித்து கொண்டது. அதனால் அவர் பலாச மரத்தடியில் தங்கினார்.

அவ்வுருவில் இருந்த குணவதி மீண்டும் பெண் வடிவம் பெற, ராட்சஷனான சித்ரவஜன் மீது சதாதபர் கமண்டல நீரை தெளித்ததும் அவன் கந்தர்வனாக மாறினான். இருவரும் சாபவிமோசனம் பெற்றனர்.

🌹தக்ஷன், பகீரதன் அருள் பெற்றது :

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷தக்ஷன் சிவபெருமானை அவமதித்த குற்றம் தீர இத்தலத்தில் இறைவனை வழிபட்டு அருள் பெற்றான்.

🌷பகீரதன் கண்டியூர் விரட்டேஸ்வரரை வணங்கி அருள் பெற்று கங்கையை பூமிக்கு கொண்டு வந்தான்.

🏵️ ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷சிவபெருமானின் பராக்கிரமங்களை விளக்கும் அட்ட வீரட்ட தலங்களில் முதலாவது தலம் இது.

🌷பிரம்மனின் தலையை கொய்த தலம் திருக்கண்டியூர்.

🌷படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவருக்கும் இத்தலத்தில் தான் தனிக்கோயில்கள் உள்னை. எனவே இத்தலத்திற்கு “திருமூர்த்தி தலம்” என்ற பெயரும் உண்டு.

🌷சிவ பெருமான் 👉 பிரம்ம சிரகண்டீஸ்வரர் 👉 பிரம்ம தேவனின் தலையை கொய்தவர் என்பதே இதன் பொருள்.

🌷சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் ஆதிய 5 திருமுகங்கள் இருப்பது போன்றே முற்காலத்தில் நான்முகனும் 5 திருமுகங்கள் பெற்றிருந்தான்.

🌷எனவே தானே படைப்பு கடவுள் என செருக்குற்றான். அவன் ஆணவத்தை அடக்க சிவபெருமான் பைரவரை படைத்து அவரை பிரம்மா மேல் ஏவி, அவரது 5வது தலையை கொய்து வருமாறு பணித்தார்.

🌷பைரவரும் தன் இடக்கை நக நுனியால் பிரம்மனின் 5வது தலையை கொய்தார். (காரணம் வேறு மாதிரியாகவும் சொல்வதுண்டு)

🌷அந்த தலை அப்படியே அவரது கையில் ஒட்டி கொண்டு பிரம்மஹத்தி தோஷமானது.

🌷எனவே சிவபெருமான் பைரவரை பார்த்து, இத்தீவினை தீர நீ ஊர் தோறும் பிக்ஷையேற்க வேண்டும் என கூற, பைரவரும் பல திருத்தலங்களுக்கு சென்று பிக்ஷையேற்று திரிந்தார்.

🌷கடைசியில் இத்தலத்திற்கு வந்தபோது பிரம்மனின் தலை கையை விட்டு அகன்றது. அவரது பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது.

🌷நான்முகனும் தனது ஆணவம் அகன்று, தன் மனைவியான சரஸ்வதியுடன் இத்தலத்து இறைவனை வழிபட்டு மண்டும் தமது படைப்பு தொழிலை திரும்ப பெற்றதாக புராணம்.

🏵️ ஸ்தல சிறப்பு தகவல்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷5 நிலை ராஜகோபுரம், கவசமிட்ட கொடிமரம், நந்தி,

பலிபீடங்கள் உள்ளன. கொடிமர விநாயகர் காட்சி தருகிறார்.

மேற்கு நோக்கிய மூலவர் சிறப்பு.

இரு புறமும் துவாரக பாலகர்களுக்குப் பதிலாக அக்கமாலை ஏந்திய ஞானஸ்கந்தரும், தாமரை மொட்டு ஏந்திய வீரஸ்கந்தரும் இருப்பது விசேஷம். சிவன் சந்நிதி கோஷ்டத்தில் உள்ள துர்கை பிரயோக சக்கரம் வைத்திருக்கிறாள்.

அம்பாள் மங்களாம்பிகை, தனி சந்நிதியில் இருக்கிறாள்.

பிரகாரத்தல் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் – மயில் வாஹனம் இல்லை. ஒரே சன்னதியில் அடுத்தடுத்து 7 விநாயகர் உள்ளளர். நவகிரஹ சந்நிதியில் சூரியன் – உஷா பிரத்யுஷா உடன் இருக்கிறார்.

மற்று அனைத்து கிரஹங்களும் சூரியனை பார்த்தபடி உள்ளன.

கல்வெட்டில் இப்பெருமான

திருவீரட்டானத்து மஹாதேவர், திருகண்டியூர், உடைய மகாதேவர் என குறிப்பிடபட்டுள்ளது.

🌷முதல் பிரதாரத்திலிருந்து கருவறை செல்லும் முன் இடப்புரம் சப்தஸ்தான லிங்கங்களையும், பஞ்சபூத லிங்கங்களையும், வலப்புறம் சதாதம முனிவரையும், காளத்திநாதரையும் சூரியனையும் வழிபடலாம்.

🌷இரண்டாவது கோபுரமான அணுக்கண் திருவாயிலின் மீது அம்மையப்பர் திருக்கயிலாலய அமர்ந்து காட்சி தர பிரம்மா, சரஸ்வதி இருவரும் வணங்கி நிற்பது போன்று சுதை வடிவம் உள்ளது.

🏵️ பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பிரம்மஹத்தி தோஷம் நீங்கவும், இழந்த பதவி பெறவும், அழகு வேண்டியும் பிரார்த்தனை. தவறு செய்து விட்டு வருந்துவோர் மன நிம்மதிக்காகவும், திருமண புத்திர தோஷம் உள்ளோரும் வேண்டுதல்.

🏵️ திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சப்தஸ்தானத் திருவிழா

மஹா சிவராத்திரி

திருவாதிரை

திருக்கார்த்திகை

🏵️ வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சூரியன், பிரமன், சதாதாப முனிவர் சம்பந்தர், அப்பர், சுந்தரர், சேக்கிழார் முதலியோர்.

🏵️அமைவிடம், நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தஞ்சாவூர் – திருவையாறு சாலையில், தஞ்சாவூர்👉10 KM, திருவையாறு👉3KM, பிரதான சாலையின் அருகிலேயே அமைந்துள்ளது கோவில்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திருவையாறு, கும்பகோணம் மற்றும் இதர பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளும் திருக்கண்டியூர் வழியாகச் செல்கின்றன. பேருந்து நிறுத்தத்தில் இருந்து சில நிமிட நடப்பிலேயே கோவிலை அடையலாம். ஆட்டோ வசதிகளும் உண்டு.

7.30 – 12NOON, 4.30PM – 8PM

94435 61731 விக்னேஷ் குருக்கள்

குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.

🏵️ கோவில் தேவாரப் பதிகம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

வானவர் தானவர் வைகல்

மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்

தானவர் மால்பிர மன்னறி

யாத தகைமையினான்

ஆனவ னாதிபு ராணனன்

றோடிய பன்றியெய்த

கானவ னைக்கண்டி யூரண்ட

வாணர் தொழுகின்றதே. 1

திருநாவுக்கரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *