திருஊறல் தக்கோலம் ஜலநாதீஸ்வரர் 

திருஊறல் தக்கோலம் ஜலநாதீஸ்வரர் 

👑மூலவர் : ஜலநாதீஸ்வரர் / உமாபதீஸ்வரர் 

அம்பாள் : கிரிராஜ கன்னிகை, மோகனவல்லி,

ஸ்தல விருக்ஷம் : நெல்லிமரம், வால்மிளகுசெடி

தீர்த்தம் : நந்தி, பார்வதி தீ,

பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர் 

சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், தொண்டை நாட்டு ஸ்தலம் 12

👑ஸ்தல சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷இத்தலத்தில் காமதேனு வழிபட்டதால், இங்கு செய்யும் சிவ புண்ணியம் ஒன்றுக்கு 100 மடங்காக பெறுகும் என புராணம் கூறுகிறது.

🌷இத்தலத்தில் அம்மன் நின்ற நிலையில் வடக்கு பார்த்திருப்பதால் மிகவும் சக்தி உள்ளவளாக திகழ்கிறார். இங்கு அம்மனுக்கு தான் முதல் பூஜை.

🌷இங்குள்ள சுவாமி அம்மன் காளி முருகன் தக்ஷிணாமூர்த்தி ஒவ்வொன்றுமே சிறப்பு பெற்றது. இங்கு அருணகிரிநாதர் முருகனை பாடி உள்ளார்.

🌷நர்த்தன நிலையில் (உத்கடி ஆசனத்தில்) தக்ஷிணாமூர்த்தி திருகோலம் வேறு எங்கும் காண முடியாது.

தமிழகத்தில் உள்ள சிறப்புப் பெற்ற தக்ஷிணாமூர்த்தி கோவில்களில் இது முக்கியமானது.

👑 நிறம் மாறும் லிங்கம்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷ஒருமுறை இப்பகுதியில் வெள்ளம் வந்தபோது பார்வதி தேவி இங்குள்ள சிவனை அனைத்து காப்பாற்றியதன் அடையாளமாக லிங்க திருமேனியில் பள்ளம் இருப்பதையும், அதையும் தாண்டி வெள்ளம் அரித்தது போல், லிங்கத்தின் கீழ் பகுதியில் வரி வரியாக மணல் கோடுகள் இருப்பதை இன்றும் காணலாம்.

🌷பார்வதிதேவி இந்த லிங்கத்தை அனைத்திருப்பதாக ஐதீகம் இருப்பதால் இங்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார்கள் இந்த லிங்கத்தை தொடாமல் தான் இன்றும் கூட அபிஷேகம் செய்கிறார்கள். ஆதலால் தீண்டாதிருமேனி. இது இத்தலத்தின் மாபெரும் சிறப்பு.

🌷இது தவிர இன்னொரு அதிசயத்தையும் இந்த லிங்கத்தில் காணலாம். உத்தராயண காலத்தில் இந்த லிங்கம், செந்நிறமாக காட்சி தரும். அப்போது நல்ல மழை பொழிந்து பயிர் செழிக்கும்.

🌷தக்ஷிணாயன காலத்தில் இதே லிங்கம், வெண்மையாக மாறும். அப்போது வறட்சி ஏற்பட்டு நிலம் காய்ந்து விடும்.

🌷இத்தலத்தில் உள்ள அனைத்து சிலைகளும் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு சிற்பக்கலைக்கு எடுத்துக்காட் டாக விளங்குகிறது.

🌷இங்கு ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம்.

👑ஸ்தல பெருமை👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° 

🌷முறையற்ற யாகம் செய்ததற்காக தனக்கு கொடுக்கப்பட்ட தண்டனையை நினைத்து தக்ஷன் ஓலமிட்டதாலும், இத் தலத்தின் ஸ்தல விருக்ஷம் தக்கோலம் என்பதாலும் இத்தலத்திற்கு தக்கோலம் என்று பெயர் வந்ததாக கூறுவர்

🌷இத்தலத்தில் உள்ள நந்தியின் வாயிலிருந்து எப்போதும் நீர் வழிந்து வந்ததாலும், இறைவனது திருவடியில் இருந்து நீர் சுரப்பதாலும் இத்தலத்திற்கு திரு ஊறல் என பெயர்.

👑 தக்ஷிணாமூர்த்தி சிறப்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷கோஷ்டத்திலுள்ள யோக தக்ஷிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் ஒரு காலை மடித்து பீடத்தில் இருத்திக்கொண்டு, வலது

காலை தரையில் வைத்து, உத்கடி ஆசன நிலையில் அமர்ந்துள்ளார். இந்த ஆசனம் மனதை கட்டுப்படுத்துவதாகும். 🌷மனம் அலைபாயும் மாணவர்ள் இவரை வணங்கலாம். ஒரு கையில் ருத்ராக்ஷ மாலையும் மற்றொரு கையில் தாமரையும் உள்ளது. காலடியில் முயலகன் இல்லை. இவர் தலையை இடதுபுறம் சாய்த்து மாணவர்களை அடக்கி ஆளும் ஆசிரியர் போன்ற பாவனையில் உள்ளார். இந்த அபூர்வ கோலத்தை வேறு எங்கும் காண இயலாது.

👑 வித்தியாசமான கோமுகி👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷சிவன் சந்நிதியில் வெளியேறும் அபிஷேக தீர்த்த கோமுகி, பூத கணத்தின் முகமாக வித்யாசமாக உள்ளது.

🌷வெளிப்பிரகாரத்தில் நின்ற நிலையில் காட்சி தரும் கிரிராஜ கன்னிகாம்பாளை தரிசித்து விட்டு தான் சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

🌷சிவன் சந்நிதி கோஷ்டத்தில் உள்ள துர்கை சாந்தமே வடிவாக அருள் புரிகிறாள்.

🌷இத்தலத்தை திருவூறல் என அப்பர் சுந்தரர்  பாடியுள்ளனர். இவ்வூரில் 7 விநாயகர் கோயில், 7 சிவாலயங்கள், 7 கிராம தேவதை கோயில்கள் உள்ளன.

👑 ஸ்தல வரலாறு 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷தேவகுரு ப்ரகஸ்பதியின் தம்பி உததி முனிவர் தன் நோய் நீங்க, சிவனை வழிபட, நந்தி தேவர் தன் வாய் வழியாக கங்கையை பாயவிட்டார். அது இங்குள்ள சிவலிங்கத்தை சுற்றி வந்து, மற்றொரு நந்தியின் வாயிலிருந்து வெளியேறியது.

அதில் நீராடி சிவனை வழிபட்ட முனிவர் நோய் நீங்க பெற்றார்.

🌷ஜலம் சூழ்ந்து சென்றதால் சிவன் ஜலநாதீஸ்வரர் என பெயர் பெற்றார். தற்போது இது போல் தண்ணீர் வரவில்லை. கங்கோத்பத்தி போன்ற புராதன பூஜை முறைகளை கடைபிடித்தால் மீண்டும் தண்ணீர் வர வாய்ப்புண்டு என்கிறார்கள்.

🌷தக்ஷன் நடத்திய யாகத்திற்கு அவள் மகள் தக்ஷாயணி (பார்வதி தேவி) சென்றபோது அவளை அவன் அவமானப் படுத்தினான். சிவன் தக்ஷனின் தலையை அறுத்தார்.

🌷அவனும், தன் சொல் மீறி சென்ற பார்வதி தேவியும் பூலோகத்தில் உள்ள க்ஷீர நதிக்கரையில் (பாலாறு) தன்னை நினைத்து வழிபட விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி தக்ஷன் சிவனை வழிபட்டு ஆட்டுத் தலை பொருத்த பெற்றார்.

🌷தக்ஷன் தனக்கு தலை வேண்டி ஓலமிட்டு (சப்தமிட்டு) வழிபட்டதாலும் (தக்கன்+ஓலம்)

& தலை இழந்த அவனுக்கு ஆட்டுத்தலை கொடுத்து தக்க கோலத்தை கொடுத்ததாலும் இவ்வூர் தக்கோலம் என்று பெயர் பெற்றது.

👑ஸ்தல சிறப்பு தகவல்கள்👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷கல்லாற்றின் கரையில் 2 பிரகாரங்களுடன் மேற்கு நோக்கிய 3நிலை ராஜகோபுரம். கிழக்கு நோக்கிய ஸ்வாமி சந்நிதியும், வடக்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும்.

🌷கோபுரம் 1543ல் விஜயநகர அரசன் வீரப்பிரதாப சதாசிவ மகாராயர் கட்டியுள்ளார். மகா மண்டபத்தில்  நடராஜர், ஐயப்பன், நவகிரக சந்நிதிகள் உள்ளது.

🌷முதல் பிரகாரத்தில் பஞ்சலிங்கம்,தக்ஷிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை உடன் முருகர், மகாலஷ்மி, சண்டிகேஸ்வரர், பைரவர் திருமால் சூரியன் சந்திரன் சப்த மாதர் உள்ளனர். .

2ம் பிரகாரத்தி ல் அம்மன், சக்திவிநாயகர் சந்நிதி, குளம் நந்தி பலிபீடம் கொடிமரம் அமைந்துள்ளது..

🌷கோபுரத்தில் உள்ள பலவகை சிற்பங்களில், மார்க்கண்டேயரு க்காக இறைவன், எமனை உதைத்தருளும் சிற்பம் காணத்தக்கது.

🌷ஸ்வாமி சந்நிதி எதிரில் சாளரம் உள்ளது. ஓரத்தில் சுரங்கப்பாதை உள்ளது. கல்லால் மூடப்பட்டுள்ளது.

👑 பிரார்த்தனை 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷இத்தலத்தில் காமதேனு வழிபட்டுள்ளாள். எனவே நாம் இங்கு வழிபாடு செய்தால் 100 மடங்கு பலன் கிடைக்கும். விவசாயம் செழிக்க பிரார்த்தனை.

குழந்தை வரம் மற்றும் சுகப்பிரசவம்:

நோய் மற்றும் பிணி தீர்தல்:

குரு பரிகார ஸ்தலம்:

சாப விமோசனம்:

👑 திருவிழாக்கள் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷சித்ரா பௌர்ணமியை ஒட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம். நவராத்திரி, கந்தசஷ்டி, வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், மார்கழி திருவாதிரை, மாசி மகம் தைப்பூசம் திருக்கார்த்திகை etc…

👑வழிபட்டோர் 👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🌷பார்வதிதேவி, மஹாவிஷ்ணு, சம்வர்த்தமுனிவர்,

காமதேனு, இந்திரன், சந்திரன், எமன், திருமூலர், சப்தமாதர், பாண்டவர்கள், சேரமான் பெருமாள் நாயனார், உததி முனிவர், பட்டினத்து பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, அப்பர், சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார் ஆகியோர் இறைவனை வழிபாடு செய்துள்ளனர்.

👑அமைவிடம்,நேரம்,தொடர்பு👉

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

10 KM FM இலம்பையங்கோட்டூர் 

14 KM FM திருவாலங்காடு 

30 KM FM காஞ்சிபுரம், இருப்புப் பாதை நிலையம். ஊர் அருகே கல்லாறு.

8AM – 12NOON, 4.30PM – 8 PM

99947 86919 பாபு சிவாச்சாரியார் 

👑 கோவில் தேவாரப் பதிகம் 

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

மாறில் அவுணரரணம் மவைமாயவோர் 

  வெங்கணையா லன்று

நீறெழ எய்தவெங்கள் 

  நிமலன் இடம்வினவில்

தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல் 

  பாய்வயலுஞ் சூழ்ந்த

ஊறல் அமர்ந்தபிரான் 

  ஒலியார்கழல் உள்குதுமே. 1

 ஞானசம்பந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *