திருக்கச்சூர் ஆலக்கோயில் விருந்திட்டீஸ்வரர் கச்சூர் மருந்தீஸ்வரர்
மூலவர் : கச்சபேஸ்வரர் மருந்தீஸ்வரர் விருந்திட்டீஸ்வரர்
உற்சவர் : அமிர்த தியாகராஜர்
அம்பாள் : அஞ்சனாட்சியம்பாள் இருள் நீக்கியம்பாள் அந்தக நிவாரணி அம்மன்
ஸ்தல விருக்ஷம் : கல்லால மரம், வேர்ப்பலா, ஆல், மருந்து மலை,
தீர்த்தம் : கூர்ம தீ,
ஆகமம் : காமீகம்,
புராணப் பெயர் : ஆதிகாஞ்சி, திருக்கச்சூர், ஆலக்கோயில் நடனவினோதநல்லூர்
பாடல் : சுந்தரர் சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம்,
தொண்டை நாட்டு ஸ்தலம் 26
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மேற்கு பார்த்த சுயம்பு. மலைவேல் ஒரு சிவனும், அடிவாரத்தில் ஒரு சிவனும் உள்ளனர். சுந்தரர் இவ்விரு சிவனையும் சேர்த்து பதிகம் பாடியுள்ளார்.
ஸ்தல விநாயகர் மஹாகணபதி & தாலமூல விநாயகர், மூலவரின் விமானம் கஜபிருஷ்டம்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பசியாற்றிய சிவன் : சிவ தல யாத்திரை சென்ற சுந்தரர், திருக்கழுக்குன்றம் சென்று விட்டு காஞ்சி செல்லும் வழியில் திருக்கச்சூர் வந்தார். நீண்ட தூரம் வந்ததால் களைப்பாலும் பசியாலும் வாடிய சுந்தரர், கோயில் வளாகத்தில் அடியார்களுடன் சேர்ந்து ஓர் இடத்தில் அமர்ந்தார்.
அவரது பசியை போக்குவதற்காக சிவன் முதியவர் வடிவில் சென்று, பசியால் வாடி இருக்கும் உமக்கு நான் சோறு கொடுக்கிறேன், சற்று நேரம் இங்கேயே அமர்ந்து ஓய்வெடுங்கள் என்று சொல்லிவிட்டு, கையில் திருவோட்டை ஏந்திக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று, இரந்து (பிச்சை எடுத்து) உணவு கொண்டு வந்து விருந்து படைத்தார்.
சுந்தரரும் அவருடன் வந்த அடியார்களும் உணவை உண்டதும் சிவன் மறைந்தார். சிவனின் அருளை எண்ணி வியந்த சுந்தரர், “முதுவாய் ஓரி கதற” எனத் தொடங்கி பதிகம் பாடினார்.
சுந்தரருக்காக இரந்த சிவன்- இரந்தீஸ்வரர் என்ற பெயரில் கோயிலுக்கு வெளியே சற்று தூரத்திலும், விருந்து படைத்த சிவன், விருந்திட்டீஸ்வரர் என்ற பெயரில் பிரகாரத்தில் தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.
ஒரே பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுந்தரர் இவரையும் கச்சபேஸ்வரரையும் சேர்த்து ஒரே பாடலில் பதிகம் பாடியுள்ளார். இரு கோவில்களிலும் கருவறைக்கு நேரே வாயில்கள் இல்லை.
மலை மேல் மருந்தீஸ்வரர், அடிவாரத்தில் இரந்தீஸ்வரர், விருந்தீஸ்வரர்- 3 கோலங்களில் சிவன் அருள் செய்யும் தலமிது. சிவன் தனது 3 கண்களின் அம்சமாகவும் முக்காலத்தை உணர்த்துவதாகவும் இக்கோலத்தை சொல்கிறார்கள்.
காஞ்சி புராணத்தில் ஆதிகாஞ்சி என்று இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கச்சபேஸ்வரர் திருகோயில் : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்தபோது மத்தாக பயன்பட்ட மந்தார மலை கடலில் அழுந்த துவங்கியது.
கலங்கிய தேவர்கள் மஹா விஷ்ணுவிடம் வேண்ட, அவர் கச்சப (ஆமை) வடிவம் எடுத்து மந்தார மலையை தாங்க எண்ணம் கொண்டார்.
அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி சிவனை வேண்டி, மலையை தாங்கும் ஆற்றல் பெற்றார். எனவே சிவனுக்கு கச்சபேஸ்வரர், தலத்திற்கு திருக்கச்சூர் என்ற பெயரும் ஏற்பட்டது.
கச்சபேஸ்வரர் கோயில் அம்பாள் அஞ்சனாட்சி
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தெற்கு நோக்கியபடி தனி சந்நிதியில் அருள் பாலிக்கிறாள், அஞ்சனம் என்றால் கண். இவள் மக்களை தன் கண் போல் காப்பதால் இப்பெயர் பெற்றாளாம். அழகு மிகுந்தவளாக இருப்பதால் இவளுக்கு சுந்தரவல்லி என்று ஒரு பெயரும் உண்டு.
இவளது சந்நிதிக்கு முன் உள்ள மண்டபத்தில் ஸ்ரீ சக்கரம் உள்ளது. இங்கு பெண்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பம் சிறப்பாகும் என நம்பிக்கை.
விஷ்ணுக்கு அருள்செய்த சிவன்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவன் அவருக்காக இத்தலத்தில் தியாகராஜராக அஜபா நடனம் ஆடி காட்டியுள்ளார். எனவே இத்தலம் உபய விட தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
உற்சவராக ஒரு சிறு தொட்டிக்குள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் தியாகராஜருக்கே திருவிழாக்கள் நடப்பதும், அவரது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுவதும் சிறப்பு.
அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தலத்து முருகன் குறித்து பாடல்.
ஸ்தல விருக்ஷம் கல்லால மரம் என்பதால் இக்கோவிலுக்கு ஆலக்கோவில் என்றொரு பெயரும் உள்ளது. இங்கு நவகிரஹ சந்நிதி இல்லை.
மருந்தீஸ்வரர் கோவில் ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு சமயம் இந்திரன் பெற்ற சாபத்தால் நோய்வாய் பட்டான் – அவதி- அஸ்வினி தேவர்களாலும் குணப்படுத்த முடியவில்லை- அவர்கள் நோயை குணப்படுத்தும் மூலிகைகளை தேடி பூலோகம் வந்தனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
நாரதரிடம் ஆலோசனை. அவர் மருந்து மலை எனும் இம்மலையில் குடி கொண்டிருக்கும் சிவனையும் அம்பாளையும் வழிபட்டு வந்தால் அவர்கள் அருளால் மருந்து கிடைக்கும் என்று கூறினார்.
அதன்படி இங்கு வந்து அஸ்வினி தேவர்கள் வழிபாடு. அவர்களுக்கு இரங்கிய சிவன் மருந்து இருக்கும் இடத்தை காட்டி அருள் புரிந்தார், தேவர்கள் பலா அதிபலா எனும் 2 மூலிகைகள் எடுத்துகொண்டு தேவலோகம் சென்று இந்திரனின் நோயை குணப்படுத்தினர். இந்திரனுக்கு மருந்து கொடுத்தவர் என்பதால் இங்கு சிவபெருமானுக்கு -மருந்தீஸ்வரர் என பெயர்.
மருந்தீஸ்வரர் கோவில்
இருள் நீக்கிய அம்பாள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அஸ்வினி தேவர்களுக்கு மருந்து இருந்த இடத்தை காட்டிய போதும், அவர்களால் எது சரியான மருந்து என கண்டுபிடிக்க முடியவில்லை. இரக்கம் கொண்ட அம்பாள், மூலிகையின் மீது ஒளியை பரப்பி, அதனை சூழ்ந்திருந்த இருளை அகற்றி அருள் புரிந்தாள். எனவே இப்பெயர்.
பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் அடுத்தடுத்து உள்ளது.
சண்டிகேஸ்வரர் பிரம்ம சண்டிகேஸ்வரர். 4 முகங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு திங்கள் தேன் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. சிறிய மலையின் மீது அமையபெற்ற கோவில் இது.
சுந்தரர் இத்தலத்து சிவனை, “மாலை மதியே! மலைமேல் மருந்தே!’ என பாடியுள்ளார். கோவில் கொடி மரத்தின் அருகில் சிறிய மண் குழி ஒன்று உள்ளது. இம்மண்ணை மருந்து என்கிறார்கள். இதனை உட்கொள்ள நோய்கள் நீங்கும்.
பிரகாரத்தில் உள்ள மருந்து தீர்த்த கிணறு சற்றுதூரம் நடந்து சென்று தீர்த்தம் எடுக்கும்படி கரையுடன் இருக்கிறது.
மலையடிவாரத்தில் தாலமூல விநாயகர் தனி சந்நிதியில் உள்ளார். கலைஞர்கள் இவரிடம் வேண்டி கொண்டால் புகழ் பெற்று சிறக்கலாம்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கூர்ம குளத்திற்கு அருகில் சுந்தரர் பசி களைப்பால் படுத்திருந்த 6 கால் மண்டபம் இருக்கிறது.
கோவிலுக்கு எதிரில் உள்ள 16 கால் மண்டப தூணில் அனுமந்த சேவை, கூர்மாவதாரம், காளிங்க நர்த்தனம், கல்கி அவதாரம், துர்கை, ஆதிசேஷன், ஊர்த்த தாண்டவம், காளி முதலிய பல சிற்பங்களும்,
பக்க வாயில் (தெற்கு) முன்னால், மண்டப தூண் ஒன்றில், மஹாவிஷ்ணு ஆமை வடிவில் இறைவனை வழிபடும் சிற்பமும் உள்ளன.
மூலவர் சிவலிங்க திருமேனி, சுயம்பு மூர்த்தி, சிறிய பானம், கருவறை அகழி அமைப்பு,
சித்திரை பிரம்மோற்சவம் 9ம் நாள் – இறைவன் சனகாதி முனிவர்களுக்கு அருளிய சின் முத்திரை உபதேச ஐதீகம் நடைபெறுகிறது.
சுந்தரரின் முதுவாயோரி தலபதிகம் கல்லில் பொரிக்கப் பட்டுள்ளது.
மருந்தீசர் கோயில் சிறிய மண்டப தூண்களில் உள்ள சிற்பங்களில் – இறைவன் அமுதுடன் சுந்தரரை நோக்கியவாறு உள்ள சிற்பம் அழகு.
இக்கோயிலில் படிகளில் இறங்கி நீர் அருந்தும் அமைப்புடைய, ‘நடைபாதை கிணறு’ உள்ளது.
இக்கோவில் மூலவர் உயர்ந்த திருமேனி – கோமுகம் மாறி உள்ளது.
இங்கு மாசிமாத
பிரம்மோற்சவத்தில், 9ம் நாளில் இறைவன் பிச்சை எடுத்து சுந்தரருக்கு அமுதிட்ட ஐதீகம் நடைபெறுகிறது.
கோவில் முன் மண்டபத்தில் “அமுத தியாகேச சபை” உள்ளது.
விருநதிட்டீஸ்வரர் சன்னதி மேல் சுந்தரரை நோக்கி கையில் அமுத கலசத்துடன் காணப்படும் இறைசிற்பம் சிறப்பு.
பிரார்த்தனை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
தீராத பிணிகள் தீர
மண் பிரசாத மகிமை கொடிய நோய்களும், துஷ்ட சக்திகளும் நீங்கும்
பார்வைக் குறைபாடுகள் நீங்கும், மன இருள் (ஆணவம்) மற்றும் கிரக தோஷங்கள் நீங்கும்.
நினைத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
வறுமை மற்றும் பசிப்பிணி நீங்க
விவசாயம் செழிக்க
குடும்ப சுபிட்சத்திற்கும், மங்கள வாழ்விற்கும் பிரார்த்தனைகள்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கச்சபேஸ்வரர் சித்திரை பிரம்மோற்சவம், சித்ரா பௌர்ணமி, ஆருத்ரா தரிசனம் &
மருந்தீஸ்வரர் மாசியில் பிரம்மோற்சவம், பௌர்ணமில கிரிவலம், சோமவார படி பூஜை, திருக்கார்த்திகை, நவராத்திரி..
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மஹாவிஷ்ணு, பிரம்மா சரஸ்வதி அஸ்வினி குமாரர்கள் சுக்ராச்சாரியார் சனகாதி முனிவர்கள் நாரதர் வள்ளலார் சுந்தரர் அப்பர் சேக்கிழார் அருணகிரிநாதர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீ பெரும்புதூர் சாலையில் ஒன்றரை கிமீ. தியாகராஜபுரம் திருக்கச்சூர் வழியில் வலப்புறம் சாலை. அருகிலேயே மலைக்கோவில்.
5KM From சிங்கப்பெருமாள் கோவில்.
8AM – 11AM 5.30PM – 8PM
044 27463514 27464325
9381186389 N.முரளிதர குருக்கள்
98401 74530 தினேஷ் குருக்கள்
கோயில் தேவார பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
முதுவாய் ஓரி கதற முதுகாட்
டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடும்
மலையான் மகள்தன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக்
கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆமா றிதுவோ கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே. 1
சுந்தரர்


Leave a Reply