தருமபுரம் யாழ்முறிநாதர்
மூலவர் : யாழ்முறிநாதர், தர்மபுரீஸ்வரர்
அம்பாள் : தேனாமிர்தவல்லி, மதுர மின்னம்மை
ஸ்தல விருக்ஷம் : வாழை,
தீர்த்தம் : பிரம்ம தீ, தர்ம தீ,
ஆகமம் : மகுடாகமம்
பாடல் : சம்பந்தர்
சுயம்பு தேவார பாடல் பெற்ற சிவாலயம், சோழ நாட்டு காவிரி தென்கரை ஸ்தலம் 51.
ஸ்தல சிறப்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவன் யாழ் இசைத்த போது அவரது அம்சமான தக்ஷிணாமூர்த்தி இசையை விரும்பி கேட்டார். இசையில் மகிழ்ந்த அவர் தன்னையும் அறியாமல் வியப்பில் பின்புறம் சாய்ந்தாராம். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள தக்ஷிணாமூர்த்தி சற்றே பின்புறம் சாய்ந்துள்ளார்.
பொதுவாக மஞ்சள் ஆடையில் இருக்கும் தக்ஷிணாமூர்த்திக்கு, இங்கு காவிநிற வஸ்திரம் சாத்தி பூஜைகள், இது அபூர்வம். மணமுடிக்காமல் குரு அம்சமாக இருப்பதால் காவி ஆடை அணிவிப்பதாக சொல்கிறார்கள்
இங்கு சிவன் தன் கையில்
யாழ் இசைத்த கோலத்தில் காட்சி தருகிறார். அவருக்கு வலப்புறம் சம்பந்தரும் இடப்புறம் யாழ்ப்பாண நாயனாரும் இருக்கின்றனர்.
வைகாசி மாதம் மூல நக்ஷத்திரம் – ஞானசம்பந்தருக்கு – குருபூஜை, அன்று சிவன் வீதியுலா வந்து சம்பந்தருக்கு காட்சி தருகிறார்.
தர்மன் உண்டாக்கிய தீர்த்தம் பிரகாரத்தில் உள்ளது. இனிப்பு சுவையுடன் இருக்கும் இந்த நீரை பருகினால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
ஸ்தல பெருமை
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
யாழ் இசைத்த சிவன்
எருக்கத்தம் புலியூர் எனும் ஊரில் வசித்த நீலகண்ட யாழ்ப்பாண நாயனார் சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். சம்பந்தரின் சிவப்பணி அறிந்து இவரும் அவரது மனைவி மதங்க சூளாமணியும் அவருடன் இணைந்து சிவதல யாத்திரை மேற்கொண்டனர்
ஞானசம்பந்தர் பதிகம் பாட, அதற்கேற்ப யாழ்ப்பாணர் இசையமைப்பார். சம்பந்தர் பாடும் அனைத்து பாடல்களுக்கும் இனிமையாக யாழ் (ஒரு வகை இசைக்கருவி) இசைக்கும் திறமை பெற்று இருந்ததால், யாழ்ப்பாணர் சற்றே கர்வம் கொண்டார்.
அவரது கர்வத்தை அடக்க
சிவன் எண்ணம் கொண்டார் அவர்கள் இத்தலத்திற்கு வந்த போது சம்பந்தர் பதிகம் பாடினார்
யாழ்ப்பாணர் எவ்வளவு முயன்றும் அப்பாடலுக்கு சரியாக இசைக்க முடியவில்லை. கலங்கிய யாழ்ப்பாளர் கலையில் தான் தோற்று விட்டதாக கருதி யாழை முறித்து தன் உயிரை விடச் சென்றார்.
அப்போது சிவன் அவருக்கு காட்சி தந்து, யாழை வாங்கி, சம்பந்தரின் பதிகத்திற்கு ஏற்ப வாசித்து நடனம் ஆடினார். தன் நிலை உணர்ந்த யாழ்ப்பாணர் கர்வம் நீங்க பெற்றார்.
யாழை இசைத்து யாழ்ப்பாணரின் கர்வத்தை அடக்கியவர் என்பதால்
யாழ்மூரிநாதர். கருவறையில் சுவாமி லிங்கம் வடிவில், எப்போதும் வெள்ளி கவசத்துடன் தரிசனம்.
சிவன் யாழ் இசைத்த போது, அம்பாள் தேனும் அமிர்தமும் சேர்ந்தது போல் இனிமையாக பாடி மகிழ்ந்தாளாம். எனவே இவளை தேனாமிர்தவல்லி.
இவள் இடது கையை தொடையில் வைத்தபடி தனி சந்நிதியில் அருள் பாலிக்கிறார். குரல் வளம் வேண்டுவோர் இவளுக்கு பூஜை வஸ்திரம். இசை கற்பவர்கள் சிவன், தக்ஷிணாமூர்த்திக்கு விசேஷ பூஜை.
சிவன் யாழ் இசைத்த போது குயில்களும் தங்களது குரல்களால் கூவி பாடின. இதனை ஞான சம்பந்தர் “எழில் பொழில் குயில் பயில் தர்மபுர பதியே” என பாடி இருக்கிறார்.
ஸ்தல வரலாறு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சிவன், மார்க்கண்டேயரை பிடிக்க வந்த எமதர்மனை திருக்கடையூரில் சம்ஹாரம்.
எமதர்மன் இல்லாததால் பூமிபாரம் அதிகரித்துக் கொண்டே இருக்க , பூமாதேவி இறைவனிடம் வேண்ட, எமதர்மனும் தன் தவறை மன்னித்து மீண்டும் பணி வழங்கும் படி சிவனிடம் வேண்டிக் கொண்டான். எமனுக்கு அருள் செய்வதற்காக சிவன் பூலோகத்தில் தவம் இருந்து தன்னை வழிபட்டு வர இழந்த பணி மீண்டும் கிடைக்கப்பெறும் என்றார்.
அதன்படி எமன் சிவதல யாத்திரை, இங்கு தீர்த்தம் உண்டாக்கி தவம். சிவன் காட்சி தந்து, தகுந்த நேரத்தில் பதவி கிடைக்கும் என அருள். எமன் தனக்கு அருள் செய்ததைப் போலவே இங்கு இருந்து அனைவருக்கும் அருள வேண்டும். ஆதலால் சிவன் இங்கு தங்கி அனைவருக்கும் அருள் பாலிக்கிறார்.(எமனுக்கு மீண்டும் அவரது பதவியை திருப்பி கொடுத்த ஸ்தலம் திருபைஞ்ஞீலி.) தர்மன் வழிபட்டதால் தர்மபுரம்.
ஸ்தல சிறப்பு தகவல்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
5 நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கிய கோவில், நந்தி பலிபீடம் உள்ளது கொடிமரம் இல்லை. மூலவர் சன்னதியை நோக்கிச் செல்ல அந்தராளம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவை உள்ளன. கர்ப்பக்கிருஹத்தைச் சுற்றி திருச்சுற்று மாளிகை (பிரகாரம்) அமைந்துள்ளது.
கருவறையில் வெள்ளிக் கவசம் சாத்தப்பட்ட மூலவர். எமதர்மன் வழிபட்டு பேறு பெற்றதால் தருமபுரீஸ்வரர், தருமபுரம். வலப்புறம் தெற்கு நோக்கி அம்பாள். இத்தல விநாயகர் கற்பக விநாயகர், கோஷ்டத்தில் லிங்கோத்பவரை, பிரம்மா & விஷ்ணு வணங்கிய கோலத்தில் உள்ளனர். கோஷ்டத்தில் உள்ள துர்கையின் பின்புறம் மகிஷாசுரன் இருக்கிறான்.பிரகாரத்தில் விஸ்வநாதர், முருகன், லிங்கோத்பவர், மஹாவிஷ்ணு உள்ளனர்.
பிரார்த்தனைகள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இழந்த பதவிகளைப் பெற
ஆயுள் விருத்தி மற்றும் சஷ்டியப்தபூர்த்தி
இசை மற்றும் நுண்கலைகளில் வெற்றி
திருமண மற்றும் புத்திர தோஷம்
திருவிழாக்கள்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
வைகாசி திருவிழா
மஹா சிவராத்திரி
திருக்கார்த்திகை
யாழ்முறி வரலாற்று விழா
வழிபட்டோர்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிரம்மா எமதர்மன் யுதிஷ்டிரன்
திருநீலகண்ட யாழ்ப்பாணர், மதங்க சூளாமணியார், சம்பந்தர் அப்பர் சுந்தரர் சேக்கிழார் முதலியோர்.
அமைவிடம் நேரம் தொடர்பு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இக்கோவில் காரைக்கால் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும், புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
காரைக்கால் நகரில் இருந்து மேற்கே திருநள்ளாறு செல்லும் சாலையில் பயணம் செய்ய வேண்டும். சிறிது தூரம் சென்றவுடன் இடதுபுறத்தில் ஒரு மாதா கோவில் (Church) வரும். அதன் அருகில் இடதுபுறமாகத் திரும்பி (அங்கு பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது), பின்னர் வலதுபுறமாகச் சென்றால் கோவிலை அடையலாம்.
நேரடி பேருந்து வசதிகள் மிகக் குறைவு. ஆட்டோ மூலம் செல்லலாம்.
7AM – 12NOON, 4PM – 8PM
99407 55484 முத்து குருக்கள்
குருக்களை அழைத்து விட்டு செல்வது சிறப்பு.
கோவில் தேவாரப் பதிகம்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடை நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
இரைந் நுரை கரை பொரு துவிம்மி நின்றயலே
தாதவிழ் புன்னை தயங்கு மலர்ச்சிறை வண்டறை
எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே. 1
ஞானசம்பந்தர்


Leave a Reply