திருஈங்கோய்மலை மரகதாசலேஸ்வரர் ஈங்கோய்நாதர்
மூலவர் : மரகதாசலேஸ்வரர்/ திரணத் ஜோதீஸ்வரர் / ஈங்கோய்நாதர்
அம்பாள் : மரகதாம்பிகை / லலிதா / மரகதவல்லி
ஸ்தல விருக்ஷம் : புளியமரம்
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்
பாடல் : சம்பந்தர்
சுயம்பு, தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 63
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இத்தல இறைவன் மரகதத்தால் ஆன சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார் .
மாசி சிவராத்திரியின் பொழுது மூன்று நாட்கள் சூரிய பூஜை. இந்நேரத்தில் லிங்கம் நிறம் மாறி காட்சியளிப்பது விசேஷம்.
அம்பிகை வழிபட்ட ஸ்தலம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது சாயா சக்தி பீடம். இம்மலை பராசக்தி அம்சமாக போற்றப்படுகிறது “சக்தி மலை “.
சோமாஸ்கந்த க்ஷேத்ரம். இறைவன் இறைவி நடுவில் ஸ்கந்தன்.
யுகத்திற்கெல்லாம் முன்பாக தோன்றியது. மலையே இறைவனாக, மலை மேல் இறைவன் மரகதாசலேஸ்வரராக எழுந்தருளி அருள் பாலிக்க கூடிய, திரு கயிலாயத்திற்கு ஒப்பான ஒரு மலையை நாம் தரிசனம். இறைவன் ஜோதி ரூபமாகவும் எழுந்தருளி இருக்கிறார்.
மூலவருக்கு தீபாராதனை செய்யும் பொழுது அந்த தீபத் சுடரொளி இறைவன் திருமேனியிலே பட்டு நமக்கு பிரதிபலிக்கக்கூடிய ஆற்றல் கருவறையில் எழுந்தருளியிருக்க கூடிய இறைவனின் அற்புதத்தை நாம் உணர முடியும்.
நக்கீரர் இம்மலை மீதுள்ள பெருமான் மீது ‘ஈங்கோய் எழுபது ‘ என்ற நூலைப் பாடிப் பரவியுள்ளார்.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கிருதயுகத்தில் பிரம்மா தன்னுடைய படைப்புத் தொழிலை புணராவர்த்தனம் செய்வதற்காக தபஸ் செய்த புண்ணிய பூமி. பிரம்மா மாசி சதுர்தசி சிவராத்ரி தங்கி, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தீர்த்தம் கொண்டு வந்து, இறைவனுக்கு அபிஷேகம் செய்து, சிவபெருமான் இடத்தில் உபதேசம் பெற்ற புண்ணிய பூமி.
பிரம்மாவிற்கு ஞானத்தை ஊட்டிய காரணத்தினாலேயே பிரம்மபுரீஸ்வரர் ஞானபுரீஸ்வரர்
திரேதா யுகத்திலே மஹாவிஷ்ணு & மஹாலக்ஷ்மி சிவனின் அருளை பெற்ற சிவஸ்தலம்.
துவாபர யுகத்திலே ஆதிசேஷன் வாயு பகவான் தேவேந்திரன் வழிபட்ட புண்ணிய பூமி.
இவற்றையெல்லாம் யார் கூற யார் கேட்டார்கள்
தக்ஷிணா மூர்த்தியினிடத்தில் உபதேசம் பெற்ற பிற்பாடு, பிரம்ம ஞானத்தை அடைந்த பிற்பாடு, சனகர் சனாதனர் சனந்தர் சனத்குமாரர்
சனத்குமாரர் நந்தியம் பெருமானை அணுகி
நாங்கள் அடைந்த ஞானம் சரிதானா என்று எங்கு பரிசோதித்து பார்க்க வேண்டும், எவற்றை அறிந்தால் நான் பெற்ற ஞானமானது சத்தியம் என்பதை உணர முடியும் என்று வினவ
நந்தியம் பெருமான் உபதேசித்து தரிசனம் பெற்ற, எத்தலத்தை நாம் அடைந்தால் நமது ஞானம் பூரணமாகுமோ
அந்தத் தலமாக இதைக் கூறி அருளினார்
அதுவே ஈங்கோய்மலை திருத்தலம்.
ஜகன்மாதா உமாதேவி தபஸ் பண்ணின புண்ணிய பூமி. அவள் ஏற்படுத்திய தீர்த்தம்
அமிர்த தீர்த்தம்.
பிரம்ம தீ, லக்ஷ்மிதீ, அமிர்த தீ, காவிரி நதி இவை நான்கும் சூழ அமைந்திருக்கும் அழகான மலையே ஈங்கோய்மலை
ஈங்கோய் மலைக்கு பெருமை சேர்ப்பது அகத்தியர். காலை கடம்பர் மதியம் சொக்கர் அந்தி ஈங்கோய் மலை நாதர் என்பது வாக்கு. அகத்தியர் முதல் இரண்டு ஆலயங்கள் தொழுது வந்து மாலையில் காவிரியில் அனுஷ்டானங்கள் முடித்து இங்கு வருவதற்குள் அர்ச்சகர் கோவில் மூடி சென்று விட்டார். அகத்தியர் அஷ்டமா சித்திகள் பெற்றவர். இறைவனை வணங்க ஆலய கதவு துவாரத்தின் வழியாக செல்ல, ஈ வடிவம் கொண்டு ஈசனை வழிபட்ட காரணத்தினாலேயே ஈங்கோய்மலை.
மலையிலே ஆதிசேஷன் உருவாக்கிய சர்வ நதி இருந்தது. அதில் குளித்து விட்டால் மீண்டும் உருவம் எடுக்கலாம் என்கிறார்கள். இப்போது இல்லை.
இக்கோயிலின் ஸ்தல விருக்ஷம் புளிய மரம். ஆனால் இப்பொழுது மகாலக்ஷ்மியின் அம்சமாக இருக்கிறது. சிவனிடம் எப்போதும் பொன் கேட்டு பெரும் சுந்தரருக்கு, இங்கு எவ்வளவு கேட்டும் கொடுக்கவில்லை. இறுதியில் கையில் தங்கப் புளியம்பழம் விழுந்தது, அதுவும் மறைந்தது. எனக்கு கிடைக்காத புளி எவருக்கும் கிடைக்க வேண்டாம் என சுந்தரரின் சாபத்தால் இன்று புளியமரம் இல்லை.
இந்திரன் மந்திரோபதேசம் பெற்றதும் இங்கே. கௌதமர் சாபத்தால் கூனி குறுகி மறைந்து வாழ்ந்த இந்திரன் இங்கு அகத்தியரை வேண்டி மஹாபாவிகள் தியானித்தாலும் கொடிய பாவங்களை நீக்க வல்ல மந்திர உபதேசம் பெற்று சிவபெருமானை தியானித்து அருள் பெற்றான்.
வீதிஹோத்திரன் முக்தி பெற்றது, நவ சித்தர்கள் பூஜித்தது என சொல்லிக் கொண்டே போகலாம்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரிங்கி மகரிஷி சிறந்த சிவ பக்தர், ஒரு சமயம் சிவபூஜை முடித்த முனிவர் உமயம்மையை விடுத்து சிவபெருமானை மட்டும் தனியாக வலம் வந்தார். சிவபெருமானை வலம் வந்த பொழுது ஆனந்த கூத்தாடினார். கௌரியை விடுத்து சிவத்தை மட்டும் நினைத்தார். கௌரி பிரிங்கியிடம் கோபம் கொண்டாள். எவற்றையும் தனித்து பிரித்துப் பார்க்கக் கூடாது. சிவனும் உமையும் வெவ்வேறு அல்ல. பிரிங்கி மகரிஷி தன்னுடைய சக்தியையும் தபோபலத்தையும் இழந்தார்.
சிவP கைலாயத்தில் கோபப்படலாமா கௌரி! ஆகவே நீ பூலோகத்தில் பிறக்க கடவது என கட்டளை, சாபம் இல்லை. ஏன் தெரியுமா..? இறைவன் இறைவியோடு தன் பால் சரீரத்தை பெறுவதற்காக!!
தவம் செய்வதற்கு உரித்தான இடத்தை தேர்ந்து எடுத்து பூமிக்கு வந்த இடம் தான் ஈங்கோய்மலை. இம்மலையிலேயே தங்கி தீர்த்தம் ஏற்ப்படுத்தி கௌரி சிவ பூஜை புரிந்து, இறைவனின் இடப்பாகத்தை அளிப்பேன் என வாக்கு / அருள் பெற்ற புண்ணிய பூமி. பிருங்கியும் இங்கேயே தபஸ் செய்து அர்த்தநாரீஸ்வரர் வணங்கி வழிபட்ட திவ்யமான திருத்தலம்.
ஆதிசேஷன் வாயு பகவான் யார் பலசாலி என போட்டி. வாயு வீச ஆதிசேஷன் தளர்த்த ஐந்து சிகரங்கள் ஐந்து ரத்தினங்களாக சிதறின. அதில் ஒன்றுதான் மரகதம் என்கிற பச்சை கல் விழுந்த இடமே மரகதாச்சலம் என அழைக்கப்படுகிற ஈங்கோய்மலை. மாணிக்க கல் விழுந்தது வாட்போக்கி, நீலம் எனும் ரத்னம் விழுந்தது பொதிகை மலை,
வைரம் விழுந்தது கொடுமுடி
சிகப்பு மணி பவளம் விழுந்த இடமே திருவண்ணாமலை இந்த ஐந்து திருத்தலங்களையும் வாழ்விலே ஒரு முறையேனும் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது. ஒன்றை தரிசித்தால் கூட மறுபிறவி இல்லை அத்தனை சிறப்பு..
ஆதிசேஷனும் வாயு
பகவானும் கைலாயத்திலிருந்து இங்கு வந்து இறைவனை வணங்கி அருள் பெற்றனர்.
முன்பு அகத்திய முனிவர்
தாமே ஈ வடிவம் கொண்டு தேன் கூடுகளில் இருந்து பெற்ற தேனை பல்லாண்டுகளாக அபிஷேகத்து வந்ததால் ஈங்கோய்மலை. இப்போதும் செய்கிறார்.
முன்பு ஒரு முறை ஒரு குரங்கு, இங்கிருந்த ஸ்தல விருக்ஷம், புளிய மரத்தின் மீதி இருந்த தேன் கூட்டை இழுக்கும் பொழுது, தேனீ கடித்து, தேன்கூடு கைநழுவ – மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கம் மீது விழவே தேன் அபிஷேகம் ஆனது. குரங்கு மறுபிறப்பில் அரசனாக சுப்ரபன்
தர்மம் தானம் திருப்பணி – மீண்டும் இங்கு அபிஷேகம் செய்ய வர- தேன் கிடைக்காமல் தன் காதுகளை வாளினால் அறுக்க தொடங்கும் பொழுது
இறைவன் காட்சி கொடுத்து அவனை கயிலையில் சிவ கணங்களுக்கு அதிபதி ஆக்கினார்.
ஸ்தல சிறப்பு செய்திகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மலைக்கோவில், 560 படிகள், தெற்கு நோக்கி ராஜகோபுரம் கிழக்கு நோக்கிய மூலவர், மரகதாம்பிகை நின்ற கோலத்திலும், கருவறை விமானம் கோபுர அமைப்பில் மூன்று கலசங்களுடன் இருக்கிறது. அம்பாளுக்கு சிவன் இடப்பாகம் தர உறுதி தந்த மலை என்பதால் சக்தி மலை. கருவறை கோஷ்டத்தில் மகிஷாசுரனை வதம் செய்த துர்க்கை காலுக்கு கீழே மனுஷனுடனும், மற்றொரு துர்க்கை சாந்த ஸ்வரூபியாகவும் உள்ளனர். பிரகாரத்தில் வல்லப விநாயகர் முருகன் மஹாவிஷ்ணு ஆகியோரும் உள்ளனர்.
தைப்பூசத்தன்று சுவாமி அம்பாளுடன் காவிரிக்கரையில் எழுந்தருளுகிறார். ஆடி கிருத்திகை & பௌர்ணமி கிரிவலம் சொல்கின்றனர். காவேரி வடகரை கடைசி ஸ்தலம்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
குழந்தை பாக்கியம்
திருமணத்தடை நீக்குதல்
கல்வி மற்றும் ஞானம்
பாவங்கள் மற்றும் சாபங்கள் நீங்குதல்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பங்குனி பிரம்மோற்சவம் 10 Days
மஹா சிவராத்திரி
தைப்பூசம்
மாசி மகம்
பௌர்ணமி கிரிவலம்
கார்த்திகை சோமவாரம் காலையில் கடம்பர், நண்பகல் அய்யர்மலை மாலையில் ஈங்கோய்மலை வழிபாடு சிறப்பு.
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அம்பிகை, பிரம்மா, பிருங்கி மஹரிஷி, மஹாவிஷ்ணு மஹாலஷ்மி அகத்தியர் (ஈ வடிவில்), இந்திரன், ஆதிசேஷன், வாயு, நவசித்தர்கள், வீதிஹோத்திரன், சுப்ரபன் ராஜா, நக்கீரதேவ நாயனார், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார் முதலியோர்
அமைவிடம்,நேரம்,தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருச்சி மாவட்டத்தில் முசிறிக்கு அருகில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ளது.
மலைக்கோவில். செங்குத்தான 560 படிக்கட்டுகளை கடந்து மலை உச்சிக்குச் செல்ல வேண்டும், வயதானவர்கள் கவனமாக ஏற வேண்டும். தார்சாலை அமைக்கும் திட்டமும் உள்ளது என்று குருக்கள் கூறுகிறார்.
திருச்சியிலிருந்து முசிறி வழியாக சேலம்/நாமக்கல் செல்லும் பேருந்துகளில் ஏற வேண்டும்.முசிறியைக் கடந்து தொட்டியம் செல்லும் வழியில் உள்ள திருஈங்கோய்மலை நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ளலாம். (திருச்சியிலிருந்து சுமார் 40KM தொலைவு, முசிறி 5KM )
கரூர்/குளித்தலையிலிருந்து வருபவர்கள்:கரூர் மாவட்டத்தின் முக்கிய நகரான குளித்தலையிலிருந்து காவேரி ஆற்றின் பாலத்தைக் கடந்து வடகரைக்கு வந்தால் இத்தலத்தை எளிதில் அடையலாம்.குளித்தலை காவிரி பாலத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. குளித்தலை பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
9AM – 6PM. அர்ச்சகர் இடம் முன்னே தொடர்பு கொண்டு விட்டு செல்வது நல்லது.
95668 28612 & 94439 50031
ஸ்ரீ பவன் குருக்கள்
94431 92145 பசுபதி குருக்கள்
99441 20135 முத்து குருக்கள்
98651 58097 சுந்தரம் குருக்கள்
98650 95435 நடராஜன் குருக்கள்
63830 30661 ஸ்ரீநாத்சிவம் குருக்கள்
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வானத்துயர்தண் மதிதோய்சடைமேல்
மத்த மலர்சூடித்
தேனொத்தனமென் மொழிமான்விழியாள்
தேவி பாகமாக்
கானத்திரவில் எரிகொண்டாடுங்
கடவுள் உலகேத்த
ஏனத்திரள்வந் திழியுஞ்சாரல்
ஈங்கோய் மலையாரே.
ஞானசம்பந்தர்


Leave a Reply