திருஆனைக்கா திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்
மூலவர் : ஜம்புகேஸ்வரர்
உற்சவர் : சந்திரசேகர், சோமாஸ்கந்தர்
அம்பாள் : அகிலாண்டேஸ்வரி
ஸ்தல விருக்ஷம் : வெண்நாவல்
தீர்த்தம் : ருத்ர,சிவ,சந்திர,ராம அக்னி, நாவல், சூரிய… 13 தீ + காவிரி,
பாடல் : அப்பர் சம்பந்தர் சுந்தரர்
பஞ்சபூதங்களில் நீர் / அப்பு
51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம். சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி வடகரை ஸ்தலம் 60
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பஞ்சபூத தலங்களில் ஒரு உன்னதமான க்ஷேத்ரம். மூலஸ்தானத்தில் எப்பொழுதும் தீர்த்தம் ஓடிக்கொண்டே இருக்கும்.
சிவனின் கட்டளைக்காக அம்பிகை பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவபெருமான் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்கும் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது பஞ்சபூத தலங்களில் “நீர்” தலமானது. பிற்காலத்தில் ஜம்பு எனும் முனிவர் சிவனை வேண்டி இங்கு தவமிருந்தார்.
சுவாமிக்கு பற்பல திருநாமங்கள். அதில் பிரதானமானது ஜம்புகேஸ்வரர். ஜம்பு என்றால் வெண்நாவல். சுவாமி அதில் இருக்கிறார் எப்படி? ஜம்பு மகரிஷி இங்க வந்து தபஸ் பண்றார். அவர் சுவாமிக்கு நாவல் பழத்தை நைவேத்யம் பண்றார். பூஜை எல்லாம் ஆன பிறகு நைவேத்ய பிரசாதத்தை சாப்பிடுகிறார். அந்த விதையை துப்புவதற்கு முன்னே பகவத் பிரசாதத்தை போய் நாம் துப்பலாமோ என்று முழுங்கி விடுகிறார். அவர் வயிற்றில் செடி வளர்ந்து அவர் சிசு வெடித்து அதிலிருந்து விருக்ஷம் வளர்ந்தது. இன்னிக்கும் சன்னதி கர்ப்ப கிரகம் ஒட்டி இருக்கக்கூடிய விருக்ஷம் வெண்நாவல் ஸ்தல விருக்ஷம். பூமிக்கு கீழே அவர் உட்கார்ந்து இருக்கிறார் ஜம்பு மகரிஷி – அவருக்கு அங்கேயே முக்தி. ஸ்தலவிருக்ஷம் கீழே, மர நிழலில் சுவாமி இருக்கிறார் அவருக்கு பெயர் ஜம்புகேஸ்வரர்/ஜம்புநாதர்
கோச் செங் சோழன் கட்டிய மாட கோவில்.
நவ துளை ஜன்னல் வழியாக சிவதரிசனம். மனிதன் தன் உடலில் உள்ள 9 துவாரங்களையும் அடக்கி சிவ தரிசனம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. உள்ளே போயும் சாமியை தரிசனம். மேற்கு பார்த்த சிவன்
பன்மடங்கு பலன்.
வெளிப்பிரகாரம் விபூதி பிரகாரம். சிவனே விபூதி சித்தராக வந்து பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார். இந்த 5ம் பிரகாரத்தை கட்ட துவங்கிய போது போர் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. மன்னனின் மனம் போரில் லயிக்கவில்லை. சிவனை வேண்டினான். அப்பொழுது தான் சிவன் சித்தராக வந்து பிரகாரம் கட்டும் வேலையை முடித்தார். சிவன் கட்டிய மதில் திருநீற்றான் மதில் & பிரகாரம் விபூதி பிரகாரம்.
விபூதி சித்தருக்கு பிரம்ம தீர்த்தக்கரையில் சன்னதி உள்ளது.
காலை முதல் மாலை வரை பணியாளர்கள் வேலை பார்ப்பர். அவர்களுக்கு சித்தர் கூலி கொடுப்பார். எப்படி
கையில் விபூதி கொடுப்பார். அவர்கள் வாசல் படி தாண்டிய உடனே அவா எந்த அளவுக்கு வேலை பார்த்தாளோ அந்த அளவுக்கு தங்கமாக மாறும். ஏமாத்தி இருந்தானா விபூதியாகவே இருக்கும். சரியா வேலை பார்க்கணும். நிறைய அதிசயங்கள் நிறைந்த கோவில்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கைலாயத்தில் புஷ்பகந்தன் மால்யவான். இருவரும் பக்திமான். என் பக்தி பெருசா உன் பக்தி பெருசா என சண்டை. ஒருவருக்கொருவர் சாபம் கொடுக்க பூலோகத்தில் வந்து பிறந்து விட்டார்கள்
யானையா சிலந்தியா இங்கு வந்தும் பக்தி பூஜை. வெண்நாவல் மரத்தின் கீழ் சுவாமி – யானை காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு வந்து அபிஷேகம், புஷ்பம் சாத்தும். சிலந்தி, இலை சருகு எல்லாம் சுவாமி மேலே விழுகிறது மழை வெயில் படுகிறது என்று மேலே சிலந்திப்பந்தல் (வலை) அமைக்கும். இப்படி ஒரு வழிபாடு தினமும். மறுநாள் யானை வந்து பார்க்கும் பொழுது சிலந்தி வலை சருகு- யானை கோபமடைந்து அனைத்தையும் அகற்றி மீண்டும் அபிஷேகம். இது தொடர்ந்து. சிலந்தி ஒரு நாள் பார்த்தது, துதிக்கை வழியா உள்ளே நுழைந்தது, மேலே போய் மூளையை கடித்தது. யானை துதிக்கையை அடித்துக் கொண்டு இறந்து போனது. உள்ளே இருந்து வெளியே வர முடியாமல் சிலந்தியும் இறந்து போனது
பகவான் யானைக்கு இங்கேயே அனுகிரகம், இந்த ஊருக்கும் யானையின் பெயர். நீ கைலாயத்திற்கு வந்துடுன்னார் மால்யவானை.
புஷ்பகந்தனை- கடித்து கொலை செய்தாய், நீ போய்
இன்னொரு பிறவி பிறக்க வேண்டும்- இறைவனை வேண்ட
கவலைப்படாதே அதுக்கும் உனக்கு அனுகிரகம்.. அவர்தான் அடுத்த ஜன்மாவில் கோச் செங் சோழன். 63 நாயன்மார்களில் ஒருவராய் 72 சிவாலயங்கள் கட்டிய யானைபுகா வாயில் / மாடக்கோவில்களுக்கெல்லாம் காரண கர்த்தா. அவனுடைய ஜன்மஸ்தானம் பிறந்த ஊர் இது.
சுபதேவன் சோழராஜா, கமலாவதி தர்மபத்னி சிறந்த அரசன் சிவ பக்தன் புத்ரபாக்யம் வேண்டி தினமும் சுவாமியை வேண்ட ஒரு நாளைக்கு அவர் பிரதக்ஷினம் பண்ணிண்டு வரச்சே, வெண் நாவல் பழம் விழுகிறது, எடுத்து அவர்கள் சிவபிரசாதம் என்று உண்ண அந்த விதையின் உள்ளே இருக்கக்கூடிய ஆத்மா கோச்செங்சோழனாக பிறக்கிறான்..
அதுவும் எப்படி
தாயார் பூரண கர்ப்பிணி குழந்தை பிறக்கப் போகிறது
கருவாய்க்கிட்ட குழந்தை வரச்சே அந்த ஊர் ஜோசியர்
கூப்பிட்டு சொல்கிறார் இன்னும் மூணே முக்கால் நாழிகை கழித்துப் பிறந்தால் இந்த உலகத்தையே ஆள்வான், சிறந்த அரசனாக திகழ்வான்- குழந்தையோ பிறக்கப் போகிறது- எப்படி 33/4 நாழிகை ?
ராணி சிவபக்தி அதிகம் –
பெண்களுக்கே வைராக்யம் அதிகம் – மேலும் உடலில் இருந்து வெளியே வரும் விஷயங்களை தடுக்க முடியாது. ஆனாலும் அவள் நாட்டுக்காக என்ன செய்தாள் தெரியுமா
“தலை கீழா நின்னா” அதுவும் 11/2 மணி நேரம்- 33/4 நாழிகை
அதுவும் பூரண கற்பவதி.
33/4 நாழிகை கழித்து திரும்பி வருகிறாள், குழந்தை பிறக்கிறது. கண்கள் சிவந்து போய் பிறக்கிறது. சிவந்த கண்களைப் பார்க்கிறாள்- ” “செங்கண்ணா” னா, அதுதான் பேரு. பார்த்தா, உயிரை விட்டுடறா. உயிர் கொடுத்து அவரை இந்த உலகத்துக்கு கொடுத்தவ..
ஸ்த்ரீகளால முடியும் தர்மத்தை காப்பதற்கு.
கைலாயம் புஷ்பகந்தன் சிலந்தி
கோச்செங்கண்ணன் அவனால் கட்டித் தரப்பட்டது தான் சோழ தேசத்தின் முக்கியமான கோவில்கள் 72 கோவில்கள் மாட கோவில்கள்.
இந்த க்ஷேத்ரத்தை எல்லோரும் பாடி இருக்கா. அப்பர் சுந்தரர் சம்பந்தர் etc.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஆதிசங்கரர் புனருத்தாரணம். அம்பாள் உக்கிரமா இருந்தா, சாந்தப்படுத்தணுமே
அவ காதுல ஸ்ரீ சக்கரத்தை தாடங்கமா. பெண்கள் காது குத்திக்கிறதே அதுக்குத்தான். பெண்கள் கோபப்பட்டா உலகமே அழிஞ்சு போயிடும். அன்னிக்கு அவர் பண்ணினது இன்னி வரைக்கும் அம்பாள் காதுகளில் உள்ளது.
அப்புறம் அடுத்தது பண்ணினார். யாராயிருந்தாலும் எவ்வளவு கோபமாக இருந்தாலும், அம்மாவுக்கு கோபம் போகணும்னா யாரைப் பார்த்தால் போகும்..? பிள்ளையைப் பார்த்தால் போகும்..
எதிரில் பிள்ளை பிரசன்ன கணபதி, பின்னாடி சுப்ரமணியர். இப்படி ஒவ்வொன்றும் அதி அற்புதம். அம்பாள் அகிலத்தை காத்து அருள்வதால் அகிலாண்டேஸ்வரி.
இத்தலத்தில் அம்பாள் சிவனை பூஜித்ததால், இன்றும் மதிய வேளையில் அர்ச்சகர் அம்பாள் அணிந்த புடவை கிரீடம் மற்றும் மாலை அணிந்து சுவாமிக்கு அபிஷேகம்.
ஆடி மாதத்தில் அம்பாள் இங்கு சிவனை வேண்டி தவம் இருந்ததாக ஐதீகம். மேலும் சிவன் அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம். ஆகவே இங்கு திருக்கல்யாணம் கிடையாது. ஆதலால் பள்ளி அறை பூஜையும் கிடையாது.
இங்கு ஆடி வெள்ளி சிறப்பு. அதிகாலை 2 AM to 12 MIDNIGHT தொடர்ச்சியாக நடை திறந்திருக்கும். அம்பாள் காலையில் லக்ஷ்மி ஆகவும், உச்சி காலத்தில் பார்வதி ஆகவும், மாலையில் சரஸ்வதி ஆகவும் காட்சி தருகிறாள்.
அம்பாளின் அருள் பெற்ற வரதர், புகழ்பெற்ற காளமேகப் புலவர் ஆனார். இதன் அடிப்படையில் சிறந்த கல்வி அறிவு கலைஞானம் பெற அம்பாளுக்கு தாம்பூலம் படைத்து வழிபாடு
பிரம்மா தன் படைப்புத் திறனெல்லாம் சேர்த்து மிக அழகான பெண்ணை உருவாக்கினார். அந்தப் பெண்ணிற்குத் திலோத்தமை என்று பெயரிட்டார். அந்தப் பெண்ணின் அழகில் தன் படைப்பு என்றும் அறியாது மயங்கினார். அந்த மயக்கம் தீர ஜம்புகாரண்யத்தில் தவம் இருந்து சிவபெருமானை வணங்கினார். பிழை பொறுக்கும் பரமேஸ்வரன் பிரம்மாவிடம் திருவிளையாடல் புரிய திருவுள்ளம் கொண்டு உமை ஆணாகவும், தான் பெண்ணாகவும் அவர் முன் காட்சியளித்தார். அதனை உணர்ந்த பிரமன் தன தவறைப் பொறுக்க வேண்டி அவர்களை வணங்கினார். இறைவன் அவரின் குறை நீக்கி மீண்டும் படைத்தல் தொழில் புரியும் வல்லமையை வழங்கினார்.
அகலிகையைக் கல்லாக சபித்த கௌதம முனிவர், கோபம் தணிந்து, அகலிகை நல்வாழ்வு பெற்றுத் தன்னுடன் நல்வாழ்வு வாழ இறைவனை இந்த வெண்ணாவல் வனத்தில் வழிபட்டார். அவர் வழிபாட்டின் பயனாக அகலிகை இராமரால் சாப விமோசனம் பெற்று இருவரும் நல்வாழ்வு வாழ்ந்தனர்.
இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷத்தை இராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்து நீக்கிக்கொண்ட இராமர், கும்பகர்ணனைக் கொன்ற தோஷம் தீரும் பொருட்டு ஜம்புகாரண்யத்தில் அங்கதனைக் கொண்டு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து பிரம்மஹத்தி தோஷத்தை நீங்கப் பெற்றார். இராமன் வழிபட்ட மூர்த்தி கரியமாலீஸ்வரர் (நீலக்ரீவேஸ்வரர்) திருக்கோயிலாக மேற்குப் புறத்தில் திகழ்கிறது.
வசிஷ்டரிடம் தோற்ற விசுவாமித்திரர் சினத்தினால் வேள்வி செய்து அதில் எழுந்த பூதத்தின் மூலம் வசிஷ்டரை அழிப்பதாக நினைத்து அவரது மகன் சக்தியை அழித்துவிட்டார். சாந்தியுறாமல் அலைந்த அவர்தம் ஆன்மாவிற்கு சக்தியின் மகனான பராசர முனிவர் திருவானைக்காத் திருத்தலத்தில் வழிபட்டு பேயுருவம் நீங்கி மானுட யாக்கை பெறச் செய்தார். அத்துடன் துஷ்ட அரக்கர்களை திருக்கோயிலின் வடகிழக்கு மூலையில் வேள்வி செய்து அதில் விழச் செய்து அடக்கினார்
சிவாலயங்களில் ஐப்பசி பௌர்ணமியில் நடக்கும் அன்னாபிஷேகம் இங்கு வைகாசி பௌர்ணமி தான். ( ஐப்பசி மழைக்காலம் தண்ணீர் அதிகம் இருக்கும் )
இத்தலத்திலுள்ள இறைவனை தரிசிப்பதற்காகவே ரங்கநாதர் ஶ்ரீரங்கத்தில் எழுந்தருளி இருப்பதாக கஜாரண்ய ஷேத்திர மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. வருடத்தில் ஒருநாள் ஶ்ரீரங்கத்தில் இருந்து ரங்கநாதர் புறப்பட்டு இத்தலம் வந்து தங்கியிருந்து, அன்றிரவு விசேஷ அலங்காரத்துடன் ஶ்ரீரங்கம் திரும்பும் உற்சவம் நடைபெறுகிறது
365 நாளும் உற்சவம். தீர்தத்திற்கு உண்டான க்ஷேத்ரம். குபேந்திரன் பூஜை தேவேந்திரன் பூஜை சித்த புருஷர்கள் நிறைய பேர் பூஜை. யானை பூஜை செய்தால் யானைக்கா.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
18 ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய, கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் இது.
சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் சரஸ்வதி நின்ற நிலையில் வீணையில்லாமல் காட்சி தருகிறாள். அருகில் கார்த்திகை ரோகினி உடன் சந்திரன் இருக்கிறார்.
5 முகங்கள் கொண்ட பஞ்சமுக விநாயகர், ஜேஷ்டா தேவியுடன் கூடிய சனீஸ்வரர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். குபேரன் பூஜித்த லிங்கம் ஜம்பு தீர்த்தக்கரையில் உள்ளது.
முருகப்பெருமான் ஆங்கார கோலத்தில் ஜம்பு தீர்த்தக்கரையில் இருக்கிறார். இங்கு வந்த அருணகிரியார் தனக்கு காமம் எனும் எதிரியால் தொந்தரவு உண்டாக கூடாது என்று முருகனிடம் வேண்டிக் கொண்டார். முருகன் காமத்தை அசுரத் தன்மைக்கு ஒப்பிடும் வகையில் ஒரு அசுரனாக்கி, காலின் அடியில் போட்டு அடக்கிய நிலையில் காட்சி தருகிறார். முருகனின் இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம்.
இங்குள்ள நூற்றுக்கால் மண்டபம், வசந்த மண்டபம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் சோமாஸ்கந்தர் மண்டபம் ஆகியவை சோழ, பாண்டிய, விஜயநகர நாயக்க மன்னர்களின் கட்டிடக்கலைக்குச் சான்றாகத் திகழ்கின்றன.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கல்வி மற்றும் ஞானம் பெற
திருமணத் தடை நீங்க
சந்தான பாக்கியம்
தொழில் மற்றும் மன அமைதி
தோஷ நிவர்த்தி
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மண்டல பிரம்மோற்சவம் பங்குனிப் பெருவிழா-48நாட்கள்
ஆடிப்பூரம் 10 நாட்கள்
தை தெப்ப திருவிழா
நவராத்திரி விழா 10 நாட்கள்
வைகாசி வசந்த உற்சவம் 10 Days
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அம்பிகை, நந்தி, பிரம்மா, ஜம்பு முனிவர், சிலந்தி, யானை, இராமன், கௌதம முனிவர், பராசர முனிவர், கோட்செங்கட் சோழ நாயனார், அஷ்டவசுக்கள், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேக்கிழார், தாயுமானவர் முதலியோர்
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருச்சி ஸ்ரீரங்கம் அருகில். அனைத்து போக்குவரத்து வசதிகளும் உண்டு.
தரிசன நேரம்
7AM – 8 AM, 9AM – 10.30AM
12.05PM -1PM, 3PM – 5PM,
6PM – 8.15PM
கார்த்திகேய பண்டிதர் 9443302391.
ஹரிஹர பண்டிதர்
9894914466.
வாசுதேவன் அத்யன பட்டர்
9487552929.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மழையார் மிடறா
மழுவா ளுடையாய்
உழையார் கரவா
உமையாள் கணவா
விழவா ரும்வெணா
வலின்மே வியஎம்
அழகா எனும்ஆ
யிழையாள் அவளே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply